June 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் – தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல, சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.நாமக்கல் அருகே மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசலுக்குள்ளான செய்தியில் தொடங்கி, அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம் வரை தொடர்ந்து ஏற்படும் விபத்துகளும், விரிசல்களும் திமுகவின் திராவிட மாடல் அரசின் கட்டுமான லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.கட்டுமானப் பணிகளின் போது அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக எப்போது திறப்பு விழா நடத்தலாம் ? எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் ? என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதோடு, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டடங்களும், பாலங்களும் விபத்துக்குள்ளாவதும், அதனை சீரமைக்கிறோம் எனும் பெயரில் மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அரசுப்பள்ளி வகுப்பறைகள் தொடங்கி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை நடைபெறும் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
June 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டம், கருங்குளம் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் திரு.எண்ணாயிரத்தான் அவர்களின் தந்தை திரு.கருத்தபண்டாரம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு கள்ளர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு – காலிப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன முறையை திமுக அரசு அமல்படுத்த வேண்டும்.தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை தும்மக்குண்டு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க முன்வராத திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது.கள்ளர் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த நிர்பந்திப்பது அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவை உண்டு 10க்கும் அதிகமான பேராசிரியர்கள் மயக்கமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்த திமுக அரசு, அவர்களுக்கான உணவை கூட தரமான முறையில் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக இழக்கச் செய்திருக்கிறது.இதற்கிடையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பேராசிரியர்களுக்கான உணவையும் தரமற்ற முறையில் விநியோகித்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் தொடர் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
June 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒற்றைச் சிறகு ஓவியா எனும் நாவலுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும், கூத்தொன்று கூடிற்று எனும் சிறுகதைக்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறார் இலக்கிய படைப்புகளில் தனித்துவமிக்கவராக திகழும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைபிடித்துவரும் திரு.லட்சுமிஹர் ஆகிய இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
June 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக அறிவிப்பு: நீக்கம் : நாகப்பட்டினம் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.RCM.மஞ்சுளா சந்திரமோகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
June 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அரசின் அலட்சியப் போக்கால் விவசாயத்தை விட்டு வெளியேறும் மா விவசாயிகள் – ஆந்திர மாநிலத்தை பின்பற்றி மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டு நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் காலம் காலமாக வளர்த்த மாமரங்களை வெட்டி அழிக்கும் சூழலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி விவசாயிகளும் தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. அதே போல, தமிழக மாங்காய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதால் அதிருப்தியடைந்த மா விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பழச்சாறு தொழிற்சாலைகளை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகள் மா சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கும் மாங்காய் உற்பத்தியை காரணம் காட்டி தமிழக மாம்பழங்களை வாங்க மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியிலும் மா விவசாயத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மீளவே முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பதோடு கூடுதலாக 4 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கும் நிலையில், தொடர் போராட்டத்திற்கு பின்பும் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசால் மா மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய சூழலுக்கும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கும் மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, ஆந்திர மாநில அரசைப் போலவே தமிழகத்திலும் மாம்பழங்களுக்கு மானியத்துடன் கூடிய உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மா சாகுபடி அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் மாம்பழ கூழ் தொழிற்சாலையை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பொதுவாழ்க்கையை புனிதமாக கருதி தன் வாழ்நாள் முழுவதும் எளிமைக்கும், நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவருமான தியாகி கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் நலனை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்ட அப்பழுக்கற்ற தியாகி கக்கன் அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
June 17, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையை நோக்கி பாதயாத்திரை – அரசு மருத்துவமனைகளின் அவல நிலைக்கு திமுக அரசும் அதன் முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் திரு.விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வழங்கிய வாக்குறுதிகளை, முதலமைச்சரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்துவித போராட்டங்களுக்கும் துளியளவும் செவிசாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
June 17, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு வி.கே.முத்துசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.வி.கே முத்துசாமி அவர்களை இழந்துவாடும் அவரது புதல்வரும் உச்ச நீதிமன்ற நீதியரசருமான மாண்புமிகு திரு எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.