தென்னாட்டு போஸ் என அழைக்கப்படுபவரும் இந்திய விடுதலைக்கு போராடியவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் தலைமையில் பசும்பொன்னில் அன்னாரது நினைவாலயத்தில் மரியாதையை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சியில் கழக நிர்வாகிகள் தேவர் திருமகனாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.