March 25, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் மாவட்ட நயினார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.P.சாமித்துரை அவர்களின் தாயார் திருமதி.P.ஜெகதாம்பாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 25, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசியல் விமர்சகரும், மதிப்பிற்குரிய சகோதரருமான திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தந்தை திரு ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் திரு.ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
March 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை திருமங்கலம் அருகே ஐந்து ஆண்டுகளாக 13 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக திமுக நிர்வாகி கைது – திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம். சென்னை திருமங்கலம் அருகே 13வயது சிறுமியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கூடம் தொடங்கி பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அக்கட்சியின் தலைமை கண்டும் காணாதது போலக் கடந்து சென்றதன் விளைவே அத்தகைய செயல்களில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபடக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகளிர் பாதுகாப்பிலும், பெண்கள் அதிகளவு வேலைக்குச் செல்வதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. எனவே, பச்சிளம் குழந்தை தொடங்கி வீட்டில் தனியாக இருக்கும் முதியவர் வரை அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலின் மூலம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 24, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் தெற்கு ஒன்றியம், பொலவபாளையம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.R.சண்முகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கையில் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் நெறியாளர் மீது திமுகவினர் தாக்குதல் – அராஜகத்தையும் அட்டூழியத்தையும் அடையாளமாகக் கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக வரும் தேர்தலில் அப்புறப்படுத்தப்படுவது உறுதி. சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களும், நெறியாளரும் திமுகவின் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திமுகவின் கடந்த ஐந்தாண்டுகால கொடுங்கோல் ஆட்சி குறித்தும், அதனால் மக்கள் பட்ட துயரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர்கள் பட்டியலிட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், விவாத நிகழ்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கில் அங்குக் கூடியிருந்தவர்கள் மீது திமுகவின் குண்டர்கள் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.அநியாயம், அக்கிரமம், அராஜகம் மற்றும் அட்டூழியத்திற்கும் அடையாளமாகிப்போன மக்கள் விரோத திமுகவும் அதன் நிர்வாகிகளும், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பலையைத் திசை திருப்பவும், தோல்வி பயத்தை மறைக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதன் கையாலாகத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் நெறியாளர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் நேரத்தில், அராஜகத்தையும் அட்டூழியத்தையும் அடையாளமாக கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக வரும் தேர்தலில் அடியோடு அப்புறப்படுத்தப்படுவது உறுதி என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு – விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, இதே திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரியில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றிருக்கும் இந்த சந்தேக மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
March 22, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை இலக்காகவும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதையே கொள்கையாகவும் ,நிர்ணயித்து ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 21, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திருப்பூர் மாநகர் மாவட்டம், பெரியார் காலனி பகுதி 25வது வட்டக் கழக செயலாளர் திரு.சரவணகுமார் அவர்களின் தாயார் திருமதி.ரத்தினம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சகோதரர் திரு சுதாகர் ரெட்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதர திரு.சுதாகர் ரெட்டி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
March 20, 2026 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.