கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.<br>மாண்புமிகு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என வரவேற்று மகிழ்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரக் கொலை – பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.உயர்நிலைக் கல்விக்கான படிப்புகளை தீர்மானிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எந்தவித பயமும், பதட்டமுமின்றி எதிர்கொண்டு மாணவ, மாணவியர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
செங்கல்பட்டு அருகே அடையாளம் தெரியாத கும்பலால் 14வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – திமுக ஆட்சியை அகற்றும் வரை பெண்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தான் ஒரே தீர்வு.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அமைச்சரவைக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகம், சுற்றுலா மற்றும் பண்டையகால வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய மதுரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையிலும் தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை பெருக்கும் வகையிலும் மதுரை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கும் ஒப்புதலை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் இத்தேர்வுகளை மாணவ, மாணவியர்கள் அனைவரும் எந்தவித அச்சமும், பதற்றமுமின்றி எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான மதிப்பிற்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா வரும் 24.02.2026 அன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி வரும் 24.02.2026 முதல் 27.02.2026 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கீழ்கண்ட அட்டவணையின் படி நடைபெற உள்ளது.
இதய தெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது. நாங்குநேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்!
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கை வழியில் தேசிய உணர்வையும், தெய்வீக நெறியையும் உயர்த்திப் பிடித்து, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காகப் பெரும் தொண்டாற்றியவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று. பொதுவாழ்வில் நேர்மை, மக்களிடம் எளிமை என விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும், அவர்களின் உரிமைகளையும் பெற்றுத்தர அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது பாடுபட்ட திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து GSLV F-17 ராக்கெட்டின் மூலம் EOS-05 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கல்வி வள்ளல் திரு. மூக்கையாத் தேவர் அவர்களின் நினைவு தினம் – உசிலம்பட்டியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார். நாள் : 06.09.2026, நேரம்: காலை 10 மணி.
தலைமைக்கு கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் – ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஒன்றியம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் – வடமதுரை ஒன்றியம் ஒன்றியம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் – தொப்பம்பட்டி ஒன்றியம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் – வேடசந்தூர் ஒன்றியம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், மவாட்ட சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு தென்காசி வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன்கோவில் நகரக் கழக நிர்வாகிகளாகவும் மற்றும் வார்டு கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு திருச்சி தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மணப்பாறை ஒன்றியக் கழக செயலாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் புறநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றியம் மற்றும் நகர சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
இரங்கல் செய்தி: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய லாந்தை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.G.இராமகிருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.R.பாக்கியராஜ் அவர்களின் தாயார் திருமதி.பெரியநாயகி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், ராமேஸ்வர நகர 5வது வார்டு கழக செயலாளர் திரு.S.சங்கர் அவர்களின் தாயார் திருமதி.S.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும். ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொறியாளர் அணி செயலாளராக திரு.N.S.தருண், கழக மாணவர் அணி தலைவராக திரு.K.நாகூர் மீரான், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளராக திரு.K.செங்குட்டுவன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளராக திரு.V.கலிலூர் ரஹ்மான், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச்செயலாளராக திரு.N. நந்தகோபால், கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளராக திருமதி.E.நூர்ஜகான் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தருமபுரி மாவட்டக் கழகம் தருமபுரி கிழக்கு மற்றும் தருமபுரி மேற்கு என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைப்பு.தருமபுரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராகதிரு.K.மணிமேகலன், தருமபுரி மேற்கு மாவட்டக் கழக செயலாளராகதிரு.P.C.ஞானம் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி மேற்கு ஒன்றியக் கழக செயலாளராக,திரு.K.மணி , நாட்றாம்பள்ளி பேரூர் கழக செயலாளராக,திரு.S.பிரகாசம் , மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக,திரு.J.ஆனந்தஜோதி நியமனம்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், மாவட்டக் கழக பொருளாளராக திரு.S.எழில்மாறன் அவர்களும், வள்ளியூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக,திரு.N.ராஜஇசக்கி நியமனம்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், உளுந்தூர்பேட்டை நகரக் கழக செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர், அறந்தாங்கி வடக்கு மற்றும் திருவரங்குளம் கிழக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள், ஆலங்குடி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதா ? அதுவும் உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது ? தேர்தலுக்கு முன்பாக தனியார்மயத்திற்கு எதிராக குரல் எழுப்பிய தவெக, ஆட்சிக்கு வந்தவுடன், அதே தனியார்மயமாக்கும் முறையை பின்பற்றியிருப்பதோடு, அந்த ஒப்பந்தத்தை உத்திரபிரதேச மாநிலம் ரபேரலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க முன்வந்திருப்பது தான் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன மாற்றமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பல ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப துளியளவும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அரசுப் பேருந்துகளுக்கு குத்தகை அடிப்படையில் நடத்துனர் நியமனம் செய்யும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது வேலைக்காக காத்திருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய போக்குவரத்துத்துறையில் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாத நிலையில், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் குத்தகை அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கு தவெக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். எனவே, மாநகரப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான நடத்துனர்களை குத்தகை அடிப்படையில் நியமிப்பதற்கு உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, போக்குவரத்துத்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
அறையை தயார் செய்வதற்கான டெண்டர் அறிவிக்கும் முன்பே தொடங்கிய பணிகள் – விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர்கள் தான் தவெக அரசு சொல்லும் வெளிப்படைத் தன்மையா? சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தில் இருந்த முதலமைச்சரின் அறையை அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு மாற்றுவது தொடர்பாக பணிகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அப்பணிக்கான டெண்டர் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில் முதலமைச்சரின் அறை மாற்றப்படுவது அவசியம்தானா? என்ற கேள்விக்கு மத்தியில், அப்பணிகளுக்கான அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத்தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. கடந்த 13ஆம் தேதி நாளிதழ்களில் டெண்டர் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டு நான்கு நாட்கள் கழித்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஆவணங்களிலும் பணிக்கான மொத்த மதிப்பை குறிப்பிடாமல் மறைத்திருப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மைமிக்க ஆட்சி என்று சொல்வதற்கான தகுதியை தவெக அரசு இழந்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? யாருடைய உத்தரவின் பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? எந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார்? பணிகள் தொடங்கிய பின் டெண்டர் கோரியது ஏன்? டெண்டர் அறிவித்த பின்பும் அதற்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்? என்ற மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் வைத்திருக்கும் பதில் தான் என்ன? ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஊழலற்ற, நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான ஆட்சிதான் எங்களின் இலக்கு என வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், அவருக்கான புதிய அறை மாற்றம் தொடர்பான டெண்டர்களிலேயே நடைபெற்றிருக்கும் இவ்வாறான விதிமுறை மீறல்கள், மற்ற துறைகளில் டெண்டர்கள் எப்படி வெளிப்படைத்தன்மையாக நடைபெறும் என்ற ஐயத்தை எழுப்புகிறது. எனவே, விளம்பரங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் வெளிப்படைத்தன்மை என்ற சொல்லை பெயரளவுக்கு பயன்படுத்தாமல், தன் தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதிலும், நிதி நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தவெக அரசின் 100 நாள் ஆட்சி – வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி !!
சென்னை மாநகராட்சியில் திடீரென உயர்த்தப்பட்ட சொத்துவரி; பொதுமக்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு – நிதி நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் மீது சுமையை ஏற்ற முயல்வதா? சென்னை மாநகராட்சியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பன்மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆட்சேபனை தெரிவிக்க முகாம்கள் அமைக்கப்படும் என அறிவித்த சென்னை மாநகராட்சி, தற்போது சொத்துவரி உயர்வை நிறுத்திவைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, வரிவிதிப்பு நிலைக்குழுவின் வழிமுறைகளின்படி உயர்த்தப்பட வேண்டிய சொத்துவரி, எந்தவித முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்டது எப்படி? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே தெரியாமல் சொத்துவரியை உயர்த்துவதற்கான அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்கிருந்து வந்தது? ஏற்கனவே, மறைமுக மின்கட்டண உயர்வால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது சென்னை மாநகரில் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு இணையாக வரி மதிப்பீடு செய்து, அவர்களுக்கு கூடுதல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த முயல்வது எந்த வகையில் நியாயம்? தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கருவூலத்திற்கு வந்திருப்பதாக நிதியமைச்சர் கூறியிருக்கும் நிலையில், இதுபோன்ற மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வு ஆகியவையும் அந்தத் தொகையில் அடங்குமா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, சொத்துவரி விதிப்பில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்டிருக்கும் நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்திடவும், கூடுதலாக சொத்துவரி வசூலிக்கப்பட்ட அனைவருக்கும் அந்தத் தொகையை உடனடியாகத் திருப்பி வழங்கிடவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பஞ்சாயத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மீறி மது அருந்தினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் “மதுவை ஒழிப்போம் மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குடும்பங்களின் நலனை உறுதி செய்யவும், மக்களின் பொது அமைதியைப் பேணவும் விழுந்தமாவடி பஞ்சாயத்து மக்கள் தாமாக முன்வந்து தொடங்கியுள்ள இந்த மதுவுக்கு எதிரான பிரசாரம் பாராட்டுக்குரியது. விழுந்தமாவடியில் தொடங்கியுள்ள இந்த மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் வலிமையான சமூக இயக்கமாகவும் உருவெடுக்கட்டும்.
கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர் திரு. அமுதனை சக மாணவர்களுடன் சேர்ந்து அடையாளம் தெரியாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்லூரியில் பயிலும் சக மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்தும், அதனை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் திரு. அமுதன் அவர்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததன் காரணமாகவே அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும் மாணவர், சக மாணவர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்படும் அளவிற்கு தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் மாணவர்களின் முன்னிலையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுப்பதில் எந்தவிதப் பயனுமில்லை.போதைப் பொருள் குறித்து மாணவர் திரு. அமுதன் அவர்கள் தெரிவித்த தகவலை ரகசியம் காத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே அதனைக் கசிய விட்டதாக மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலே மாணவர் திரு. அமுதன் உயிரிழப்புக்கான காரணம் என அமைச்சரும் காவல்துறையினரும் பிரச்னையை மூடி மறைக்க முயல்கின்றனர் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர் திரு. அமுதன் அவர்களின் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, இளைய சமுதாயத்தினரின் உடல்நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!
தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டுவரும் மதுரவாயல் கிழக்கு, மதுரவாயல் மேற்கு, மதுரவாயல் வடக்கு, மதுரவாயல் மத்தியம் ஆகிய நான்கு பகுதிக் கழகங்கள் கழக அமைப்பு ரீதியாக, “மதுரவாயல் வடக்கு பகுதி” மற்றும் “மதுரவாயல் தெற்கு பகுதி” என இரண்டு பகுதி கழங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி, ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:திருச்சி தெற்கு மாவட்டம், பகுதிக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருவாரூர் மாவட்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியக் கழக செயலாளர்கள், மன்னார்குடி நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு :நீலகிரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள், குந்தா ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்டம், பகுதிக் கழக நிர்வாகிகள், திருப்பூர் வடக்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பகுதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஓடி வருவார்களா? தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் தொனியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு.அருண்ராஜ் அவர்கள் பேசியிருப்பது, தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக மருத்துவத்துறையில் உள்ள அவலங்களை சரி செய்து மாற்றத்தைத் தருவோம் என ஆட்சிக்கு வந்த தவெக, ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் “மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் எலித்தொல்லை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள், கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை உள்ளிட்ட அவலங்களை சரி செய்யாமல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவோ, நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பையும் எடுக்காமல், தமிழகத் தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் கொடுத்தால் போதும் அவர்கள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வருவார்கள் என்ற தொனியில் அத்துறை அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, “ஆட்சிக்கு வந்துவிட்டோம்; மக்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம்”என்ற அதிகாரத் தொனியை ஓரம்கட்டிவைத்துவிட்டு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த புதல்வரும் , மாலை முரசு நாளிதழின் அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சி, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நலனுக்காகத் தொடர்ந்து இயங்கிய பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் கிழக்கு ஒன்றிய கீழவளவு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.வாழமலை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பழனி கோயில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கில் கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் மரணம் – மர்மங்கள் நிறைந்த இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் . பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் திரு.அன்வர்தீன் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல, இவ்வழக்கில் தொடர்புடைய சார்பதிவாளர் திரு.ஜஸ்டின் மணிகண்டன் உடல்நல குறைவால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பதிவு செய்த அன்றைய தினமே, கோயிலுக்கு சொந்தமான மற்றொரு நிலம் தனிநபருக்கு பத்திரப்பதிவு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் ஒருவர் கைது என அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் சூழலில், பழனி திருக்கோவில் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முக்கிய நபர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, தவெக ஆட்சியமைந்த பின் அடுத்தடுத்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கோயில் நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நபர் சிபிசிஐடி காவல் விசாரணையை முடித்து சிறை திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்திருப்பதன் பின்னணியில், காவல்துறையினர் தாக்கியதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாரா? அல்லது ஏற்கனவே அவருக்கு இருந்த உடல் உபாதைகளால் உயிரிழந்தாரா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, தமிழகத்தில் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலையும், அராஜகத்தையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – தேர்தலுக்கு முன்பாக கடந்த திராவிட ஆட்சியாளர்களை குறைகூறி வீரவசனங்களைப் பேசிய திரு.ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அரசிற்கு அதே கடிதம் எழுதும் நடைமுறையை தாண்டி, வேறு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் ? இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தைச் சார்ந்த ஒட்டுமொத்த மீனவர்களும் இன்று ஒருநாள் முழு அளவிலான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலால் மீனவ குடும்பங்கள் மன ரீதியாக மட்டுமல்லாது பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவர் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு தூங்கச் சென்றுவிடுவதாக கடந்த திராவிட ஆட்சியாளர்கள் மீது தேர்தலுக்கு முன்பாக குற்றம் சாட்டிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் மீனவர்களின் கைதின் போது கடிதம் மட்டுமே எழுதியதை தவிர என்ன செய்திருக்கிறார் என்பதை விளக்க முடியுமா ? எனவே, பல்வேறு இன்னல்களுக்கு இடையே தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மீனவர்களை, அரசியல் செய்வதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்திடும் வகையில் நிரந்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும். தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இரங்கல் செய்தி: வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.D.வினோத்குமார் அவர்களின் தந்தை திரு.T.தேசிங்கு அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
டெல்லிக்கு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைப்பு – தமிழக விவசாயிகள் மீதான மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்தின் அடக்குமுறையையாவது தமிழக முதலமைச்சர் கண்டிப்பாரா ? அல்லது காவிரி விவகாரத்தைப் போலவே மவுனம் காப்பாரா ? காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் போராட்டம் நடத்துவதற்காக ரயில் மூலமாக டெல்லி சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழகத்திற்கே அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் சட்டவிரோதப் போக்கை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜனநாயகம் தங்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையை பயன்படுத்தி டெல்லிக்கு போராடச் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்தவும், அவர்களை திருப்பி அனுப்பவும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் அங்குள்ள காவல்துறைக்கும் எங்கிருந்து அதிகாரம் வந்தது ? கர்நாடக மாநில முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி கையோடு தண்ணீரை கொண்டு வரப்போவதாக தவெக ஆச்சரியகுறிகள் பரப்பிய ரீல்ஸ்கள் அனைத்தும் அறுந்து போன நிலையில், இயற்கையின் கொடையால் கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பொழிந்து காவிரிக்கு நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏதோ தாங்களே இயற்கையிடம் மன்றாடி நீரை கொண்டுவந்ததை போல தவெகவினர் தங்கள் தலைவரை இயற்கையின் அருளை பெற்ற தேவதூதன் எனவும், தெய்வக் குழந்தை எனவும் தற்போது ரீல்ஸ் பரப்பி கொண்டு இருப்பது நகைப்புக்குரியது. எனவே, டெல்லி சென்று கொண்டிருந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில அரசாங்கத்திடன் உடனடியாக விளக்கம் கேட்பதோடு, தனது கும்பக்கர்ண தூக்கத்தை கலைத்து தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை எந்தவகையிலும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.V.லோகநாதன் அவர்களின் சகோதரர் திரு.V.ரங்கநாதன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது உயிரையே தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரரும், தனது வீரத்தாலும் அசாத்தியமான போர்த் திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை விரட்டியடித்த பெருமைமிக்க மாவீரருமான தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினம் இன்று.. போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளால் வீழ்த்தவே முடியாத மாவீரராக வலம் வந்ததோடு , கொங்கு மண்ணின் பெருமையாகவும், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரக் கழக இணைச்செயலாளர் திரு.G.மனோகரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் மும்முறை நீளம் தாண்டுதலில் (Triple Jump) பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல் அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையால் காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர், விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், கருமந்தபட்டி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.T.மாதேஸ்வரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: திருச்சி தெற்கு மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.M.ராமலிங்கம் அவர்களின் மனைவி திருமதி.R.வள்ளியம்மை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி : மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், மதுரை வடக்கு 1ம் பகுதி 33வது வட்டக் கழக செயலாளர் திரு.V.வினோத்குமார் அவர்களின் தாயார் திருமதி.V.தமிழரசி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், அரக்கோணம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், அரக்கோணம் நகரக் கழக செயலாளர், காவேரிப்பாக்கம், நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் ரெட்டியாரசத்திரம் வடக்கு, ரெட்டியார்சத்திரம் மத்தியம் மற்றும் ரெட்டியார்சத்திரம் தெற்கு ஆகிய மூன்று ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் வீரபாண்டி வடக்கு, வீரபாண்டி தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “வீரபாண்டி வடக்கு ஒன்றியம்”, “வீரபாண்டி தெற்கு ஒன்றியம்” மற்றும் “வீரபாண்டி கிழக்கு ஒன்றியம்”, என மூன்று ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கிணத்துக்கடவு வடக்கு, கிணத்துக்கடவு தெற்கு மற்றும் பொள்ளாச்சி வடக்கு (கிழக்கு), பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஆகிய ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: சேலம் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், பகுதி மற்றும் மல்லூர் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கோவை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் மற்றும் துணைச்செயலாளர் நியமனம்.
செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துவதும், சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுப்பதும் தான் தவெகவின் அடிப்படை கொள்கையா? – மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் தவெகவினர் அரங்கேற்றும் அத்துமீறல்களுக்கும் அராஜகத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?
மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை என மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு. ராஜ்பூஷண் சவுத்ரி அவர்கள் அளித்திருக்கும் பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கும் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தொடர் பயிற்சியாலும், விடா முயற்சியாலும் காமன்வெல்த் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் திரு.ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றிப் பயணம் மென்மெலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்தினரின் எழுச்சிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவரும், இளைஞர்களை கனவு காணச் சொன்னதோடு, அதனை நனைவாக்க உழைக்கவும் கற்றுத்தந்த மகத்தான மாமனிதருமான குடியரசு முன்னாள் தலைவர் ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமையான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலமாக உலகமே வியக்கும் விஞ்ஞானியாக உயர்ந்ததோடு, குடியரசுத் தலைவர் எனும் உயரிய பதவிக்குச் சென்ற பின்பும் எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்து நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
இரங்கல் செய்தி: கோவை கிழக்கு மாவட்டம், கிணத்துக்கடவு பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.K.M.ராஜேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50க்கும் அதிகமான மலைக் கிராமங்களில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கண்டித்து கடமலை – மயிலை ஒன்றியம் முழுவதும் முழு கடையடைப்பும், கடமலையில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றிருக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதை அடிப்படையாக வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டியும் , மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை உடனடியாக வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும், எந்தவித நடவடிக்கை எடுக்காததன் விளைவே தற்போது வேறுவழியின்றி கவன ஈர்ப்பு முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியிருப்பதாக அக்கிராமங்களைச் சார்ந்த மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, மேகமலை மலைக்கிராமங்களில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்காக நடைபெற்ற அரசு நல முகாமில் அமைச்சரின் சகோதரருக்கு என்ன வேலை? ஆளும் கட்சி என்பதால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அதனை ரீல்ஸாக வெளியிட்டு சிலாகித்துக்கொள்வதும் அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.புதுக்கோட்டையில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு நல முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, அதனை தனது ஆதரவாளர்களின் மூலம் பெருமிதமாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக வெளியிட்டிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் சகோதரரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே, அரசு நிர்வாகத்தின் தலைமையகமான தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறை தொடங்கி முதலமைச்சரின் அறை வரை தவெகவினர் ரீல்ஸ் எடுக்கும் தளங்களாக மாறிவிட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட அரசு முகாமை தனது தனிப்பட்ட விளம்பரக் கூடமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதியும் அதிகாரமும் கொடுத்தது யார்? அம்மா உணவகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் அத்துமீறி நுழைந்து ஆய்வு எனும் பெயரில் ரீல்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கும் தவெகவினரை கண்டிக்கத் தவறிய அக்கட்சியின் தலைமையால், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, அரசு நிர்வாகத்தில் தவெகவினரின் தலையீடு முற்றிவரும் நிலையில், அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ரீல்ஸ் மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ரியல் ஆட்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தவெக அரசையும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவர் அணி செயலாளராக டாக்டர். S.நோவா அவர்கள் நியமனம்.
தமிழகத்தில் அண்மைக்காலமாகவே மருத்துவக் கழிவுகள் திறந்த வெளிகளில் கொட்டப்படுதல், மருத்துவமனைகளிலேயே கழிவுகள் தேங்கி கிடத்தல், உரிய நேரத்தில் உரிய முறையில் அகற்றப்படாமல் இருத்தல் என அடுத்தடுத்து வெளியாகும் புகார்கள், தமிழகத்தின் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரத்தை பாதிக்கும் அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளது. உதாரணத்திற்கு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் மூலமாக மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கிலோ மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், குறிப்பிட்ட 5மாவட்டங்களுக்கும் சேர்த்து விருதுநகரில் செயல்படும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையில் நாள் ஒன்றுக்கு 2800 கிலோ கழிவுகள் மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்ற நிலையில் மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் எங்கே செல்கின்றன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 60 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகும் நிலையில், அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு போதுமான அளவிற்கு மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் இல்லை என்பதும், தற்போது இருக்கும் மிகக் குறைவான ஆலைகளிலும் மருத்துவக் கழிவுகளை முழுமையாக சுத்திகரிக்கும் வசதிகள் இல்லாததுமே ஆங்காங்கே மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கான பிரதான காரணம் என பொதுநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு உற்பத்தி ஆகிறதோ, அதற்கு ஏற்றவாறு அவை மேலாண்மை செய்யப்படுவதை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக் கழிவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுநல ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு கூட உரிய பதிலை அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், காலம் தாழ்த்துவதும் ஏற்புடையதல்ல. எனவே, பொதுமக்களின் உயிர், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதோடு, அவற்றின் செயல்பாடுகளை தனி குழுக்களை அமைத்து கண்காணித்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தூத்துக்குடி, அமுதா நகர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் மட்டும் நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, அதன் தொடர்ச்சியாக தற்போது தூத்துக்குடியில் அரங்கேறியிருக்கும் சம்பவம் என அடுத்தடுத்து நிகழும் காவல் மரணங்கள், ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்குகின்றன.அதிலும், காவல்நிலையத்தில் வைத்து காவலர்கள் கடுமையாகத் தாக்கியதாக உயிரிழந்த விசாரணைக் கைதி மருத்துவமனையிலிருந்தபடி வாக்குமூலம் அளித்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் முக்கிய அமைப்பாகச் செயல்படும் காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதைத் தாண்டி, சட்டம் மற்றும் அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையும் பாதிப்படையச் செய்கிறது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும், அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட தவெக, தற்போது அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களுக்கு அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறதா? எனவே, தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் தொடர்புடைய அனைவரது மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தவெக ஆட்சிக்கு வந்தபின்பு அரங்கேறிய காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும். காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் முதன்மையானவராகத் திகழ்ந்தவரும், சிறைத் துன்பங்களையும், நோயின் வேதனைகளையும் தாங்கி நாட்டு மக்களின் விடுதலைக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவுதினம் இன்று. சுதந்திரப் போராட்ட வீரராக, எழுச்சியூட்டும் படைப்பாளியாக, பத்திரிகை ஆசிரியராக, சொற்பொழிவாளராக எனப் பல்வேறு வழிகளில் இளைஞர்கள் மத்தியில் விடுதலைக்கான வேள்வியை விதைத்த போராளி சுப்பிரமணிய சிவா அவர்களின் தியாகத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்து போராடுவது அரசியல் கேலிக்கூத்து – தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை, அதுவே டெல்லியில் அனுமதியின்றி போராடிய திரு.ராகுல்காந்தி அவர்களை கைது செய்தால் அது ஜனநாயகப் படுகொலையா ? 2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, நீட் தேர்விற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக் கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய போராட்டங்கள் அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய திரு. ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ? தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மேலூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு உறுப்பினருமான திரு.பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்களின் மகன் திரு P.உலகாதிபதி அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகனை இழந்துவாடும் திரு.பி.பெரியபுள்ளான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.</strong> மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும். எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச்செயலாளர் திரு.A.T.ராஜசேகரன் அவர்களின் தாயார் திருமதி T.பானுமதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டு தமிழக விளைநிலங்களுக்கு அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் – தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வபோது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி? எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு.J.சலீம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் புகார் – லஞ்சம் கேட்போரிடம் இது முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆட்சி என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!
தமிழ் மொழியின் அழகையும், அதன் உச்சரிப்பின் பெருமையையும் தனது கம்பீரமான குரலால் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த மகா நடிகரும், உணர்வுகளுக்கு உயிர் கொடுத்த உன்னதக் கலைஞருமான செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுதினம் இன்று… வீரம், தியாகம், பாசம், கோபம், சோகம், காதல் என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தனது அற்புதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி காலம் கடந்தாலும் கம்பீரம் குறையாத கலைப் பேரரசராக மக்கள் மனங்களின் நிலைத்திருக்கும் சிவாஜி கணேசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
தவெக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கட்டணமும் இருமடங்காக அதிகரித்திருப்பதாக மின் நுகர்வோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்த பின்பு இரு மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்து மக்களை ஏமாற்றிய கையேடு, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகையையும் மக்களிடமே மறைமுகமாக மின்கட்டணத்தின் மூலம் வசூல் செய்ய முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், தமிழக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணம் நடப்பாண்டில் உயர்த்தப்படாது என பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, பொதுமக்களின் கண்களில் மண்ணை தூவி மறைமுகமாக மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையில் மின்வாரியம் இறங்கியிருக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மின் கணக்கீட்டு முறையில் குறைபாடுகள் ஏற்பட்டிருப்பதால் தவறான மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதாக மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், மின் நுகர்வோர்களிடம் இருந்து இதுவரை அதிகமாக பெறப்பட்ட மின்கட்டணங்களை திருப்பியளிப்பதோடு, தமிழகம் முழுவதும் குளறுபடிகள் குறித்த முறையான விசாரணை மேற்கொண்டு, அவை சரிசெய்யப்படும் வரை மின்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மின்வாரியம் அறிவிக்கவேண்டும். பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டிய பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர், தன் துறையில் நடைபெறும் சாதனத் திருட்டுகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் களைய உருப்படியான சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், காலை – மாலை என இரு வேளைகளிலும் தன் குறைகளை மறைப்பதற்காகவும், பிரச்சனைகளை மடைமாற்றுவதற்காகவும், எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படி இழிவாக விமர்சிக்கலாம் என்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வருவதே மின்சாரத்துறையில் நடைபெற்றிருக்கும் இத்தகைய குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாக அமைத்திருக்கிறது. எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, குழப்பமான, குளறுபடிகள் நிறைந்த கணக்கீடுகளின் மூலம் மக்களை சுரண்டும் அமைப்பாக செயல்படக்கூடாது என்பதை இனியாவது உணர்ந்து, தடையற்ற மின்சாரத்தை எந்தவித குளறுபடிகளுமின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைத் தலைவராக திரு.சுகம் வீர.கந்தசாமி, கழக மகளிர் அணி துணைச்செயலாளராக திருமதி.R.சுமதி ராமகிருஷ்ணன், கழக மீனவர் அணி துணைச்செயலாளராக திரு.அ.சலீம் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் நத்தம் வடக்கு, நத்தம் மத்தியம், நத்தம் தெற்கு ஆகிய மூன்று ஒன்றியக் கழகங்கள் கழக அமைப்பு ரீதியாக நத்தம் வடக்கு ஒன்றியம் மற்றும் நத்தம் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு:தேனி தெற்கு மாவட்டம், சின்னமனூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், குச்சனூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:தேனி தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் போடிநாயக்கனூர் கிழக்கு மற்றும் போடிநாயக்கனூர் மேற்கு ஆகிய ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக போடிநாயக்கனூர் வடக்கு ஒன்றியம் மற்றும் போடிநாயக்கனூர் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு:தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஸ்ரீவைகுண்டம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:தென்காசி வடக்கு மாவட்டம், குருவிகுளம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.K.R.P. மூர்த்தி நியமனம்.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் திரு.R.T.வள்ளுவன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
2026ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, வயது வரம்பு அடிப்படையில் இறுதி வாய்ப்புள்ள இளைஞர்களின் எதிர்காலத்தையும் வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறையில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணி ஓய்வுபெறுவதால் காலிப்பணியிடங்கள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தொய்வு ஏற்படுத்தக் கூடும். கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக திகழும் காவல்துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளை தள்ளி வைப்பதும் பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும். எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கிட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே காணாமல் போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் காவலர்கள் தரக்குறைவாக பேசியதோடு, அப்புகாரை ஏற்க மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயத் தொழிலாளி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவதில் முதல் நம்பிக்கையாக இருக்க வேண்டிய காவல்நிலையங்கள், புகாரை ஏற்க மறுத்து அலைக்கழிப்பதும், விசாரணை எனும் பெயரில் தரக்குறைவாக நடத்துவதும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதும், சட்டத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளன. நாகர்கோவிலைச் சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சிறையில் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரின் உறவினர்கள் கூறிய செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, சென்னை புழல் சிறையில் இருந்த மற்றொரு கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக பரவிவரும் தகவல் காவலர்கள் மற்றும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. எனவே, திருத்துறைப்பூண்டி விவசாயி தற்கொலை வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகளில் மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்பூர்வமான கடமை ஆகியவை முதன்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், காவல்துறை தலைவரையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும், ஏழை, எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.D.மகாராஜன் அவர்களின் தாயார் திருமதி.D.மந்தையம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை பொறுப்பு என்பதை உணர்ந்து, சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்
இரங்கல் செய்தி: வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் பகுதிக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.U.K.மணிகண்டன் அவர்களின் தாயார் திருமதி.K.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த தவெக நிர்வாகிக்கு பொதுமக்கள் தர்மஅடி – பெண்களை தவெகவினரிடம் இருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா ? கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாசமான சைகைகளை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக தவெக நிர்வாகி ஒருவரை பொதுமக்களே பிடித்து நையப்புடைந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்குமேடை வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார் ? தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அமைத்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக் கேடானது. எனவே, பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவதோடு, இனியாவது குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் இராமநாதபுரம் நகர கழகம் இராமநாதபுரம் கிழக்கு மற்றும் இராமநாதபுரம் மேற்கு என இரண்டு நகரக் கழகங்களாக பிரிப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் மண்டபம் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றியம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும கமுதி கிழக்கு, கமுதி வடக்கு, கமுதி தெற்கு, கமுதி மேற்கு ஆகிய நான்கு ஒன்றியக் கழகங்கள் கமுதி வடக்கு ஒன்றியம், கமுதி மத்திய ஒன்றியம் மற்றும் கமுதி தெற்கு ஒன்றியம்,என மூன்று ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் முதுகுளத்தூர் கிழக்கு, முதுகுளத்தூர் மேற்கு, முதுகுளத்தூர் மத்தியம், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு ஆகிய ஐந்து ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியம்என இரண்டு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு :கோவை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர், சரவணம்பட்டி பகுதி மற்றும் மேட்டுப்பாளையம் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தென்காசி தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு.சரத்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.சரத்குமார் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தனது கலை மற்றும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தின் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்கும் இத்தகைய விடுதிக் கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி பொதுமக்களுடன் இணைந்து போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாத்து சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய பொறுப்பும், கடமையுமிக்க காவல்துறையினரே, சமூக பொறுப்புடனும், துணிச்சலுடன் குரல் எழுப்பிய பள்ளி மாணவிகளிடம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தியிருப்பதும், அவர்களை குற்றவாளிகளை போல சித்தரித்திருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அணுகுமுறையாகும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருபுறம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கிவிட்டு, மறுபுறம் பெண்களுக்கு நாள்தோறும் பல்வேறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது தவெக அரசின் அளவுக்கு மீறிய அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
சேலம் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் (SUEZ) எனும் தனியார் நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் (09.02.2026 அன்று) ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சி அமைந்தவுடன் தற்போது அத்தொகை 1038 கோடி ரூபாயாக திருத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? – அதேபோல, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்துறை சூயஸ் (SUEZ) நிறுவனத்துடன் ஜுன் 19 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து ஜுலை 8 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்ததன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன ? அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகளின் படி சேலம் மாநகர மாமன்றக் கூட்டத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தீர்மானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், ஜூன் 19ஆம் தேதியே திருத்தப்பட்ட தொகையோடு ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படும் நிலையில், இந்த அவசர ஒப்பந்தம் பொது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்படும் அரசு உயர்பதவி நியமனங்களும், இதுபோன்ற தனியார் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களும், பொதுமக்களுக்கு தெரியவந்து அதற்கு கேள்வி எழுப்பிய பிறகே, அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிடுவதை பார்க்கும் போது, குளறுபடிகளும், குழப்பங்களும் நிறைந்திருக்கும் அரசு நிர்வாகத்தில், முதலமைச்சர் கூறிய வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகிவுள்ளது. எனவே, சூயஸ் (SUEZ) நிறுவனத்திற்கு 758 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட ஏற்பளிப்பு கடிதம் (LOA), தற்போது 1035 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கான காரணங்களை விளக்குவதுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், அவர்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும் உரிய மதிப்பளிக்கவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப்பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உயரிய சிகிச்சைகள் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளருமான திரு.பூமணி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களின் வாழ்வியலையும், சமூகத்தின் உண்மை நிலைகளையும் தனது படைப்புகளின் மூலம் ஆழமாக பதிவு செய்து, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த எழுத்தாளர் திரு.பூமணி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக எழுத்தாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டைவடக்கு ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியைப் பயன்படுத்தி அளவுக்கு அதிகமான மண்ணைஎடுத்து சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்தும் வகையிலும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கத்திலும் வழங்கப்பட்ட வண்டல் மண் எடுப்புக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதனை தட்டிக் கேட்ட இளைஞர்களின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வகுத்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம்இரவு, பகலாக மண் தோண்டி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததின் மூலம் இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு காவல்துறையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றரா? என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுர கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெறும் மண் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்திடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சட்டவிரோத மண் எடுப்பைத் தட்டிக் கேட்ட இளைஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், இசையின் இனிமையை தனது குரலால் தலைமுறைகள் தாண்டி உயிர்ப்பித்து தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (Nightingale) என அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத தடத்தைப் பதித்துச் சென்றிருக்கும் பாடகி எஸ்.ஜானகி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வியட்நாம் நாட்டில் இந்தியர்கள் பயணித்த சுற்றுலாப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும், தமிழக அரசிடமிருந்து நீர் திறந்திடக் கோரி எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் திரு. ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, மாநிலங்களின் ஒருமைப்பாட்டிற்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக உள்ளது.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவரும், போர்க்களத்தில் எதிரிகளால் எளிதில் வீழ்த்த முடியாத போர் வீரருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடி உயிர்நீத்த அழகுமுத்துகோன் அவர்களின் தியாகத்தையும், அஞ்சாத துணிச்சலையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் பூரண உடல்நலத்தோடு, நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
இரங்கல் செய்தி: விருதுநகர் கிழக்கு மாவட்டம், நரிக்குடி வடக்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.R.முருகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை – ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் இந்தப் போக்கைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? சென்னை புனித பீட்டர் மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம், சீனிவாசன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், மாநில ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 650 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மேலும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், மாநில ஒதுக்கீட்டுக்கான மருத்துவ இடங்கள் மேலும் குறைவதுடன், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிலும் சுமார் 50 இடங்கள் குறையும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் ₹4 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறியவுடன், ஆண்டுக் கல்விக் கட்டணம் ₹20 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை உயரக்கூடும். இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவு முற்றிலும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அதிக கட்டணம் வசூலிக்கும் நீட் பயிற்சி மையங்கள், தேர்வு முறைகேடுகள், தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறைவதும், அதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மேலும் உயர்வதும், மருத்துவக் கல்வியை ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் என கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள எந்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறுவதற்கான தடையின்மைச் சான்றிதழை (No Objection Certificate) எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்காத நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய அங்கீகாரங்களை வழங்கியிருப்பது மாநில உரிமைகளையும், மாணவர்களின் நலனையும் பாதிக்கும் நடவடிக்கையாகும். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்திய முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். அந்த நடவடிக்கைகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பது, ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பது, மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது ஆகியவற்றில் தமிழக அரசு உடனடியாக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நெல் மூட்டைகள் சேதம் – தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளை கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான நெல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தீயில் கருகி வீணாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு, இயற்கைப் பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாதக் கணக்கில் இடைவிடாமல் உழைத்து விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகள் அனைத்தும் தீயில் கருகி வீணாகும் அளவிற்கு அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டிருப்பதும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெல் குடோனில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதற்கான காரணத்தை முழுமையாகக் கண்டறிவதோடு, இதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதையும் அரசு தீவிரமாக ஆராய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நெல் சேமிப்புக் கிடங்குகளிலும் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தெற்கு ஆசியா (சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா) மண்டல செயலாளர் திரு.R.செல்வநாதன்(எ)போஸ் அவர்களின் தந்தை திரு.V.இராஜேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சென்னை கே கே நகர் கன்னிகாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடியை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. சேலம் தலைவாசல் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த திமுக நிர்வாகி கொலை, சென்னை வால்டாக்ஸ் சாலையில் இளைஞர் குத்திக் கொலை, விருதுநகர் அருகே சிறுமி மீது காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி, தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி என தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், ரீல்ஸ் கண்டெண்டை தேற்றுவதிலும், பொய் செய்திகளை வித விதமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதிலுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருவதால், சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாகச் சுற்றித்திரியும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ரவுடி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறைக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கி அவர்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்திட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.குடியிருப்புகள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், புகழ்பெற்ற திருக்கோயில்களுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் தீயிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியின் நிலத்தடி நீரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு அருகே அமைந்திருக்கும் இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.எனவே, தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியிலிருந்து நிலம், நீரோடு, காற்றையும் மாசுபடுத்தும் இக்குப்பைக் கிடங்கை உடனடியாக இடமாற்றம் செய்வதோடு, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்குகளை அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்றும் வகையில் செயல்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இடைவிடாது ஒலித்து அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. சமத்துவம், மனிதநேயம் மற்றும் சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூகநீதி போராட்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை விதைத்த தீண்டாமை ஒழிப்பு போராளி இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நிலையில், நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்கள் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திற்குள் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் வராத நிலையில், அரைகுறை அறிவு ஜீவிகள் வழங்கிய ஆலோசனையின் படி அவசரகதியில் தவெக அரசு எடுத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரக்கூடிய தவறான முடிவால் இன்று விவசாயி ஒருவரின் உயிர் பறிபோய் அவரின் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.ஆளுநர் உரைக்கு பின் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் உரையில், விவசாயிகளுக்காக இந்த அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் தூண்டுதலால் தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்ற கருத்தை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஏற்ற இறக்கத்துடன் பதிவு செய்தார். ஆனால், தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, அதை “மற்றவர்களின் தூண்டுதல்” என்ற போர்வைக்குள் அடக்கிப் பார்க்காமல், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் நியாயமான கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உடனடியாக அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் பிற கட்சிகளை வெட்டி, ஒட்டி ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசு, எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சிகளாகப் பார்க்காமல் அவர்கள் முன்வைக்கும் கருத்துகளையும், சுட்டிக்காட்டும் பிரச்சினைகளையும் சரியான பார்வையில் அணுகி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க இனியாவது முன்வர வேண்டும்.எனவே, மக்களை ஏமாற்றியே ஆட்சியை நடத்திவிடலாம் என்ற தங்களின் அதிமேதாவித் தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, உயிரிழந்த விவசாயி திரு. சோமசுந்தரம் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை உடனடியாக வழங்கவும், தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.எந்தவித தடையுமின்றி சுலபமாகவும், சுதந்திரமாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பார்க்கும் போது, தமிழக அரசு அறிவித்தது போதைப் பொருள் தடுப்பு படையா? அல்லது போதைப் பொருளைத் தடுக்க முடியாத படையா? என்ற கேள்வியை எழுப்புகிறது.பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலேயே நடைபெறும் போதைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு பள்ளி சென்று கல்வி பயில வேண்டிய மாணவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழக்கும் அபாயகரமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.எனவே, தமிழகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், அறிவித்த நாள் முதல் காகித அளவிலேயே இருக்கும் போதைப் பொருள் தடுப்பு படையை முழு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியதாக தமிழக விவசாயிகள் புகார் – சட்டவிரோதமாகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராகச் செயல்படுவதோடு, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய நீரை உரிய நேரத்தில் தர தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம், தற்போது மேற்கொண்டிருக்கும் இந்த கட்டுமானப் பணிகளின் மூலம் மேகதாது அணையைக் கட்டும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேகதாது அணை கட்டுவதற்கான எந்தவொரு அனுமதியையும் கர்நாடக அரசுக்கு வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாத நிலையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் காட்டும் தீவிரம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சியினர் இங்கு வெற்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மேகதாது பகுதிகளில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதன் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் இனியாவது உணர வேண்டும். எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவிரியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கும் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், பேரையூர் பேரூராட்சி, 12 வது வார்டு கழக செயலாளர் திரு.A.அபுபக்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஒருபுறம் White Powder புகழ் அமைச்சர், மறுபுறம் பொய்சொல்வதையே தன் தொழிலாக கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக சொல்லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப்படுவதாக புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர் – ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?
