August 31, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது; விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்!
August 31, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆசிரியர் தினத்தன்று போராட்டம் அறிவித்துள்ள ஆசிரியர்கள் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி 309 ஐ நிறைவேற்றக் கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத நிலையில், ஆசிரியர்களை கொண்டாடி மகிழ வேண்டிய தினத்தன்று ஆசிரியர்கள் அனைவரும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பெரும்பாலான சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்றாண்டுகளை கடந்தபின்பும் அதனை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் செயல்படுத்த மறுப்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர் தினத்தன்று போராட்டம் அறிவித்துள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 30, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : கழக அமைப்பு செயலாளர் திரு.S.K.(எ) S.கார்த்திகேயன் அவர்களின் சகோதரர் திரு.S.சிவக்குமார் அவர்கள்
August 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் அவனி லெகரா அவர்களுக்கும் அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் மோனா அகர்வால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இந்திய வீராங்கனைகள் அவனி லெகரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
August 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அறம் சார்ந்த அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த தனித்துவமிக்க தலைவராகவும், சமூக நலன் சார்ந்த சிந்தனை மிக்க அரசியல் ஆளுமையாக திகழ்ந்தவருமான ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமையான வாழ்க்கை, நேர்மையான அரசியலின் மூலம் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் மிகப்பெரிய உயரங்களை எட்டிய ஐயா ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவுநாளில் அவர் ஆற்றிய மக்கள் சேவைகளை நினைவில் கொண்டு போற்றுவோம்.
August 29, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: விருதுநகர் மத்திய மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.செல்லபாண்டியன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
August 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு – விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் (B.Ed) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெறவிருந்த படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அப் பல்கலைக்கழகங்களில் உயிர்கல்வி பயிலும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 28, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் ஜெயந்தி விழா: செப்டம்பர் 1ஆம் தேதி நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்.
August 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மத்திய, மாநில அரசு மருத்துவர்களுக்கிடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் – நாட்டின் அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரே ஊதியம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை தமிழக அரசு ஏற்க வேண்டும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே நாடு முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தல் வரவேற்புக்குரியது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மறு ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணை எண் 354-ஐ அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை அரசு மருத்துவர்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும். அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அந்த நடைமுறையை செயல்படுத்த மறுப்பது ஏன்? என அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, பொதுமக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலை அமல்படுத்தும் வகையிலும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் மதுரை டி.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.முரளிதரன் மற்றும் வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திரு. கோபிநாத் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட்டு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்தி மகிழ்கிறேன்.