February 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அனைத்து துறைகளும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேச விரோத எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஐநா சபையின் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு வளர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த பெருமைமிக்க மாநாட்டில், காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியிருக்கும் இந்த நாடகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அநாகரீகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேங்காங்கில் நடைபெற்ற ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி உட்பட 5 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்திருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.மரியவின்சியா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியால் ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கும் தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் செல்வி. மரியவின்சியா அவர்கள், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைப் பயணத்தை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப நம் உயிர்மூச்சுக்கு இணையான தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றி கொண்டாடிடும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.ஏனைய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் இனத்தின் நாகரீகமாக, ஏராளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் உள்ளடக்கிய உலகின் தொன்மையான மொழியாகப் போற்றப்படும் நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வடசென்னை பகுதிக் கழக நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் மாநகர் மாவட்ட பொருளாளராகவும், அல்லாபுரம் கிழக்கு பகுதி கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணி செயலாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,மத்திய சென்னை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், பகுதிக் கழக நிர்வாகிகளாகவும், வட்டக் கழக நிர்வாகிகளாகவும், பகுதி சார்பு அணி நிர்வாகிகளாகவும், கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பெரம்பலூர் மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினராகவும், சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், ஒன்றியக் கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திருப்போரூர் ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “திருப்போரூர் கிழக்கு ஒன்றியம்”, மற்றும் “திருப்போரூர் மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கீழ்காணுமாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சோளிங்கர் ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “சோளிங்கர் கிழக்கு ஒன்றியம்”, மற்றும் “சோளிங்கர் மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கீழ்காணுமாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்
February 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராணிப்பேட்டை மாவட்டக் கழக துணைச்செயலாளராகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், சோளிங்கர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.