நம் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு, ஆன்மீகப் பெருமைகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவரும், துணிச்சலின் உருவமாகவும், ஆன்மீகத்தின் உயிர் வடிவமாகவும் திகழ்ந்து ஒட்டுமொத்த நாட்டிற்கும் தன்னம்பிகையை ஊட்டியவருமான வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று…
இரங்கல் செய்தி:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் திருமதி.K.சண்முககுமாரி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக திரு.M.S.ராமலிங்கம் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றிய கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “நன்னிலம் வடக்கு ஒன்றியக் கழகம்” மற்றும் “நன்னிலம் மத்திய ஒன்றியக் கழகம்” என இரண்டு ஒன்றியக் கழங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்கண்டவாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், மாவட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், ஒன்றிய, நகர, மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும், கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சாகித்யா அகாடமி விருதை இருமுறை பெற்ற தலைசிறந்த நூலாசிரியருமான முதுபெரும் கவிஞர் திரு.புவியரசு அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதா – மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத பணியை தங்களின் கடமையாக மட்டுமல்லாது, மனிதநேய சேவையாகவும் கருதி பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்ட பல்லடம் நகரக் கழக பொருளாளர் திரு.R.குமாரசாமி அவர்களின் தாயார் திருமதி.R.தமிழ்செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா? – மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டையா ? – மாணவர்களின் மத்தியில் சாதிய பகுபாடை ஆழமாக விதைக்க முயற்சிக்கும் தவெக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் சாதி சார்ந்த அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வளர்க்கும் இடமான பள்ளிகளில், மாணவர்களின் அடையாள அட்டையில் அவரவர் சாதி சார்ந்த விவரங்களைக் குறிப்பிட முனைவது பள்ளி வளாகங்களுக்குள்ளாகவே சாதிய அடையாளங்களை வலுப்படுத்தும் ஆபத்து மிக்க முயற்சியாகும்.தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் சாதிய பகுபாடை போக்க வேண்டிய அரசு, அவர்களின் மனதில் சாதிய அடையாளத்தை ஆழமாக விதைப்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானது ஆகும். எனவே, அரசுப்பள்ளிகள் என்பது மாணவர்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சாதியின் பெயரில் பிரிக்கும் கருவியாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து, மாணவர்களுக்கு சாதிய அடையாளங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் “Thug Life Moment” வீடியோ – போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா? இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய “Thug Life Moment” வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த “Thug Life Moment” வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி திரைக்கதைகளின் மன்னராக வலம் வந்தவரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தவருமான திரு கே.பாக்கியராஜ் அவர்கள் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. துணை இயக்குநராக திரையுலகில் அடியெடுத்துவைத்து இயக்குநராக, கதாசிரியராக நடிகராக என அரை நூற்றுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த திரு கே.பாக்கியராஜ் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் கே நாராயணா அவர்களை நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள். தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக திரு வெங்கட் கே நாராயணா அவர்களுக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும். எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத்தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திரு வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: மாதனூர் கிழக்கு மற்றும் மாதனூர் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக மாதனூர் கிழக்கு ஒன்றியம், மாதனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் மாதனூர் தெற்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு, ஜோலார்பேட்டை மேற்கு மற்றும் ஜோலார்பேட்டை மத்தியம் ஆகிய மூன்று ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழக அமைப்பு ரீதியாக ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், மற்றும் ஜோலார்பேட்டை தெற்கு ஒன்றியம் என நான்கு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை நகரக் கழக செயலாளராக திரு.K.ராமு நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகம் – திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை மத்தியம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.S.K.புருஷோத்தமன், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.P.வெங்கடேசன் நியமனம்.
இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.V.மணிகண்டன் அவர்களின் தந்தை திரு.R.வேலுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழ் மொழியின் அழகையும், இனிமையையும் தன் கவிதைகள் மூலமாக உலகறியச் செய்தவரும், தமிழ் திரையிசை உலகிற்கு அழியாப் பொக்கிஷங்களை வழங்கிய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. காதல், தத்துவம், ஆன்மீகம், மனிதநேயம் என வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் தனது பாடல் மற்றும் கவிதைகளின் மூலமாக மக்களின் உள்ளங்களை தலைமுறை கடந்தும் ஆட்கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தமிழ் மற்றும் இலக்கியப் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது! சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது!
இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்டம், கரூர் வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.M.பாஸ்கரன் அவர்களின் தந்தை திரு.M.முத்துசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் திருமதி. A. செந்தமிழ் செல்வி அவர்களின் சகோதரர் திரு.A. சதீஷ்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது. சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும். எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதேசமயம், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்களின் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழகத்தின் நீர்வளத்தை பாதிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் முன்மொழிந்த தமிழக அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், இவ்விவகாரத்தில் பிரத்தியேக நடுவர் நீதிமன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த கருத்தை ஏற்று, அதனைத் தீர்மானத்தில் திருத்தமாக இணைத்த முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசினர் தீர்மானத்திற்கு கொள்கை அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளையில், தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், டெல்டா மாவட்டங்களின் நீர்வளப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில், மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: வடசென்னை மேற்கு மாவட்டக் கழக பொருளாளர் திரு.C.கங்கன் அவர்களின் தந்தை திரு.செல்லப்பன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களை தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், மாண்புமிகு மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.L.முருகன் அவர்கள் மற்றும் தமிழக பாஜக துணைத்தலைவர் திரு சக்கரவர்த்தி ஆகியோர் சென்னை அடையாரில் அமைந்துள்ள கழக பொதுச்செயலாளர் அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். <a href="https://x.com/DrLMurugan">@DrLMurugan</a><a href="https://x.com/NainarBJP">@NainarBJP</a><a href="https://x.com/Chakravarthy257">@Chakravarthy257</a><a href="https://x.com/BJP4TamilNadu">@BJP4TamilNadu</a>
தலைமைக் கழக அறிவிப்பு: கடலூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு. S.D.முருகன் நியமனம்.
தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் தவெக அரசு தயாரித்த ஆளுநரின் இன்றைய உரை!
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், எளிமை, நேர்மை மற்றும் உண்மையை தன் அடிப்படை குணங்களாக கொண்டிருந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான ஐயா கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று தன்னுடைய அசாத்திய திறமையாலும், அளப்பரிய உழைப்பாலும் கிடைத்த பல்வேறு பதவிகளின் மூலம் அரசியல் உலகின் உச்சத்தை அடைந்தாலும் தன் உயிர் பிரியும் நிலையிலும் எளிமையை மட்டுமே அடையாளமாகக் கொண்டிருந்த ஐயா கக்கன் அவர்கள் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் ஆற்றிய பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்
தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் மாநகர் மாவட்டம், காட்பாடி மத்திய ஒன்றியம் மற்றும் காட்பாடி மேற்கு ஒன்றியம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் மாவட்டக் கழகம், காட்பாடி வடக்கு மற்றும் காட்பாடி தெற்கு பகுதிக் கழக செயலாளர்கள், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: நீலகிரி மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள், உபதலை ஊராட்சிக் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தேனி தெற்கு மாவட்டம், சின்னமனூர் ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் சின்னமனூர் மேற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு. சின்னமனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.M.N.ஜெயபிரகாஷ், சின்னமனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு. S.பசும்பொன் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தேனி தெற்கு மாவட்டம், பூதிப்புரம் பேரூர் கழக செயலாளராக திரு.பெ.கணேசன், உத்தமபாளையம் பேரூர் கழக செயலாளராக திரு.M.நஜுமுதீன் நியமனம்.
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கையே! தமிழக அரசின் நிதிநிலை குறித்து “வெள்ளை அறிக்கை” வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது. தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? தவெக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன? வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன? மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன? இப்படி செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் “it will take some time” தான். வருவாயைப் பெருக்குவதற்கான புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்காமல், அரசுத் துறைகளில் உள்ள leakage-களைத் தடுக்க வேண்டும் என்பதையே பிரதான தீர்வாக முன்வைத்திருப்பது, எதிர்காலத்தில் வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்தும் பாதையை தவெக அரசு தேர்வு செய்துள்ளதோ என்ற அச்சத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வெள்ளை அறிக்கை என்பது பிரச்சினைகளைப் பட்டியலிடுவதோடு நிற்காமல், அவற்றுக்கான தீர்வுகளையும், காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டங்களையும் முன்வைக்க வேண்டும். ஆனால், தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெளிவான தொலைநோக்குப் பார்வையும் இல்லை; நம்பிக்கையூட்டும் செயல்திட்டங்களும் இல்லை; காலவரையறையுடன் கூடிய உறுதிமொழிகளும் இல்லை. எனவே, தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன உண்மைகளையே புதிய அட்டையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், மக்களை அடிமைப்படுத்தி கொடுங்கோல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற மாவீரருமான வாஞ்சிநாதன் அவர்களின் நினைவுதினம் இன்று. ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக தமிழகத்தில் உருவான தேசிய புரட்சிகர இயக்கத்தின் நாயகர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்து, தாய் திருநாட்டின் விடுதலைக்காக தன் உயிரையும் அர்ப்பணித்திட்ட வாஞ்சிநாதன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
<strong>தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணம் பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்ற எரிசக்தி துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களின் பேச்சு பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் அமைய வேண்டும்.</strong> தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்துக் கொண்டிருந்த எரிசக்தி துறை அமைச்சரின் தற்போதைய பேச்சு, கடந்த ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட குடியிருப்புகளுக்கான வருடாந்திர கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்த முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. <strong>ஏற்கனவே வணிக நிறுவனங்களுக்குப் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் ஆயிரக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, அதில் பணியாற்றி வந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், மீண்டும் ஒருமுறை மின்கட்டண உயர்வு ஏற்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் முடங்கும் அபாயம் ஏற்படும்.</strong> அதோடு, குடியிருப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தாமல் வணிக நிறுவனங்களுக்கான கட்டணத்தை மட்டும் உயர்த்தினாலும், அந்நிறுவனங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் விலை உயர்வானது நேரடியாக பொதுமக்களின் மீதே சுமையாக ஏறும் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, <strong>மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிடுவதே மின்கட்டண உயர்விலிருந்தும், விலைவாசி உயர்விலிருந்தும் பொதுமக்களை காக்கும் ஒரே வழியாக அமையும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும்.முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின் காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது.காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடிக்குப் பிறகும் மீதமுள்ள தொகையை செலுத்த இயலாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.மேலும், தற்போதுள்ள பயிர்க்கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய பயிர்க்கடன் கிடைக்கும் என்ற சூழல் நிலவுவதால் குறுவை சாகுபடியை தொடங்க முடியாத நிலை உருவாகி, விவசாய உற்பத்தியும் கேள்விக்குறியாகியுள்ளது. மிக முக்கியமாக, தேர்தலுக்கு முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெளிவாக வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் தள்ளுபடி வரம்பை சிறிது சிறிதாக உயர்த்துவது, விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்ற நிலை தொடருமானால், “மாற்றம்” கொண்டு வருவதாக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மக்களின் நலனுக்காக ஆட்சி செயல்பட வேண்டுமே தவிர, ஒவ்வொரு கோரிக்கைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் ஏற்படக் கூடாது. எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரைப்பட நடிகர் திரு. வாகை சந்திரசேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.வாகை சந்திரசேகர் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
இரங்கல் செய்தி: ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன் அவர்களின் மனைவி திருமதி.R.சங்கீதா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிக்கக் கோரி போராட்டம் – தமிழகத்தில் அரங்கேறும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளை தவிர்க்கவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். தகுதித்தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் முறைப்படி தேர்வாகி கடந்த 2021 ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கேங்மேன் பணியில் இணைந்த பணியாளர்கள் கள உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாதங்கள் கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் இருப்பதே அவர்களை குடும்பத்துடன் போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக காலியாக இருக்கும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், அத்தகைய காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கேங்மேன் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஒப்பந்தப் பணியில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமித்து தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, தமிழக மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதையும் உறுதி செய்திட வேண்டும் என மின்வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: திருவள்ளூர் மத்திய மாவட்டம், அம்பத்தூர் மேற்கு பகுதி, 79வது வட்டக் கழக பொருளாளர் திரு.K.சுரேஷ்குமார் அவர்களின் தாயார் திருமதி.K.தாட்சாயினி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி : திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.S.K.கோவிந்தசாமி அவர்களின் சகோதரர் திரு.S.K.சங்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள்?சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர் சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தான் இது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குகிறது. பச்சிளம் குழந்தைகளில் தொடங்கி வயதான மூதாட்டிகள் வரை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய குற்றச் சம்பவங்களையும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களையும் இன்னும் எத்தனை நாட்கள் தான் சகித்துக் கொள்ள வேண்டும் ? பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும் என கடுங்கோபத்துடன் சினிமாவில் பேசுவது போல வசனம் பேசும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தில் அரங்கேறும் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளராக திரு.ம.கரிகாலன் நியமனம்.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50க்கும் அதிகமான பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதோடு, அப்பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியதாக தவெக நிர்வாகி ஒருவர் கைதாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் காவல்துறை எடுக்கத் தவறியதே தற்போது இத்தகையை மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடும் அளவிற்கான தைரியத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் தொடங்கி, ஆலந்தூரில் கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு, தூத்துக்குடியில் வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை, தற்போது 50க்கும் அதிகமான பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியிருப்பது வரை, தவெகவினர் என்றால் தமிழக பெண்கள் அஞ்சி,ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தியுள்ளது. படிக்கும் இடத்தில், பணி செய்யும் இடத்தில், பயணிக்கும் இடத்தில் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன் ? எனவே, பெண்களை ஆபாச படங்கள் எடுத்து மிரட்டியதாக கைதாகியிருக்கும் தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்தவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ரீதியான உதவிகளை செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக பொருளாளரும், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளருமான வீரபாண்டி திரு.S.K.செல்வம் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டக் கழக நிர்வாக வசதிகளுக்காக திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் மத்தியம் மற்றும் திண்டுக்கல் தெற்கு ஆகிய கழக மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், மதிப்பிற்குரிய நண்பருமான திரு பியூஷ் கோயல் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் மற்றும் தேசப் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக தலைமை நிலைய செயலாளரும், தருமபுரி மாவட்டக் கழக செயலாளருமான திரு.D.K.ராஜேந்திரன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.K.P.நல்லசாமி அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
<strong>சென்னை ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</strong> கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்து தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் குறித்து மேடையில் பாடமெடுத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தனது கட்சி நிர்வாகிகளுக்கு எப்போது தனிமனித ஒழுக்கத்தை சொல்லித் தருவார் ? அவர்களிடம் இருந்து எப்படி பெண்களைப் பாதுகாக்கப் போகிறார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. <strong>வழக்குப்பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் விழிப்புணர்வு எனும் பெயரில் ரீல்ஸ் போட முடியுமே தவிர, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது என்ற விமர்சனங்களும் எழத் தொடங்கியிருக்கிறது.</strong> எனவே, <strong>ஆலந்தூர் பகுதியில் பெண்ணின் வீடு புகுந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அத்துமீறல்களில் ஈடுபடும் தவெகவினர் மட்டுமின்றி பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில், 18 மணி நேரம் தடையில்லா மின்சார விநியோகம் உள்ளிட்ட 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். மின்சாரம் எப்போது வருகிறது? எப்போது போகிறது? என்பதைக்கூட கணிக்க முடியாத அளவுக்கு, நாள்தோறும் பலமுறை அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டும், மின் அழுத்தக் குறைபாடும் நிலவி வருவதால் மோட்டார் பம்புகளை இயக்க முடியாமலும், நெற்பயிர்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமலும் பயிர்கள் கருகி வருகின்றன. இந்த அவல நிலையை விவசாயிகள் பலமுறை சுட்டிக்காட்டி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தற்போது அறிவித்துள்ள 18 மணி நேர தடையில்லா மின்சார வழங்கல் அறிவிப்பை மட்டும் எவ்வாறு நம்புவது என்று விவசாயிகள் நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் குறு மற்றும் சிறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகள், மாநிலத்தின் நிதிநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக, தவெகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போராட்டம் அறிவித்திருக்கும் சூழலில், இனியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்காமல், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்து வருகிறது. எனவே, தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான தடையற்ற 24 மணி நேர மும்முனை மின்சாரம், முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி ஆகியவற்றை இனியும் புறக்கணிக்காமல், எந்தவித காலதாமதமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
<strong>கடலூர் அருகே கடற்பகுதி எல்லைக்குள் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் – கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இத்திட்டத்தை எந்தவகையிலும் அனுமதிக்கக் கூடாது.</strong> கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கடற்பகுதி எல்லைக்குள் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால் அதே இடத்தில் மேலும் நான்கு கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மாநில அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அந்நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வாழ் உயிரினங்களும், இயற்கை வளங்களும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது மேலும் 4 கிணறுகளை அதே இடத்தில் அமைக்க முற்படுவது கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாது கடல் சார்ந்து வாழக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. </strong><strong></strong> ஹைட்ரோகார்பன் இருப்பை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படும் நில அதிர்வுச் சோதனையின் போது எழும்பும் வெடிச் சத்தமும், அதிலிருந்து கசியும் ரசாயனக் கழிவுகளும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரும் அல்லது இறந்து போகும் அபாயம் ஏற்படும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனவே, <strong>கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முடிவு செய்து தமிழக அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் வழங்கியிருக்கும் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a>
மன்னார்குடி அருகே காரக்கோட்டையில் கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. மாணவர்களை இழந்துவாடும் அவரவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகம் – தஞ்சாவூர் மத்திய மாவட்டம், தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.P.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளராகதிரு.N.ஜோதி நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.V.சுரேஷ் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி செயலாளராக திரு.பி.ஆர்.சாமி (எ) P.முனுசாமி, கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச் செயலாளராக திரு.S.ஆனந்தன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச்செயலாளராக திரு. ஜி.அருள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அந்தியூர் ஒன்றியம் கழக அமைப்பு ரீதியாக அந்தியூர் வடக்கு ஒன்றியம், அந்தியூர் தெற்கு ஒன்றியம் மற்றும் அந்தியூர் கிழக்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பவானி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர், ஒன்றியக் கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கலசப்பாக்கம் கிழக்கு மற்றும் கலசப்பாக்கம் வடக்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் ஒன்றிணைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு:திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக பொருளாளர், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: ராணிப்பேட்டை மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள் மற்றும் விஷாரம் நகரக் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், சார்பு அணிகளின் நிர்வாகிகள், சிங்கம்புணரி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், இளையான்குடி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் வடக்கு நகரக் கழக செயலாளராக திரு.V.S.தினேஷ் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை மத்திய மாவட்டக் கழக பொருளாளர், மாவட்ட விவசாயப் பிரிவு மற்றும் பொறியாளர் அணி செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
<strong>I extend my heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India, Shri Narendra Modi Ji, on creating a new historic milestone by serving 4,399 consecutive days as the Prime Minister of India.</strong> Having been elected by the people of India for a third consecutive term, the Hon’ble Prime Minister has attained this remarkable position in the history of Indian democracy through his unwavering commitment to public welfare, administrative excellence, and dedicated service. This achievement stands as a testament to the immense affection and trust that he has earned from the people of the nation. <strong>Under the leadership of the Hon’ble Prime Minister, India has made significant strides in economic growth, infrastructure development, technological advancement, and enhancing the country’s global standing. The Hon’ble Prime Minister’s efforts in the direction of transforming India into a prosperous, strong, and developed nation, continue to inspire millions across the country.</strong> I once again convey my warmest congratulations and best wishes to the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, and wish him to continue success in his journey of leading India towards greater progress and achievement. <a href="https://x.com/narendramodi">@narendramodi</a><a href="https://x.com/PMOIndia">@PMOIndia</a><a href="https://x.com/BJP4India">@BJP4India</a><a href="https://x.com/BJP4TamilNadu">@BJP4TamilNadu</a><a href="https://x.com/NainarBJP">@NainarBJP</a>
சிவகங்கை மாவட்டம் பாகனேரியை தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மன்னரும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவருமான தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த தினம் இன்று. போர்க்களத்தில் எத்தகைய எதிரிகளையும் வீழ்த்தக் கூடிய சக்தி படைத்த போர் வீரராக வலம் வந்ததோடு, கம்பீரத்தின் மறு உருவமாகவே போற்றப்பட்ட மாமன்னர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: நாமக்கல் வடக்கு மாவட்டம், வெண்ணந்தூர் பேரூர், 9வது வார்டு கழக செயலாளர் திரு.K.கோபால் அவர்களின் தந்தை திரு.கந்தசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடுமையான காயங்களுக்கு பிறகும் பின்வாங்காமல் தாய் நாட்டையும், மக்களையும் காக்க தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிப் போராடிய ராணுவ வீரராக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தேசப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
<strong>தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.</strong> கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும். <strong>நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். </strong><a href="https://x.com/offBharathiraja">@offBharathiraja</a>
<strong>பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</strong> தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் படும் துயரங்களைச் செய்திகளாக வெளியிட்டதற்காகவே குறிப்பிட்ட மூன்று செய்தி தொலைக்காட்சிகளும் அரசு கேபிளில் முடக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. <strong>அரசு நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், மக்களின் அன்றாட பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றும் செய்தித் தொலைக்காட்சிகளை முடக்க நினைப்பதும், அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஊடகங்களின் குரலை ஒடுக்க நினைப்பதும் தவெக அரசின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.</strong> ஜனநாயகத்தில் விமர்சனங்களையும், மாற்றுக்கருத்துக்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவமே நல்லாட்சிக்கான அடையாளம் என்பதை இனியாவது உணர்ந்து ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்த முயலும் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். <a href="https://x.com/polimernews">@polimernews</a><a href="https://x.com/NewsTamilTV24x7">@NewsTamilTV24x7</a><a href="https://x.com/TamilJanamNews">@TamilJanamNews</a><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a>
<strong>தமிழ் ஊடக உலகில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாலை முரசு செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், அதன் அனைத்து நிலையிலான ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</strong> சவால்கள் மிகுந்த ஊடக உலகில் உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடுவதிலும், மக்கள் பிரச்சினைகளை அரசு நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனுக்குடன் தீர்வு காண்பதிலும் தனித்துவமிக்கதாக திகழும் மாலை முரசு செய்தி தொலைக்காட்சியின் வளர்ச்சியும் வெற்றிப் பயணமும் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். <a href="https://x.com/MalaimurasuTv">@MalaimurasuTv</a>
<strong>முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் சொந்த தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகமெங்கும் அறிவிக்கப்படாமல் அரங்கேறும் திடீர் மின்வெட்டால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்கள் வீதிகளில் வந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</strong> பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே முடியாத அளவிற்குக் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், இத்தகைய அறிவிக்கப்படாத மின்வெட்டு அவர்களை வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. <strong>இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டாலும் குறைவான மின் அழுத்தப் பிரச்சினையாலும், குழந்தைகளும் முதியவர்களும் அசௌகரியத்திற்கு உள்ளாவதோடு, வீட்டில் உள்ள மின்சாதப் பொருட்களும் பழுதாகி வருவதும் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.</strong> தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர்கள் என்றைக்குச் சொன்னார்களோ, அன்று முதலே தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டுகள் தொடர்வது, தவெக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, <strong>பொதுமக்கள் படும் துயரங்களை அலட்சியமாக எதிர்கொள்ளாமல் மின் உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a>
<strong>தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சார்ந்த தவெக நிர்வாகிகள் இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</strong> ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு சரவணன் அவர்களின் ஆதரவாளர்கள் தன்னை தொடர்பு கொண்டு காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்பப்பெறவேண்டும் என மிரட்டியதாகவும், தன்னைப் போலவே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட மற்றொரு பெண்ணும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கும் பேட்டியைக் கேட்கும் போதே பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. <strong>மருத்துவமனைகளில் ஆய்வு, அம்மா உணவகத்தில் சோதனை எனும் பெயரில் தவெக நிர்வாகிகள் அரங்கேற்றிய அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, இன்று ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டும் அளவிற்கான துணிச்சலை தவெகவினருக்கு கொடுத்திருக்கிறது.</strong> திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சருக்கு இணையாக தவெகவின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை அமைத்து அமரவைப்பதும், குன்னூரில் நகராட்சி ஆணையரை தவெக நிர்வாகி ஒருவர் பகிரங்கமாக மிரட்டுவதும் தான் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தபின்பு ஏற்பட்ட ஒரே மாற்றமாக இருக்கிறது. <strong>தமிழகத்தில் கொத்து கொத்தாக அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் கண்டு, துளியளவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் தன்மீது வேண்டுமென்றே பழியைத் தூக்கிப் போடுவதாகக் கொக்கரித்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், இவ்விவகாரத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் தன் தோழமைக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு பெ.சண்முகம் அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?</strong> நீண்ட இழுபறிக்குப் பின் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால், இன்று தொடங்கி வைக்கப்படும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தமிழகப் பெண்களை, முதலில் தவெகவினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் விமர்சனம் தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, <strong>இனியும் தமிழகத்தில் சீரழிந்திருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என போலிக் குற்றச்சாட்டை முன்வைத்து மக்களை ஏமாற்றாமல், தமிழகத்தில் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைக் குறைத்து மக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
<strong>தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள் – தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாத தவெக அரசால் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்?</strong> தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது. <strong>பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக INSTA வில் REELS கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை.</strong> தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, <strong>தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழகத்தில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
சமூக வலைத்தளங்களில் அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூர் திரு மாரிதாஸ் அவர்களை கைது செய்திருக்கும் தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஜனநாயகம் பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்பாடுகளை இத்துடன் நிறுத்திவிட்டு, விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை – மாற்று ஏற்பாடுகளை தவெக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களைச் சார்ந்த ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் குறைவாக இருப்பதால் நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கான தண்ணீர் ஜூன் 12 ஆம் தேதி திறக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் குறுவை சாகுபடியே கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருக்கும் முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதாலும் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்பதால் விவசாயம் மட்டுமல்லாது அதனையே நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.<br>தவெக என்பது புதிய அதிமுக என்று பேசும் தவெக அமைச்சர்கள், இதுபோன்ற இயற்கை இடர்பாடுகள் நிறைந்த சூழல் நிலவும் போது இதயதெய்வம் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்போடு, நிலத்தடி நீரின் மூலமாகக் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முன்வரும் விவசாயப் பெருமக்களுக்கு மும்முனை மின்சாரத்தையும் தடையின்றி வழங்கிட முன்வர வேண்டும் என விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் மின் தடையால், மின் மோட்டார்கள் பழுதடைவதும், போதிய நீர் பாய்ச்ச முடியாமல் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ள நெற்பயிர்கள் காய்ந்து வீணாவதாலும் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், டெல்டா பகுதியைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பப்படாமல் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் தொகையும் நிலுவையில் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெகவின் தலைவர் திரு ஜோசப் விஜய் அவர்கள், விரைவில் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய நேரத்தில் திறந்து விடுமாறு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு.DK.சிவக்குமார் அவர்களுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கைவிடும் உத்தரவாதத்தையும் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் திரு முத்து ரமேஷ் நாடார் அவர்களின் தந்தை திரு முத்துலிங்க நாடார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தந்தையை இழந்துவாடும் திரு முத்து ரமேஷ் நாடார் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இரங்கல் செய்தி: அரியலூர் மாவட்டம், அரியலூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.P.பழனிசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: இஸ்லாமிய சமுதாயத்தின் ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தவருமான பெரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த தினம்- கழக நிர்வாகிகள் அன்னாரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் தேவை குறித்தான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக துணைப்பொதுச்செயலாளரும், தென் சென்னை மாவட்டக் கழக செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான செல்வி.CR.சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன் ஆகியோர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தனர். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
இஸ்லாமிய சமுதாயத்தின் ஈடு இணையற்ற தலைவராக விளங்கியவரும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தவருமான பெரியவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த தினம் இன்று. தாய் நாட்டின் நலனே தனது நலனாகக் கருதி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்ததோடு, அநீதிக்கும், அடக்குமுறைக்கும் ஆளான மக்களின் பிரதிநிதியாக நின்று அவர்களின் மேம்பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் – முதலமைச்சரின் முதல் கையெழுத்தான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா ? பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்? தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் புரையோடிக் கிடக்கும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து தான் தடுக்க வேண்டும் என்றால், அது வரை பெண்கள் யாரும் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள். தட்டுத் தடுமாறி அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில், நாள்தோறும் நடைபெறும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதற்குப் போட்டி, பொறாமை, பதற்றம் என புதுப்புது அர்த்தத்தைப் புகுத்தி, விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமலும், அவற்றை சரி செய்ய முனைப்புக் காட்டாமலும், எதற்கு கால அவகாசம் கேட்க வேண்டும் என்பது புரியாமலும் போர்க்கால அடிப்படையில் (Emergency Issues) தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கும், கால அவகாசம் கோருவது எந்த விதத்தில் நியாயம் என்பதே எங்களின் கேள்வி. ஏற்கனவே காவல்துறையில் நடைமுறையிலுள்ள திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயரை மாற்றி, புதிதாக எந்த ஒரு பணி நியமனமும் ஏற்படுத்தாமல், ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் பணியிலுள்ள காவலர்களையே வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைக் கூட தொடங்கி வைக்கக் காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான் தற்போதைய தவெக அரசு உள்ளது என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு மெல்ல மெல்ல வெளியே வரும் சமூக விரோதிகள், இம்முறை புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சுதந்திரமாக செயல்படுவதும், குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுவதும் தவெக அரசின் மீது அவர்களுக்கு துளியளவும் அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. அதோடு போதைப் பொருட்களின் புழக்கத்தை கடந்த ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த தவறியதாக குற்றம் சாட்டும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன்னிடம் இருக்கும் காவல்துறையை பயன்படுத்தி இதுவரை எத்தனை கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்துள்ளார் ? திறமையான காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு அடக்கத் தயங்குவது ஏன் ? எனவே, பெண்களின் பாதுகாப்பில் எந்த வித சமரசமுமின்றி செயலாற்ற வேண்டியது முதலமைச்சரின் முதல் கடமை என்பதை உணர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்திடுவதோடு கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு அண்ணாமலை அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். <a href="https://x.com/annamalai_k">@annamalai_k</a>
தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்ட துணைச்செயலாளராகவும், ஒன்றியக் கழக செயலாளர்களாகவும், கூத்தாநல்லூர் நகரக் கழக செயலாளர் மற்றும் இணைச்செயலாளராகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு : நீலகிரி மாவட்டக் கழக செயலாளராக திரு.S.ரமேஷ் அவர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தென்காசி தெற்கு மற்றும் தென்காசி வடக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் மறுசீரமைப்பு. தென்காசி தெற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.N.அருணகிரிசாமி மற்றும் தென்காசி வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.S.V.முருகையா பாண்டியன் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக திருமதி.G.கற்பகம் அவர்கள் நியமனம்.
