September 16, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் திரு.அ.முனீஸ்வரன் அவர்களின் தந்தை திரு.அடிமைசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய இளம் வீராங்கனை செல்வி வைஷாலி ரமேஷ் பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates ) தொடருக்கு தேர்வாகியுள்ள கிராண்ட் மாஸ்டர் செல்வி வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் மென்மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 16, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினமான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தியதோடு, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருந்து விளிம்பு நிலை மக்களுக்காக தொண்டாற்றிய திரு எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் அரும்பெரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
September 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றியம், தெற்கு தெரு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.மச்சக்காளை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 15, 2025 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டங்களில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
September 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கிழக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.N.சுந்தரம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின்முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று.நாடக ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளராக தன் ஈடு இணையற்ற எழுத்தாலும், உணர்ச்சி பொங்கும் பேச்சாலும் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி, மனித சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
September 14, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா: சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற 17.09.2025, புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, வட்ட, செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.