December 24, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருப்பூர் மாநகர் மாவட்டம், காந்தி நகர் பகுதிக் கழக செயலாளர் திரு.R.தங்கராஜ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்பான வார்த்தைகளாலும், அன்பான வாழ்க்கையாலும்,உலகை ஆட்கொண்ட அருள்நாதர் இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
December 24, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீண்டாமையை ஒழிப்பதிலும், பெண்ணடிமையை அகற்றுவதிலும், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதிலும், தமிழ் மொழியை பாதுகாப்பதிலும் முன்னோடிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஒப்பற்ற தலைவராக, தலைசிறந்த சிந்தனையாளராக, தத்துவ மேதையாக, சமூக சீர்திருத்தவாதியாக, சமுதாய புரட்சியாளராக என தமிழகத்திற்கு பெரியார் ஆற்றிய தொண்டுகளையும், அவரால் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியையும் எந்நாளும் நினைவில் கொள்வோம்.
December 23, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : கடலூர் கிழக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளர் திரு.K. சுகுனேஷ் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான திரு.கக்கன் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மாவட்டம், மேலூர் தும்பைப்பட்டியில் அமைந்துள்ள தியாகச்சீலர் திரு.கக்கன் அவர்களின் மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
December 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மக்களைப் பற்றியே சிந்தித்து மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான திரு. கக்கன் அவர்களின் நினைவு தினம் இன்று. பொதுவாழ்க்கையில் நேர்மையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதையே இறுதிவரை கொள்கையாகவே கொண்டிருந்த திரு. கக்கன் அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
December 23, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது” என்ற வரிகளுக்கு ஏற்ப வரவு – செலவு பார்க்காமல் உழுவதையும், உழைப்பதையுமே தன் வாழ்நாள் பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, புயல், வெள்ளம், வறட்சி என எத்துனை பேரிடர்களை சந்தித்தாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் மகத்தான சேவையில் இடைவிடாது ஈடுபட்டுவரும் விவசாயப் பெருமக்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
December 22, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
December 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் திருவண்ணாமலையில் இன்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் !
December 21, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: விருதுநகர் மேற்கு மாவட்டம், மம்சாபுரம் பேரூர் கழக அவைத்தலைவர் திரு.R.வீரபாண்டி அவர்களின் மனைவி திருமதி.V.லட்சுமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.