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து – ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது.
இரங்கல் செய்தி: ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் கோட்டை திரு. V.M.சிவகுமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
<strong>தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான மதிப்பிற்குரிய சகோதரி திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</strong> திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். <a href="https://x.com/DrTamilisai4BJP">@DrTamilisai4BJP</a>
இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாகவும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி திரு. இளையராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று. கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள, இளைஞர்களிடையே ஊடுருவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிப்பதற்கு, அவர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பினால் மட்டுமே உரிய தீர்வை அடைய முடியும் என்ற அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களின் கருத்து முழுமை பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும். தமிழக முதலமைச்சராக திரு. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் கையெழுத்திடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையையே இதுவரை தொடங்கி வைக்க முடியாத தவெக அரசால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. எனவே, இளம்பெண் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூடுவதோடு, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: விருதுநகர் மத்திய மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.கோபால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்திருக்கும் தவெக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய துறை சார்ந்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் வராமல் காவல்துறையை பயன்படுத்தி அவர்களை ஒடுக்க நினைப்பது சர்வாதிகாரப் போக்கே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? எனவே, பயனாளிகளுக்கான வீடுகள் விரைந்து ஒதுக்கீடு செய்யப்படுவதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமும், தவெக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை, வேலூரில் செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல், தாம்பரம் அருகே கூலித் தொழிலாளியிடம் இலவசமாக செங்கல் ஜல்லி கேட்டு தாக்குதல், செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை என கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இந்த நான்கு சம்பவங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள் என்பது தான். இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் தான் தவெகவில் நிறைந்திருக்கிறார்களா ? அல்லது ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா ? என்பதை தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு.ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும்.
இரங்கல் செய்தி: தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.பொன்ராஜ் அவர்களின் தாயார் திருமதி.S.அன்னபுஷ்பம் அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தேனி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.M.முத்துச்சாமி அவர்களின் தாயார் திருமதி. M.பெருமாளம்மா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத திரு ஜோசப் விஜய் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் ? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு ?
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சரும், மதிப்பிற்குரிய சகோதரருமான திரு எல் முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு எல் முருகன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், அது குறித்து கேள்வி எழுப்புவதும் ஊடகங்களின் அடிப்படை கடமை. மக்களின் குரலாக ஒலிக்கும் அத்தகைய ஊடகங்களை முடக்க நினைப்பதும், அரசு கேபிளில் இருந்து இருட்டடிப்பு செய்வதும் சர்வாதிகாரப்போக்கின் உச்சம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உடனான சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கூட செய்தியாளர்களை சந்தித்து விளக்க முடியாத முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசில், ஊடகங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்கள் தான் தவெக சொன்ன மாற்றமா ?
தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.M.முரளி, குடியாத்தம் நகரக் கழக செயலாளராக திரு.K.N.சம்பத்குமார் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக மருத்துவர் அணி செயலாளராக Dr.R. கார்த்திக் கண்ணன் அவர்கள் நியமனம்.
<strong>சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது – குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும் ?</strong> சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. <strong>தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.</strong> சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன. எனவே, <strong>தன்னுடைய பொறுப்பையும் கடமையையும் மறந்து சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கைதாகியிருக்கும் தலைமைக் காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a>
தலைமைக் கழக அறிவிப்பு: தென் சென்னை மற்றும் திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் மறுசீரமைப்பு.
பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்: தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கருதி, தன் வாழ்நாள் முழுவதும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து தன் மகனையும் தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நாம் அனைவரும் நினைவில் வைத்து வணங்கிடுவோம். இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிடச் சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், அகரபேட்டை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.துரை.குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.M.மகேந்திரன் அவர்களின் தந்தை திரு.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
<strong>தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி – மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இந்த விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்பதும் ஏமாற்று வேலையே.</strong> 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். <strong>இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</strong> எனவே, <strong>தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.T.உதயகுமார் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம், மற்றும் வடசென்னை மேற்கு மாவட்டக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மறுசீரமைக்கப்படுகிறது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.S.லோகநாதன், வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.பி.ஆனந்தன் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு என மறுசீரமைப்பு- தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.P.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் அக்ரி திரு.G.சரவணகுமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.V.M.பாண்டியராஜா நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக திரு.அக்ரி N.இராமச்சந்திரன், கழக தலைமை செயற்குழு உறுப்பினராக திரு.தம்பி.V.தனபால், கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக திரு.இருள்நீக்கி P.சேகர், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளராக திரு.S.R. முருகேசன் நியமனம்.
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
<strong>காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் – மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.</strong> காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது. <strong>உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.</strong> கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, <strong>மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
இரங்கல் செய்தி: செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.S.சுதாகர் அவர்களின் தந்தை திரு.சேகர் (எ) சேட்டு அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழகம், மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகம் மறு சீரமைப்பு. செங்கல்பட்டு மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் டாக்டர்.A.சதீஷ்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.T.S. அறிவகம் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:இராமநாதபுரம் மாவட்டக் கழகம், கழக அமைப்பு ரீதியாக இனி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.S.கணேசன் அவர்களும் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு. பொ. பாண்டியன் அவர்களும் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கோவை தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக திரு. மா.பா.ரோகினிகிருஷ்ணகுமார் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி வடக்கு மற்றும் திருச்சி தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழகங்கள் இனி திருச்சி மேற்கு மாவட்டம், திருச்சி வடக்கு மாவட்டம், திருச்சி மத்திய மாவட்டம், திருச்சி தெற்கு மாவட்டம் என நான்கு மாவட்டக் கழகங்களாக மறு சீரமைப்பு. திருச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் தொட்டியம்.திரு.M.ராஜசேகரன், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் பீரங்கி.திரு.K.சுப்ரமணியன், திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு R.R.தன்சிங், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.A.சாகுல்ஹமீது நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் S.புதூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் S.புதூர் மேற்கு ஒன்றியக் கழகங்கள் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் வடக்கு மாவட்ட பகுதிக் கழக செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், சிவகங்கை வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், திருப்பத்தூர் மற்றும் நெற்குப்பை பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், அறந்தாங்கி வடக்கு மற்றும் அறந்தாங்கி கிழக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.B.K.R.சதிஷ்குமார், வேலூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.M.K.பூபாலன், இராணிப்பேட்டை மாவட்டக் கழக செயலாளராக திரு. K.சிட்டிபாபு, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.இறை R.வெங்கடேஷ் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக அமைப்புச் செயலாளர்களாக திரு.V.D.தருமலிங்கம் மற்றும் காட்பாடி திரு.S.ராஜா நியமனம்
<strong>விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி – குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?</strong> விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</strong> அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ? எனவே, <strong>சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
தினத்தந்தி நாளிதழைத் தோற்றுவித்து பத்திரிகை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பத்திரிகைத் துறையின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று. பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பேரவைத் தலைவராக என பல்வேறு வழிகளில் தமிழர்களின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த தன்னுடைய எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
<strong>தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு – தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.</strong> தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். <strong>கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.</strong><strong>ஏற்கனவே கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.</strong> தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார். எனவே, <strong>தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
முன்னாள் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திரு.M.ரெங்கசாமி அவர்களின் தாயார் திருமதி.ம.ஜெயலெட்சுமி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கும் திரு நிதின் நபின் அவர்கள் பூரண உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
<strong>திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழந்ததாகப் புகார் – முறையான விசாரணை நடைபெறுவதை மருத்துவத்துறை உறுதி செய்ய வேண்டும்.</strong> திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், சக மாணவர்களும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படித்து வந்த மாணவிக்கு மேற்கொள்ளப்பட்ட மூக்கு அறுவை சிகிச்சையின் போது அதிகளவிலான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று சக மாணவிகளே குற்றம் சாட்டியுள்ளனர்.</strong> பொதுமக்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படும் மருத்துவர்களில் ஒரு சிலரின் அலட்சியமும், பொறுப்பின்மையும் ஒட்டுமொத்த மருத்துவத்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, <strong>மாணவி உயிரிழப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று. வீரத்திற்கும், ஆட்சித் திறமைக்கும், தமிழ்ப் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாகத் திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளைக் கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
<strong>கோவை மாவட்டம் சூலூர் அருகே 10வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை – மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</strong> கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. <strong>தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.</strong> எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். <a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
இரங்கல் செய்தி: வடசென்னை மத்திய மாவட்ட மீனவர் அணி இணைச்செயலாளர் திரு.வீடியோ T.ரமேஷ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
<strong>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு இல்லையா ? – கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதல்வர் திரு டி கே சிவக்குமார் அவர்களின் ஆணவமிக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</strong> காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை எனவும், அணைக் கட்டுமான பணிக்கான திருத்தப்பட்ட விரிவான அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம் எனவும் கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசும், அதன் துணை முதல்வரும் தற்போது அணைக்கான பூமி பூஜை வரை பேசியிருப்பது தமிழகத்தில் ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong> காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அதனால் பயன்பெறும் மாநிலங்களின் அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கான உரிய நீரை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பலமுறை அறிவுறுத்தியும் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர்நாடியை முடக்குவதில் வேகம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. <strong>ஆட்சி அதிகாரத்திற்காகக் கடந்த ஆட்சியாளர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்திடம் தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்திருந்தது போல தற்போது காங்கிரஸ் கட்சியின் தயவுடன் ஆட்சியமைத்திருக்கும் தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தன்னுடைய பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க மீண்டும் ஒருமுறை காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</strong> எனவே, <strong>ஆட்சி அதிகாரத்தை விட மாநிலத்தின் உரிமையும், விவசாயிகளின் நலனுமே முக்கியம் என்பதை உணர்ந்து காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தின் டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கத்தின் முயற்சியை அரசியல் ரீதியிலும், சட்ட ரீதியிலும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
<strong>அரசு மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் மகளின் கால் பாதம் பறிபோனதாகப் போராடும் தலைமைக் காவலர் – ஐந்தாண்டுகளுக்கும் மேலான தலைமைக் காவலரின் போராட்டம் தவெக ஆட்சியிலாவது முடிவுக்கு வருமா ?</strong> அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமைச் செயலக நுழைவுவாயிலில் போராட்டம் நடத்திய காவல்துறையைச் சார்ந்த தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்கள் சக காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தலைமைக் காவலர் திரு கோதண்டபாணி அவர்களைக் கடந்த ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய புதிய ஆட்சியாளர்களும் அலைக்கழிப்பது கடும் கண்டனத்திற்குரியது.</strong> எனவே, <strong>தலைமைக் காவலர் திரு.கோதண்டபாணி அவர்களின் புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கால் பாதத்தை இழந்த அவரின் மகளுக்கு மேல் சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
சோழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் ஆவணங்களில் ஒன்றான 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆனைமங்கல செப்பேடுகளை நெதர்லாந்திருந்து மீட்டு தாய்நாட்டிற்குக் கொண்டுவரும் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோழப்பேரரசின் தலைசிறந்த ராஜ்ஜியத்தையும், பண்டைய காலத் தமிழர்களின் மகத்தான வரலாற்றையும் பறைசாற்றும் இந்த செப்பேடுகள் மத்திய அரசின் தொடர் முயற்சியால் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்டிருப்பது நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப் படக்கூடிய நிகழ்வாகும். <a href="https://x.com/PMOIndia">@PMOIndia</a><a href="https://x.com/narendramodi">@narendramodi</a>
அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் – மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.
உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றான பிரிட்டன் ராயல்டி சொசைட்டி அமைப்பின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் வேளாண் விஞ்ஞானி திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் புதல்வி விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியல்,சுகாதாரம் மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகியவற்றைத் திறம்படக் கையாண்டு பொது சுகாதாரத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ராயல் சொசைட்டி அமைப்பின் மூலம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழ் மக்களின் கல்வி உரிமைகளுக்காகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடியவரும், மக்கள் அனைவராலும் தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுபவருமான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்த தினம் இன்று சித்த மருத்துவராக, சிறந்த சிந்தனையாளராக கல்வியாளராக, பத்திரிகையாளராக என பல்வேறு வழிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் பிரதிநிதித்துவ உரிமையைப் பெறுவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இன்று வெளியாகியிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்கள் அனைவரும் தங்களின் மேல்நிலைக் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துணைத் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
<strong>புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் – குரூர மனம் படைத்த கயவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</strong> புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. <strong>தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் காட்சிகள் மாறாமல் அடிக்கடி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</strong> எனவே, மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனையை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். <a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
<strong>திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தொடரும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.</strong> திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவரும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு ஹாஜா முகைதீன் அவர்களின் இல்லத்திற்குள் புகுந்த போதைக் கும்பல் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் போதைக் கும்பல் நள்ளிரவு நேரத்தில் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழல் தவெக அரசின் மீது குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.</strong> கடந்த ஐந்தாண்டுக்கால திமுக ஆட்சியின் போது, உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடும் செய்தி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஆளுங்கட்சியினர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, <strong>செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்கள் தங்களின் பணியில் சுதந்திரமாக ஈடுபடுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a><a href="https://x.com/NewsJTamil">@NewsJTamil</a>
தலைமைக் கழக அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் தெற்கு ஒன்றியம் மற்றும் நாகை வடக்கு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் – ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். உலகளவிலான சந்தையில் கச்சா எண்ணெயின் தொடர் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன. வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் ஏற்பட்ட தடங்கலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்திற்கான செலவோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து அவர்களுக்கு பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.N.ஆனந்தகுமார் அவர்களின் தந்தை திரு.S.நாச்சிமுத்து அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
<strong>தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.</strong> த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். <strong>த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!</strong><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
<strong>குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் – தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.</strong> கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. <strong>கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.</strong> அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, <strong>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். </strong><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a>
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மருத்துவமனையின் இன்றியமையாத பணியாளர்களாகவும், மனிதநேயத்தின் உயிர்நாடியாகவும் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, தியாகம், பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் தன்னலமற்ற பணியில் ஈடுபட்டுவரும் செவிலியர்களின் சேவை மனப்பான்மையை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியிருக்கும் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களுக்கும் துணைத் தலைவராகத் தேர்வாகியிருக்கும் திரு.ரவிசங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் உயரிய இடமான சட்டமன்றத்தின் மரபுகளை முழுமையாகப் பின்பற்றி அதன் பாரம்பரியத்தையும், கண்ணியத்தையும் பாதுகாத்து, அவையை நடுநிலையோடு நடத்திடுவதை உறுதிசெய்ய வேண்டும் என பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களையும், துணைத் தலைவர் திரு. ரவிசங்கர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
<strong>சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை – கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</strong><strong>சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</strong> கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின. எனவே, <strong>தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன் . </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a><a href="https://x.com/TVKPartyHQ">@TVKPartyHQ</a><a href="https://x.com/TVKVijayHQ">@TVKVijayHQ</a>
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? – தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது. எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் மக்கள் முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் உரிய நேரத்தில் நிறைவேற்றும் எனவும் நம்புகிறேன்.
இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின் மறு உருவமாகவும் திகழும் தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடிப்படை அடித்தளமாக, அளவிட முடியாத அன்பு கொண்டவராக, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்தின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய்மார்களின் அன்பும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி கொண்டாடுவோம்.
சவால்கள் நிறைந்த சூழலில் தனிப்பட்ட வாழ்க்கையை விட, தான் கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்பணித்திட்ட ஆருயிர் சகோதரர் செயல்வீரர் மேலூர் திரு ஆர். சாமி அவர்களின் நினைவு தினம் இன்று. சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி, மேலூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் மத்தியில் மட்டுமில்லாது, தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் என்னுடன் இணைந்து பணியாற்றி அனைத்து தரப்பு கழகத்தினரின் அளப்பரிய அன்பையும் பெற்று, போர்ப்படைத் தளபதியாக தொண்டர்களின் மத்தியில் நீக்கமற நிலைத்திருக்கும் சகோதரர் மேலூர் ஆர். சாமி அவர்களின் நினைவுநாளில் அவர் கண்ட இலக்குகளை விரைந்து அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இன்று வெளியாகியிருக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் உயர்ந்த இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறவும், தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் மனம் தளராமல் அடுத்து வரவிருக்கும் துணைத்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு S.காமராஜ் அவர்கள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து வெற்றி சான்றிதழைக் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் கழகப் பொதுச்செயலாளர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், சிறந்த திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவருமான திரு ஆர்.பி சௌத்ரி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு. ஆர்.பி.சவுத்ரி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தனது அயராத உழைப்பால் பதிவு செய்திருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்கள் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்குச் சான்றாகக் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் வலுவான அடித்தளமாக அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
நடைபெற்று முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தின் எஜமானர்களாகிய தமிழக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவணங்கி ஏற்கிறது.எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி K பழனிசாமி அவர்கள், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் அன்பு தம்பி திரு S.காமராஜ் அவர்கள், பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், எங்களின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள், நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். <a href="https://x.com/CPR_VP">@CPR_VP</a>
இரங்கல் செய்தி: திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.சந்திரமூா்த்தி அவர்களின் தாயார் திருமதி.முனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மறைந்த உயர்திரு அண்ணாமலை செட்டியார் அவர்களின் பேத்தியும், மறைந்த குமாரராஜா திரு எம்.ஏ.எம் முத்தையா செட்டியார் அவர்களின் மனைவியுமான குமார ராணி முனைவர் திருமதி மீனா முத்தையா அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கல்வித்துறையில் தொலைநோக்கு சிந்தனை கொண்டு இளம் தலைமுறையினரைப் பொறுப்புணர்வோடு உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய திருமதி மீனா முத்தையா அம்மையார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் உரிமைகளை வென்றெடுத்து உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மே தினமான இந்நாளில் உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடி அவற்றை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினமான இன்று, நாம் கண்டிருக்கும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், முதுகெலும்பான உழைப்பாளர்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றி நினைவு கூறுவோம். “உழைப்பே உயர்வு தரும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன், தினமும் தங்களது உழைப்பால் உலகை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் உழைப்பாளர்களின் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
”எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வீர வரிகளின் மூலம் மக்களிடையே தமிழ் உணர்வை ஊட்டியவரும், தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவருமான புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று… எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என உரக்க முழங்கி தமிழாசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக என பல்வேறு வழிகளில் தமிழ் மொழியின் இனிமையை எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் தமிழ்ப் பணியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னரே கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நதிநீரில் தொடர்புடைய நான்கு மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து மீதமுள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகாத நிலையில், அதிகாரிகளை வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டுவதும், அதில் நதிநீர் விவகாரம் குறித்து விவாதிப்பதும் ஏற்புடையதல்ல. அதிலும், குறிப்பாக தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அம்மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைப்பதோடு, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் அமைந்த பின்னரே இக்கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திருமதி.S.S.நாகா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு கிழக்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.S.நடராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் திரு.S.பூசத்துரை அவர்களின் மனைவி திருமதி.பூ.ஆறுமுகச்செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல் – அராஜகப்போக்கில் ஈடுபட்ட திமுகவினர் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற நடைபெற்ற முயற்சியைத் தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவினரின் பண பலமும், படை பலமும் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வெறியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயற்சித்திருக்கும் திமுக குண்டர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவினர் அரங்கேற்றும் இந்த அடாவடித்தனங்கள் அனைத்தும் அக்கட்சிக்குக் கிடைக்கப் போகும் வரலாற்றுத் தோல்வியையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்றதோடு, அதனைத் தடுத்து நிறுத்த முயன்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒரத்தநாடு தெற்கு செயலாளர் திரு VNR சுரேஷ் அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மத்திய மாவட்டம், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.S.V.கோபிநாத் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
மக்கள் விரோத திமுகவை வீழ்த்தி தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்திடுவோம்! அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திடுவோம்!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – சட்ட விரோதிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் ? திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுப நிகழ்வில் பங்கேற்க வந்த 15 வயது சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோரும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவோ, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் நிகழ்ச்சியை நடத்தி தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுகவின் அலட்சியத்தை அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களே தோலுரித்துக் காட்டுகின்றன. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் என்ற பெருமையைப் பெற்ற தமிழகம், திமுகவின் கடந்த ஐந்தாண்டுக்கால இருண்ட ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலமாக மாறியிருக்கிறது. எனவே, கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குரூர மனம் படைத்த அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரில் இயங்கிவரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த தீ காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. பட்டாசு ஆலைகளை அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த ஐந்தாண்டுகளாக நிராகரித்துக் கொண்டே வந்த திமுக அரசால் தற்போது உயிரிழந்தோருடன் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான தினத்தந்தி நாளிதழை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தவரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள அன்னாரது மணிமண்டபத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு.VP.குமரேசன், கழக அமைப்பு செயலாளர் திரு.P.R.மனோகரன், கழக அமைப்பு செயலாளர் திருமதி.K.சண்முககுமாரி, தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.பொன்ராஜ், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் திரு.M.ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான தினத்தந்தி நாளிதழை இல்லந்தோறும் கொண்டு சேர்த்தவரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று. பத்திரிகைத் துறை மட்டுமல்லாது கல்வி, தொழில், விளையாட்டு மற்றும் ஆன்மீகம் என தான் தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சி பெரும் சாதனையாளராகத் திகழ்ந்த பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நற்பணிகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
FORMAT C-2: Third Spell:DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY (As per the judgment dated 25th September, 2018 of Hon’ble Supreme Court in WP (Civil) No. 536 of 2011 (Public Interest Foundation & Ors. Vs. Union of India & Anr.): Name of Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM: Name of Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026: Name of State: TAMIL NADU
கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று ஆழியார் அருகே உள்ள மலைப்பாதையில் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. கோரவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தன்னுடைய வீரத்தாலும், அசாத்திய திறமையாலும் ஆங்கிலேயப் படைகளை அதிரச் செய்தவருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிட்டு, தன் தனித்துவ உத்திகளால் வெற்றிமேல் வெற்றி கண்டு, பிறந்த மண்ணின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாபெரும் வீரர் தீரன் சின்னமலை அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் (Paphos) நகரில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் (FIDE Candidates 2026 tournament ) பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி. வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராகியிருக்கும் செல்வி.வைஷாலி அவர்கள் அதிலும் வெற்றிவாகை சூடி ஒட்டுமொத்த இந்திய திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித்தந்திட வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இரங்கல் செய்தி: கடலூர் மத்திய மாவட்டம், குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.ஜெயக்குமார் அவர்களின் தந்தை திரு.P.முத்துசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு : தென்காசி வடக்கு மாவட்டம் – மேலநீலித நல்லூர், மானூர் வடக்கு மற்றும் குருவிக்குளம் வடக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : வடசென்னை கிழக்கு மாவட்டம்- இராயபுரம் கிழக்கு பகுதி, 50வது வடக்கு வட்டக் கழக செயலாளராக திரு.P.சுரேஷ் நியமனம்.
மண்ணச்சநல்லூர் அருகே திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் தற்கொலை – தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பனின் மாதிரியை வீடுவீடாக விநியோகிக்கும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவின் வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை வழங்குவதில் ஏற்பட்ட வாய்த் தகறாரில் திமுகவினர் தரக்குறைவாகப் பேசியதில் மனமுடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியையும், சட்டவிரோதமாகப் பரிசுப் பொருட்களையும் வீடுவீடாக சென்று விநியோகம் செய்ததோடு, தன் ஆதரவாளர்கள் மூலம் பெண் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசி அவரை தற்கொலை செய்யத் தூண்டிய திமுக வேட்பாளர் திரு கதிரவன் அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் வாக்குறுதியை மடைமாற்றும் வகையிலும், திமுக அறிவித்த 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையிலும் தற்போது அதன் மாதிரியைத் தயாரித்து வீடு வீடாகச் சென்று திமுகவினர் விநியோகம் செய்து வருவது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, பெண் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெறாமல் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் மாதிரியை விநியோகம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்.
மீஞ்சூர் அருகே வீட்டிலிருந்த கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்திய போதைக் கும்பல் – திமுக ஆட்சியில் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் உறுதியாக மீட்டெடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தனது வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம், கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கண்மூடித்தனமான தாக்குதலையும் அரங்கேற்றியதில் அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தலைநகர் சென்னையில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை கட்டுப்படுத்தவே முடியாத அளவிற்கு புரையோடிப் போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், விமானங்களை தொடர்ந்து தன்னுடைய சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் அவர்களின் எதிர்காலம் வீணாவதோடு, அந்த கொடிய வகைப் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களால் அரங்கேற்றப்படும் கொலை, கொள்ளைகளும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் அடையாளமாக தமிழகத்தை மாற்றிவிட்டன. எனவே, கல்லூரி மாணவி மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் அடுத்து மலரப்போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்ற உத்தரவாதத்தை மக்களிடம் அளிக்கிறேன்.
FORMAT C-2: Second Spell DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY (As per the judgment dated 25th September, 2018 of Hon’ble Supreme Court in WP (Civil) No. 536 of 2011 (Public Interest Foundation & Ors. Vs. Union of India & Anr.) Name of Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM, Name of Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026, Name of State: TAMIL NADU
புத்தாண்டு தினத்தை விஷு திருநாளாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழும் இடங்கள் அனைத்திலும் தங்களுடைய பண்பாட்டையும், பாரம்பரிய மரபுகளையும் பேணிப் பாதுகாக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் ஒன்றிய கழகம் – இராமநாதபுரம் வடக்கு, இராமநாதபுரம் தெற்கு என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு – இராமநாதபுரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.T.ரமேஷ் மற்றும் இராமநாதபுரம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.R.தினகரன் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக திரு.M.சுந்தர் ஜெகன் அவர்கள் நியமனம்.
இரங்கல் செய்தி: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.S.பிரசாந்த் அவர்களின் தாயார் திருமதி.S.ரதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாமேதை, சமுதாயத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பரந்த படிப்பும், ஆழ்ந்த அறிவும், வியக்கத்தக்க நெஞ்சுரம் கொண்டிருந்து, நாடு முழுவதும் சமதர்ம சமூகநீதி தத்துவங்களை வேரூன்றச் செய்த மாபெரும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
பிரபல யூடியூபர் திரு சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் திருமதி கமலா அம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்கு (வடக்கு) ஒன்றியம், கொடிமங்கலம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.ஜானகிராமன் அவர்களின் தாயார் திருமதி.K.முத்துலட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026: கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் திருத்தியமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்.
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்: சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரியமிக்க பழமையிலும், தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையற்ற பண்பாட்டுப் பெருமைமிக்க தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து வரவேற்கும் இந்த தமிழ்ப்புத்தாண்டு, மக்கள் அனைவருக்கும் நல்ல மாற்றங்களையும், புதிய ஏற்றங்களையும் தரும் ஆண்டாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மலரும் தமிழ்ப்புத்தாண்டு தமிழக மக்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைவதோடு, அனைவரின் வாழ்விலும் வளம் பெருகி, வசந்தம் மலர்ந்து, அன்பு மேலோங்கி, அமைதி நிலவும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
Format C-7: INFORMATION REGARDING INDIVIDUALS WITH PENDING CRIMINAL CASES, WHO HAVE BEEN SELECTED AS CANDIDATES, ALONG WITH THE REASONS FOR SUCH SELECTION, AS ALSO AS TO WHY OTHER INDIVIDUALS WITHOUT CRIMINAL ANTECEDENTS COULD NOT BE SELECTED AS CANDIDATES.(AS PER THE COMMISSION’S DIRECTIONS ISSUED IN PURSUANCE OF THE ORDER DATED 13.02.2020 OF THE HON’BLE SUPREME COURT IN CONTEMPT PETITION(C) NO. 2192 OF 2018 IN WP(C) NO. 536 OF 2011), Name of the Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM, Name of the Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026, Name of State/UT: TAMIL NADU.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களாக கீழ்க்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன். திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று தனது தேர்தல் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், இட்டமொழி ஊராட்சி, விஜய அச்சம்பாடு கிளைக் கழக செயலாளர் திரு.P.கணேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு : தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராக திரு.C.ஆறுமுகம் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.S.ஞானப்பிரகாசம் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவராக திரு.M.பிரபு மற்றும் கழக இளைஞர் பாசறை துணைச்செயலாளராக, திரு.M.சக்திவேல் நியமனம்.
இரங்கல் செய்தி: விருதுநகர் கிழக்கு மாவட்டம், திருச்சுழி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.கணேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.G.ரமேஷ் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிப்பு.
FORMAT C-2: DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY (As per the judgment dated 25th September, 2018 of Hon’ble Supreme Court in WP (Civil) No. 536 of 2011 (Public Interest Foundation & Ors. Vs. Union of India & Anr.) Name of Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM, Name of Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026, Name of State: TAMIL NADU
மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.K.V.ராமநாதன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வேலூர் புறநகர் – வேலூர் மாநகர் – இராணிப்பேட்டை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் புறநகர், வேலூர் மாநகர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று. நிலத்தை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும், ரசாயன உரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து இயற்கை விவசாயத்தை இயக்கமாக முன்னெடுத்துச் சென்ற ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழியில் தொடர்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றிடுவோம்.
Format C-7 : INFORMATION REGARDING INDIVIDUALS WITH PENDING CRIMINAL CASES, WHO HAVE BEEN SELECTED AS CANDIDATES, ALONG WITH THE REASONS FOR SUCH SELECTION, AS ALSO AS TO WHY OTHER INDIVIDUALS WITHOUT CRIMINAL ANTECEDENTS COULD NOT BE SELECTED AS CANDIDATES, (AS PER THE COMMISSION’S DIRECTIONS ISSUED IN PURSUANCE OF THE ORDER DATED 13.02.2020 OF THE HON’BLE SUPREME COURT IN CONTEMPT PETITION(C) NO. 2192 OF 2018 IN WP(C) NO. 536 OF 2011) Name of the Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM Name of the Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026 Name of State/UT: TAMIL NADU
இந்திய தேசத்திலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் இன்று.வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கும், பாஜகவின் தேசிய தலைவர் திரு நிதின் நபின் அவர்களுக்கும் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட மதுரவாயல் தெற்கு பகுதி 151 வட்டக் கழக செயலாளர் திரு.K.டிங்கு ரவி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு மற்றும் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்து போதித்த தியாகம், சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை ஆகிய உயரிய குணங்களை பின்பற்றி சமூக மற்றும் சமுதாய வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம். பகைவர்களிடமும் அன்பு செலுத்துங்கள் என போதித்து மனிதகுலத்தின் நல்வழிகாட்டியாக திகழும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்நாளில், மக்கள் அனைவரிடமும் மனிதநேயமும் சகோதரத்துவமும் மென்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை புறநகர் மாவட்டம், கள்ளிக்குடி மேற்கு ஒன்றியக் கழக பொறுப்பாளராக திரு.S.K.மாரி அவர்கள் நியமனம்.
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் வழியில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயர்த்திப்பிடித்தவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான உறங்காப்புலி கல்வி வள்ளல் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்ததினம் இன்று. மாணவப் பருவத்திலிருந்தே தன்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாகச் செயல்பட்ட தேவர் தந்த தேவர் ஐயா திரு P.K மூக்கையாத் தேவர் அவர்களையும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரக் கழக அவைத்தலைவர் திரு. RM. சிவசாமி அவர்களின் தாயார் திருமதி. RM. ஆனந்தவல்லி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் நியமனம்.
உலகளவில் இயற்றப்பட்ட கொடூரமான சட்டங்களில் ஒன்றான குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து கிளர்த்தெழுந்த போராட்டத்தில் ஆங்கிலேயப்படைகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூரைச் சேர்ந்த மாயக்காள் உட்பட 17 தியாகிகளின் நினைவு தினமான இன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், கொட்டாம்பட்டி மேற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.K.ராஜாங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தெற்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.M.ராமர் அவர்களின் தந்தை திரு.R. மூக்குசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி:திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தெற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.G.ஜெகநாதன் அவர்களின் தாயார் திருமதி.G.ராணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் நிரந்தர விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்க இயேசு கிறிஸ்து அவர்கள் தன்னை சிலுவையில் அர்ப்பணித்ததை நினைவு கூறும் புனித வெள்ளி திருநாள் இன்று. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக இயேசுபிரான் அவர்கள் செய்த தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றி வணங்கிடும் இந்நாளில் அவர் போதித்த கருணை, இரக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
இரங்கல் செய்தி: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.தினேஷ்(எ) K.T.ராஜசேகர் அவர்களின் தந்தை திரு.M.கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு : கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளராக திரு.பா.உதயகுமார் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழக கயத்தாறு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர், கோவில்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை மாநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.M.ஜெயராம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தின் தங்க மங்கை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் முயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையின் மூலம் பதக்கங்களைக் குவித்து ஒட்டுமொத்த தாய் திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் துளசிமதி முருகேசனின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை மன மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொல்லாமையும், பிற உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமையுமே உண்மையான அறம் என்பதை எடுத்துரைத்ததோடு, தன் சுக வாழ்க்கையைத் துறந்து, அகிம்சையைப் பின்பற்றி, இயற்கை சக்திகளோடு இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று போதித்த பகவான் மகாவீரர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம். அறநெறியினையும், ஆன்மீக நெறியினையும் தவறாது பின்பற்றி அதன் மாண்பை உலகிற்கே பறைசாற்றிய மகாவீரர் பிறந்த இந்த நாளில், அவரது போதனைகளைப் பின்பற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகனும் இல்லை, கதாநாயகியும் இல்லை: தமிழக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றிவிடலாம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது.
தலைமைக் கழக அறிவிப்பு: பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு தினம் – காலை 10.00 மணியளவில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் அமைந்திருக்கும் தியாகிகள் நினைடவித்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு : திரு.P.K.மூக்கையா தேவர் அவர்களின் பிறந்தநாள் – காலை 10.00 மணியளவில், மதுரை மாவட்டம் காளவாசலில் அமைந்துள்ள திரு.P.K.மூக்கையா தேவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள்.
குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த பரமக்குடியைச் சார்ந்த திரு செல்வம் அவர்கள் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.செல்வம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் – 2026 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக்குழுவின் பரிந்துரையின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ வேட்பாளர்களாக கீழ்காண்பவர்கள் கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறார்கள்.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் – ஏற்கனவே தமிழகத்தை உலுக்கிய பாலியல் புகாரில் தொடர்புடைய அந்த “சார்” கைது செய்யப்படாததன் விளைவா ? அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவியின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாக எழுந்திருக்கும் புகார் அங்கு பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ”சார்” இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தற்போதைய பாலியல் புகாரின் பின்னணியிலும் அதே ”சார்” இருப்பாரோ ? என்ற சந்தேகம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, உலக அளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டு மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தும் நேரத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: வடசென்னை மத்திய மாவட்ட பெரம்பூர் கிழக்கு பகுதி 45வது கிழக்கு வட்டக்கழக அவைத்தலைவர் திரு.தாடி.G.மோகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்ட திருநெல்வேலி மேற்கு பகுதி 16வது வட்டகழக செயலாளர் திரு.நம்பிராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: இராமநாதபுரம் மாவட்ட நயினார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.P.சாமித்துரை அவர்களின் தாயார் திருமதி.P.ஜெகதாம்பாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அரசியல் விமர்சகரும், மதிப்பிற்குரிய சகோதரருமான திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தந்தை திரு ஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் திரு.ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சென்னை திருமங்கலம் அருகே ஐந்து ஆண்டுகளாக 13 வயது சிறுமியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக திமுக நிர்வாகி கைது – திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம். சென்னை திருமங்கலம் அருகே 13வயது சிறுமியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கூடம் தொடங்கி பறக்கும் விமானம் வரை திமுகவினரால் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அக்கட்சியின் தலைமை கண்டும் காணாதது போலக் கடந்து சென்றதன் விளைவே அத்தகைய செயல்களில் திமுகவினர் தொடர்ந்து ஈடுபடக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகளிர் பாதுகாப்பிலும், பெண்கள் அதிகளவு வேலைக்குச் செல்வதிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. எனவே, பச்சிளம் குழந்தை தொடங்கி வீட்டில் தனியாக இருக்கும் முதியவர் வரை அனைத்து தரப்பு பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக எனும் தீயசக்தியிடமிருந்து வரும் தேர்தலின் மூலம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் மீட்டெடுப்பது நிச்சயம் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் தெற்கு ஒன்றியம், பொலவபாளையம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.R.சண்முகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கையில் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் நெறியாளர் மீது திமுகவினர் தாக்குதல் – அராஜகத்தையும் அட்டூழியத்தையும் அடையாளமாகக் கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக வரும் தேர்தலில் அப்புறப்படுத்தப்படுவது உறுதி. சிவகங்கையில் நடைபெற்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களும், நெறியாளரும் திமுகவின் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திமுகவின் கடந்த ஐந்தாண்டுகால கொடுங்கோல் ஆட்சி குறித்தும், அதனால் மக்கள் பட்ட துயரங்கள் குறித்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர்கள் பட்டியலிட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், விவாத நிகழ்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கில் அங்குக் கூடியிருந்தவர்கள் மீது திமுகவின் குண்டர்கள் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.அநியாயம், அக்கிரமம், அராஜகம் மற்றும் அட்டூழியத்திற்கும் அடையாளமாகிப்போன மக்கள் விரோத திமுகவும் அதன் நிர்வாகிகளும், மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பலையைத் திசை திருப்பவும், தோல்வி பயத்தை மறைக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதன் கையாலாகத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் நெறியாளர் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை வலியுறுத்தும் நேரத்தில், அராஜகத்தையும் அட்டூழியத்தையும் அடையாளமாக கொண்டிருக்கும் மக்கள் விரோத திமுக வரும் தேர்தலில் அடியோடு அப்புறப்படுத்தப்படுவது உறுதி என்பதை உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு – விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, இதே திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரியில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றிருக்கும் இந்த சந்தேக மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை இலக்காகவும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதையே கொள்கையாகவும் ,நிர்ணயித்து ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இரங்கல் செய்தி: திருப்பூர் மாநகர் மாவட்டம், பெரியார் காலனி பகுதி 25வது வட்டக் கழக செயலாளர் திரு.சரவணகுமார் அவர்களின் தாயார் திருமதி.ரத்தினம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சகோதரர் திரு சுதாகர் ரெட்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதர திரு.சுதாகர் ரெட்டி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
புனித ரமலான் நல்வாழ்த்துகள்:ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுங்கள், துன்புற்றவர்களுக்கு உறுதுணையாக இருங்கள், அயலார்களிடம் அன்பு செலுத்துங்கள் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி தூய்மை உணர்வோடு ரமலான் நோன்பு இருந்த இஸ்லாமியச் சகோதர, சகோதரிகள் அனைவரின் எண்ணங்களும் விருப்பங்களும் ஈடேரற்றும் என இந்நாளில் பிரார்த்திப்போம்.ரமலான் மாதத்தில் புனித நோன்பினை மேற்கொண்டு இறை உணர்வுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, இரக்கம், கருணை, ஒற்றுமை உணர்வு மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தீர்ந்து உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழ்நாடு கம்மா நாயுடு மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு.கெங்குசாமி நாயுடு அவர்களின் மனைவி திருமதி.ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமுற்றேன். திருமதி.ராஜலட்சுமி அம்மையார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை வெவ்வேறானதாக இருந்தாலும், வாழும் இடம் தமிழ்நாடு தான் என்ற உணர்வோடு, பலநூறு ஆண்டுகள் கடந்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் நல்ல உறவைப் பேணி, நட்புறவு கொண்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவது வேற்றுமையில் ஒற்றுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தை வழங்குவதோடு, அவர்களுக்கும் தமிழக மக்களுக்குமான நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவர் கைது சட்டமன்றத் தேர்தலில் தமிழக பெண்களின் அமைதி புரட்சியே திமுகவின் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி பட்டிதொட்டியெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியத்தால், இந்தியாவிலேயே குற்றச் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறும் மாநிலங்களில் முதலிடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையினர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீரழித்து, அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்கள் விரோத திமுகவிற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளியை வைக்கப்போகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் தலைவராக (2026-2029 ) மீண்டும் தேர்வாகியிருக்கும் அன்பு சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.கோபி கிருஷ்ணா அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தென்னிந்தியத் திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தையும், அதன் நிர்வாகிகளையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, தான் சார்ந்திருக்கும் திரையுலகில் மேன்மேலும் பல்வேறு சாதனைகள் புரிய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு ச.தமிழ்ச் செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையான நடையிலும் மொழியிலும் சிறுகதைகளை எழுதுவதில் தனித்துவமிக்கவராக திகழும் எழுத்தாளர் திரு ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் எழுத்துப் பயணம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்டம், களக்காடு ஒன்றிய மலையடிபுதூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.V.முருகன் அவர்களின் தந்தை திரு.A.வீரபுத்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.அபுல்ஹாசன் அவர்களின் தாயார் திருமதி.ஜமீலா பேபி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
கோவை புதூர் பகுதியில் பெண் காவலர்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் காவல் உயர் அதிகாரி கைது – காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியமாகும் ?கோவை புதூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரே சக பெண் காவலர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.போதைப் பொருள் விற்பனையில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வரை தொடர்பில் இருக்கும் காவல்துறையினரை வைத்துக் கொண்டிருக்கும் திமுக அரசு,கடந்த காலங்களை ஒப்பிடும் போது குற்றங்களைக் குறைந்துவிட்டதாக அரசு உயர் அதிகாரிகளை வைத்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவதும், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுவதும் வெட்கக்கேடானது. எனவே, தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி, அவர்களை சுதந்திரமாக நடமாடவே முடியாத அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கிய திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பப் போகின்ற நாள், இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்று அமையப்போகும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பெண்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்புச் சகோதரர் தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் அளப்பறிய களப்பணியாற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் அம்மா ஆகியோரின் நல்லாட்சியை அமைத்திடுவோம் என்பதை இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீடம் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானபீடம் விருதின் மூலம் உலக இலக்கிய அரங்கில் தாய்மொழி தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்களின் தமிழ்ப்பணி மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
“ஒப்பில்லா ஒன்பதாம் ஆண்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!” தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூலம் இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட தீவிர களப்பணியாற்றி வெற்றிவாகை சூடிடுவோம்!
இரங்கல் செய்தி:அரியலூர் மாவட்டக் கழக இணைச்செயலாளர் திருமதி.R.பொன்முடி அவர்களின் கணவர் திரு.ரெங்கநாதன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சென்னையில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை – பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை மறைக்க உரிமைத் தொகையாக 1, 000 ரூபாய், கோடை கால சிறப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கி திமுக அரங்கேற்றும் நாடகங்களுக்கு, வரும் சட்டமன்றத்தேர்தலில் தமிழக பெண்கள் நடத்தப் போகும் மௌனப் புரட்சியே பதில் சொல்லும்
இரங்கல் செய்தி: விழுப்பரம் வடக்கு மாவட்ட வல்லம் மேற்கு ஒன்றிய திருவம்பட்டு கிளைக் கழக செயலாளர் திரு.A.ஞானசேகரன் அவர்களின் மனைவி திருமதி.N.மைதிலி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் திரு.T.வெற்றிவேல் அவர்களின் மனைவி திருமதி.V.வனிதா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தென்சென்னை மாவட்ட வேளச்சேரி பகுதி 177-வது வட்டக் கழக செயலாளர் திரு.B.கோகுலகிருஷ்ணன் அவர்களின் தாயார் திருமதி.B.புஷ்பராணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி:விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு பொருளாளர் திரு.V.லட்சுமணபெருமாள் அவர்களின் தாயார் திருமதி.V.பேச்சியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும் காணாதது போல இருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே, திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே, திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கூட பாதுகாப்பு அளிக்க முடியாத அளவிற்கு தமிழகத்தின் சட்டத்தையும், ஒழுங்கையும் சந்தி சிரிக்கும் அளவிற்கு சீரழித்த திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் அடியோடு துடைத்தெறிவது நிச்சயம் என்பதை மட்டும் இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: விருதுநகர் மத்திய மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு.A.பத்மநாதன் அவர்களின் சகோதரர் திரு.A.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழல் காரணமாக தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண தேநீர் கடைகளில் தொடங்கி பெரிய விடுதிகள் வரை அனைத்து வகையான உணவகங்களுக்கும் அடிப்படை தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டிருப்பதால் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் கிராமப்புறங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உணவுத் தேவை பாதிக்கப்படுவதோடு, அந்த உணவகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்திடுவதை உறுதி செய்திட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேனி வடக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் அஇஅதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.தம்பிதுரை அவர்களுக்கும், பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட இருவரும் தமிழகத்தின் உரிமை மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், T.கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் நியமனம்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதில் திமுக நிர்வாகிகளிடையே போட்டி – சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாகச் செயல்படுவதா? சேலம் மாவட்டம் மேச்சேரி காவல் நிலையத்தின் அருகிலேயே திமுக நிர்வாகிகளும், அவர்களது ஆதரவாளர்களும் பெட்டிக் கடையின் மூலம் போட்டிப் போட்டு சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே மேச்சேரி பேருந்து நிலையத்தின் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஜாமீனில் வெளிவந்து காவல்துறையினரின் ஆதரவோடு மீண்டும் அதே சட்டவிரோத மதுவிற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையினரே அதற்கு உடந்தையாக இருப்பதும், பொதுமக்கள் புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்க மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் மற்றும் காவல்நிலையம் அருகே சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுத்து நிறுத்திடுவதோடு, அத்தகைய செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் காவல் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதரபுரம் ஆகிய தென்மாவட்ட மக்களின் பாசனத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் தன் சொந்த செலவில் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய வள்ளல், மனிதநேயமிக்க பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று. வறண்டு கிடந்த தென்மாவட்டங்கள் வளம்பெற, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் இந்த நினைவு தினத்தில், மக்களின் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் நினைவில் கொண்டு போற்றுவோம்.
<strong>ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</strong> இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். <a href="https://x.com/BCCI">@BCCI</a><a href="https://x.com/hashtag/T20WorldCup?src=hashtag_click">#T20WorldCup</a>
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமி – பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், பெண் இனத்தின் காவலர் வேஷம் போடுவது வெட்கக் கேடானது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல்லில் ஏழு வயது சிறுமிக்கு நடந்தேறியிருக்கும் இந்த கொடுமையான நிகழ்வு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டு, பெண்ணுரிமை பேசுவதும், பெண் இனத்தின் காவலர் போல முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது வெட்கக் கேடானது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட குரூர மனம் கொண்டவன் மீது எடுக்கும் நடவடிக்கை இனி இதுபோன்று எவரும் சிந்திக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.
<strong>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காவல்துறையினரின் சித்ரவதையால் கைதி உயிரிழப்பு எனப் புகார் – கைதி ஆகாஷின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.</strong> சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ் எனும் இளைஞர் காவல்துறையினரின் சட்டவிரோத துன்புறுத்தலால் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>ஆகாஷை கைது செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கே அழைத்துச் செல்லாமல் சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, தொடர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதே ஆகாஷின் உயிரிழப்புக்குக் காரணம் எனக்கூறி அவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</strong> காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நன்றாக இருந்த கைதி, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் காவல்துறையிலிருந்து அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதாக அல்ல என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுக்க திறனற்ற திமுக அரசு, ஒவ்வொரு கொலைச் சம்பவத்திற்கும் புதுப்புது காரணங்களை அடுக்குவதையும், மக்கள் மீது அதிகரிக்கும் அதிருப்தியைத் திசைதிருப்பக் கைதிகள் மீது இதுபோன்ற சித்ரவதைகளை அரங்கேற்றுவதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, <strong>காவல்துறையினரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் கைதி ஆகாஷின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, இவ்வழக்கை விரிவாக விசாரித்து காவல்துறையினர் சட்டவிரோதமாகச் செயல்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a>
மேற்கு வங்கத்தில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திட்டமிட்டு அவமதிப்பு – அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவரை அரசியல் காரணங்களுக்காக அவமதித்திருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.மேற்குவங்கம் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டு அவமதித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் எந்தவொரு மாநிலத்திற்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சரோ, அமைச்சரோ நேரில் வந்து வரவேற்க வேண்டும் என்ற நெறிமுறைகளை மீறியதோடு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின் இடத்தையும் இறுதி நேரத்தில் மாற்றியமைத்து, அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகப் பழங்குடியின சமுதாயத்திலிருந்து இந்தியாவின் உயரிய பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை, பழங்குடியினர் சார்ந்த நிகழ்விலேயே அவமதிக்கும் நோக்கில் பல்வேறு தடைகளை மேற்குவங்க அரசு ஏற்படுத்தியிருப்பது ஒட்டுமொத்த பழங்குடியினர் சமூகத்தையும் அவமதிக்கும் செயலாகும். எனவே, மாண்புமிகு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஒட்டுமொத்த பழங்குடியின மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மகளிர் தின நல்வாழ்த்துகள்: “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மகளிருக்கான சமத்துவம் மற்றும் சம உரிமை வழங்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தும் இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்மையைப் போற்றி கொண்டாடும் இந்நாளில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், தாயின் முதலெழுத்தைக் குழந்தையின் தலைப்பெழுத்தாக பயன்படுத்துதல் என மகளிர் நலன் பயக்கும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தி பெண் இனத்தின் பெருமையாகத் திகழும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை நினைவில் கொள்வோம். தாயாக, சேயாக, தமக்கையாக, தாரமாக என அனைத்திலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சம உரிமையோடு, அவர்களுக்கான பாதுகாப்பு முழுமையாக கிடைத்திடுவதையும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதி செய்திடுவோம். மகளிரின் அர்ப்பணிப்பு உணர்வை உலகிற்கு உணர்த்தும் இந்நாளில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்திட, அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு அடைந்திட அனைத்து மகளிருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது – தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்?சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறைக்கென தலைவர் ( DGP ) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திய திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்திருக்கும் தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அதனைப் பிரதிபலிப்பார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூரில் அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் கேரள அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – கூட்டணி தர்மத்திற்காக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தாரைவார்த்தது போல எல்லைப் பகுதியையும் பறி கொடுப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா ? தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாளூரில் கேரளத்தை வரவேற்கும் வகையிலான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் ஒரு எல்லைப் பகுதியாக இருக்கும் நீலகிரி மாவட்டத்தின் தாளூருக்குள் திடீரென அத்துமீறி நுழைந்து, தங்களது எல்லை என கேரளம் உரிமை கொண்டாடுவதும், அதனைத் தடுக்கவோ, கண்டிக்கவோ முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் திமுக அரசின் மௌனமும் கடும் கண்டனத்திற்குரியது.நீலகிரி மாவட்டத்தில் கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை தமிழகத்தின் மற்ற எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்குவதோடு அவர்களின் நில உரிமையும் பறிபோகும் அளவிற்கு அபாயகரமான சூழலை உருவாக்கியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாகவும் உயிர் நாடியாகவும் முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒரு பகுதியாக அங்குள்ள மரங்களைக் கூட வெட்ட அனுமதிக்காத கேரள அரசு, தமிழகத்திற்குள் நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் அளவிற்குத் துணிந்திருப்பதை கூட்டாட்சி தத்துவத்திற்கு விடுத்திருக்கும் சவாலாகவே பார்க்க வேண்டியுள்ளது.திமுகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களிலேயே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டுவதில் தீவிரம் காட்டுவதும், தமிழகத்தின் எல்லைப் பகுதியை கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆக்கிரமிக்க முயல்வதையும் பார்க்கும் போது, திமுக அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து தான் தேர்தல் கூட்டணியை உறுதிபடுத்துகிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தின் எல்லைப் பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூரில் அத்துமீறி வைக்கப்பட்டிருக்கும் கேரள அரசின் அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்றுவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் எல்லைக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ( UPSC ) தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே அவர்களுக்கும், ஏழாவது இடத்தை பிடித்திருக்கும் ராஜா முகைதீன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் அரசுத்துறைகளின் மிக உயரிய பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருக்கும் இருவரும், அவரவர் பணியில் சிறந்து விளங்கிடவும், மேன்மேலும் பல சாதனைகள் படைத்திடவும் மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா ? கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான இரு தினங்களில், கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்திருக்கும் தனது நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணை குறித்த இத்தகைய அறிவிப்பு இடம்பெற்றிருப்பது, கூட்டணி நலனுக்காக திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ ? என்ற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் ஆரம்பம் முதலே தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக, தன்னுடைய கட்சி நலனுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, நானும் டெல்டா காரன் தான் என வாய் சவடால் விடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகளைப் பாலை வனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக மட்டுமின்றி, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சேலம் வடக்கு மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர மறுத்து அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 25 ஆம் தேதி முதல் பணியைப் புறக்கணித்துத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை அலுவலர்களை காவல்துறையின் மூலம் ஒவ்வொரு நாளும் அடக்கி ஒடுக்கும் திமுக அரசு, ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்க முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது. வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்து விதமான சான்றிதழ் வழங்கும் பணிகளும், அரசு சேவைகளும் முழுமையாக முடங்கியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் வருவாய்த்துறை அலுவலர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்திட வேண்டும் என வருவாய்த்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.S.K.மோகன் அவர்களின் தாயார் திருமதி.சரஸ்வதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கோவை கிழக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், கிணத்துக்கடவு பொதுக்குழு உறுப்பினர், பகுதி, ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அரியலூர் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஆண்டிமடம் தெற்கு மற்றும் திருமானூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகம், விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், விளாத்திக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், விளாத்திக்குளம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : திருநெல்வேலி மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், ஆத்தூர் மத்தியம், ரெட்டியார்சத்திரம் தெற்கு ஆகிய ஒன்றிய கழகங்களின் செயலாளர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு மற்றும் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு : நாமக்கல் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நியமனம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் – குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது ஊருக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கான துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டிவரும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர் சைதை திரு.S.வீரமணி அவர்களின் தந்தை மார்க்கெட் திரு. B.சேகர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கும், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் புதிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிக்கும் கடும் எதிர்ப்பு – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி நடைபெறும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் விளைநிலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காவுக்கு அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் பகுதியில் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வெப்பநிலை மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் கிராம சபை ஒப்புதல் என எந்தவித முறையான அனுமதியுமின்றி இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விளை நிலங்களோடு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருப்பது சர்வதிகாரப் போக்கின் உச்சபட்சமாகும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும், முறையான அனுமதி இன்றியும் அவசரகதியில் நடைபெறும் இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டமும், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் நடவடிக்கையும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பசுமைப் பரப்பு வெகுவாக குறையும் என்பதோடு உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்று வரும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தையும், ஆலங்கோட்டை கிராமத்தில் அடிக்கல் நாட்டியிருக்கும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுவதோடு, வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் – இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் ”கர்தவ்ய த்வார்” என இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் தமிழக மக்களும், ஏராளமான ரயில் பயணிகளும் வந்து செல்லும் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் தமிழில் பெயர் வைக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே துறையையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.
2025 ஆம் ஆண்டிற்கான ”மாயா கோனே” சமூக ஊடகர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தின் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. சமஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த கருவியாக இதழியலைத் துணிச்சலுடன் கையாண்டதன் அடிப்படையில் இவ்விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. சமஸ் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஆதிக்க வர்க்கத்திற்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்தவரும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கத் தொடர்ந்து பாடுபட்டவருமான அன்பின் திருவுருவம் அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த திருநாள் இன்று. “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றார்” எனப் போதித்து மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்கள் என்பதை எடுத்துரைத்த அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த இந்நாளில் அவர் காட்டிய வழியில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
வசந்தகாலத்தை வரவேற்கும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமையோடு, சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் நாளாக அமையவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் நியமனம்.
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் கைது – வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனைகளின் நீட்சி… விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர் தான் என்பது தெரியுமா? தெரியாதது போல நடிக்கிறாரா? எனவே, பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி தெற்கு மாவட்டம், மலைக்கோட்டை பகுதி 15வது வட்டக் கழக பொருளாளர் திரு.S.முத்துகுமார் அவர்களின் மகன் திரு.M.சூர்யா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடாது – திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து தமிழக மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் மற்றும் உதவித் தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 322வது வாக்குறுதியான முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சி நிறைவடையும் தறுவாயிலும் நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது சிறப்பு நிதி எனும் பெயரில் 2000 ரூபாய் வழங்கியிருப்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும். அண்டை மாநிலங்களைப் போல மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறைக்கு உள்ளாக்கிய திமுக அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் நலனுக்கான நிரந்தர தீர்வை எட்டுவதை விட்டுவிட்டு அவர்களை வெறும் தேர்தல் நேர வாக்குவங்கியாக மட்டுமே பார்ப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, கடந்த ஐந்தாண்டுக் கால இருண்ட ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துவிட்டு தற்போது திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் இதுபோன்ற தேர்தல்கால சித்து விளையாட்டுக்களை நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதோடு, வரும் தேர்தலில் திமுவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்க மாட்டார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு – பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே போதையிலிருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, அவ்வழியே பயணிப்போர் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இதே திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு பீடத்தில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது. எனவே, இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி தெற்கு மாவட்டம், உறையூர் பகுதிக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.S.மாரிமுத்து அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.தங்கராஜ் அவர்களின் மனைவி திருமதி.த.சித்ரா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருச்சி தெற்கு மாவட்டம், மருங்காபுரி வடக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.R.நாகராஜ் அவர்களின் தாயார் திருமதி.ரா.சின்னாத்தாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய அரியகுளம் கிளைக் கழக செயலாளர் திரு.முருகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.N.ராஜேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டம், கருங்குளம் ஒன்றியக் கழக செயலாளர் திரு.U.சிவசுப்பிரமணியன் அவர்களின் சகோதரரும், கருங்குளம் ஒன்றியம், கால்வாய் கிளைக் கழகச் செயலாளருமான திரு.U.பொன்ராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி கைது – பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வரும் தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வுகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருப்பதாக திமுகவின் இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது. கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இந்நேரத்தில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ, வரும் தேர்தலில் திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.அன்வர்பாட்சா அவர்களின் தாயார் திருமதி.சுலைக்கா பீவி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றிபெற்று பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகப் பதவி வகித்தவருமான திரு.வெள்ளூர் வீராசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.வெள்ளூர் வீராசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா இரா.நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். ஐயா இரா.நல்லகண்ணு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இரங்கல் செய்தி: கரூர் கிழக்கு மாவட்டம், கடவூர் தெற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.P.கருப்பசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய தேர்வர்கள் கைது – அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது. கூட்டுறவுத்துறையில் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடக் கோரி சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக போராடிய தேர்வர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகளை தற்போது வரை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, அத்தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி ஜனநாயக ரீதியில் போராடிய தேர்வர்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் 185வது வாக்குறுதியாக ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், 187வது வாக்குறுதியாக அரசுத்துறைகளில் நிலவும் 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதியாக கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில், அரசுத்தேர்வுகளை முறையாக நடத்த முடியாமலும், முடிந்த தேர்வுகளுக்கான முடிவுகளைக் கூட வெளியிட முடியாமலும் திணறிக் கொண்டிருப்பதால் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி கனவு கானல் நீராகவே மாறும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தேர்வர்களை எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, கூட்டுறவு பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் என கூட்டுறவுத்துறையையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தெற்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.கரு.பாண்டித்தேவர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கும் விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்பவும், இடைவிடாத தனது மக்கள் பணியை தொடர வேண்டும் எனவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழகத்தையும், தமிழக மக்களையும் அரண்போல காத்திட்ட அன்புத் தாய், சிந்தனைகளாலும், நினைவுகளாலும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் இதயதெய்வம், திசையெங்கும் சூழ்ந்து நின்ற சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்கிய இரும்புப் பெண்மணி, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி நீங்கா புகழோடு எந்நாளும் நிலைத்து நிற்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினம் இன்று. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்திட, உழவர்களுக்கான வேளாண் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கிட, தொழில்துறையில் முதலிடத்தை அடைந்திட, தமிழகத்தை இந்திய தேசத்தின் அறிவுசார் தலைநகரமாக உயர்த்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களையும், மக்கள் நலனுக்காக அவர் நிகழ்த்திட்ட அற்புதங்களையும் எந்நாளும் போற்றிக் கொண்டாடுவோம்.
கிருஷ்ணகிரி அருகே அரசு அதிகாரியைக் காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் – ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபடும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடத்தைப் புகட்டுவது உறுதிகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் உதவி தொழில் ஆய்வாளர் திரு. சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு சீனிவாசன் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. எளிதில் பேசி தீர்க்க வேண்டிய வாகன நிறுத்தம் தொடர்பான சிறிய வாக்குவாதத்தை, வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி, ஆளுங்கட்சி நிர்வாகியின் மகன் என்ற அதிகாரப்போக்கில் அரசு அதிகாரி என்றும் பாராமல் திரு.சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்திருப்பது தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. திரு.சிவமூர்த்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்த பின்பும், திமுக நிர்வாகியின் மகன் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணையைத் தீவிரப்படுத்தாமலும் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடுகளும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உதவி தொழில் ஆய்வாளர் திரு.சிவமூர்த்தி அவர்களைக் கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இதே நேரத்தில், ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பூரில் பதுங்கியிருந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது – மக்கள் பாதுகாப்பில் தோல்வியடைந்த திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி திருப்பூரில் பதுங்கியிருந்த 6 வங்கதேசத்தினரை டெல்லியிலிருந்து வந்த காவல்துறை கைது செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டோடு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்களின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மக்கள் பாதுகாப்பில் திமுக தோல்வியடைந்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை சிலிண்டர் வெடிப்புச் சம்பவமாகத் திசைதிருப்பி, மக்களை ஏமாற்ற முயன்ற திமுக அரசு, தற்போது டெல்லி காவல்துறையால் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டிருப்பதை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது? திருப்பூரில் தங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களை டெல்லியிலிருந்து வந்த காவல்துறையினர் கைது செய்யும் வரையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழக தீவிரவாத தடுப்புப் படை தூங்கிக் கொண்டிருந்ததா ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் மையமாக மாற்றியதோடு, தற்போது தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் நடமாடும் மாநிலமாகவும் மாற்றியிருக்கும் திமுக அரசுக்கு அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் இணைந்து முடிவு கட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் விரோத திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம் – தமிழக மக்கள் விரும்பும் புரட்சித் தலைவர் அவர்களின் அரசியல் வாரிசு இதய தெய்வம் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்! வரும் 24.02.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெறும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்!
தலைமைக் கழக அறிவிப்பு: திருநெல்வேலி புறநகர் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக செயலாளர்கள், நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக துணைச்செயலாளர், திருநெல்வேலி கிழக்கு பகுதிக் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் – இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதுபோன்ற அத்துமீறலில் இறங்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது.மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில் நாட்டின் பொருளாதாரம் தொடங்கி அனைத்து துறைகளும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்து வரும் நிலையில், அதற்கு நேர் மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப் போல கரைந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் இந்திய நாட்டின் மீதான அக்கட்சியின் தேச விரோத எண்ணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஐநா சபையின் பிரதிநிதிகள் தொடங்கி பல்வேறு வளர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை ஒன்று திரண்டு பங்கேற்ற இந்த பெருமைமிக்க மாநாட்டில், காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியிருக்கும் இந்த நாடகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சியையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற அநாகரீகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேங்காங்கில் நடைபெற்ற ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி உட்பட 5 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்திருக்கும் நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி செல்வி.மரியவின்சியா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியால் ஆசிய அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கும் தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் செல்வி. மரியவின்சியா அவர்கள், வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைப் பயணத்தை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
“தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாவேந்தர் பாரதிதாசனின் அவர்களின் வரிகளுக்கு ஏற்ப நம் உயிர்மூச்சுக்கு இணையான தாய்மொழியாம் தமிழ் மொழியைப் போற்றி கொண்டாடிடும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.ஏனைய மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக, தமிழ் இனத்தின் நாகரீகமாக, ஏராளமான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் உள்ளடக்கிய உலகின் தொன்மையான மொழியாகப் போற்றப்படும் நம் தமிழ் மொழியைப் பேணிக் காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வடசென்னை பகுதிக் கழக நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் மாநகர் மாவட்ட பொருளாளராகவும், அல்லாபுரம் கிழக்கு பகுதி கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணி செயலாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,மத்திய சென்னை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், பகுதிக் கழக நிர்வாகிகளாகவும், வட்டக் கழக நிர்வாகிகளாகவும், பகுதி சார்பு அணி நிர்வாகிகளாகவும், கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், பெரம்பலூர் மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினராகவும், சார்பு அணிகளின் செயலாளர்களாகவும், ஒன்றியக் கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திருப்போரூர் ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “திருப்போரூர் கிழக்கு ஒன்றியம்”, மற்றும் “திருப்போரூர் மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கீழ்காணுமாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சோளிங்கர் ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “சோளிங்கர் கிழக்கு ஒன்றியம்”, மற்றும் “சோளிங்கர் மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கீழ்காணுமாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராணிப்பேட்டை மாவட்டக் கழக துணைச்செயலாளராகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், சோளிங்கர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், பகுதிக் கழக நிர்வாகிகளாகவும், பகுதி வட்டக் கழக நிர்வாகிகளாகவும், பரவை பேரூர் கழக நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழக பொருளாளராகவும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும், சத்தியமங்கலம் வடக்கு, தூக்கநாயக்கன்பாளையம் மேற்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்களாகவும், புஞ்சை புளியம்பட்டி நகரக் கழக நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஈரோடு புறநகர்மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கோபிசெட்டிபாளையம் கிழக்கு மற்றும் கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக கீழ்காணுமாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி மறுசீரமைக்கப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருப்பத்தூர் மாவட்ட ஒன்றியம், நகரம் பேரூர் கழக நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
ஈகைத் திருநாளுக்கான புனித ரமலான் நோன்பைத் தொடங்கியிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்திடுவதோடு, இறைவனை அடைவதற்கான வாழ்வியல் நெறியாகக் கருதப்படும் இந்த புனித நோன்பு காலம் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடும் மாதமாக அமையட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவரும், தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவருமான தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சங்கநூல்கள் தொடங்கி திருவிளையாடற் புராணம் வரை பல்வேறு ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து, நூலாக வெளியிட்டதோடு, தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.R.மணிமாறன் அவர்களின் தந்தை திரு.ராஜீ அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்களின் அநாகரீகமான பேச்சுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.கோவை மாவட்ட மக்கள், அருகில் இருக்கும் ஊர் அனைத்தையும் கெடுப்பவர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன் அவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. தமிழகத்தில் லட்சக் கணக்கானோருக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி, தலைசிறந்த தொழில் நகரமாகவும், தென்னிந்தியாவின் மான்செஸ்டராகவும் கோவையை உருவாக்கிய கோவை மக்களைப் பற்றிய திரு.தயாநிதி மாறன் அவர்களின் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அதிகார மமதையில் சுற்றித் திரியும் திமுகவினருக்குக் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இந்த தேர்தலிலும் கோவை மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் மேற்கு மாவட்ட காட்டுமன்னார்கோயில் பேரூர் மீனவர் அணி செயலாளர் திரு.R.ஐயப்பராஜா அவர்களின் மனைவி திருமதி.I.சசிகலா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: விருதுநகர் மேற்கு மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர், வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
உதவித் தொகையை உயர்த்தக் கோரி போராடிய மாற்றுத் திறனாளிகளை இரவு முழுவதும் அலைக்கழிப்பதா? – அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளைப் பேருந்தில் ஏற்றி இரவு முழுவதும் அலைக்கழித்ததோடு அவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் திரு கே.பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவருமான திருமதி ஜான்சிராணி உட்பட பலர் காயமடைந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மிகக்குறைவான உதவித் தொகையை வழங்கி வஞ்சித்து வரும் திமுக அரசு, தற்போது அதனை உயர்த்தி வழங்கக் கோரி போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது.தங்களின் வாழ்வாதார கோரிக்கையை முன்னிறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி, உரிய தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டிய திமுக அரசு, தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கி ஒடுக்க நினைப்பது முழுக்க முழுக்க சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கிடுவதோடு, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சிவகங்கை வடக்கு மற்றும் சிவகங்கை தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் சிவகங்கை வடக்கு ஒன்றியம், சிவகங்கை தெற்கு ஒன்றியம், சிவகங்கை மேற்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைக்கபடுகிறது.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச் செயலாளராக திரு. N.S.தருண் அவர்களும் கழக இளைஞர் பாசறை துணைத் தலைவராக திரு.B.செந்தில்குமார் அவர்களும் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக, திரு.A.கமுருதீன் அவர்கள் நியமனம்.
சட்டமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் பெயரில் திமுக அரசு தாக்கல் செய்த “ஏமாற்று மாடல் அறிக்கை”
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஈரோடு மாநகர் கிழக்கு மரப்பாலம் பகுதிக் கழக செயலாளர் திரு.A.கோவிந்தராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.U.C.ஆறுமுகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா: மதுரையில் வரும் 24ம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்றைய தினம் நாங்குநேரியில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக – தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சாலை, குடிநீர் குழாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த பணிகளுக்காக கடந்த 15 தினங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் டெண்டர்களும், ஒரே நேரத்தில் 50க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கு ஏலமும் அவசரகதியில் அறிவிக்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் அரசுத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதிலும், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதிலும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வந்த திமுக அரசு, சட்டமன்ற தேர்தலுக்கான கால அவகாசம் நெருங்கி வரும் நிலையில், ஒரே நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசி அரசு கஜானாவை காலியாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு டெண்டர்களையும், ஏல அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கும் திமுக அரசு, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அனைத்துவித பணிகளையும் இறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதன் மூலம், தேர்தல் செலவுக்காக நிதி ஆதாரங்களை பெருக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஆட்சிக்காலத்தின் இறுதி நேரத்தில் கிடைத்தவரை லாபம் என அரசின் கஜானாவை முழுமையாக காலியாக்கத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில், இனி எக்காலத்திற்கும் ஆட்சிக்கு வரவே முடியாத அளவிற்கு தமிழக மக்கள் ஒன்றிணைந்து தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகக் கோப்பை ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி கண்டிருக்கும் இந்திய அணி, அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் புதல்வரும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.வீ.தமிழ் அழகன் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட உடன்குடி ஒன்றிய நங்கைமொழி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.J.பெலிக்ஸ்ராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் திரு.J.யாகியாகான் அவர்களின் தாயார் திருமதி.J.சையது இப்ராஹிம் பீவி (எ) பாப்பா அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.N.அருணகிரிசாமி அவர்களின் தாயார் திருமதி.N.களஞ்சியம் நவமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்,ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு.A.ஷாஜகான் அவர்களின் தாயார் திருமதி.A.சலீமா பீபீ அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டம், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:செங்கல்பட்டு மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் மறைமலைநகர் நகரக் கழகம் மறைமலைநகர் வடக்கு மற்றும் மறைமலைநகர் தெற்கு என இரண்டு நகர கழகங்களாக பிரிப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு:செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழக பொருளாளர், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர், வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் நியமனம்
தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரக் கழக நிர்வாகிகள், வட்டம் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் புதூர் ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக புதூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் புதூர் மேற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது.
தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், பேரூர், நகரக் கழக செயலாளர்கள் நியமனம்
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், திருமுட்டம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டக் கழக அவைத்தலைவர், வேதாரண்யம் நகரக் கழக செயலாளர் நியமனம்
தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும். தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர். எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.
ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும். 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, 25லட்ச ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 57,700 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதில் பாதியளவு கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அதிகாரப்போக்கே, பாடம் கற்பிக்கும் பணியைப் புறக்கணித்துப் போராடும் அளவிற்கான நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களும் பயனளிக்காத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேறுவழியின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு:சிவகங்கை மாவட்ட மானாமதுரை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம், மரக்காணம் ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் திரு.ராஜசேகரன் அவர்களின் தந்தை திரு.J.குப்புசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மாற்றுத் திறனாளிகளை அடக்கி ஒடுக்க முயற்சிப்பதா? மாதாந்திர உதவித் தொகையை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகத் திகழும் அரசின் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு அதிகார போக்குடன் காவல் துறையை ஏவிப் போராடியவர்களை அடக்கி ஒடுக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதுச்சேரியில் 4 ஆயிரம் முதல் 5,700 ரூபாய் வரையிலும் உதவித் தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் 1,500 ரூபாய் முதல் 2000 வரையிலான உதவித்தொகையை மட்டுமே வழங்குவது ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும். எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உதவித் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்குவதோடு கைது செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளை எந்த வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டுமென முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கேத்தனூரிலும், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்திலும் விஷ ஜந்துகள் கடித்ததில் அரசுப்பள்ளி மாணவர், மாணவி உயிரிழப்பு – அரசுப்பள்ளிகளை விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருவாரூர் மாவட்டம் கேத்தனூர் அரசுப்பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் ஒருவரும், நாமக்கல் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவரும் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதியின்மை, தரமற்ற காலை மற்றும் மதிய உணவு, பாழடைந்த நிலையிலான வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளுக்குள் பாம்பு, விஷப்பூச்சி போன்ற விஷ ஜந்துக்களும் நுழைந்திருப்பது அப்பள்ளிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.ஆட்சிப் பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் பெயரில் திரைப்பட பிரபலங்களையும் அண்டை மாநில அரசியல்வாதிகளையும் அழைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருப்பதால் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விஷப்பூச்சி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த மாணவ, மாணவியரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை அருகே திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்புகள் – திமுக அரசின் இலங்கைத் தமிழர்கள் மீதான போலிப் பாசம் கடும் கண்டனத்திற்குரியது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகக் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், போதுமான வசதியின்மை காரணமாக தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரி 31 ஆம் தேதி முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் குடியிருப்பு தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே இருப்பது அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான குடியிருப்புகளைக் கூட முறையாகக் கட்டிக் கொடுக்க முடியாத திமுக அரசும், அதன் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களும்,இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பையும், அவர்களின் உரிமையை மீட்கவும் குரல் கொடுப்பது என்பது வெட்கக்கேடானது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதோடு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் திரு.பாசறை A.ராஜா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வு ஒத்தி வைப்பு – லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. இன்று நடைபெறவிருந்த சார்பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்குவதிலும், ஹால்டிக்கெட் வழங்கியதிலும் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசுப்பணி எனும் கனவை நினைவாக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு,பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், முறையான திட்டமிடலின்றியும், சரியான ஏற்பாடுகளின்றியும் தேர்வை நடத்த முயற்சித்திருக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மீதான செயல்பாடு தேர்வர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் அறிக்கையில் 187வது வாக்குறுதியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3.50 லட்சம் இளைஞர்கள் நிரப்பப்படுவார்கள் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் அப்பணிகளுக்கான தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாமல் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, குரூப்2, குரூப்2ஏ தேர்வில் குளறுபடிகள் ஏற்படும் அளவிற்கு அலட்சியமாக இருந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து விதமான ஏற்பாடுகளோடு இத்தேர்வை மீண்டும் நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் தெற்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.ஜெ.புகழேந்தி அவர்களின் தாயார் திருமதி.J.அம்மணி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் (Under19) தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று தாய்நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்திய இளையோர் கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். #under19worldcup #TeamIndia
மதுரையில் தனது தேநீர் கடை முன்பாக மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரக் கொலை – தமிழகத்தை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வரும் தேர்தலில் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது தான் ஒரே தீர்வு.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாமநத்தம் அருகே அதிமுகவின் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் திரு.தனசேகர பாண்டியன் என்ற செந்தில் அவர்கள் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே மதுரையில் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாகச் சிறுவர்கள் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தனது தேநீர் கடையின் முன்பு மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை கொலை நகரமாக மாற்றயதோடு சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரத்தில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மதுரை அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு, எஞ்சிய நாட்களிலாவது தமிழக மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
பணிநிரந்தரம் தொடர்பாக அமைச்சருடன் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு திட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் திரு முத்துச்சாமி அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஏற்கனவே நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்காத டாஸ்மாக் நிர்வாகம், தற்போது மதுபான காலி பாட்டில்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற பணிச்சுமையையும் ஏற்றியிருப்பது டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைவான ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பற்ற சூழலில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
விவசாயப் பெருமக்களின் நலனுக்காக இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவியவரும், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தவருமான உழவர் பெருந்தலைவர் திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த தினம் இன்று. இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு நியாயமானவிலை என விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளை மாபெரும் போராட்டங்களின் மூலம் அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வெற்றியும் கண்ட விவசாயிகளின் விடிவெள்ளி திரு.நாராயணசாமி நாயுடு அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை அவசர கதியில் திறப்பது ஏன் ? கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சியை நடத்துவது தான் முதல்வர் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா? திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அம்மருத்துவமனையில் பணியாற்ற போதுமான மருத்துவர்களும், அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவமனைக்கு அடிப்படைத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்படாத அரசு மருத்துவமனையை அவசரகதியில் திறக்கும் திமுக அரசின் முடிவுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நடத்தியிருக்கும் இந்த போராட்டம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் என ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித அடிப்படை வசதியுமில்லாத மருத்துவமனைகளைத் திறந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கான திறப்பு விழாவை உடனடியாக ஒத்திவைப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அதனைத் திறக்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவையின் மாநில போக்குவரத்து கழக விருதுநகர் மண்டல நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: விழுப்புரம் மாவட்டம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: கன்னியாகுமரி மாவட்டம் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு:தென்காசி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அன்பிற்குரிய சகோதரருமான திரு.ஓ.பி.ரவீந்திரநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு. ஓ.பி.ரவீந்திரநாத் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும், தனது மக்கள் பணியை மென்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னை வியாசர்பாடியில் கஞ்சா பொட்டலத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர் – இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் எடுத்து வந்திருந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிய திமுக அரசின் காவல்துறையால், கல்வி பயிலும் பள்ளிக்கே மாணவர்கள் கஞ்சா பொட்டலத்தை எடுத்து வரும் அளவிற்கான சூழல் உருவாகியுள்ளது. கல்வி நிலையங்களில் தொடங்கி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் வரை நடைபெறும் மோதல் சம்பவங்களுக்கும், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களுக்கும் அடிப்படை காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை மென்மேலும் ஊக்குவிப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? எனவே, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் கும்பலையும் கண்டறிந்து, அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இளம் தலைமுறையின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தாய்த்தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடென்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன்; சாமானியரும் சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்த கொள்கைக் கோமான்; தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயம்; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று. ஆழ்ந்த அரசியல் ஞானம், சமூக மாற்றத்திற்கான சிந்தனை, மக்களின் மனங்களைப் புரிந்துகொள்ளும் மன தத்துவத்துடன், சாதி, மத பேதமற்ற சமுதாயத்தை காண விரும்பிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் வழியில் பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை தெற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.S.சீனிவாசன் அவர்களின் தந்தை திரு.S.செல்வராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு நகர 24வது வார்டு கழக செயலாளர் திரு.க.முத்துக்கருப்பன் அவர்களின் தந்தை திரு.கந்தசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு.J.துளசிராமன் அவர்களின் தந்தை திரு.M.L.ஜெயராமன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.C.முனுசாமி அவர்களின் தாயார் திருமதி.C.கஸ்தூரி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாநகர் மாவட்ட முத்தையாபுரம் பகுதி 52 வட்டக் கழகசெயலாளர் திரு.T.G. சேகர் அவர்களின் தாயார் திருமதி.G.இளஞ்சியம் அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க உதவும் மத்திய பட்ஜெட்!
மதுரையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த தலைச்சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நியப் படைகளைத் துணிச்சலுடன் எதிர் கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த தலை சிறந்த மன்னர்களில் ஒருவரும், அந்நிய படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகள் பல கண்டவருமான மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. தமிழர்களின் பண்பாட்டைத் தனது கட்டட கலை மற்றும் கோவில் திருப்பணிகளின் மூலம் சிறப்பித்து, ஜாதி – மத பேதங்களைக் கடந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாய் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் மகத்தானவராகத் திகழ்ந்த திருமலை நாயக்கர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
யாமிருக்க பயமேன் என்ற அருள் வாக்கை வழங்கி, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாகத் திகழும் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருநாள் இன்று. இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நம்மைக் காத்தருளும் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் தைப்பூசத் திருநாளில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் கிடைக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
இறைவன் ஒளி வடிவமானவர் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க சத்திய ஞான சபையை நிறுவியவரும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே ஆகச்சிறந்த இறைப்பணி என்பதில் உறுதியாக இருந்தவருமான அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் ஜோதி வடிவான தினம் இன்று. தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு ஆண்டவரை அடையும் அருளியலை வழங்குவதோடு, தேனினும் இனிய திருவருட்பாக்களின் மூலம் மனித குலம் நீடூழி வாழ்வதற்கான ஒழுக்க நெறிமுறைகளையும் போதித்த வள்ளலார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நேர்மையான மற்றும் தூய்மையான ஆட்சியை வழங்கியவருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களோடு, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்களையும் இயற்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய மாமனிதர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.M.அகமது ஜமால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் அன்பு நண்பருமான திரு H. ராஜா அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57வது நினைவு நாள்: சென்னையில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்!
சட்டவிரோதமாக இயங்கும் குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா ? – திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு.கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50க்கும் அதிகமான குண்டர்களை ஏவி நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா ? கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சத்தியாகிரகம் எனும் அறவழிப் போராட்டத்தின் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தவரும், அகிம்சை எனும் வன்முறையற்ற தாரகமந்திரத்தை உலகத்திற்கே போதித்த உன்னதமிக்க மாமனிதருமான தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. எளிமை, கொள்கைத் தெளிவு, நேர்மையான பார்வை ஆகியவற்றோடு, ஜாதி, மத, பேதமற்ற சமுதாயத்திற்காகவும், மானுட நலனுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்திட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவை எந்நாளும் போற்றிடுவோம்.
சென்னை அரசு கலைக்கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் உணவக விடுதியில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சென்னை தரமணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரங்கேறியிருக்கும் இந்த சம்பவம் தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை மீண்டும், மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் நாட்களிலாவது பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சென்னையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்து சாக்கு மூட்டையில் அடைத்துத் தூக்கி வீசும் அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு – கொலையாளிகளும், கொள்ளையர்களும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும் ? சென்னை தரமணி அருகே, தன்னுடைய மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பலைத் தட்டிக் கேட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த நபர், அவரின் மனைவி, குழந்தை என குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கொலையான கணவர் மற்றும் குழந்தையின் உடல் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பெருங்குடியில் வீசப்பட்ட மனைவியின் உடலை இரண்டாவது நாளாகக் கண்டறிய முடியாமல் திணறிக் கொண்டிருப்பதன் மூலம் தமிழகக் காவல்துறை எந்தளவிற்குச் செயலிழந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அதைத் தட்டிக் கேட்கச் சென்ற நபர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டி ஆங்காங்கே வீசப்படும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தை எட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலை, கொள்ளை குற்றவாளிகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குரூர மனம் படைத்தவர்களும், போதைப் பொருட்களை விற்பனை செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் சமூக விரோதிகளும் அச்சமின்றி சுற்றித் திரியும் தமிழகத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இத்தகையச் செயல்களில் ஈடுபட்டுள்ள கொடூர மனம் படைத்தவர்கள் அனைவரையும் கைது செய்து, இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத அளவிற்கான கடுமையான தண்டனையை வழங்கிட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
பல்நோக்கு மருத்துவம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களின் போராட்டத்தால் பொதுமக்களின் மருத்துவ சேவைகள் பாதிப்பு – பேச்சுவார்த்தையின் மூலம் சுகாதாரப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.பணிநிரந்தரம் கோரி பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களும், ஊதிய உயர்வு கோரி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கிராமப்புற சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி, தொற்றுநோய் கண்காணிப்பு, குடும்ப நலச் சேவைகள், சுகாதார விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் தங்களை பணிநிரந்தரம் செய்வதாகக் கூறி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதைப் போலவே, 2 மணி நேரம் மட்டுமே வேலை எனக்கூறி பணியமர்த்தப்பட்டு பல்வேறு பணிச்சுமைகளுக்கு உள்ளாக்கியதோடு, ஊதிய உயர்வு கோரி போராடும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத் தன்னார்வலர்களை காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, போதுமான உட்கட்டமைப்பு வசதியின்மை என ஒட்டுமொத்த அவலத்தின் உருவமாக அரசு மருத்துவமனைகள் மாறி வரும் நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மருத்துவப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</strong> எனவே, <strong>தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்ட பணியாளர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூரில் முதலமைச்சரைக் கருப்புக் கொடியுடன் சந்திக்க முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாகக் கைது – பலமுறை தஞ்சாவூர் செல்லும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளைச் சந்திக்க மறுப்பது ஏன் ? தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்து வாங்கிய கடனை கேட்டு விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுத்தும் பயனளிக்காத நிலையில், இன்று முதலமைச்சருக்குக் கருப்புக் கொடி காட்டும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பெயரில் மோசடியாக வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதோடு, தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்காமல் ஆலையை மூடிய தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூருக்கு வருகை தந்த முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்த போதும், இதே கோரிக்கையை வலியுறுத்திய கருப்புக் கொடி காட்டிய விவசாயிகளைக் கைதுசெய்த காவல்துறை, இம்முறையும் முதலமைச்சரைச் சந்திக்க விடாமல் வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளான மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன் தள்ளுபடி மற்றும் நிலுவைத் தொகையை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.அஜித் பவார் அவர்கள் விமான விபத்தில் பலியானதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.திரு.அஜித் பவார் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.M.D.முத்து அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – டிடிவி தினகரன் கழக பொதுச்செயலாளர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு சுதந்திரமடைந்த பின் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்த இந்நாளை குடியரசு தினமாகக் கொண்டாடி மகிழும் வேளையில், ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் நாட்டை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தியாகிகள் அனைவரையும் நினைவில் வைத்துப் போற்றுவோம். நாட்டு மக்கள் அனைவரும் மனமுவந்து கொண்டாடும் இந்த குடியரசுத் திருநாளில் சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும், இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பேணிக்காத்திடவும் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை குடியரசு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
பத்மபூஷன் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மருத்துவர் திரு.கே.ஆர் பழனிசாமி, தொழிலதிபரும் சமூக சேவகருமான திரு. எஸ்.கே.எம். மயிலானந்தம் அவர்கள், விளையாட்டு வீரர் திரு. விஜய் அமிர்த ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல, பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் திரு.ஹெச்.வி. ஹண்டே அவர்கள், சென்னை ஐஐடி இயக்குநர் திரு.காமகோடி அவர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி திரு. விஜயகுமார் அவர்கள், இசைக்கலைஞர்கள் திருமதி. காயத்ரி பலசுப்பிரமணியன்& திருமதி. ரஞ்சனி பாலசுப்பிரமணியன் அவர்கள், நடிகர் திரு. மாதவன் அவர்கள், கல்வியாளர் திரு. ராமசாமி அவர்கள், கல்வியாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும், அவரவர் துறைகளில் மேன்மேலும் சிறந்து விளங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
திருநெல்வேலி அருகே ஒரே இடத்தில் 20 கல்குவாரிகளை அமைத்து கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் – கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசு அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் அடுத்தடுத்து செயல்படும் 20 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திற்கு வெடிவைத்துத் தகர்த்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கல்குவாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கடத்தும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதிகளின் விளைநிலங்களோடு, நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.சட்டவிரோத குவாரிகளோடு, உரிமம் பெற்ற குவாரிகளிலிருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு நிர்வாகத்துறைகளோ, பல்வேறு புகார்கள் குவிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதன் மூலம், ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தனது பங்கிற்குக் கனிமவளக் கொள்ளையை ஊக்குவிக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தென் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இந்த 20 குவாரிகளில் உடனடி ஆய்வை மேற்கொண்டு கனிமவளம் கடத்தப்பட்டிருப்பது உறுதியானால் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் திரு.புண்ணியமூர்த்தி நடேசன் அவர்கள், ஓதுவார் திருத்தணி திரு. சுவாமிநாதன் அவர்கள், குரும்பா ஓவியர் திரு ஆர். கிருஷ்ணன் அவர்கள், சிற்பக் கலைஞர் திரு. காளியப்ப கவுண்டர் அவர்கள், மிருதங்க கலைஞர் திரு. பக்தவத்சலம் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்னைத் தமிழைக் காக்கவும், தமிழ் இனத்தின் உரிமையை மீட்கவும் தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திடும் தினம் இன்று. நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இன மொழிகளையும் பாதுகாக்க வித்திட்ட மொழிப்போரில் பங்கேற்று தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
தமிழகத்தைப் போராட்டக் களமாக்கியதும், ஊழலில் திளைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை; திமுக இழைத்த அநீதிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த தலைசிறந்த தேசியவாதியுமான வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் படை திரட்டி போராடிய வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்திருக்கும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். செய்திகளில் நடுநிலைத் தன்மை, மக்கள் பிரச்னையில் கூடுதல் கவனம் என தமிழ்ச் செய்தி ஊடகங்களில் தனித்துவமிக்கதாக திகழும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.S.V.S.P.மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிக் கழக இணைச்செயலாளர் திரு.D.மோகன்ராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
I sincerely thank the Hon’ble Union Home Minister, Shri Amit Shah Ji, for welcoming and congratulating the Amma Makkal Munnettra Kazagam on joining the NDA. On behalf of the NDA, I assure that we will work together with full dedication to defeat the corrupt DMK and remove it from power.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். தொகுதிப்பங்கீடு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றது என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்வதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்று இணைந்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வாழ்த்தி வரவேற்ற மத்திய அமைச்சரும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான மாண்புமிகு திரு.பியூஸ் கோயல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!
தலைமைக் கழக அறிவிப்பு:தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஜனவரி 25-ல் வீர வணக்கம் செலுத்திடுவோம்.
மக்களுக்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய ஆளுநர் உரை திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையின் மரபுகளை மாற்றக்கோரும் ஆளுநர் அவர்களின் செயல்பாடு ஏற்புடையதல்ல.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு.நிதின் நபின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இளம் வயதில் மிகப்பெரிய பொறுப்புக்குத் தேர்வாகியிருக்கும் திரு.நிதின் நபின் அவர்களின் தேசப் பணியும், மக்கள் பணியும் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
வேளச்சேரியில் போதைக் கும்பலால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான உணவு டெலிவரி செய்யும் ஊழியர் – பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைக் கும்பல்களின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். சென்னை வேளச்சேரி அருகே போதையில் சுற்றித்திரிந்த கும்பல், அப்பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக வந்த ஊழியர் ஒருவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. பேருந்து, ரயில், மற்றும் விமானநிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சுற்றித் திரியும் போதைக் கும்பலைக் கண்காணிக்கவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இதுபோன்று தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொள்வதால் பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் போதைக் கும்பல்களைப் பிடித்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் தலைநகர் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை அடியோடு ஒழித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூன்களில் காற்று நிரப்பப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முதலமைச்சர் பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை கழிவறையில் வைத்து வீடியோ எடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது – பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மற்ற பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் ? ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் கழிவறை பயன்படுத்திய போது, செல்போன் மூலம் வீடியோ எடுத்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்வில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் காவலருக்கு நடைபெற்றிருக்கும் இந்த அவலச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்தளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுத்து அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே சக பெண் காவலரை போகப் பொருளாக பார்த்திருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் மிகப்பெரிய இழுக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, பெண் காவலரை துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் சிறப்பு ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, முதலமைச்சர் பாதுகாப்பு பணிக்கு வரும் பெண் காவலர்களோடு, அனைத்து பெண் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.தளபதி அவர்களின் தந்தை திரு.S.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு.G.கலைச்செல்வம் அவர்களின் தந்தை திரு.கணேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு. S.P.கருணாகரன் அவர்களின் தந்தை திரு.A.செந்தூர்பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வடசென்னை மத்திய மாவட்டம், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திருமதி. V. செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை – இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று கற்களை வீசி இருவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதோடு, திருத்தணி அருகே இருளர்கள் வசித்துவந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த மற்றொரு கஞ்சா போதையில் இருந்த கும்பல், அங்கிருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் நினைத்துப் பார்க்கும் போதே மனதை உலுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கத் தவறிவிட்டதோடு, போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என விளம்பர வீடியோ வெளியிட்டதன் மூலம் தனது கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் தமிழகத்தில் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ முற்றிலும் செயலிழந்திருப்பதால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. எனவே, திருவள்ளூர் மற்றும் திருத்தணி குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை அடியோடு தடுத்திட வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்
செங்கல்பட்டு அருகே அமையவிருக்கும் புதிய நீர்த்தேக்கத்திற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு – புதிய நீர்த்தேக்கத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முன்பே அவசரகதியில் அடிக்கல் நாட்டுவது ஏன் ? செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் அமைந்துள்ள கோவளம் உப வடிநிலப் பகுதியில் மாமல்லன் எனும் பெயரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையின் புறநகர் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நிலமான உப்பங்கழி நீர்நிலையில் அமையவிருக்கும் இந்த புதிய நீர்த்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித் தொழிலோடு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் என அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதிகளின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் நீரியல் ஆய்வுகள், நீண்டகால நிலைத்தன்மை, நிலத்தடி நீரின் போக்கு என எந்தவித ஆய்வுகளையும் முறையாக மேற்கொள்ளாமலும், அப்பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் அவசரகதியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் எழுப்பியுள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தின் பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் உப்பங்கழிப் பகுதியின் தன்மையை முற்றிலுமாக மாற்றி புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதோடு, இதுபோன்ற திட்டங்கள் தொடங்கும் போது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், கோடிக்கணக்கான மக்களின் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும் திகழ்ந்த ஆகச்சிறந்த ஆளுமை பாரதரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று… மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக அயராது உழைத்து, நாடுபோற்றும் நல்லபல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக மக்களின் இதயக் கோயிலில் மக்கள் திலகமாய், மன்னாதி மன்னராய் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
திருச்சி தெற்கு மாவட்டம், TVS டோல்கேட் பகுதிக் கழக அவைத்தலைவர் திரு.D.கருணாநிதி அவர்களின் தாயார் திருமதி.D.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மனிதகுலம் முழுமைக்குமான வாழ்வியலை வகுத்துக் கொடுத்திருக்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய வள்ளுவப்பெருந்தகையை போற்றிக் கொண்டாடும் திருவள்ளுவர் தினம் இன்று. சாதி, மதம், இனம் கடந்து உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றிடும் இந்திய நாட்டின் ஈடு இணையற்ற தேசிய இலக்கியமாக திகழும் திருக்குறளை படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையின் புகழை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு – தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது. பணிநிரந்தர கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் விஷம் அருந்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வதாக இடம்பெற்றிருந்த பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு அரசு செவி சாய்க்காததன் விளைவே ஆசிரியர் ஒருவரின் உயிர் பறிபோயிருப்பதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்வாதார பிரச்னைகளுக்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கான தீர்வை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே, உயிரிழந்த திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, பணிநிரந்தரம் என்ற பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
தலைமைக் கழக செய்தி வெளியீடு<br>பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு வணக்கம்…<br>கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.<br>இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் அவர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.<br>கழக பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.<br>வருகின்ற 17ஆம் தேதி பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.<br>தலைமைக் கழகம்<br>அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. உலகம் பல தொழில்களைச் செய்து சுழன்றாலும், உழவுத் தொழிலே சிறந்தது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, உலகத் தொழில் அனைத்திற்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களின் நலனையும் பேணிக்காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்விலும் வளமும், நலமும், பெருகி அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும் என மனதார வாழ்த்தி மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்: சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனி; நாடு நலம் பெற நல்ல பல திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்திய தலைசிறந்த ஆளுமை; ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்; தமிழக மக்களின் மனங்களில் என்றென்றும் நிறைந்திருக்கும் பொன்மனச்செம்மல் பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109 வது பிறந்தநாள் வரும் 17.01.2026, சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்றைய தினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திருநல்லூர் திரு.KVR கண்ணப்பா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பொங்கல் திருநாளையொட்டி பன்மடங்கு உயர்ந்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தால் பயணிகள் பாதிப்பு – ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பலர் அவரவர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், பன்மடங்கு அதிகரித்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் 700 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாகவும், கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும், நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 1400 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும் உயர்ந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் திட்டமிட்டு பன்மடங்கு உயர்த்தப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் கண்டுகொள்ளாத போக்குவரத்துத் துறையால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதோடு, சிலர் தங்களின் பயணங்களை ரத்து செய்யும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற கட்டணக் கொள்ளை நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் குளறுபடி என புகார் –அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு அனைவருக்கும் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். திருவள்ளூர், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வேஷ்டி, சேலைகள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு முழுமையாக விநியோகம் செய்யப்படாததே, நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு, டோக்கன் வழங்குவதில் குளறுபடி, ஊழியர்கள் பற்றாக்குறை, கைரேகை சரி பார்க்கும் இயந்திரத்தில் பழுது என நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளால், குடும்ப அட்டை தாரர்கள் பொங்கல் பரிசை பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதோடு, பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அறிவிக்கப்பட்ட 3 ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் சிறப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி சரமாரி வெட்டி படுகொலை சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய காவல்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியைப் பார்க்க வந்த ரவுடி ஒருவர், மருத்துவமனைக்குள்ளாகவே அடையாளம் தெரியாத கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் அங்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை, அலட்சியப் போக்குடன் செயல்படுவதே, தற்போது அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்யும் அளவிற்கான அசாதாரண சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. எனவே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து படுகொலை செய்த கும்பலைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இளைஞர்களால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்ததோடு, நாட்டு மக்கள் மனதில் சுதந்திர மற்றும் தேசிய உணர்வைத் தூண்டிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆன்மீகத்தைக் கடந்து உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத்திறன் மேம்பாடு என இளைஞர்களுக்கு பல்வேறு விதமான நற்குணங்களைப் போதித்ததோடு, அவர்களின் நம்பிக்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
சென்னை கண்ணகி நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகி கைது – கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே அப்பெண் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் காரணமாக அமைந்துள்ளது.தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை எனக்கூறிய மருத்துவத்துறை அமைச்சருடனே, கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் தமிழகத்தில் திமுக தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ஆங்கிலேயர்களால் உயிர்போகும் அளவிற்குத் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும் தன் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த தேசம் போற்றும் தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுதினம் இன்று. சிறு வயது முதலே தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்களிடம் சுதேசி சிந்தனைகளை ஆழமாக விதைத்ததோடு, இந்திய சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடி தன்னுயிர் நீத்த கொடிகாத்த குமரன் அவர்களின் தேசப்பற்றையும், தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான திரு.செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும்,பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் திரு. கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.கணேசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊதியம் பிடித்தம் செய்யும் நடைமுறைக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு – திமுகவின் தேர்தல் வாக்குறுதியான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும். ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை ரத்து செய்திட வேண்டும், பணி ஓய்வின் போது 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினை தொகுத்து வழங்க வேண்டும், பொது வருங்கால வைப்பு நிதித் தொகையின் அசலை வட்டியுடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை, பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஒப்பிடும் சவலைக் குழந்தையாக இருப்பதாக விமர்சித்திருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். அதோடு, புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்பட்ட நாளில் தொடங்கி தற்போது வரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு பேராசிரியடமிருந்தும் பிடித்தம் செய்துள்ள சுமார் 1 கோடி ரூபாய் அளவிலான தொகையை திருப்பித் தரவில்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பல்வேறு குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகளிடையே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நீக்கம்: தென்காசி வடக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.P.கராத்தே முருகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
சிவகங்கை மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு இணைச்செயலாளர் திரு.ப.சரவணன் அவர்களின் தாயார் திருமதி.ப.மீனாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர், திரு.K.பொன்னுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை – மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே வெள்ளிரிக்காடு கிராமத்தில் கள்ளச்சாரயம் விற்பனை செய்துவந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதோடு, விற்பனைக்காக வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் இதே கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக நடைபெற்ற கள்ளச்சாராயத்தால் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான உயிர்களை பறித்த கள்ளச்சாராயத்தின் விற்பனையையையும், அதற்கு உடந்தையாக செயல்படுவோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலைதூக்க காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு கைதான நபரிடம் முழுமையான விசாரணை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாள் : 05.01.2026 – திங்கள் கிழமை, இடம் : மஹாராஜா மஹால், தஞ்சாவூர்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும், மொழிப்போர் தியாகியுமான திரு.எல் கணேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு எல்.கணேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கடலூர் வடக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளர் திருமதி.K.மூக்காயி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.ஆடியோ.S.நாராயணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் பெண் போராளியும், ஆங்கிலேயப் படைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சிவகங்கையை மீட்டெடுத்துத் திறம்பட ஆட்சி செய்த வீரமங்கையுமான வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று வீரமும், விவேகமும் நிறைந்த போர்ப்படை தளபதியாக, மக்கள் நலனில் அதீத கவனம் செலுத்திய ராணியாக, ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த தென்னாட்டு அரசி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த மாவீரரும், பாஞ்சாலங்குறிச்சியை திறம்பட ஆட்சி செய்த பாளையக்கார மன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, பிற மன்னர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்ததோடு, தன் இறுதி மூச்சு வரை தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் அரண்போல காத்திட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும் புகைப்படமும் நீக்கம் – தமிழுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரின் பெயரை மறைக்க முற்படுவது அற்பத்தனமானது. தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், அவருடைய பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ் மாநாடு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத் தமிழர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரையும், புகைப்படத்தையும் நீக்கி அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும். எனவே, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதிய புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்களின் மனைவி திருமதி பிரேமகுமாரி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மனைவியை இழந்துவாடும் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக மக்கள் அனைவரும் அமைதியான சூழலில் வளமான வாழ்வை வாழ்ந்திடவும், சமூகப் பொருளாதார நிலையில் அவரவர் விரும்பிய உயர்ந்த நிலையை அடைந்திடவும் இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபட்டு உழைத்திட உறுதியேற்போம். புதிய தொடக்கத்தோடு புத்துணர்வையும் அளிக்கும் இப்புத்தாண்டு, நம் அனைவருக்கும் ஏற்றம் நிறைந்த வளர்ச்சியையும், குறைவில்லாத வளத்தையும் வழங்கட்டும் எனக்கூறி, மீண்டும் ஒருமுறை எனது ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழகம் போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலம் என்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல் – இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் சுமார் 2,300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி திரு அஸ்ரா கார்க் அவர்களும் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழகம் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதாக அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கூறியிருக்கும் தகவல் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாக அமைந்துள்ளது. திருத்தணி ரயில்நிலையம் அருகே கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையிலிருந்த சிறுவர்கள் சிலர், வடமாநில இளைஞர் ஒருவர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலின் தாக்கம் அடங்குவதற்கு முன்பாகவே, திருப்பூர் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை, போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம், தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் எந்தளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கத் தவறியதன் விளைவே, சக மனிதர்களையே பட்டாக் கத்தியால் தாக்கி, துன்புறுத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களின் மூலம் பரப்பும் அளவிற்கான கொடூரமான மனநிலையை உருவாக்கியுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுவதோடு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஆலய பூசாரி திரு.ராமகிருஷ்ண தேவர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு. ராமகிருஷ்ண தேவர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இயற்கை விவசாயத்தின் மூலம் அறிவுப்புரட்சியை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானியும், நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்யவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய பசுமைப் போராளியுமான நம்மாழ்வார் அவர்களின் நினைவுதினம் இன்று. இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றோடு பாரம்பரியமிக்க நெல் ரகங்களையும் மீட்டெடுத்து தன் வாழ்நாள் முழுவதும் இயற்கையோடு இணைந்த விவசாயியாக வாழ்ந்து மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழியை நாளும் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
கோவை மத்திய மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திரு.K.எழில் பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு தினமான இன்று அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவில் வைத்துப் போற்றுவோம்.
சமநிலைக்குச் சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதைக் கைவிட்டு, தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முன்வர வேண்டும். சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமநிலைக்குச் சம ஊதியம் வழங்கப்படும் என 311ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக மனு கொடுக்கும் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், முற்றுகை போராட்டம் என, ஜனநாயகம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி, அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருப்பதாக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனியும் கால தாமதம் ஏற்படுத்தாமல், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
திருச்சி தெற்கு மாவட்டம், மருங்காபுரி வடக்கு ஒன்றியம், ஊத்துக்குளி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.P.K.சக்திசிவம் அவர்களின் தாயார் திருமதி.சரஸ்வதி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சுனாமி பேரலையால் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஏழை – எளியோருக்கு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினர்.
கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அளவிடவே முடியாத அளவிற்கான உடைமைகளையும் பறித்துச் சென்றதோடு, தமிழக மக்களின் ஆழ்மனதில் இன்றளவும் ஆறாத ரணமாகப் பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை நிகழ்த்திய கோரத்தாண்டவத்தின் நினைவுதினம் இன்று. காலத்தால் மறக்க முடியாத அளவிற்கு வலியைத் தந்ததோடு, பாதிப்பிலிருந்து மீளவே முடியாத அளவிற்குப் பேரழிவையும், பேரிழப்பையும் ஏற்படுத்திய சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில், உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், வாழ்க்கைத்தரம் உயரவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் போராளியும், சிவகங்கை சீமையைத் திறம்பட ஆட்சி செய்த முதல் ராணியுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவுதினம் இன்று. போர்க்களத்தில் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்ட படைத்தளபதியாகவும், தனது குடிமக்களிடம் அளவு கடந்த அன்பு கொண்டு நல்லாட்சி வழங்கிய ஆட்சியாளராகவும் திகழ்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
கருணையின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு என்ற ஒன்றையே வாழ்வின் நெறியாகக் கொண்டு, அனைத்து உயிர்களையும் நேசி, பகைவர்களிடத்திலும் அன்பு காட்டு, தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய், போன்ற மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் இயேசுபிரானின் போதனைகளைப் பின்பற்றிட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். அனைவரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான் பிறந்த இந்த நன்னாளில், அவர் விரும்பிய அன்பு, அமைதி, கருணை, சகோதரத்துவம், மற்றும் மதநல்லிணக்கம் மேன்மேலும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு :
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் செல்வாக்கை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தப்பட்டது.
