December 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பத்ம பூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை மாவட்ட கழக செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் சமூக நல வாரிய தலைவருமான செல்வி.C.R.சரஸ்வதி, கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், வடசென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.P.ஆனந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
December 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த பத்ம பூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழ் மற்றும் தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
December 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ஜி.கே.வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு அயராது உழைத்துக் கொண்டிருக்கும் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 27, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், மருத்துவக்கல்லூரி பகுதி 42வது வட்டக் கழக செயலாளர் திரு.கோவி.சண்முகம் குச்சிராயர் அவர்களின் தாயார் திருமதி.கோவி.பத்மாவதி அவர்கள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாவட்டம் மேலூரில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் மேலூரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்த பின்னரும் திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால், பள்ளிக்குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருமே வெயிலிலும், மழையிலும் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 6.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் மதுரை மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 27, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு வடக்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை தலைவர் திருச்சடவளந்தை திரு.ஆர்.தங்கதுரை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.மன்மோகன்சிங் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பெரும்பங்கு வகித்த திரு.மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாள்தோறும் பல்வேறு விதமான இன்னல்களுக்குள்ளாகும் பொதுமக்களே திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள் – தமிழக பாஜக தலைவர் அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை கைவிட வேண்டும்.
December 26, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக டெல்டா மண்டலத்திற்குட்பட்ட கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக துணைப் பொதுச்செயலாளரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.M.ரெங்கசாமி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
December 26, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு : சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் நினைவு தினம்-கழக நிர்வாகிகள் அஞ்சலி மற்றும் ஏழை – எளியோருக்கு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினர்.