கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
திருச்சி துறையூர் அருகே தனியார் உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் – விரிவான விசாரணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகம் ஒன்றில் மதிய உணவுத் திட்டத்திற்காக வழங்கப்படும் அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. துறையூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உரிய ஆய்வை மேற்கொண்டு, இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில், தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்ட காவல் அதிகாரி திரு.சைலேஷ் குமார் அவர்களுக்கு கடந்த ஜனவரியில் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு, தற்போது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் திரு.கண்ணன் அவர்களுக்கு தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத திமுக அரசு, மாறாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்து வருவது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மத்தியிலும், தூத்துக்குடி மாவட்ட மக்களிடத்திலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வருவதுதான் அவர்கள் மீது எடுக்கும் கடும் நடவடிக்கையா? எனவே, துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக காரணமாக கூறப்படும் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி உயர்வை உடனடியாக ரத்து செய்வதோடு, அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஒரே வளாகத்திலிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும் – அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஒரே பெயரில் மற்றும் ஒரே வளாகத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை ஒருவருக்கு மட்டும் வழங்க மின்வாரியம் முடிவு செய்து அதனை அமல்படுத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே பெயரிலோ அல்லது ஒரே வளாகத்திலோ இருக்கும் மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் மின்வாரியத்தின் முடிவால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடைக்கு குடியிருப்போர் வழக்கமாக செலுத்தும் மின்கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டே இதுபோன்ற செய்திகள் வெளியான நிலையில், ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை ஒன்றாக இணைக்கப்படாது எனவும், அவற்றிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த மின்வாரியமே அதனை மீறுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளை கடந்த பின்பும் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் அமைந்துள்ளது. எனவே, ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: சமூக சீர்திருத்தவாதி திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிய தீண்டாமையை அடியோடு அகற்றுவதற்காகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தளர்வில்லாமல் அரும்பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று. தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு, நிலவுரிமை உள்ளிட்ட சமத்துவ சமூகத்திற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில் அவர் ஆற்றிய பணிகளை நினைவில் கொண்டு போற்றுவோம்.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடைவிடாத பயிற்சி மற்றும் தொடர் முயற்சியால் ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
பயன்பாட்டிற்கு வந்த பதினெட்டே நாட்களில் பழுதடைந்த இலங்கைத் தமிழர் குடியிருப்பு – தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிக் குப்பத்தில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் மேற்கூரை இடிந்து விழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கட்டித்தந்த 236 குடியிருப்புகளில் பல குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அதில் வசிப்போரின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ரூ.12.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வந்து திறந்துவைத்த அமைச்சர்கள், அந்த குடியிருப்புகளின் தரம் குறித்து முறையான ஆய்வு செய்யாதது ஏன்? எனவே, தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
Previous
Next
காணொளி
TTVDhinakaran | தமிழ்நாடு மின்வாரியம் அளித்த வாக்குறுத்தியை மீறுவது கடும் கண்டனத்திற்குரியது | AMMK
🔴LIVE: தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு பொதுச்செயலாளர் மரியாதை
2026ல் தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமையும் | AMMK | TTVDhinakaran
திமுக சிறுபான்மையின மக்களின் பாதுகாவலர்கள் அல்ல | AMMK | TTVDhinakaran
ராசிமணலில் அணை கட்டி நீரை சேமிக்க வேண்டும் | AMMK | TTVDhinakaran
ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் போதைப் பொருள் விற்பனை | AMMK | TTVDhinakaran
பட்டிதொட்டியெங்கும் போதைப் பொருட்கள் விற்பனை | AMMK | TTVDhinakaran
திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு | AMMK | TTVDhinakaran
தமிழகத்தில் போராடாத அரசுத் துறைகளே இல்லை | AMMK | TTVDhinakaran
மேலும் பார்க்க
புகைப்படங்கள்
homepage \ புகைப்படங்கள்
கழக பொதுக்குழு கூட்டம்-2023
மேலும் பார்க்க
பத்திரிகை வெளியீடுகள்
திருச்சி துறையூர் அருகே தனியார் உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள…
September 19, 2024
நீக்கம் : புதுக்கோட்டை மத்திய மாவட்டம் – மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.M.கார்த்திகேயன், மாவ…
September 19, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியிருக்கும் திமுக அரசின்…
September 19, 2024
ஒரே வளாகத்திலிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை மின்வாரியம் கைவி…
September 19, 2024
விடுவிப்பு : கழக விவசாயப் பிரிவு துணைச்செயலாளர் திரு.R.J.இராஜா (எ) லோகநாதன் மற்றும் புதுக்கோட்டை மத்…
September 18, 2024
தலைமைக் கழக செய்தி வெளியீடு: சமூக சீர்திருத்தவாதி திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம்; க…
September 18, 2024
இரங்கல் செய்தி : தேனி தெற்கு மாவட்டம்
September 18, 2024
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிய தீண்டாமையை அடியோடு அகற்றுவதற்காகவும் அரை நூற்றாண்டுக்…
September 18, 2024
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கும் இந…
September 17, 2024
இரங்கல் செய்தி : தருமபுரி மாவட்டம்
September 17, 2024
பயன்பாட்டிற்கு வந்த பதினெட்டே நாட்களில் பழுதடைந்த இலங்கைத் தமிழர் குடியிருப்பு – தரமற்ற குடியி…