சாதியக் கொடுமைகள் மற்றும் சமுதாய பேதங்களோடு, பெண்ணடிமைத் தனத்தையும், மனிதர்களைத் தாழ்த்தும் மூட நம்பிக்கைகளையும் வேரோடு களையத் தொடர்ந்து போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக மக்களிடையே பகுத்தறிவு சிந்தனையை மேலோங்கச் செய்ததோடு, பொதுநலத் தொண்டையே தன் உயிர் மூச்செனக் கருதி இறுதிவரை போராடிய சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பெரும் தொண்டுகளை நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தியாகி கக்கன் அவர்களின் நினைவு தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப மேன்மைமிக்க உழவுத் தொழிலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களை கொண்டாடி மகிழும் தேசிய விவசாயிகள் தினம் இன்று. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களையும், எண்ணற்ற சவால்களையும் எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் கடவுள் கண்டெடுத்த தொழிலாளிகளான விவசாயிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும், அரும்பெரும் பணிகளையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், எளிமை மற்றும் நேர்மையைத் தனது அடிப்படைக் குணங்களாகக் கொண்டிருந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதியுமான தியாகி கக்கன் அவர்களின் நினைவுதினம் இன்று. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், பல்வேறு துறைகளுக்கு அமைச்சர் எனப் பொதுவாழ்வில் தனக்குக் கிடைத்த அனைத்து விதமான வாய்ப்புகளையும் பொதுமக்களின் நலனுக்காகவே பயன்படுத்திய மாமனிதர் கக்கன் அவர்களின் தியாக உணர்வையும், மக்கள் தொண்டையும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – அரசு இயந்திரத்தின் அச்சாணியாகத் திகழும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான போட்டோ ஜியோ ( FOTA – GEO ) அறிவித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையின் 187வது வாக்குறுதியான அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்புதல், 309வது வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், 311வது வாக்குறுதியான சமநிலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, தங்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் அரசுத் தரப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் வழங்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக நடைபெற்ற ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்யக் குழுக்களை அமைத்து காலதாமதம் ஏற்படுத்துவதையே அரசு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தங்களுக்குக் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை மீண்டும் அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 02.01.2026, வெள்ளிக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் இராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள வசந்தம் மஹாலில் நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 26.12.2025, வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணியளவில், மதுரை தெப்பகுளம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
தலைமைக் கழக அறிவிப்பு: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம்: ஆண்டிப்பட்டியில் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்; உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்; தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பாரத ரத்னா, பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினம் வருகின்ற 24.12.2025 புதன்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி, கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை – வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பணி வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு உள்ளான சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட 50வது வார்டு பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் திரு ரவிக்குமார் அவர்கள் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தூய்மைப் பணியாளர் ஒருவர் மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்திலும், கொரோனோ போன்ற பெருந்தொற்று காலத்திலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரையும், மாநகரின் சுகாதாரத்தையும் பேணிக்காத்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல் ஏற்றுக் கொள்ளமுடியாதது . எனவே, கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உரிய ஊதியமின்றியும், வாழ வழியின்றியும் தவித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகம் சார்பாகப் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் சகோதரர் திரு.ஆர்.எம். செல்வம் அவர்களின் புதல்வன் திரு.புகழ் அவர்கள் இரண்டு தங்கப்பதக்கங்களையும், புதல்வி செல்வி. இன்பா அவர்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருக்கும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்திருக்கும் இருவரும், அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் விளையாட்டு உலகின் உச்சம் தொட்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளின் (SIR) அடிப்படையில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டம் மற்றும் தொகுதிவாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், தங்களின் பெயர்களை மீண்டும் இணைக்க, புதிய வாக்காளர்களைச் சேர்க்க, திருத்தப் பணிகளை மேற்கொள்ள வரும் ஜனவரி 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அவரவர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை முழுமையாகப் பெற்று, தங்களின் பகுதிகளில் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் அனைத்து விதமான உதவிகளையும் உடனிருந்து செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் தொடர் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடும் செவிலியர்களை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தம் சாலையில் போராடியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான செவிலியர்களை உரிய நேரத்தில் பணி நிரந்தரம் செய்யத்தவறிய சுகாதாரத்துறையின் அலட்சியமே, காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னரும் விடிய, விடியப் போராட வேண்டிய சூழலுக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும், தங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததோடு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் என செவிலியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே,காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய நியாயமான கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 21.12.2025, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அமைந்துள்ள VPS சரவணா மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அரியலூர் மாவட்டக்கழக செயலாளர் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர்கள் நியமனம்.
கழகத்தின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம்! ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் திரு.C.கோபால் (முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 05.01.2026 திங்கட்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி இணைச்செயலாளர் திரு.சோழகன் குடிக்காடு சுரேஷ் அவர்களின் தாயார் திருமதி.K.பாப்பா அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருச்சி தெற்கு மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.ந.பத்மநாபன் அவர்களின் தந்தை திரு.நல்லுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கறம்பக்குடி வடக்கு ஒன்றியம், புதுவிடுதி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.S.சாகுல் ஹமீது அவர்களின் தாயார் திருமதி.பசரியா பீவி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் திரு.T.மணிகண்டன் அவர்களின் தாயார் திருமதி.T.வசந்தி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவுவிவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இடுவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், கடையடைப்பு ஆகியவற்றோடு கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், அப்பணிகளைத் தொடர்வதும், எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களைக் கைது செய்து அடக்குமுறையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குப்பதிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு – அடிக்கடி அரங்கேறும் விபத்துக்களைத் தடுக்க அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அங்கன்வாடி மையங்கள் தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைக் கட்டடங்களின் அவலநிலை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது மாணவர் ஒருவரின் உயிர் பறிபோகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இதுபோன்று அடிக்கடி இடிந்து விழும் கட்டடங்களால் ஒட்டுமொத்த மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருப்பதோடு , ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எனவே, மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதோடு, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாத வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.G.விமல் அவர்களின் தந்தை திரு.சோம.குணசேகரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூர் கழக துணைச்செயலாளர் திருமதி. A. ஹாஜிராள் பீவி அவர்களின் கணவர் திரு.ஜாகீர் உசேன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.P.ஆனந்த ராஜ் அவர்களின் தந்தை திரு.பழனிச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு வடக்கு ஒன்றிய வானராங்குடி ஊராட்சி, ஆதிதிராவிடர் தெரு கிளைக் கழக செயலாளர் திரு.C.பழனிச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சென்னை அடையாறு இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் திரு.பாலு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசை வலியுறுத்தி” வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர்.
நேற்று எனது பிறந்தநாளையொட்டி தங்களது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தொலைப்பேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தென்னிந்தியத் திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற செயற்குழு உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாநகர மாவட்டக் கழக செயலாளர் அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள அன்புத் தம்பி திரு.P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்கள் திருச்சபையின் மூலம் தன்னுடைய சமூக சேவையை மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக் கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் சதித்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்திட 30 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் நதிநீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதோடு, கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலின்றி எந்தவொரு அணையையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமையுள்ள பங்கைப் பெறுவதற்கே ஒவ்வொரு ஆண்டும் போராட வேண்டிய சூழலில், மேகதாது அணையைக் கர்நாடக அரசு திட்டமிட்டபடி கட்டி முடித்தால், காவிரிப் பாசனப் பகுதிகள் முழுவதும் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மேற்கொண்டு காவிரிப் பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
விடுவிப்பு: கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச்செயலாளர் திரு.K.R.இளையராஜா அவர்களும், திருச்சி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.S.கார்த்திக் அவர்களும் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.
தேனி தெற்கு மாவட்டம், சின்னமனூர் மேற்கு ஒன்றியம், சங்கராபுரம் கிளைக் கழக செயலாளர் திரு.க.செல்லத்துரை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – சென்னை பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் சுமார் 95 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்காமல் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்விப் பணிக்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணிக்கும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்பு அவர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உரிய நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பதும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் வழங்க மறுப்பதும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அவலநிலையை வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஏற்கனவே, கடுமையான நிதி நெருக்கடி, மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்க நிதியில்லை, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியிருக்கும் சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்களை வழங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் படிப்படியாக அதன் தனித்தன்மையை இழந்துவருவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்தியாவின் பழமையும், பெருமையுமிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக விடுவிப்பதோடு, சிறப்பு நிதியை உருவாக்கி அப்பல்கலைக்கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை சீரமைத்திட வேண்டும் என உயர் கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் தனது உணர்ச்சிக்குக் கவிதைகளின் மூலம் நாட்டு மக்கள் மனதில் விடுதலை உணர்வை மேலோங்கச் செய்தவர், தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ்த் தொண்டுக்காக அர்ப்பணித்திட்ட புரட்சிக் கவிஞர் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. கவிஞராக, கட்டுரையாளராக, இதழியலாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக, சுதந்திரப் போராட்ட வீரராக பல்வேறு பரிமாணங்களிலும் தாய்மொழியாம் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் வடக்கு ஒன்றிய கோவிலூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.V.காளீஸ்வரன் அவர்களின் தந்தை திரு.வயிரவன் பிள்ளை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருச்சி தெற்கு மாவட்டம், மரக்கடை பகுதிக் கழக துணைச்செயலாளர் திரு.R.ராகவேந்திர பிரபு அவர்களின் தந்தை திரு.P.ரமேஷ்குமார்அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது – ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வர வேண்டும்.ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் இருப்பதே தொடக்கக்கல்வி ஆசிரியர்களைத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களின் துயர நிலை குறித்தும் அரசின் கவனத்தை ஈர்க்கவும் நடைபெற்ற போராட்டத்தை காவல்துறையினரைக் கொண்டு அடக்க முற்படுவதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவ நினைப்பதும் எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு -விடுவிப்பு: கழக செய்தி தொடர்பாளர் மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ஆகிய பொறுப்புகளிலிருக்கும் திரு.குரு.முருகானந்தம் அவர்கள் அப்பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
தமிழகத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் – அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு யூரியா உரம் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லாத நிலையில், பயிரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், வேறுவழியின்றியும் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. காவிரி டெல்டா உட்பட நடப்பாண்டுக்கான தமிழகத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பளவைக் கணக்கிட்டு அதற்குத் தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்கத் தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் உடனடியாக விநியோகிக்கப்படுவதையும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஸ்வயம் (Swayam) தேர்வை எதிர்கொள்ளும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு – தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களையே ஒதுக்கீடு செய்வதை தேசிய தேர்வு முகமை உறுதி செய்திட வேண்டும். டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பி.எட் மாணவர்களுக்கான ஸ்வயம் (Swayam) தேர்வு நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்ந்தெடுத்த நிலையிலும், கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அம்மாணவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான சான்றிதழ்களைப் பல்கலைக்கழகங்களின் மூலம் பெறமுடியும் என்ற சூழலில், அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாது உளவியல் ரீதியிலும் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையங்களை உடனடியாக ஒதுக்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்கள் வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தேசப்பாதுகாப்பு பணியின் போது பயங்கரவாதிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு உயிர்நீத்த ராணுவ வீரர் திரு.சக்திவேல் அவர்களுக்கு எனது வீரவணக்கத்தை செலுத்துவதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.விஜயகுமார் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை மூளையாக விளங்கியவரும், சமுதாய அமைப்பிலும் பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சம வாய்ப்பு மற்றும் அதிகாரம் பெறுவதற்காகத் தொடர்ந்து போராடியவருமான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம் இன்று. சட்டத்துறை மட்டுமல்லாது அரசியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த வல்லுநராகத் திகழ்ந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் – இந்திய அரசியலில் இரும்புப் பெண்மணியாய் வலம் வந்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அவரது லட்சியத்தையும், கொள்கைகளையும் மீட்டெடுத்து மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுதினம் (05.12.2025) – உறுதிமொழி
மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் நகர 10வது வார்டு கழக செயலாளர் திருA.P.இளங்கோ அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.M.ஜெஸ்லர் அவர்களின் மனைவி திருமதி.J.எலிசபெத் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகியோரின் அன்பைப் பெற்றவருமான திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திறமைமிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை தமிழ்சினிமாவுக்கு அடையாளப் படுத்திய திரு.ஏ.வி.எம் சரவணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை தெற்கு ஒன்றியக் கழக மீனவர் அணி செயலாளர் திரு.பா.குழந்தையன் அவர்களின் தந்தை திரு.பாலுநாட்டார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தமிழகத்தில் அமைத்திட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் உறுதியேற்றிடுவோம்: துரோகத்தின் மறு உருவத்திற்கு முடிவுரை எழுதிடுவோம்!
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்கள் அனைவரும் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று. மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் அனைத்தும் களையப்படுவதோடு, அவர்களும் சமூகத்தில் சமவாய்ப்புகள் பெற்று உயர்நிலையை அடைந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் நியமனம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் – 2026 : விருப்ப மனு பெறுதல்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் திரு.A.சாகுல்ஹமீது அவர்களின் தாயார் திருமதி.பதுர்நிஷா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், அன்பிற்குரிய சகோதரரும் நண்பருமான திரு.ஜான்பாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சகோதரர் திரு.ஜான்பாண்டியன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியை மேன்மேலும் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கோவை கிழக்கு மாவட்ட, மதுக்கரை நகரக் கழக செயலாளர் திரு.கு.வேலுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மழைநீரில் மூழ்கி வீணாகியிருக்கும் பயிர்சேத கணக்கிடும் பணியை உடனடியாக தொடங்கிட வேண்டும் – பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். டிட்வா புயலின் காரணமாகக் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்சாகுபாடி முழுமையாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழையின் தொடக்கக் காலத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்றுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது டிட்வா புயலின் தாக்கத்தினால் வயல் வெளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரும், அதில் மூழ்கியிருக்கும் நெற்பயிர்களும் காவிரி டெல்டா விவசாயிகள் மீளவே முடியாத அளவிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.டிட்வா புயலின் தாக்கத்தினால் வழக்கத்திற்கு மாறாகப் பெருமழை பொழிந்து வரும் நிலையில், நாளையுடன் நிறைவடைய இருக்கும் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அனைத்து தரப்பு விவசாயிகளின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து அதற்கான உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நாளையுடன் நிறைவடையும் இருக்கும் கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுதினம்! வருகின்ற 05.12.2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். – தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
தேனி வடக்கு மாவட்டம், ஆண்டிபட்டி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.V.C.ரவிக்குமார் அவர்களின் தாயார் திருமதி.C.அன்னக்கிளி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் நியமனம்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி.J.மலர்விழி அவர்களின் மாமியார் திருமதி.V.அங்கம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார் – விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆயிரத்திற்கும் அதிகமான சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகவும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வரும் நிலையில், வார இறுதி நாட்களில் உணவை சமைக்க மறுப்பதும், கட்டாயமாக வெளியேறச் சொல்வதும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றப்பட்டாலும் மாணவர்களுக்கான உரிமைகள், உதவிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைக்கும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் உறுதியளித்த போதிலும், அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவைக் கூட முறையாக வழங்க மறுப்பது ஆதிதிராவிடர் நலத்துறையின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, தென்மாவட்டங்களில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் சமூக நீதி விடுதிகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு தங்கி கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக பொருளாளர் திரு.K.கருப்பசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருச்சி தெற்கு மாவட்ட, திருவெறும்பூர் பகுதிக் கழக செயலாளர் மலைக்கோயில் திரு.தே.சக்திவேல் அவர்களின் தாயார் திருமதி.தே.சரோஜா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தேனி தெற்கு மாவட்டம், கம்பம் நகரக் கழக மாவட்ட பிரதிநிதி திருமதி.R.தீபா அவர்களின் கணவர் திரு.R.ரமேஷ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம், சங்கர்நகர் பேரூர் கழக செயலாளர் திரு.P.மாரியப்பன் அவர்களின் தந்தை திரு.பழனி (எ) ஆசாத் பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை மாநகர் வடக்கு, கோவை மேற்கு, மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டக் கழகங்களின் செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அதே நேரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.K.சீனிவாசன் அவர்களின் தந்தை திரு. கந்தசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.S.குருமூர்த்தி அவர்களின் சகோதரர் மகனும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கல்லூரி பகுதி, 19வது வட்டக் கழக செயலாளர் திரு.S.தெட்சிணாமூர்த்தி அவர்களின் மகனுமான திரு.D.மகேஸ்வரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய பாரா நீச்சல் போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 34 தங்கம், 40 வெள்ளி உட்பட 88 பதக்கங்களைக் குவித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளிலும் பதக்கங்களை வென்று தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கும் வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை உயர்த்த மத்திய அரசு நிராகரித்திருப்பதாகத் தகவல் – தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்தி அறிவித்திட வேண்டும்.டெல்டா உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை முறையாகவும்,முழுமையாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்ற புகார் எழுந்த நிலையிலும், கொள்முதல் நிலையங்களிலும் போதுமான இடவசதியின்றி திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் தொடர் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் அளித்திருக்கும் பரிந்துரையின் படி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவு அதிகரிக்கும் என நம்பியிருந்த தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு எடுத்திருப்பதாகக் கூறப்படும் இந்த முடிவு வேதனையுடன் கூடிய ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழை வரும் நாட்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியம், எடவாக்குடி ஊராட்சிக் கழகம், கோட்டூர் கிளைக் கழக செயலாளர் திரு.சி.சாமிநாதன் அவர்களின் தந்தை திரு.சின்னையன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் கிழக்கு ஒன்றியம், கபிஸ்தலம் ஊராட்சிக் கழகம், இந்திரா நகர் கிளைக் கழக செயலாளர் திரு.T.ராஜேஸ்குமார் அவர்களின் தாயார் திருமதி.T.வெள்ளையம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.N.K.வத்சலா அவர்களின் மருமகன் திரு.பெனடிக் ராபி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.S.செந்தில் முருகன் நியமனம்.
தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் – கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளராக திரு.G.அன்புசெல்வம், கழக விவசாயப் பிரிவு துணைத்தலைவராக திரு.S.சரவணக்குமார், கழக நெசவாளர் அணி இணைச்செயலாளராக திரு.P.இனியபாரதி நியமனம்.
நாமக்கல் தெற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு C.இராஜேந்திரன் அவர்கள் நியமனம்.
திருத்தங்கல் கிழக்கு மற்றும் திருத்தங்கல் மேற்கு ஆகிய இரண்டு பகுதிக் கழகங்கள் திருத்தங்கல் பகுதி என ஒன்றிணைக்கப்படுகிறது.
விருதுநகர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சாத்தூர் கிழக்கு ஒன்றியக் கழகம் கழக அமைப்பு ரீதியாக சாத்தூர் கிழக்கு ஒன்றியம், சாத்தூர் தெற்கு ஒன்றியம் என இரண்டுடாக பிரிப்பு.
விருதுநகர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்.
திருவாரூர் ஒன்றியக் கழக செயலாளராக திரு.R.குமரேசன் அவர்கள் நியமனம்.
கோவை கிழக்கு மாவட்டம், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
பணிச்சுமையை அதிகரிப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்த வருவாய்த்துறை ஊழியர்கள் – பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பொதுமக்கள். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பணிச்சுமை அதிகளவில் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வருவாய்த் துறை சங்கங்களும் முழுமையாக புறக்கணித்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, பல்வேறுகட்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கைகையும் தமிழக அரசு மேற்கொள்ளாததே, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியிருப்பதாக ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே போல, உரிய திட்டமிடல் மற்றும் போதிய பயிற்சியில்லாமல் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் விடுமுறை தினத்தன்றும் கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதால் பணிச்சுமையோடு மன உளைச்சலும் அதிகரித்திருப்பதாக வருவாய்த் துறை ஊழியர்கள் தங்களின் வேதனையையும், ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர். கிராம உதவியாளர்கள் தொடங்கி, நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், வாட்டாட்சியர்கள் வரை அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களின் பணிகளை புறக்கணித்திருக்கும் நிலையில், மறுபுறம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளோடு அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி, அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க மாநில தோட்ட தொழிலாளர்கள் (தேயிலை) பிரிவு துணைச்செயலாளர் திரு.P.பாலு அவர்களின் மகன் திரு.B.சிவக்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் – நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மா பாளையத்தில் சுமார் 800 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வளாகத்தில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தின் வளர்ச்சியோடு, உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும் என்பதால் ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தை வரவேற்ற அப்பகுதி மக்களுக்கு, தற்போது நடைபெற்றுவரும் ஆபத்து நிறைந்த சாயப்பட்டறை ஆலை அமைக்கும் பணி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, பெருந்துறை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நீர்நிலைகள் மட்டுமல்லாது நிலத்தடி நீர்மட்டமும் கடுமையாக பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சேலத்தில் அமையும் இந்த சாயப்பட்டறை ஆலைகளால் அம்மாவட்டத்தின் ஒட்டுமொத்த நீர் ஆதாரமும் மாசடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டம் மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்நிலைகள், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நாடும், நாட்டு மக்களும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதற்காக சுதேசியத்தைக் கட்டியெழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்ச் சமூகத்தின் நல்வாழ்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதருமான செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞராக, எழுத்தாளராக, தொழிற்சங்க தலைவராக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையையும், அவர்கள் கொண்டுவந்த கொடூரமான சட்டங்களையும் எதிர்த்து இறுதிவரை போராடி உயிர்நீத்த தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் பன்முக ஆற்றலையும் தியாக உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த பேருந்து மதீனா நகரின் அருகே விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 42 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. புனிதப் பயணத்தின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.E.பாலாஜி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விடுவிப்பு: கழக அமைப்புச் செயலாளர் திரு.S.K.தேவதாஸ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.சிங்காரம், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியக் கழக செயலாளர் திரு.R.மணிகண்டன் (எ) திருமாறன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.
விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம், அச்சந்தவிர்த்தான் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.D.பழனி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு எனது மனமார்ந்த தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை மற்றும் நடுநிலைத்தன்மையை அடிப்படையாக கொண்டு ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் பெரும்பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரின் அரும்பெரும் பணிகள் மென்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அன்னவாசல் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் திரு.கங்காதரன்(எ)சதீஸ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மேகதாது அணை விவகாரத்தில் வேகம் காட்டும் கர்நாடக அரசு – தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எந்த பாரபட்சமுமின்றி அனைத்து வகையிலும் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தயாரித்து சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வஞ்சித்து வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தன் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே, காவிரியின் அடிமடைப்பகுதியில் பல அணைகளை கட்டியிருக்கும் கர்நாடக அரசு, தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் கடைமடை பகுதியான தமிழகத்தின் விவசாயிகளுக்கு காவிரி நீர் என்பது காணல் நீராக மாறிவிடும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்வதோடு, வலுவான வாதங்களை முன்வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அன்பின் வடிவமாக, மகிழ்ச்சியின் ஊற்றாக, கள்ளங்கபடமற்ற உள்ளங்களாக, எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழும் குழந்தைகளின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் இன்று. குழந்தைகளின் நல்வாழ்வுக்கும், சமச்சீரான வளர்ச்சிக்கும் இடையூறுகளாக இருக்கும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து, அன்பு மற்றும் அரவணைப்போடு, அவர்களின் எதிர்காலம் சிறக்க அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
மாநில மின்வாரிய தொழிலாளர்கள் – நிர்வாக பணியாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கம் பொருளாளர் திரு.A. சேகர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தீபாவளி போனஸாக வழங்கிய தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்வதா ? தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே,கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை – 15ஆம் தேதியுடன் நிறைவடையும் கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் உள்ளிட்ட 11 வகையிலான பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் 15 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறையின் காரணத்தாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையாலும் ஏராளமான விவசாயிகள் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.பயிர்காப்பீடு செய்வதற்கான அடங்கல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்க வேண்டிய வருவாய் நிர்வாக அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்களையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு தேர்வாகியிருக்கும் பிரபல கலை இயக்குநர் திரு. தோட்டா தரணி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மட்டுமல்லாது பிரெஞ்சு, இத்தாலியப் படங்களிலும் தன்னுடைய கலைத் திறனால் அளப்பரிய பங்காற்றிய திரு. தோட்டா தரணி அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில் கீழ்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனம்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் திருப்போரூர் பேரூர் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
சிவகங்கை மாவட்ட நாட்டரசன்கோட்டை பேரூர் கழக செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் நியமனம்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் மற்றும் செயலாளர் நியமனம்.
கடலூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் நெய்வேலி நகரிய கழகத்தின் நிர்வாக வசதிக்காக நெய்வேலி வடக்கு நகரியம், மற்றும் நெய்வேலி தெற்கு நகரியம் என இரண்டு நகரியக் கழகங்களாக பிரிப்பு.
கடலூர் மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பண்ருட்டி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், பண்ருட்டி நகரக் கழக செயலாளர், நெய்வேலி வடக்கு மற்றும் தெற்கு நகரியக் கழக நிர்வாகிகள், மேல்பட்டம்பாக்கம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
டெல்லி செங்கோட்டை அருகே கார்வெடிப்பு ஏற்பட்ட சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இத்தகைய கோர சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா? என்பது தொடர்பாக விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறேன்.
கேரள போக்குவரத்துத்துறையின் சாலைவரி விதிப்பு மற்றும் அபராத நடவடிக்கையால் ஆம்னி பேருந்து உரிமையாளகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு – பயணிகளின் நலன்கருதி ஆம்னிபேருந்துகளின் சேவை தடையின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்திற்கு சென்ற தமிழ்நாடு பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் அம்மாநில போக்குவரத்து துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 70 லட்சம் ரூபாய் அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநிலச் சாலைவரிகளை செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக கூறி கேரள அரசு மேற்கொண்டிருக்கும் இந்த திடீர் நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவையை முழுமையாக முடக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. சுவாமி ஐயப்பனை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கேரளத்தை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கியிருக்கும் நிலையில், ஆம்னிபேருந்துகள் வேலைநிறுத்தம் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு என தனி வகையிலான பெர்மிட் (Permit) இல்லாத காரணத்தினால் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்துகளை இயக்குவதிலும், விபத்துக்கள் ஏற்படும் போது இன்சூரன்ஸ் கோரி விண்ணப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருப்பதாக ஆம்னிபேருந்து உரிமையாளர்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளனர். ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும், அதனால் பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் விடுத்திருக்கும் தனி பெர்மிட் (Permit) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்திட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் திருமதி.R.பத்மினி அவர்களின் கணவர் திரு.ராஜகோபால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கடலூர் கிழக்கு மாவட்ட துறைமுகம் பகுதிக் கழக அவைத்தலைவர் திரு.C.முனுசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கோவையில் இளம்பெண் கடத்தப்படுவது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் – தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர்;பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஆண்நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மீண்டும் ஒரு இளம்பெண் கடத்தப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் பெண்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரதான சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அடியோடு கேள்விக்குறியாக்கியிருப்பதோடு, காவல்துறை என்று ஒன்று உள்ளதா ? என்ற கேள்வியைப் பொதுமக்கள் அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது. எனவே, இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாரைத் தீவிரமாக விசாரித்து தொடர்புடையவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு,காவல்துறையின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நாமக்கல் வடக்கு மாவட்டம், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.K.முருகேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமல்லாது பொதுமக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைக்கும் தமிழக அரசின் முடிவு அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எனப் பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறியும் மருத்துவக் கழிவு ஆலையை அமைக்க முயற்சிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, பிசானத்தூர் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றியம், முல்லங்குடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.D.ராஜேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.த.உருளாச்சி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் அவர்களின் ஜெயந்தி விழாவை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, இரக்கம், உண்மை, சகோதரத்துவம் ஆகியவற்றோடு மனிதக்குலத்திற்கும் வழிகாட்டும் ஒளியாகத் திகழும் குருநானக் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வளமும் ஒற்றுமையும் நிறைந்த சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தீவிர பற்றாளரும் எனது நீண்டகால நண்பரும் ஒரு மூத்த சகோதரராக பல்வேறு கால சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஓய்வு பெற்ற அரசு கூடுதல் செயலாளரும் வழக்கறிஞருமான திரு.இசக்கி முத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. திரு.இசக்கி முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கோவை விமான நிலையம் அருகே அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி – கொடூரச் செயலில் ஈடுபட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது ஆண் நண்பர் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் கோவை சர்வதேச விமான நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் பெரும் அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகளைக் கடுமையாக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும், இதுபோன்ற கொடூரச் செயல்கள் தொடர்வது, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, அடையாளம் தெரியாத கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது நண்பருக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தேனி வடக்கு மாவட்டம், கம்பம் ஒன்றியம், சாமுண்டிபுரம் கிளைக் கழக அவைத்தலைவர் திரு. S.பொன்ராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் மத்திய மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம், கன்னக்குடும்பட்டி கிளைக் கழக செயலாளர் திரு. K.அய்யனார் அவர்களின் தந்தை திரு.கணபதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு. அ.கிருஷ்ணசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சட்டவிரோத கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் : அறப்போர் இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருநெல்வேலியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் அதிர்வு, சரிந்து வரும் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் காற்று மாசு குறித்து கருத்து தெரிவிக்க நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அக்கூட்டத்தைக் கலைக்கத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கருத்துக் கேட்புக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் அத்துமீறிநடந்து கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும்,அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும், மக்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றியும், சாதனையும் மேன்மேலும் தொடர மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் பூவந்தி திரு.M.இரமேஷ் கண்ணன் அவர்களின் தந்தை திரு.V.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நாடு சுதந்திரமடைந்த பிறகு தமிழ்நாடு தமிழருக்கே என்ற தொடர் முழக்கம் மற்றும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு உட்பட மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் இன்று. சாதி, மத, இன வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு பாடுபட்டு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தஞ்சை பெருவுடையார் கோயில் எனும் அதிசயமிக்க வரலாற்றுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய மாமன்னரும், தனது பொற்கால ஆட்சியின் மூலம் சோழ சாம்ராஜ்யத்தின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழா இன்று.சோழநாட்டுப் பகுதியைச் செழுமையாகவும், வலிமையாகவும் உருவாக்கியதோடு, ஆட்சிமுறை, இராணுவம், கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மலைக்க வைக்கும் சாதனைகள் புரிந்த மாமன்னர் ராஜராஜசோழனின் வீரத்தையும், ஆளுமைத் திறனையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். அதே நேரத்தில், வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும் தஞ்சை சோழர் அருங்காட்சியகப் பணிகளை விரைவுபடுத்துவதோடு, தமிழ் வளர்த்த மாமன்னன் ராஜராஜசோழனின் பெயரைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூர் கழக செயலாளர் திரு.P.தனுஷ்கோடி அவர்களின் தந்தை திரு.பெருமாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழக துணைச்செயலாளர் திருமதி.M.சிவகாமி அவர்களின் தாயார் திருமதி.இ.செல்லம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.160 கோடி முறைகேடு புகார் – விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்கள், அரவைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தில் சுமார் 160 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல டன் ஒன்றுக்கு 598 ரூபாயை வாடகை கட்டணமாகத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்த நிறுவனங்கள் 186 ரூபாய் மட்டுமே தங்களுக்கு வழங்குவதாக லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அதோடு, நெல் கொள்முதல் செய்யப்பட்ட 48 மணிநேரங்களில் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், 30 முதல் 40 நாட்களாகக் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே,தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட லாரி போக்குவரத்து ஒப்பந்தத்தின் மீது எழுந்திருக்கும் முறைகேடு புகாரை விசாரிப்பதோடு, விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று.
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் – பாதிப்புக்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்களும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், 33 சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு அடைந்த பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.விதை நெல்லில் தொடங்கி உரம் தெளித்தல், வாடகை இயந்திரங்கள் என ஒரு ஏக்கருக்கு சுமார் 36 ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில், அரசு வழக்கமாக அறிவிக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதோடு, நடப்பாண்டில் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் அதிகரிக்க வேண்டும் எனக் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சதவிகிதத்திற்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடை வழங்குவதோடு, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி பயிர்க்காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தென் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரை முன்னின்று நடத்தியவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வணங்கிய தேசியத்தலைவருமான தென்னாட்டு போஸ் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் குருபூஜை இன்று. தமிழகம் உயர, தமிழ்ச் சமூகம் வளர தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, சுயவாழ்விலும், பொதுவாழ்விலும் தூய்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக வாழ்ந்து வரலாறு படைத்த அப்பழுக்கற்ற மாமனிதர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் மக்களுக்கு ஆற்றிய சேவையைப் போற்றி வணங்கிடுவோம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் – தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது. எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாவீரர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை -கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய விடுதலைக்கான முதல் போரை மக்கள் பங்களிப்போடு முன்னெடுத்த மாமன்னர்களும், சிவகங்கை சீமையை மீட்டெடுக்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்த விசுவாசமிக்க போர்ப்படைத் தளபதிகளுமான மாவீரர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை இன்று. தென்னிந்தியாவில் தங்களை எதிர்க்க யாருமில்லை எனக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்த சிவகங்கை சீமையின் வேங்கைகளான மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
பெரும்பாக்கம் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கியிருப்பதாகப் புகார் – விரிவான விசாரணை மேற்கொண்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய கபடி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவைச் சேர்ந்த அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்திய கபடி அணியின் ஆண்கள் பிரிவில் திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த வீரர் அபினேஷ் அவர்களும், மகளிர் பிரிவில் சென்னை அடுத்த கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா அவர்களும் இடம்பெற்றிருந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த தாய்நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் இந்தியக் கபடி அணியின் வீரர் மற்றும் வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
கோவை மேற்கு மாவட்டம், ராமநாதபுரம் பகுதி 63வது வட்டக் கழக செயலாளர் திரு.K.சிங்காரவேலன் அவர்களின் தந்தை திரு.கந்தசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் மத்திய மாவட்ட விவசாயப் பிரிவு துணைத் தலைவர் திரு.P.வரதராஜ் அவர்களின் மனைவி திருமதி.V.கிருஷ்ணம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவு தினமான இன்று, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போரில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுக்கு உறுதுணையாக இருந்தவரும், சிவகங்கை பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயப் படைகளின் அடக்குமுறைக்குத் துளியளவும் அஞ்சாமல், தீரத்துடன் எதிர்த்து நின்று இறுதிவரை போரிட்டதோடு, தாய் நாட்டு மக்களைக் காக்கும் பணியிலும் மகத்தான பங்களிப்பை வழங்கிய தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தாய் நாட்டிலிருந்து அடியோடு விரட்டியடிக்க மக்களை ஒன்று திரட்டி புரட்சிக்கு அடித்தளமிட்டவர்களும், சிவகங்கையை ஆட்சி செய்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் விசுவாசமிக்க போர்ப்படை தளபதிகளாகவும் விளங்கிய மாவீரர்கள் மருது பாண்டியர்களின் நினைவுதினம் இன்று. மக்களோடு, மக்களாக வாழ்ந்து மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஆட்சியை வழங்கியதோடு, தாய் மண்ணையும், நாட்டு மக்களையும் காத்திட தங்களின் இறுதி மூச்சு வரை போராடி ஆங்கிலேயப் படைகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வீரத்தையும், துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் – காவிரி டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி நெல் அதிகளவில் விளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல் சாகுபடி மட்டுமல்லாது, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என பல லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நெல் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில், நெல்லை முழுமையாக கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதே, பல லட்சம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இரவு, பகலாக அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியிருப்பதோடு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் மழைநீரில் முழுமையாக மூழ்கியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்குவதோடு, விளைநிலங்களிலேயே மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தருமபுரி மாவட்ட விவசாயப் பிரிவு தலைவர் திரு.M.பழனிச்சாமி அவர்களின் தந்தை திரு.P.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரக் கழக பொருளாளர் திரு.K.ஜெயந்திரன் அவர்களின் தாயார் திருமதி.K.வள்ளியம்மை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு.M.மோகன்தாஸ் அவர்களின் மனைவி திருமதி.M.கயல்விழி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 38வது தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு.A.அப்துல்மஜித் அவர்களின் மகன் திரு.A. பினாத்தர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – உச்சநீதிமன்றத்தில் உரிய அதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேரள அரசின் உதவியுடன் கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற பொதுநல அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கலாம் என்பதோடு புதிய அணைகட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயலாம் என கருத்து தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வரும் கேரள அரசும், அம்மாநிலத்தின் சில அமைப்புகளும் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. முல்லைப்பெரியாறு அணை வலுவோடும், உறுதித் தன்மையோடும் இருப்பதாக ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்குழு தெரிவித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வழக்குகளை தொடர்வதோடு, பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் வதந்திகளையும் பரப்பி வரும் கேரளத்தின் சில அமைப்புகளின் செயல்பாடு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதோடு, பேபி அணை மற்றும் சுற்றிய பகுதிகளை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்ற பின்பும், முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு விஷமத்தனமானது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதோடு, தென்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வலுவான வாதங்களை முன்வைத்து கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியாக முடிவு கட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G. பொம்முராஜ் அவர்களின் தந்தை திரு.K.கோதண்டபாணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நாடு முழுவதும் மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இன்னுயிர் நீத்த காவலர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும், முன்னின்று தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த காவலர்களின் கடமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றிய நெய்வேலி தெற்கு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.நவனப்பன் அவர்களின் தாயார் திருமதி.அ.பாப்பம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.துளசி. செந்தில் அவர்களின் தந்தை திரு.வீ.துளசியப்பன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் தெற்கு ஒன்றியக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.அ. வினோத் அவர்களின் தந்தை திரு.R.அண்ணாதுரை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2025 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவாலயத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள். கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டம், கழுகுமலை பேரூர் கழக செயலாளர் திரு.P.பேச்சிமுத்து (எ) கோபி அவர்களின் தந்தை திரு.க.பேச்சி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.A.நரேந்திரன் (எ) மகேஸ்வரன் அவர்களின் தந்தை திரு.R.அன்புமணி வாணாதிரியர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவுநாளான 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள். கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளராக திரு.M.வில்விஜயன், கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச் செயலாளராக திரு.கராத்தே S.பாண்டியன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளராக திரு.V.V.கிரிதரன் நியமனம்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: மதுரவாயல் பகுதி மதுரவாயல் கிழக்கு பகுதி, மதுரவாயல் மேற்கு பகுதி, மதுரவாயல் மத்திய பகுதி மற்றும் மதுரவாயல் வடக்கு பகுதி என நான்கு பகுதி கழங்களாக மறுசீரமைக்கப்படுகிறது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம்:மாவட்டக் கழக துணைச்செயலாளர், மதுரவாயல் கிழக்கு பகுதி, மதுரவாயல் மேற்கு பகுதி, மதுரவாயல் மத்திய பகுதி, மதுரவாயல் வடக்கு பகுதி ஆகிய பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: திருப்புல்லாணி ஒன்றிய பிரிப்பு: திருப்புல்லாணி கிழக்கு, திருப்புல்லாணி மத்தியம் மற்றும் திருப்புல்லாணி மேற்கு என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: மண்டபம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் நியமனம்.
