March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழகபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் திரு.P.சீனிக்குமார், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பொருளாளர் பொறுப்பில் திரு.S.ராஜேஷ் குமரன், கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் திரு.A.S.ராமச்சந்திரன், கழக இளைஞர் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் திரு.R.B.விஜயகுமார் நியமனம்.
March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் – திமுக ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் காவல்துறையால், பட்டப்பகலிலேயே பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதற்கு அடிப்படையாக திகழும் போதைப் பொருட்கள் விற்பனையும், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தலைதூக்கும் என்பதையே இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய காவல்துறை, முற்றிலுமாக செயலிழந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறியிருப்பதே, இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து, தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “எனது ஆண்கள்” என்ற நூலின் மூலம் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.விமலா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் பற்றாளராக, கல்லூரி பேராசிரியராக, சிறந்த மொழி பெயர்ப்பாளராக என பன்முகத் திறமையின் மூலம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பேராசிரியர் ப.விமலா அவர்களின் கல்வி, எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு பணி மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் புதிய உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாறு அணையை கட்டி தென்மாவட்டங்களில் வறண்டு கிடந்த விவசாய நிலங்களை தன் தொலைநோக்கு சிந்தனையின் மூலம் வளம்பெறச் செய்த மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று. சோதனைகள் பல சூழ்ந்த நிலையிலும், முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடிப்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஜான் பென்னிகுவிக் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
March 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
March 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
March 8, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கீழக்குயில்குடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.N.பாண்டி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 8, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.D.செந்தில்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 7, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய கண்ணனூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.கொடிவீரணன் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.