September 17, 2024
இரங்கல் செய்தி : புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
September 17, 2024
தலைமைக் கழக செய்தி வெளியீடு: பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம்; கழக பொதுச்செயல…
September 17, 2024
கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் என ம…
September 17, 2024
I extend my heartfelt birthday wishes to the Honourable Prime minister Shri.Narendra Modi ji. With y…
September 17, 2024
அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி – சட்டவிரோத…
September 16, 2024
தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்…
September 16, 2024
தலைமைக் கழக செய்தி வெளியீடு: சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன் வாழ…
September 16, 2024
இறை தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப்…
September 16, 2024
இரங்கல் செய்தி : திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
September 16, 2024
சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த…
September 16, 2024
ஏழை, எளிய மக்களிடையே தன் பேச்சாற்றலால் அறிவுப்புரட்சியை உருவாக்கிய அற்புதத் தலைவர், எழுச்சிமிகு எழுத…
September 15, 2024
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின…
September 15, 2024
இரங்கல் செய்தி: மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், பரவை பேரூர் கழக செயலாளர் திரு.ஆ.நாகேந்திரன் அவர்களின் …
September 14, 2024
கழக விவசாயப் பிரிவு துணைத்தலைவராக திரு.செல்வம் (எ) J.K.சதாசிவமூர்த்தி அவர்களும், ஈரோடு புறநகர் கிழக்…
September 14, 2024
சிவகங்கை மாவட்ட சிங்கம்புணரி பேரூர் கழக செயலாளராக திரு.M.வேலன் அவர்களும், கானாடுகாத்தான் பேரூர் கழக …
September 14, 2024
மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.C.சரவணன் அவர்கள் அப்பொறுப்பிலிருந…
September 14, 2024
அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய …
September 14, 2024
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.R.முத்து கிருஷ்ணன்…
September 13, 2024
இரங்கல் செய்தி : சிவகங்கை மாவட்டம்
September 12, 2024
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான திரு.சீதாராம் யெச்…
September 12, 2024
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு வடக்கு ஒன்றியம், மகாராஜபுரம் கிளைக் கழக செயலாள…
September 12, 2024
பணிநிரந்தரம் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்களை அலைக்கழிக்கும் திமுக அரசின் செயல்பா…
September 12, 2024
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் உரிமைகளை மீட்கவும், ஏற்றத் தாழ்வில்லா சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்…
September 11, 2024
”எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்” …
September 11, 2024
தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் …
September 10, 2024
சிவகங்கையில் அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் – பள்ளி மாண…
September 10, 2024
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் அரங்கேறியிருக்கும் 6 படுகொலைச் சம்பவங்கள் – ச…
September 9, 2024
இரங்கல் செய்தி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்றத…
September 8, 2024
மக்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கி வரும் இயன்முறை…
September 8, 2024
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – தொடர் …
September 8, 2024
இரண்டு மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் மகளிர் பண்டக சாலையின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடை ஊழியர்கள் …
September 7, 2024
அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி எனும் பெயரில் அரங்கேறியிருக்கும் விரும்பத்தகாத நிகழ்…
September 6, 2024
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஏழை, எளிய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து…
September 6, 2024
மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் – அரசு நி…
September 6, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்;…
September 6, 2024
இரங்கல் செய்தி : நாமக்கல் வடக்கு மாவட்டம்
September 6, 2024
இரங்கல் செய்தி : தென்காசி வடக்கு மாவட்டம்
September 6, 2024
தஞ்சாவூரில் அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் – பெண்கள் பாதுகாப்பி…
September 6, 2024
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஏழை, எளிய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து…
September 6, 2024
வினைதீர்க்கும் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்க…
September 6, 2024
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க மதுரை மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
September 5, 2024
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் : சின்னசேலம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
September 5, 2024
திருவாரூர் மாவட்டம் : கூத்தாநல்லூர் நகரக் கழக நிர்வாகிகள், மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செ…
September 5, 2024
தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.சண்முகையா பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற ச…
September 5, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: திரு. இமானுவேல் சேகரனாரின் 67வது நினைவு நாள்; செப்டம்பர் 11 ஆம் தேதி, பரமக்கு…
September 5, 2024
தலைமைக் கழக செய்தி வெளியீடு: வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளையொட்டி, கழக பொதுச்செயலாளர் …
September 5, 2024
உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி என முழங்கி தாய் நாட்டிற்கு விடுதலையும், மக்களுக்கு நல்வாழ்க்கையும் க…
September 5, 2024
இரங்கல் செய்தி : திருவாரூர் மாவட்டம்
September 4, 2024
அழிவில்லா கல்வி செல்வத்தை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட…
September 4, 2024
மேலும் பார்க்க
தமிழகம் தலைநிமிரட்டும்
தமிழர் வாழ்வு மலரட்டும்
சமூக ஊடகம்
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
AMMK's - Facebook
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2024 AMMK. All Rights Reserved.