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: நயினார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மேற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூர் கழக நிர்வாகிகள், மயிலாடுதுறை வடக்கு மற்றும் மயிலாடுதுறை தெற்கு ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
வடசென்னை மேற்கு மாவட்டம்: அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு மற்றும் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிக் கழக நிர்வாகிகள் நியமனம்.
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மாணவ சமுதாயத்தின் நலன் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துவதாக கூறி, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்பதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயரும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது. மேலும், அறநோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வியாபாரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதோடு, தங்களின் பணிபாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர். எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
ராணிப்பேட்டை மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.S.ஜெகதீசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கடலூர் மாவட்டத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசின் சார்பாக உரிய நிவாரணத் தொகை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலை முரசு நாளிதழின் அதிபருமான மறைந்த திரு ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையின் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் உரிமைக்காகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடுபட்ட திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழக பாஜக தலைவரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவரும், பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு நல்லாட்சி தந்த மாமன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுதினம் இன்று. தூக்கு மேடையில் நின்ற போதும் என் தாய்மண்ணைக் காக்கவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதாகக் கம்பீரமாக முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் – விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியின்மை காரணமாக லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டா பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்குச் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விளைவித்த நெற்பயிர்களைக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்து தர தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட வேண்டிய சூழலுக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மகசூலுக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்களைத் திறக்காததும், ஏற்கனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தராததுமே லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைய முக்கிய காரணம் என டெல்டா பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இயற்கை பேரிடர்களையும், பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு விளைவித்த நெற்பயிர்கள் உரிய நேரத்தில் முழுமையாகக் கொள்முதல்செய்யப்படாததும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதும் காவிரி டெல்டா விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, பருவமழை தீவிரமடையத் தொடங்கியிருக்கும் நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு,தற்காலிக கொள்முதல் நிலையங்களை அமைத்துத் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முழுமையாகக் கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்காகவும், வல்லரசு நாடாக இந்தியா உருவெடுக்கவும், தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஏவுகணை நாயகர் குடியரசு முன்னாள் தலைவர் பாரத ரத்னா திரு ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அவர்களின் பிறந்த தினம் இன்று. கனவு காணுங்கள் என இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததோடு, எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தன் திறமையால் ஏற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து நாட்டு மக்களின் இதயங்களில் சிகரமாகக் குடியிருக்கும் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களின் தேசப்பற்றையும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றி வணங்கிடுவோம்.
கழகத்தின் மீதிருந்த அளப்பரிய பற்றால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதனைத் திறம்பட எதிர்கொண்டு, தான் சார்ந்த கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனது ஆருயிர் நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினம் இன்று. துரோகத்திற்கு எதிரான போரில் முதன்மை படைத் தளபதியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்பு நண்பர் திரு வெற்றிவேல் அவர்களின் நினைவு தினத்தில், நம் லட்சியப் பயணத்தின் இலக்கை அடைய நாம் அனைவரும் உறுதியேற்போம்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.P.ஆசைத்தம்பி அவர்களின் தாயார் திருமதி.P.பஞ்சம்மாள் (எ) அய்யம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தர்மபுரி மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.ஜெயராமன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், தித்தியேப்பனஹள்ளி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.மாதையன் அவர்களின் தந்தை திரு.P.மாது அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.R.சேட்டு அவர்களின் தாயார் திருமதி.R.பெருமாக்காள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு.T.N.மகேந்திர குமார் அவர்களின் தந்தை திரு.K.நல்லசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், கடுகபட்டு கிளைக் கழக செயலாளர் திரு.முத்து (எ) வைரமுத்து அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாகக் கிடைக்கும் வரை நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என முழங்கிய புரட்சியாளர் சே குவேரா அவர்களின் நினைவுதினம் இன்று. அநீதி எங்கே கண்டாலும் எதிர்த்து குரல் எழுப்பும் புரட்சியாளராக, விடுதலை உணர்வின் அடையாளமாக, எதற்கும் தலைவணங்காத தலைவராகப் போற்றப்படும் சே குவேரா அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக முழங்கியவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம்பெற அர்ப்பணித்த திரு இமானுவேல் சேகரனார் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரே நாள் இரவில் 47 தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குச் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டியதாகக் கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாள் இரவில் மட்டும் 47 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக மீனவர்களை எல்லை தாண்டுவதாகக் கூறி கைது செய்வதையும், சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கால், தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதார மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக அமையும் என்ற குரல் பரவலாக எழுந்திருக்கும் நிலையிலும், அதனை மீட்பதற்கான எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே இருப்பதே, தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக மீனவர்கள் எந்தவித அச்சுறுத்தலுமின்றி தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் ? – புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்க மறுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தேர்வுத் தேதியைத் தள்ளிவைப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தியே தீருவோம் எனப் பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நடப்பாண்டில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் கால அவகாசம் வழங்கிய பின்னர் தேர்வை நடத்த வேண்டும் எனத் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை ஒத்திவைப்பதோடு, புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாரான பின்னர் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசபாக்கம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.C.S.மணிகண்டன் அவர்களின் தந்தையார் திரு.C.சுப்பிரமணியன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் மண்டவாடி திரு.P.முருகேசன் அவர்களின் மாமனார் திரு.பழனிச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
I extend my heartfelt congratulations and best wishes to the Honourable Prime Minister of India, Shri Narendra Modi Ji, as he steps into his 25th year of dedicated leadership in public administration. With unwavering commitment to the welfare of the people, the security of the nation, and the growth of the economy, Shri Narendra Modi Ji has made an invaluable contribution to the progress of our country. I take this moment to wish for the continued success in his service to the nation. May his dedicated efforts lead India to greater heights.
தமிழ்நாடு அரசு கேபிளில் புதிய தலைமுறை தொலைக்காட்சி முடக்கமா ? – அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாகத் திகழும் ஊடகங்களைச் சுதந்திரமாக ஈடுபடத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு கேபிளில் புதியதலைமுறை தொலைக்காட்சியின் ஒளிபரப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி கடந்த ஐந்து நாட்களாக முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அன்றாட நிகழ்வுகளை எழுத்து வடிவமாகவும், ஒளிஒலி வடிவமாகவும் வழங்கி அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இணைப்பு பாலங்களாகச் செயல்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை முடக்க முனைவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதோடு, ஜனநாயகத்திற்கும் விரோதமானது ஆகும். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்கள், அதன் பணியில் சுதந்திரமாக ஈடுபட அனுமதிக்கும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப அரசு கேபிள் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகத் துணிச்சலுடன் ஆயுதம் ஏந்தி போராடிய பெண் போராளியும், வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் படைத்தளபதியுமான வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவுதினம் இன்று சிவகங்கையை மீட்க வீரமங்கை வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்ததோடு, தானே மனித வெடிகுண்டாக மாறி ஆங்கிலேயப் படைகளின் ஆயுதங்கிடங்குகளை அழித்தொழித்த வீரத்தாய் குயிலி அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
தூத்துக்குடி மாநகர் மாவட்டம், பிரையன்ட் நகர் பகுதி, 43வது வட்டக் கழக செயலாளர் திரு.D.ராஜேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் – மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (RTE) நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறை நேற்று தொடங்கியிருக்கும் நிலையில், அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெற்றோர்களைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் அலைக்கழிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு நிதி வழங்காததைக் காரணம் காட்டி தனியார்ப் பள்ளிகளில் இலவச சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்த தமிழக அரசால், ஏராளமான பெற்றோர்கள் தங்களின் சொந்த செலவிலேயே குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் பதிவு செய்து சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்ற அரசின் விதிமுறைகளைத் தனியார்ப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றாமல் தங்களைத் தொடர்ந்து அலைக்கழிப்பதாகப் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலவச கட்டாய கல்வி சேர்க்கைக்காக இதுவரை பெற்றோர்களே இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்துவந்த நிலையில், நடப்பாண்டில் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவே சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறும் மாணவர்கள் சேர்க்கை நடைமுறையை எளிதாக்குவதோடு, ஏற்கனவே பள்ளிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் திருமதி அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த், சகோதரர் L K சுதீஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்பி மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் திரு.S.சிவராஜா அவர்களின் சகோதரர் திரு.S.சக்திவிக்னேஷ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம், திருபுவனம் பேரூர் கழக மாவட்ட பிரதிநிதி திரு.D.இளங்கோ அவர்களின் தாயார் திருமதி.D.சந்திரா அம்மையார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் மத்திய மாவட்டம், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம், இராமுத்தேவன்பட்டி கிளைக் கழக செயலாளர் திரு.கு.கார்த்திகேய பாண்டியன் அவர்களின் தந்தை திரு.ம.குருசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் திருவுருவச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக, ஏழைப் பங்காளராக, எளியோரின் நண்பராக, உழைக்கும் வர்க்கத்தின் உற்ற தோழராகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்துவதால் அவருடைய புகழும், பெருமையும் துளியளவும் ஒருநாளும்குறையப்போவதில்லை. கோடான கோடி மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் செயல்படுத்திய சாதனைகளும், அமல்படுத்திய நலத்திட்டங்கள் அனைத்தும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவை ஆகும்.எனவே, இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா திரு ராமதாஸ் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பி மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் – மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் மீது நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்துவிதமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தபின்பும் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையால் அதிருப்தியடைந்த பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.பேரிடர் காலங்களில் தொடங்கி பெருந்தொற்று காலம் வரை தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அனைத்து உயிர்களையும் தம் உயிரைப் போல எண்ண வேண்டும் என்ற உயரிய கொள்கையைப் போதித்து, சாதி, மத, பேத வேறுபாடுகளைக் களைந்து சமரச சன்மார்க்கத்தை நிறுவியவருமான திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று. தருமச்சாலையை நிறுவி ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கியதோடு, தன்னை நாடி வருவோருக்கு ஆண்டவனை அடையும் அருளியலை மட்டும் போதிக்காமல், ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிக்க உபதேசித்த வள்ளலார் அவர்களின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டக் கழக செயலாளராக, திரு.V.ரெத்தினராஜ் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு:செங்கல்பட்டு தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் நிர்வாக வசதிக்காக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் பகுதிக் கழகங்கள் மறுசீரமைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள், வட்டம், வார்டு மற்றும் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் நகரம் மற்றும் நாகூர் நகரம் நிர்வாக வசதிக்காக “நாகப்பட்டினம் நகரம்” என ஒன்றிணைப்பு.
தலைமைக் கழக அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர், கீழையூர் மேற்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை பொருளாளராக திரு.P.ரவிச்சந்திரன்நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: மயிலாடுதுறை மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், செம்பனார்கோவில் மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், சீர்காழி நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைத் தலைவர் பொறுப்பில் திரு.P.சரவணன் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாதவரம் தெற்கு பகுதி 27 வட்டக்கழக செயலாளர் திரு.V.ஆறுமுகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கப்பலோட்டிய தமிழர் வ.உ சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் உற்ற தோழரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைத் தீரத்துடன் எதிர்த்துப் போராடிய விடுதலை போராட்ட வீரருமான சுப்பிரமணிய சிவா அவர்களின் பிறந்த தினம் இன்று. இலக்கியவாதி, இதழியலாளர், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்க போராளி என பல்வேறு நிலைகளில் சாதி, மத, பேதங்களைக் கடந்து அனைவரின் மத்தியிலும் விடுதலை வேட்கையை விதைத்த வீரமுரசு சுப்பிரமணிய சிவா அவர்களின் துணிச்சலையும், தேசப்பற்றையும் போற்றி வணங்கிடுவோம்.
மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், உயிர் பிரியும் நிலையிலும் தேசியக் கொடியைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்த தேசப்பற்று மிக்கவருமான கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆதிக்கம் நிறைந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக இளைஞர் படையைத் துணிச்சலுடன் வழிநடத்திச் சென்றதோடு, நாட்டின் சுதந்திரத்திற்காக இளம் வயதிலேயே தன்னுயிர் நீத்திட்ட உன்னதமிக்க விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் தியாகத்தை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழு, தன்னுடைய கால அவகாசம் முடிந்த பின்பும் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருப்பதை கண்டித்து அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் தங்களின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் ஓய்வூதியக் குழுவிடம் வழங்கிய நிலையிலும், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது எந்தவகையிலும் ஏற்க முடியாதது. காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல், இடைக்கால அறிக்கை எனும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஓய்வூதியக் குழு அடியோடு சீர்குலையைச் செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் முழு அறிக்கையை உடனடியாக பெறுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கிய கோரிக்கை மட்டுமல்லாது, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு ஒன்றியம், கட்டிக்குளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.கணேசன் அவர்களின் தாயார் திருமதி.இருளாயி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக செய்தி வெளியீடு:தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் மற்றும் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவுதினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர், நேர்மைக்கும் எளிமைக்கும் தலைசிறந்த அடையாளமாகத் திகழ்ந்த மாமனிதர் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று. சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய கடுமையான உழைப்பாலும், நாட்டின் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றாலும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த கிங் மேக்கர் காமராஜர் அவரின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக மக்களை ஒன்று திரட்டி, அகிம்சை வழியில் சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் நடத்தி வெற்றிகண்ட தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று. உலக அரங்கில் இந்தியர்களை சுயமரியாதையோடு தலைநிமிரச் செய்த சீர்திருத்தச் செம்மல் மகாத்மா காந்தி அவர்கள் கண்ட ஜாதி, மத பேதமற்ற லட்சிய இந்தியாவை உருவாக்கும் பயணத்தைத் தொடர நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிக்கான சாரம் சரிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திரையுலகமே வியக்கும் அளவிற்கு நடிப்பு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தனித்துவமிக்க உடல் மொழியாலும், உணர்ச்சிப்பூர்வ வசனத்தாலும் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் திரையுலகை ஆண்டதோடு, காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை கலையுலகத்திற்கு விட்டுச் சென்ற கலைத்தாயின் தவப்புதல்வன் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம், பரந்தூர் கிளைக் கழக செயலாளர் திரு.M.குப்பன் அவர்களின் தாயார் திருமதி.M.நவநீதம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில் இளம்பெண் ஒருவரை அவரது சகோதரியின் கண் முன்னரே காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த குரூரச் சம்பவம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்களால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் திரு.T.N.பிரபு அவர்களின் தாயார் திருமதி.நா.அபூர்வம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தாம்பரம் மேற்கு பகுதிக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.T.R.மதன் சங்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழக பா.ஜ.க வின் மூத்த தலைவரும், அன்பிற்குரிய சகோதரருமான திரு.H.ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.H.ராஜா அவர்கள் பூரண உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், அறிவார்ந்த செய்திகளின் மூலம் தமிழ் பத்திரிகை உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவருமான தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, சட்டப்பேரவைத் தலைவராக என பல்வேறு நிலைகளில் தமிழ் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சி.பா ஆதித்தனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் குறித்தான திரு சீமான் அவர்களின் அருவெறுக்கத்தக்க பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – மறைந்த தலைவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலான பேச்சை இனியும் தொடர்ந்தால் அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களாக, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த இருபெரும் ஆளுமைகளான பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. தமிழர் வாழ வேண்டும், தமிழர் பண்பாடு சிறக்க வேண்டும் என்ற அரும்பெரும் குறிக்கோள் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் குறித்தும், ஏழைகள் ஏழைகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் குறித்தும் திரு சீமான் அவர்களின் நாகரீகமற்ற பேச்சு தமிழக மக்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவார்ந்த கொள்கையின் மூலம் புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தின் தன்னிகரற்ற ஆளுமைகளாக திகழ்ந்த இருபெரும் தலைவர்களும் இயற்கையோடு இயற்கையாக கலந்து விட்டாலும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளும், அமல்படுத்திய திட்டங்களும் தமிழக மக்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைந்து இன்றளவும் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. எனவே, யார் மீதோ கொண்ட வன்மத்தை வெளிப்படுத்துவதாக எண்ணி, மறைந்த மாபெரும் தலைவர்கள் மீது நாகரீகமற்ற பேச்சுக்களின் மூலம் அரசியலில் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள திரு சீமான் அவர்கள் இனியும் முயலும் பட்சத்தில் அதற்கான எதிர்வினை தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன்.
திருச்சி தெற்கு மாவட்டக் கழக பொருளாளர் திரு.P.சரவணன் அவர்களின் தந்தை திரு.K.பிச்சை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின் படி வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பதாகப் புகார் – பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பதிவு செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கு மாறாக 30 சதவிகிதம் வரை வழிகாட்டி மதிப்பை வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரப்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவிடமிருந்தோ, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, வாய்மொழி உத்தரவு எனும் பெயரில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் வழிகாட்டி மதிப்பு உயர்வை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, ஏற்கனவே பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவரும், அன்பிற்குரிய நண்பருமான திரு ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு ஏ.சி. சண்முகம் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணி மற்றும் கல்விப் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி பீலா வெங்கடேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கொரோனோ பரவல் காலத்தில் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகத் திறம்பட பணியாற்றிய திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக அதிகாரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இலக்கிய அணி செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் திரு.M.நாகராஜ் அவர்களின் தந்தை திரு.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விடுவிப்பு: கடலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.B.K.மணிவண்ணன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
பாரம்பரியமிக்க தினத்தந்தி நாளிதழின் அதிபரும் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிய பெருமைக்குரியவருமான பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. பத்திரிகையாளராக, தொழிலதிபராக, கல்வியாளராக, விளையாட்டு வீரராக என தான் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து துறைகளிலும் பெரும் சாதனையாளராக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் ஆற்றிய பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல் – விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களாக எவ்வித முன்னறிவிப்பின்றியும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க போதிய இட வசதியில்லாத காரணத்தினாலும், அரசிடம் இருந்து நிதி கிடைப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைந்து நெற்பயிர்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனடியாக சீர்செய்து, விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நாடு முழுவதும் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரிக்குறைப்பு ஆவின் நிர்வாகத்தில் மட்டும் இன்னும் அமலுக்கு வராதது ஏன் ? – ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் பொருட்கள் முந்தையவரிவிதிப்பின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் நெய் கிலோ ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் வரையிலும், வெண்ணெய் சுமார் 40 ரூபாய் வரையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் சார்ந்த பொருட்கள் விலைகுறைப்பின்றி விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தில் காலதாமதமாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவே,ஜி எஸ் டி வரிக்குப்பை தமிழகத்தில் அமல்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பொதுமக்களுக்கு எந்தவித கால தாமதமுமின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஜி எஸ் டி வரிக்குறைப்பு இன்று முதல் அமல் – மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமைந்திருக்கும் மத்திய அரசின் ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகள், தனி நபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு முழுமையான வரி விலக்கு, சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்களுக்கு வரிக்குறைப்பு நான்கு அடுக்குகளாக இருந்த வரிவிதிப்பு நடைமுறை இரண்டு அடுக்குகளாக மாற்றம் உள்ளிட்ட ஜி எஸ் டி வரிவிதிப்பில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியது. பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் தீபாவளிப் பரிசாக ஜி எஸ் டி வரி குறைப்பில் புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
செங்கல்பட்டு மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.N.சக்திவேல் அவர்களின் தாயார் திருமதி. N. குட்டியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை – குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றிய கழக முன்னாள் இணைச்செயலாளர் மறைந்த திரு.இராம.சேகரன் அவர்களின் புதல்வர் திரு ராம்பிரகாஷ் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இந்த படுகொலைச் சம்பவம் அப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரு ராம்பிரகாஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
கடலூர் மேற்கு மாவட்டம்: சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
கடலூர் மேற்கு மாவட்டம்: கழகத்தில் இருந்து நீக்கிவைக்கப்பட்டிருந்த, திரு.B.K.மணிவண்ணன் (முன்னாள் சிதம்பரம் நகரக் கழக செயலாளர்) அவர்கள், இன்று முதல் கழக உறுப்பினராக இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்.
விழுப்புரம் கிழக்கு மாவட்டம்: மாவட்ட நெசவாளர் அணி செயலாளர், ஒன்றியம் மற்றும் நகரக் கழகங்களின் நிர்வாகிகள் நியமனம்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்: இலத்தூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்: தெள்ளாறு ஒன்றியம் – தெள்ளாறு கிழக்கு, தெள்ளாறு மத்தியம், தெள்ளாறு மேற்கு என மூன்று ஒன்றியங்களாக பிரிப்பு.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், வந்தவாசி சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
சிவகங்கை மாவட்டம்: தேவக்கோட்டை ஒன்றியம் – தேவக்கோட்டை கிழக்கு, தேவக்கோட்டை வடக்கு,தேவக்கோட்டை தெற்கு என மூன்று ஒன்றியங்களாக பிரிப்பு.
சிவகங்கை மாவட்டம்: சாக்கோட்டை ஒன்றியக் கழக செயலாளர், புதுவயல் பேரூர் கழக செயலாளர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக நிர்வாகிகள், கறம்பக்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
அரியலூர் மாவட்டம்: திருமானூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
திருவாரூர் மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
மயிலாடுதுறை மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை துணைத்தலைவராக திரு.M. கலியபெருமாள், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச்செயலாளராக திரு.S.மாதவச்செல்வன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளராக திரு.N. முருகன் நியமனம்.
சீர்காழி அரசு தாய் சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு – கர்ப்பிணிப் பெண்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து குறித்து விரிவான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் தாய்சேய் நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும், பிரசவித்த தாய்மார்களுக்குச் செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி ஊசியால்அவர்களுக்கு திடீர் காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் உடல்நலக்குறைவிற்குக் காரணமாகக் கூறப்படும் நோய் எதிர்ப்பு மருந்தை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் அம்மருந்து விநியோகிக்கப் பட்டிருந்தால் அவற்றின் பயன்பாடுகளை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதைத் தமிழக சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய மேல் சிகிச்சை வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு தாய் சேய் நல மையங்களில் அனுமதிக்கப்பட்டிருப்போருக்கு வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் எனவும்சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு ரோபோ சங்கர் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ்த் திரையுலகில் தனித்துவமிக்க நடிகராகத் திகழ்ந்த திரு ரோபோ சங்கர் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைக்கலைஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தீண்டாமை எனும் கொடிய நோயை ஒழிப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவும், பொருளாதாரம் மேம்படவும் அயராது பாடுபட்டவருமான திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுதினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலை கிடைக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து அரும்பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
பிரபஞ்சத்தின் தெய்வீக கட்டமைப்பாளராக வணங்கப்படும் பகவான் விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழாவைப் பக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் விஸ்வகுல மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைவினைஞர்கள், கட்டடக் கலைஞர்கள், இயந்திர வல்லுநர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் என பல்வேறு கைவினை கலைஞர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ ஓம் விராட் விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழா, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது. கலைத்திறன், திறமை மற்றும் படைப்பு உணர்வின் கொண்டாட்டமாகக் கருதப்படும் விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழா, தொழிலாளர்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் விழாவாக அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
நேபாள கலவரத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பாதுகாத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு செந்தில் தொண்டைமான் அவர்களின் மனிதநேயமிக்க செயல்பாடு மிகுந்த பாராட்டுதலுக்குரியது. நேபாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குக் கலவரமாக உருவெடுத்த நிலையில், தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அப்பாவி பொது மக்களை தன் உயிரைப் பணயம் வைத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு செந்தில் தொண்டைமான் அவர்கள் காப்பாற்றியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வன்முறை வெறியாட்டத்தால் ராணுவக் கட்டுப்பாட்டையும் இழந்த நேபாளத்தில் வசிக்கும் மக்களும் நம்மில் ஒருவரே என்ற எண்ணத்தில் பொதுநலத்துடன் செயல்பட்ட திரு செந்தில் தொண்டைமான் அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சாதியக் கொடுமைகளை, சமுதாய பேதங்களை, பெண் அடிமைத் தனத்தை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி தந்தை பெரியார் அவர்கள் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
On behalf of Amma Makkal Munnettra Kazagam (AMMK), I most respectfully extend my heartfelt birthday greetings to the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji. Having taken charge as the Prime Minister for the third consecutive term, the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji is tirelessly striving to elevate our great nation to the stature of a global superpower. I earnestly pray to the Almighty that the Hon’ble Prime Minister Shri Narendra Modi Ji, be blessed with abundant health, long life, and the strength to continue his dedicated service to the people of India.
விருதுநகர் மத்திய மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் திரு.அ.முனீஸ்வரன் அவர்களின் தந்தை திரு.அடிமைசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய இளம் வீராங்கனை செல்வி வைஷாலி ரமேஷ் பாபு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates ) தொடருக்கு தேர்வாகியுள்ள கிராண்ட் மாஸ்டர் செல்வி வைஷாலி ரமேஷ்பாபு அவர்கள் மென்மேலும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினமான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு செலுத்தியதோடு, சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் இருந்து விளிம்பு நிலை மக்களுக்காக தொண்டாற்றிய திரு எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் அரும்பெரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றியம், தெற்கு தெரு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.மச்சக்காளை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டங்களில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் கிழக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.N.சுந்தரம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், மக்கள் நல அரசுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆளுமை, தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின்முகவரியாகத் திகழ்ந்த தென்னாட்டின் பெர்னாட்ஷா பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினம் இன்று.நாடக ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளராக தன் ஈடு இணையற்ற எழுத்தாலும், உணர்ச்சி பொங்கும் பேச்சாலும் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி, மனித சமுதாயத்தின் ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகத் திகழ்ந்த தனிப்பெரும் தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
தலைமைக் கழக அறிவிப்பு: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா: சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்! அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற 17.09.2025, புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, வட்ட, செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வாகியிருக்கும் தோழர் திரு மு.வீரபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் தமிழக மக்கள் நலன் சார்ந்த அரசியலைத் தொடர்ந்து முன்னெடுத்திட திரு மு.வீரபாண்டியன் அவர்களை இந்நேரத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா? – குறைவான விலையில் தரமான பருப்பு கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளியில் தமிழகத்திற்குத் துவரம்பருப்பு கிலோ ஒன்று ரூ88.50க்கு வழங்க முன்வந்திருக்கும் பருப்பு நிறுவனங்கள் குஜராத்திற்கு ரூ.81க்கு வழங்குவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலத்திற்கு ரூ.81க்கு துவரம் பருப்பை வழங்கும் நிறுவனங்கள் தமிழகத்திற்கு மட்டும் அதே துவரம்பருப்பை அதைவிட கிலோ ஒன்றுக்கு ரூ.7.50 கூடுதலாக வைத்து ரூ.88.50க்கு விற்பனை செய்ய முடிவு செய்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.60 ஆயிரம் டன் அளவிற்கான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பருப்பு நிறுவனங்கள் கூறியிருக்கும் தொகைக்குப் பருப்பைக் கொள்முதல் செய்தால் தமிழக அரசுக்கு சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பருப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி குஜராத் மாநிலத்திற்கு வழங்கும் அதே விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, தரமான துவரம்பருப்பைக் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு.S.ராகவன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் திரு.S.சூரன் அவர்களின் தாயார் திருமதி.S.சிகப்பி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சமூக தீண்டாமையை அடியோடு அகற்றப் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினமான இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனத் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை உலகமெங்கும் பறை சாற்றிய கவிஞரும், தன் எழுத்துக்களின் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் தூண்டிய சுதந்திரப் போராட்ட வீரருமான மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று. கவிஞராக, மொழிப் பற்றாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல்வேறு பரிமாணங்களிலும் தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை ஆகியவற்றை முன்னிறுத்தி காலத்தால் அழியாத புரட்சி கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
சமூக தீண்டாமையை அடியோடு அகற்றப் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனி இயக்கத்தைத் தொடங்கி, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தலைமைக் கழக அறிவிப்பு :கடலூர் மேற்கு மாவட்டம் : கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகரக் கழக செயலாளர் திரு.B.K.மணிவண்ணன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.E.முத்துக்குமார் அவர்களின் தந்தை திரு.R.எத்திராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. R.K. தரணி அவர்களின் தாயார் திருமதி.R.காசி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய மாண்புமிகு திரு.சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்திய திருநாட்டின் வளர்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சி தெற்கு மாவட்டம், வையம்பட்டி வடக்கு ஒன்றியம், தவளைவீரன்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு:கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
பீகாரில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய கோப்பை வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்களின் சாதனைப் பயணம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரிலும் நீடிக்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
முன்னாள் அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் அவர்களின் தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: திரு.இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் மரியாதை செலுத்துகிறார்கள்!
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்தொழித்த மாவீரருமான சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினம் இன்று. போர்க்களத்தில் ஆங்கிலேய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, தாய் மண்ணையும், மக்களையும் காத்திட தன் உயிரையும் துறந்து வீரமரணமடைந்த தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
நாமக்கல் வடக்கு மாவட்ட ராசிபுரம் கிழக்கு நகர இணைச்செயலாளர் திரு.K.சுகந்திகுமார் அவர்களின் தாயார் திருமதி.குமுதா வைரமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் நகரம், 14வது வார்டு கழக செயலாளர் திரு.J.சுகுமார் அவர்களின் தாயார் திருமதி.J.சின்னபாப்பா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காவல்துறை தலைமையக வாயிலில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையின் தலைமையகம் முன்பாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்குமான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
“நியாயத்திற்கு ஒரு மூக்கையா” என பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்டவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக மக்கள் பணியாற்றியவருமான உறங்காப்புலி திரு.P.K மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று… போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி, தென் தமிழக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டதோடு, நீதிக்கும் நேர்மைக்கும் சிறந்த அடையாளமாக திகழ்ந்த திரு P.K மூக்கையா தேவர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாநகர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.G.அருளழகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளையொட்டி கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை துணைத்தலைவர் ஆகியோர் நியமனம்.
அழிவில்லா செல்வமாம் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த இந்நாளில் கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொது அறிவு ஆகியவற்றையும் சேர்த்து போதித்து, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணியை இந்நாளில் போற்றி கொண்டாடிவோம்.
திருச்சி வடக்கு மாவட்ட சிறுகமணி பேரூர் கழக செயலாளர் திரு.A.தா்மலிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று… எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், தமிழறிஞர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதிமூச்சு வரை போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை போற்றி வணங்கிடுவோம்.
ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் இந்த திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மிலாது நபி வாழ்த்துகள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபியாக கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் உயர்குணம், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்று வாழ வேண்டும் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி உலகெங்கிலும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்
புதுக்கோட்டை மத்திய மாவட்டம், கறம்பக்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.RRT.முருகேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை கிழக்கு பகுதி 172வது வட்டக் கழக செயலாளர் திரு.V.வீரா(எ) வீரராகவன் அவர்களின் தாயார் திருமதி.V.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிபாடி பேரூர் கழக செயலாளர் திரு.S.பிரவீன் குமார் அவர்களின் தாயார் திருமதி.S.செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக இணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், காரியாபட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
நாகப்பட்டினம் மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், கீழையூர் மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்: லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையம் நகரக் கழக நிர்வாகிகள், அரியப்பம்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: பாபநாசம் கிழக்கு மற்றும் பாபநாசம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: கல்வித் தந்தை திரு.P.K.மூக்கயா தேவர் அவர்களின் நினைவு தினம்: உசிலம்பட்டியில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினமான இன்று, நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றும் வகையில் தமிழக மக்கள் மத்தியில் சுதந்திர வேள்வியை விதைத்த மாவீரர் பூலித்தேவர் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய வர்த்தக அணி இணைச்செயலாளர் திரு.செல்வகுமார் அவர்களின் தாயார் திருமதி.செந்தமிழ்செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் கோலோச்சிய ஆளுமைமிக்கத்தலைவரும்,பொதுவாழ்க்கையில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவு தினம் இன்று. ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் நலனுக்காகவும், பொதுச்சேவைக்காகவும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் மக்களுக்கும், நாட்டிற்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்து நிற்கும்.
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் – சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு,நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கால தாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு : இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு : சிவகங்கை மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூர் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு : மதுரை புறநகர் மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கொட்டாம்பட்டி ஒன்றியம் மறுசீரமைப்பு.
