November 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம், கன்னக்குடும்பட்டி கிளைக் கழக செயலாளர் திரு. K.அய்யனார் அவர்களின் தந்தை திரு.கணபதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு. அ.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் : அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருநெல்வேலியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் அதிர்வு, சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் காற்று மாசு குறித்து கருத்து தெரிவிக்க நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்டத்தைக் கலைக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் அத்துமீறிநடந்து கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும்,அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும், மக்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியும், சாதனையும் மேன்மேலும் தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
November 1, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் பூவந்தி திரு.M.இரமேஷ் கண்ணன் அவர்களின் தந்தை திரு.V.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழ்நாடு தமிழருக்கே என்ற தொடர் முழக்கம் மற்றும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உட்பட மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் இன்று. சாதி, மத, இன வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
November 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
November 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா இன்று.சோழநாட்டுப் பகுதியைச் செழுமையாகவும், வலிமையாகவும் உருவாக்கியதோடு, ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மலைக்க வைக்கும் சாதனைகள் புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் வீரத்தையும், ஆளுமைத் திறனையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். அதே நேரத்தில், வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் தஞ்சை சோழர் அருங்காட்சியகப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தமிழ் வளர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பெயரைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
October 31, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூர் கழக செயலாளர் திரு.P.தனுஷ்கோடி அவர்களின் தந்தை திரு.பெருமாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 31, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக துணைச்செயலாளர் திருமதி.M.சிவகாமி அவர்களின் தாயார் திருமதி.இ.செல்லம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.