தேனி அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் படுகொலை – சட்டவிரோதச் செயல்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் சன்மானம் மரணம் தானா? தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையத்தில் கனிம வளக்கொள்ளைக்கு எதிராக போராடி வந்த இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தேனி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளை குறித்து பலமுறை தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அலட்சியமே திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைக்கு முக்கிய காரணம் என புகார் எழுந்துள்ளது. மணல் கடத்தல் மற்றும் கனிமவளக் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு புகார் அளிப்பவர்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையோ, திமுக அரசின் முழுநேர ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உயிர்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தலையும், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படும் கனிமவளங்களையும் தடுத்து நிறுத்தவோ, அது குறித்து புகார் அளித்தாலோ அதற்கான சன்மானம் மரணம் தான் என்பதையே அடுத்தடுத்து நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இயற்கை ஆர்வலர் திரு.சசிக்குமார் அவர்களின் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்தநாள் விழா: நெல்கட்டும்செவலில் கழக பொதுச்செயலாளர் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G.மகேஷ்வர ராஜா அவர்களின் தந்தை திரு.கோவிந்தராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் தங்குதடையில்லாத வெற்றி நிச்சயம் என்பதோடு, துன்பங்களுக்குக் காரணமான வினைகள் நீங்கி, அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்க்கை அமையும் என்பது மக்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை ஆகும். வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானை போற்றி வணங்கிடும் இந்நாளில் அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக, நெல்லை திரு.A.பரமசிவம் அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைத் தலைவராக, திருமதி.M.செல்வி நேதாஜி அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
கடலூர் வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர், புதுக்கோட்டை வடக்கு பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
அன்பு மற்றும் கருணையின் உருவாய், ஏழை, எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் உதவுவதையே அடிப்படைக் குணமாகக் கொண்ட மனிதம் போற்றும் புனிதர் அன்னை தெரசா அவர்களின் பிறந்த தினம் இன்று. ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே பிறந்து, தனது வாழ்நாள் முழுவதும் ஆதரவற்றவர்களை அரவணைத்து அன்பு செலுத்திய அன்னை தெரசா அவர்களின் சேவை மனப்பான்மையையும், தியாக உணர்வையும் அவர் பிறந்த இந்த நன்னாளில் போற்றி வணங்கிடுவோம்.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.முதுநிலை தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ரேவதி ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் பணியில் கடமை உணர்வுடன் ஈடுபட்டு தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் ஆசிரியர்கள் இருவரும் தங்களது கல்விப் பணியை மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் பத்மபூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்ததினம் இன்று. திரையுலகில் மட்டுமல்லாது அரசியலிலும் புரட்சிகரமான கருத்துக்களை எடுத்துரைத்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம்.
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய திரு.பாரிவேந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையான குடும்பத்தில் பிறந்து ஆசிரியராக தன்வாழ்க்கையை தொடங்கி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வியை உலகத்தரத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் திரு. பாரிவேந்தர் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தனது கல்விப் பணியையும், சமூகப் பணியையும் தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 10 ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.தளராத தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், தாய்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் இந்தியாவின் தங்கமகள் இளவேனில் வாலறிவன் அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
சென்னை கண்ணகி நகர் அருகே மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு – அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு. சென்னை கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கண்ணகி நகர் மட்டுமல்ல எழில்நகர், பெரும்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் சேதமடைந்திருக்கும் மின்சாரக் கம்பிகள் குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததே தூய்மைப் பணியாளர் உயிரிழக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பு என்ற கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி போராட்டத்தை கலைத்த திமுக அரசு, தற்போது தன் நிர்வாக அலட்சியத்தால் பறிபோன இந்த உயிருக்கு என்ன பதில் சொல்ல காத்திருக்கிறது? மேலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது என்பதை உணர்ந்து, மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்து அபாயகரமான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா ? – மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது. விருதுநகர் அருகே மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களிடம் காது, மூக்கில் தங்கம் அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாது என வருவாய்த்துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள் ஏளனமாகப் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தன்னிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் ஒருவரிடம், அம்மனுவை வாங்கி அவரின் தலையிலேயே அடித்த புகாருக்குள்ளான அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்கள், மகளிர் உரிமைத் தொகை கேட்டு வந்த பெண்களைத் தரக்குறைவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, தற்போது காது, மூக்கில் நகை அணிந்திருந்தால் ஆயிரம் ரூபாய் கிடையாது என அமைச்சரின் மூலம் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என வாக்குறுதியளித்துவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதும், இலவச பேருந்து என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரைத் தரக் குறைவாக விமர்சிப்பதும், மனு அளிக்க வருவோரை மதிக்காமல் அவமதிப்பதும் திமுகவின் அடிப்படை குணமான ஆணவப் போக்கையும், அதிகாரத் திமிரையுமே வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக மகளிரைத் தொடர்ந்து அவமதிப்பதையும், தரக்குறைவாக விமர்சிப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுகவினரை, ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போவது உறுதி என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் ராமேஸ்வர மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – மீனவர்கள் தானே என்ற அலட்சியம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது நிச்சயம்.இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 60க்கும் அதிகமான மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதோடு, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வைத்திருக்கும் இலங்கை கடற்படையின் அராஜகத்தால் ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. பத்து நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, மீன்பிடி தொழிலும் அடியோடு முடங்கியிருக்கும் நிலையில், மீனவர்களின் போராட்டம் தானே என்ற அலட்சியப் போக்குடன் திமுக அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் சுதந்திரமாக ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
தென்காசி வடக்கு மாவட்டம், ஆய்க்குடி பேரூர் கழக செயலாளர் திரு.G.மாரியப்பன் அவர்களின் மனைவி திருமதி.மா.செண்பகவல்லி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்தியாவின் முதல் நகராட்சி, உலகின் மிகத் தொன்மையான மாநகராட்சி, தமிழகத்தின் தலைநகரம் எனப் பன்முக பெருமைகளோடு ஒட்டுமொத்த உலகையும் பிரம்மிக்க வைக்கும் வரலாற்றுச் சிறப்புகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய சென்னை உருவான தினம் இன்று. படிப்பிற்காகவோ, பணிக்காகவோ தன்னை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையாக, ஏராளமான இளைஞர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, தொழில் முனைவோர்களின் தொடக்கப்புள்ளியாகத் திகழும் சென்னை உருவான இந்நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் போற்றிக் கொண்டாடுவோம். #ChennaiDay
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி வடக்கு மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூர் 8வது வார்டு செயலாளர் திரு.P.மலைச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருப்பூர் புறநகர் மாவட்டம், சூளேஷ்வரன்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு.A.ஷாஜகான் அவர்களின் மாமியார் திருமதி.M.ஷாரபா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.K.பூபதி அவர்களின் தந்தை திரு.கருப்பசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
கோவை கிழக்கு மாவட்டம், சூலூர் நகரக் கழக செயலாளர் திரு.S.T.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.S.P.தியாகராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தின் 21 அதிபரான கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகப் போற்றி பழமையும், பெருமைமிக்க காசி மடத்தின் 21வது அதிபராக ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் சமூக மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்திருக்கும்.
தமிழகத்தில் கிளர்த்தெழுந்த முதல் சுதந்திரப் போரின் தளபதி, ஆங்கிலேயப் படைகளை தனியொருவராகச் சென்று வீழ்த்திய மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்த மாமன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராகவும் திகழ்ந்த ஒண்டிவீரனின் வீரத்தையும் துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கக்கோரிப்போராடிய போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.15வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் தற்போது வரை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் வேறு வழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 152வது தேர்தல் வாக்குறுதியான போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஓட்டுநர், நடத்துநர் ஆட்சேர்ப்பு தொடங்கி அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு வரை போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, வாழ்நாளின் பெரும்பகுதியை போக்குவரத்துத்துறையில் பணியாற்றியே கழித்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை எந்தவித நிபந்தனையுமின்றிவிடுவிப்பதோடு, அவர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகரக் கழக செயலாளர் திரு.N.R.அரிராஜன் அவர்களின் தாயார் திருமதி.N.இராஜேஸ்வரி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சேலம் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.K.சண்முகம் அவர்களின் தாயார் திருமதி.க.தங்கவள்ளி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் திரு.A.ஞானசேகர் அவர்களின் மாமியார் திருமதி.S.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையைக் கைவிட்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்து பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தற்போதுவரை அவற்றை நிறைவேற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.ஆட்சிப்பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மின்வாரிய மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருமே போராடிக் கொண்டிருப்பது திமுக அரசு நிர்வாகத்தின் படுதோல்வியையே வெளிப்படுத்துகிறது.சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவிக் கலைத்துவிட்டு, உடனடி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அறிவிப்புகளை வெளியிட்டு திமுக அரசு நடத்திய நாடகத்தை மதுரையிலும் அரங்கேற்ற நினைத்தால் அதற்கான எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதையே இலக்காக நிர்ணயித்து இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் மாண்புமிகு திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் குடியரசு துணைத் தலைவராகத் தேர்வாகி மக்கள் பணியைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களின் சிற்றன்னைதிருமதி.செல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. சிற்றன்னையை இழந்துவாடும் சகோதரர் திரு. தொல் திருமாவளவன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு இல.கணேசன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.கண்ணியமிக்கத் தலைவராகத் திகழ்ந்த மாண்புமிகு திரு.இல கணேசன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினராக திரு.மாகாணம் சதீஷ் (எ) S.சுவாமிநாதன் அவர்களும், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைத்தலைவர்பொறுப்பில் திரு.க.அஜித் (எ) முத்துக்குமார் அவர்களும் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் மேற்கு பகுதி 104வது மேற்கு வட்டக் கழக அவைத்தலைவர் திரு.M.சங்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கரம்பக்குடி பேரூர் 13வது வார்டு கழக செயலாளர் திரு.P.செந்தில்குமார் அவர்களின் சகோதரர் திரு.P.ஜெய்சங்கர் அவர்கள் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கிருஷ்ண ஜெயந்தி திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான், எனது என்ற பற்றை நீக்கி இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் கருதுவதோடு, கடமைகளைச் சரிவரச் செய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலைநிறுத்தி மனிதகுலம் மேம்பட நாம் அனைவரும் உறுதியேற்போம். உலகம் போற்றும் ஒப்பற்ற நூலான பகவத்கீதையை அருளிய கிருஷ்ண பகவான் பிறந்த இந்நாளில் மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வடசென்னை மத்திய மாவட்டம்: வடசென்னை மத்திய மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: இராமநாதபுரம் நகரக் கழகம் ஒன்றிணைப்பு, இராமநாதபுரம் நகரக் கழக செயலாளராக திரு.J.R.P.மணிகண்டன் அவர்கள் நியமனம்.
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளராக திருமதி.S.பசுபதி அவர்கள் நியமனம்.
கோவை வடக்கு மாவட்டம்: எஸ்.எஸ்.குளம் ஒன்றியம்,இடிகரை பேரூர் மற்றும் சிறுமுகை பேரூர் நிர்வாகிகள் நியமனம்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
வடசென்னை கிழக்கு மாவட்டம்: வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் மற்றும் துணைச்செயலாளர், இராயபுரம் கிழக்கு மற்றும் இராயபுரம் மேற்கு பகுதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
வடசென்னை கிழக்கு மாவட்டம்:இராயபுரம் பகுதிக் கழகம், இராயபுரம் கிழக்கு பகுதி, இராயபுரம் மேற்கு பகுதி என இரண்டு பகுதிக் கழகங்களாக பிரிப்பு.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதிக்கக் கொடுமையிலிருந்தும் அந்நிய பிடியிலிருந்தும் இந்தியத் திருநாட்டை விடுவிப்பதற்காகவும், மக்களின் பிறப்புரிமையாம் சுதந்திரத்தை அடைவதற்கும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாட்டுப்பற்றையும், தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம். நம் முன்னோர்கள் நமக்காகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதோடு, சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட இந்நாளில் உறுதியேற்போம்.
தீர்வு எட்டப்படாமலே முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் – வாழ்வாதாரத்திற்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கிய திமுக அரசின் ஈவு இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வந்த அறவழி தொடர் போராட்டம் தீர்வு காணப்படாமலேயே திமுக அரசின் காவல்துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. சென்னை மாநகரின் தூய்மையைப் பேணிக்காப்பதிலும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதிலும் பெரும்பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற திமுகவின் 285வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.சென்னை ரிப்பன் மாளிகையின் வாயிலில் வாழ்வாதாரத்திற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவைத் தடுத்து நிறுத்தியதோடு, மாநகராட்சியின் கழிவறைகளைக் கூட பயன்படுத்த அனுமதி மறுத்த திமுக அரசு, காவல்துறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது ஆணவப்போக்கின் உச்சபட்சமாகும்.அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கட்டாயப் படுத்தியிருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தேர்தலுக்கு முன்பாக வழங்கிய 285வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது. திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு அவர் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026-சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுபடுத்திடும் வகையில் மதுரை மாநகர் வடக்கு மாவட்டதிற்குட்பட்ட “மதுரை வடக்கு” மற்றும் “மதுரை மேற்கு” சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
உசிலம்பட்டி 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் – வைகை அணையிலிருந்து நிரந்தரமாகத் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் என ஒட்டுமொத்த மக்களும் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் கால் நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற 58 கால்வாய் திட்டத்தின் கீழ் வைகை அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பாதிக்கப்பட்டிருப்பதோடு, நிலத்தடி நீர் சரிந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தால் மட்டுமே 58 கால்வாய் மதகு பகுதியைத் திறக்க முடியும் என்ற நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவால் ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்குத் தேவையான நீரைப் பெற பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, உசிலம்பட்டி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் வைகை அணையிலிருந்து உடனடியாக தண்ணீர் திறப்பதோடு, ஆண்டுதோறும் உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பதற்கான அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து சாலை பராமரிப்பு பணிகளையும் தனியார் மயமாக்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தோர் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக எடுத்துக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனில்லாத நிலையில், வேறு வழியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து பத்து நாட்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், மறுபுறம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து எங்களது முழு ஆதரவைத் தெரிவித்தோம். 12 நாட்களைக் கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, மேலும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். <a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a>
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய சுரைக்காயூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.ஆ.மகேஸ்வரன் அவர்களின் தந்தை திரு.உ.ஆறுமுகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பாடநூல்களை நிறுத்துவதா? – தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு வருடந்தோறும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த தமிழ்ப் பாடநூல்கள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிதி நெருக்கடி எனக் கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவால் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்காலம் நடைபெற்று வருவதாக மேடைதோறும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை கூட விலையில்லாமல் வழங்க மறுத்திருப்பது தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலமைச்சரின் புகழ்பாடவும், அவர் செல்லும் இடங்கள் எல்லாம் விளம்பரம் செய்யவும் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்யும் போதெல்லாம் ஏற்படாத நிதி நெருக்கடி, அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் போது மட்டும் ஏற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வழக்கம் போல அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி 98வது மேற்கு வட்டக் கழக செயலாளர் திரு.G.தனசேகர் அவர்களின் தந்தை திரு.கோபால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலைமுரசு நிறுவனருமான திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலைமுரசு நிறுவனருமான திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று. தந்தையின் வழித்தடத்தைப் பின்பற்றி தமிழ் மீதும் தமிழக மக்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டு பத்திரிகை உலகின் ஜாம்பாவானாக திகழ்ந்த திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
பெரம்பலூர் மாவட்ட செந்துறை தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.C.ராஜமாணிக்கம் அவர்களின் தந்தை திரு.K.சின்னத்தம்பி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாக நீடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் – பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி வடக்கு மாவட்டம், கடையநல்லூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.ம.குழந்தைராஜா அவர்களின் தந்தை திரு.S.மருதையா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் திரு.S.M.ஷேக் அலாவுதீன் அவர்களின் தந்தை திரு.முகமது அலி ஜின்னா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு.இல.கணேசன் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு:கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 19.08.2025, செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணியளவில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள T.S.வசந்தம் மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026-சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில், இரண்டாம் கட்டமாக கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம்: மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற தலைவராகவும், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளரகாவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மற்றும் கறம்பக்குடி மேற்கு ஆகிய ஒன்றியங்களின் சார்பு அணி செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கபடுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம்: மாவட்ட துணைச்செயலாளராகவும், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், கீழ்வேளூர் தெற்கு மற்றும் கீழையூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தென்காசி வடக்கு மாவட்டம்: வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்: கீழ்பென்னாத்தூர் மத்திய ஒன்றியக் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கபடுகிறார்கள்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்: மாவட்டக் கழக அவைத்தலைவராகவும், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்களாகவும், ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணிகளின் செயலாளர்களாகவும் மற்றும் நகர, பேரூர் வார்டு கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கபடுகிறார்கள்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கடலூர் வடக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நியமனம்
பசுமைப் புரட்சியின் சிற்பி எனப் போற்றப்படக்கூடியவரும், உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்தவருமான வேளாண் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பிறந்த தினம் இன்று. நாட்டின் முதுகெலும்பான வேளாண் உற்பத்தியிலும், ஆராய்ச்சியிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்த விஞ்ஞானி திரு.எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டம், காசிபாளையம் பகுதி, 57வது வட்டக் கழக செயலாளர் திரு.பொன் குப்புசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தேனி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.M.முத்துச்சாமி அவர்களின் சிறிய தகப்பனாரும், சின்னமனூர் மேற்கு ஒன்றியம், பூலானந்தபுரம் கிளைக் கழக இணைச்செயலாளருமான திரு.மு.சின்னச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவா ? – சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை திடீரென குறைக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உயர்கல்விக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் பேராசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கான ஊதியத்தையே உரிய நேரத்தில் பெறமுடியாமல் ஒவ்வொரு மாதமும் போராடி வரும் நிலையில், தற்போது அந்த ஊதியத்தையும் குறைக்க முடிவு செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான பணப்பலன்களையும் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் ஒருபுறம் ஊதிய உயர்வு கேட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே,சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, அப்பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு நிதியை ஒதுக்கி அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களைக் களையத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது. காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
திருப்பூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை – தன் துறையைச் சார்ந்த காவல் உதவி ஆய்வாளரைப் பாதுகாக்க முடியாத முதலமைச்சரால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும்? திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் மாந்தோப்பு காவலாளி படுகொலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை எனக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புவதோடு, திமுக அரசின் மீதும் அதன் காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. எனவே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 09.08.2025, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, அயனாவரத்தில் அமைந்துள்ள SMB மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத்தொகுதியை சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை மேற்கு பகுதிக் கழக இணைச்செயலாளர் திரு.M.ஏழுமலை அவர்களின் தாயார் திருமதி.M.ரங்கநாயகி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விழுப்புரம் தெற்கு மாவட்டம், காணை வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.அண்ணாதுரை அவர்களின் மனைவி திருமதி.விஜயா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவால் கேள்விக்குறியாகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் – தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இளைக்கும் அநீதியாகும். வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக குவைத் மண்டல வர்த்தக அணி செயலாளர் திரு.மு.வேலுச்சாமி அவர்களின் தந்தை திரு.ஆ.முனியசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றியம், அத்தியூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.R.தெய்வசிகாமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 06.08.2025, புதன்கிழமையன்று மாலை 4 மணியளவில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள PP மஹாலில் நடைபெறவுள்ளது. – தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அணி நிர்வாகி திரு.விஸ்வேஸ்வரன் அவர்களின் தாயார் திருமதி.உமா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களுக்கு, அந்தந்த கழக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -டிடிவி தினகரன், கழக பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
சங்க காலத்தில் கொடையில் சிறந்து விளங்கிய கடையேழு வள்ளல்களில் ஒருவரும், கொல்லிமலையைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான வல்வில் ஓரியின் பெருவிழா இன்று. தனது வில் ஆற்றலாலும், ஈடு இணையற்ற கொடைத் தன்மையாலும் வரலாற்றில் எந்நாளும் நிலைத்து நிற்கும் வள்ளல் வல்வில் ஓரியின் புகழையும், பெருமையையும் போற்றிக் கொண்டாடுவோம்.
இந்திய விடுதலைப் போரில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கிப் போராடிய மாவீரரும், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை எனப் போற்றப்பட்ட மாமன்னருமான தீரன் சின்னமலை அவர்களின் நினைவுதினம் இன்று. தேசத்தின் விடுதலைக்காக இளம் வயதிலேயே போர் வீரராக உருவெடுத்து தன் இறுதி மூச்சு வரை ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரத் தமிழர் தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் இந்நாளில் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.P.கருத்தப்பாண்டியன் அவர்களின் தந்தை திரு.பூச்சித்தேவர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகிய ஆளுமைகளின் பேரன்பிற்குரியவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் புதல்வர் திரு.மதிவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மதிவாணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின விவசாயி மர்ம மரணம் – விசாரணை எனும் பெயரில் இன்னும் எத்தனை உயிரைப் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறது திமுக அரசு?வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.மாரிமுத்து அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஜூலை 29ஆம் தேதி புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திரு.மாரிமுத்து அவர்கள், குளியலறையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் அறிவித்த வனத்துறை, தற்போது வனச்சரகர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்திருப்பது முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ளது. மன தைரியமிக்க திரு.மாரிமுத்து அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும், விசாரணை எனும் பெயரில் வனத்துறையினரின் துன்புறுத்தலால் உயிரிழந்திருக்கலாம் எனக்கூறி மலைக்கிராம பழங்குடி மக்களும், பல்வேறு அமைப்பினர்களும் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</strong> திருப்புவனம் அருகே கோயில் காவலாளி திரு.அஜித்குமார் அவர்கள் காவல் விசாரணை எனும் பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, உடுமலை அருகே நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, இவ்வழக்கு தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, திரு.மாரிமுத்து அவர்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்பட்டது உறுதியாகும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் பார்க்கிங் திரைப்பட குழுவினருக்கும், அத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் சிறந்த உறுதுணை நடிகர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வாத்தி திரைப்படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு.ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட தேசிய விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களின் திரைப்பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, கரூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.P.S.N. தங்கவேல் அவர்களின் தாயார் திருமதி.N.ராசம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: மன்னர் தீரன் சின்னமலை நினைவு தினம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் சென்னையில் மரியாதை செலுத்துகிறார்கள்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரிப்பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் விரிவான விசாரணையின் மூலம் மாணவர்களின் மரணங்களில் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் இயங்கி வரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் இதே அரசு மாதிரிப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பன்னிரெண்டாம்வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு மாணவரும் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகளில் சந்தேகத்தை வரவழைக்கிறது.கடந்த இரு மாதங்களில் நடைபெற்ற இரு மர்ம மரணங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பள்ளி நிர்வாகமோ, அது குறித்து எந்தவித விசாரணையையும் நடத்தாமல் மாணவர்களின் அடுத்தடுத்த மர்ம மரணங்களைத் தற்கொலை எனக்கூறி மூடிமறைக்க முயல்வதாகப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களின் சொந்த தொகுதியில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அதிநவீன வசதிகளுடன் கடந்த மே மாதம் திறந்து வைக்கப்பட்ட மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து நிகழும் மர்ம மரணங்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களையும் பதற்றமடையச் செய்திருக்கிறது. எனவே, துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்களின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மறைந்திருக்கும் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதோடு, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குத் திறக்கப்படும் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கும் அவலம் – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனின்றி கடலில் கலக்கும் நீரை ஏரி, குளங்களில் நிரப்பி பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகக் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வரை கடைமடைப் பகுதிக்கு வரவில்லை எனத் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் நேற்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களின் வேதனையைப் பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் 50 நாட்களைக் கடந்தும் கடைமடைக்கு வராமல் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், கடைமடை பயிர் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அணையைத் திறக்கும் முன்பு காவிரி டெல்டா பகுதிகளின் கிளை ஆறுகளையும், கால்வாய்களையும் முறையாகத் தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிர்வாகத் திறனற்ற திமுக அரசால், நடப்பாண்டிலும் டெல்டா பாசன விவசாயிகள் முழு அளவிலான சாகுபடி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே,காவிரி டெல்டா கிளை ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துவதோடு, வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை ஆறு,குளங்களில் சேமித்து பாசனத்திற்குத் திருப்பி விடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையை வழங்க முடியாத திமுக அரசு, மக்களைத் தேடி சிகிச்சை அளிக்கப் போவதாக அறிவித்திருப்பது வேடிக்கையானது.
விருதுநகர் மத்திய மாவட்டம், விருதுநகர் நகரம், 14வது வார்டு கழக செயலாளர் திரு.V.முத்துகிருஷ்ணன் அவர்களின் தந்தை திரு.வெங்கடசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் கிழக்கு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி திருமதி.A.ஆனந்தி அவர்களின் தந்தை திரு.N.சந்திரசேகரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், சாயல்குடி பேரூர் 12வது வார்டு கழக செயலாளர் திரு.A.உத்திரக்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், முன்னாள் பவானிசாகர் ஒன்றியக் கழக செயலாளர் திரு.VAS அமரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
புவியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிக்க அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கும் நிசார் செயற்கைக் கோள் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விதமான தரவுகளை வழங்கி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மைல்கல்லாக அமைய வாழ்த்தி மகிழ்கிறேன்.
மத்திய சென்னை மேற்கு மாவட்டம், துறைமுகம் மேற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.C.கென்னடி அவர்களின் தாயார் திருமதி.C.கற்பகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கள்ளர் விடுதிகளின் பெயரைச்சமூகநீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு -கள்ளர் சமூக மக்களின் கல்வி மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரில் இயங்க அரசு அனுமதிக்க வேண்டும்.கள்ளர் விடுதிகளின் பெயரைச் சமூகநீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் முன்னாள் மாணவர் சங்கத்தினர், கள்ளர் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.கள்ளர் சமுதாய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும், எதிர்கால நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதும், விடுதிகளை சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்வதும் அதன் தனித்துவத்தை இழக்கும் என்பதோடு அவர்களின் வாழ்வியல் நடைமுறையை மாற்றும் நடவடிக்கையாக அமையும் என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் அதிகமான அரசு கள்ளர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தர முன்வராத திமுக அரசு, அவற்றின் பெயரை மாற்றத் தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்திருப்பது அச்சமூக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சேதமடைந்த கட்டடங்கள், தரமற்ற உணவு, சுகாதாரமற்ற இருப்பிடம் என அவலமாகக் காட்சியளிக்கும் விடுதிகளைச் சீரமைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கைகளைக் கண்டு கொள்ளாத திமுக அரசு, விடுதிகளின் பெயர்களை மட்டும் சமூகநீதி விடுதிகள் என மாற்றுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மாணவ, மாணவியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, கள்ளர் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காகத் தொடங்கப்பட்ட பள்ளிகளும், விடுதிகளும் அதே பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குவதோடு, அவ்விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருப்பூர் வடக்கு மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் D.சோமசேகரன் அவர்களின் தாயார் திருமதி.D.ராணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பில் திரு.K.சரவணமெய்யப்பன் அவர்கள் நியமனம்.
வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர், பகுதிக் கழகம் மற்றும் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள், பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மற்றும் கறம்பக்குடி மேற்கு ஆகிய ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நியமனம்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பாபநாசம் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூர் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
சிவகங்கை மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்கள், சிவகங்கை நகரக் கழக செயலாளர், திருப்புவனம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.M.மந்திரமூர்த்தி அவர்களின் தாயார் திருமதி.M.சங்கரம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் (FIDE) ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவர்களுக்கும் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் கோனேரு ஹம்பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உலக செஸ் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை படைத்திருக்கும் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், வாணிப்புத்தூர் பேரூர் கழக பொருளாளர் திரு.A.ஆனந்தகுமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக இணைச்செயலாளர் திருமதி.R.தனலெட்சுமி அவர்களின் கணவர் திரு.S.K.R.ராஜ் நாயக்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான சோழப் பேரரசர்களுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் – வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததோடு, மாமன்னர்கள் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். எதிர்கொண்ட போர்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னர் ராஜராஜசோழன், இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான பேரரசர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக் கொண்டாடும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நீண்ட கால கோரிக்கையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின் மூலம் நிறைவேறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கரூர் மேற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு.T.சதாம் உசேன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இந்திய குடியரசு முன்னாள் தலைவரும், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஆகிய முப்பெரும் துறைகளில் முத்திரை பதித்த விஞ்ஞானியுமான பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று.இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே இலக்காக நிர்ணயித்து தன் வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதோடு, இளைஞர்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் நாட்டு மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய அரும்பெரும் பணிகளை நினைவில் வைத்து போற்றுவோம்.
சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு – காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை எழும்பூரில் கடந்த 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத போதைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு .ராஜாராமன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், குற்றவாளிகளை இதுவரை கண்டறிய முடியாத காவல்துறையால், தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பட்டப் பகலில், வீடுகளில், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், காவல்நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. எனவே, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜாராமன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, தமிழகத்தின் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை, கூலிப்படைகளின் அராஜகம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது வாகனம் ஏற்றி கொலை முயற்சி – திருட்டுகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவருவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது தான் திராவிட மாடலா ? ராமநாதபுரம் மாவட்டம் செட்டியத் தெருவில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மீது அடையாளம் தெரியாத கும்பல் வாகனத்தை ஏற்றி கொலை முயற்சி செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினருக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மட்டுமல்லாது, மணல் திருட்டுகளும், கனிமவளக் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாகிவிட்ட தமிழகத்தில் அதனை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகிவருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு தொடர்பாக 2023 ஆம் ஆண்டு 7,576 வழக்குகளையும், 2024 ஆம் ஆண்டு 11,085 வழக்குகளையும் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வின் மூலம் பதிவு செய்திருக்கும் திமுக அரசு, அதனை தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே, தற்போது அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான அசாதாரண சூழலையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற சட்டவிரோத சிறுநீரகத் திருட்டை தடுக்க முடியாத திமுக அரசு, அதனை முறைகேடு எனக்கூறி சமாளித்ததை போல, பொதுவிநியோகத் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு ஏதேனும் வினோத விளக்கத்தை அளிக்கப்போகிறதா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்காக விநியோகிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு சம்பவத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை மேற்கு மாவட்ட மாணவியர் அணி செயலாளர் திருமதி.G.விஜயலதா அவர்களின் கணவர் திரு.S.சதீஷ்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்ட போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.M.ஸ்டாலின் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் தெற்கு ஒன்றியம், ஆ.மருதப்புரம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.பிச்சைப்பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொண்ட கொள்கையில் துளியளவும் சமரசமின்றி அரசியல் களத்தில் பயணிக்கும் மருத்துவர் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வரும் உழவர் சந்தையின் கழிவறை ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்யும் நியாயவிலைக்கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே, தரமற்ற பொருட்கள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் நியாயவிலைக்கடைகள் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்திருக்கிறது. திமுக அரசின்அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், துளியளவும் சுகாதாரமற்ற கழிவறையில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருக்கும் அரிசியைச் சமைத்து உண்பார்களா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? என்ற அடுக்கடுக்கான கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.எனவே, ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்குச் சுகாதாரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், மணமேல்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு. S.M. அலி அக்பர் முஹைதீன் பக்கீர் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ திரு.நம்பெருமாள் சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மதுரையில் எளிமையாகத் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையை உலகளவில் சிறந்த மருத்துவமனையாக மாற்றியதில் அளப்பரிய பங்காற்றிய மருத்துவர் திரு. நம்பெருமாள் சாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும், செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்பவும், மக்கள் பணியைத் தொடரவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. திரு.அச்சுதானந்தன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் சக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் 25-07-2025 சிவகங்கை (ராஜ் மஹால்), 26-07-2025 திருமங்கலம்(GKM பேலஸ்), 28-07-2025 நாங்குநேரி(சுப்புலட்சுமி திருமண மஹால்), 30-07-2025 ஸ்ரீரங்கம் (AG திருமண மஹால்) நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
இந்தியத் திரையுலகின் பல்கலைக்கழகமாக விளங்கியவரும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்தவருமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுதினம் இன்று. தனது உடல்மொழியாலும், உணர்வுப்பூர்வமான வசன உச்சரிப்பாலும் நாட்டு மக்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் வாயிலில் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதா? – திமுகவின் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகத்திற்கு மக்கள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைப்பது உறுதி. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? இலவச பேருந்தில் தானே பயணம் செய்கிறீர்கள்? என மிரட்டி ஆதார் மற்றும் தொலைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்ட திமுகவினர், தற்போது கல்லூரிகளின் வாயிலில் நின்று மாணவர்களிடம் துண்டறிக்கை விநியோகிப்பது கடும் கண்டனத்திற்குரியது. உதவிப் பேராசிரியர்கள் தொடங்கி முதல்வர்கள் வரை கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பிடவும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கை விநியோகிப்பதும், அவர்களை திமுகவில் இணைக்க முயற்சிப்பதும் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் ஆகும். கட்சிக் கொடியுடன் கல்லூரி வாயில்களை மறித்து கும்பலாக நிற்கும் திமுகவினரைக் கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ, மாணவியர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவினரின் இத்தகைய செயல்பாடுகள் கல்விக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பது முதலமைச்சருக்குத் தெரியவில்லையா ? ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று மிரட்டினாலும், கல்லூரி வாயிலில் நின்று கூவிக்கூவி துண்டறிக்கை வழங்கினாலும் திமுக ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக மக்கள் அதற்கான பாடத்தை வரவிருக்கும் தேர்தலில் புகட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.
வடசென்னை மேற்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி, 117வது தெற்கு வட்டக் கழக துணைச்செயலாளர் திரு.அ.சுரேஷ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி பேரூர் 12வது வார்டு கழக செயலாளர் திரு.J.அப்துல்லா அவர்களின் தந்தை திரு.ஜகபர் அலி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.தங்கவேல் அம்பலம் அவர்களின் சகோதரி திருமதி.சீ.வசந்தா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்களின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான திரு.மு.க.முத்து அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி வருத்தமளிக்கிறது. திரு.மு.க.முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.<a href="https://x.com/TTVDhinakaran/status/1946510967292273092/photo/1"></a>
விருதுநகர் மத்திய மாவட்டம், சாத்தூர் நகர 19வது வார்டு கழக செயலாளர் திரு.M.சரவணன் அவர்களின் தந்தை திரு.முருகேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தருமபுரி மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் திரு.KRS.ரசல் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.<எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்திய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் திரு.ரகுபதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நேர்மையாகப் பணியாற்றுவதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகார் – காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசுதான் இந்த நெருக்கடியா?காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றுவதால் தாங்க முடியாத அளவிற்கு நெருக்கடிக் கொடுப்பதாக உயர் அதிகாரிகள் மீது மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறையின் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு நடைபெற்ற சட்டவிரோத மதுவிற்பனைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, அச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைத்த நேர்மையான அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவருக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பந்தோபஸ்து எனும் பெயரில் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அலைக்கழித்திருப்பதோடு, தான் பயன்படுத்தி வந்த வாகனத்தையும் திட்டமிட்டுப் பறித்ததில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி அரசின் உளவுத்துறை உயர் அதிகாரிகள் வரை தொடர்பிருப்பதாகத் திரு.சுந்தரேசன் அவர்கள் தனக்கு துறைரீதியாக ஏற்பட்ட அழுத்தங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் மகத்தான பணியைச் செய்யும் காவல்துறையில் உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதற்கு நேர்மாறாக பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயலும் அதிகாரிகளையும் உயர் அதிகாரிகளின் வழியாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் திமுக அரசு சமூக விரோதிகளுக்கான அரசு என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில், காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திருமதி.K.சுசிலா அவர்களின் மகன் திரு.K.கபில் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும் கழக இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளருமான திருமதி.T.செங்கொடி அவர்களின் தாயார் திருமதி.ஜானகி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவாரூர் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.P.G.பாரதி அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாகப் போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – போராடுவோரை அடக்கி ஒடுக்குவதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தைத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் செலுத்த வேண்டும்.பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பத்தாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத திமுக அரசால், சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாத திமுக அரசு, அதற்காகப் போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பதோடு வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதும் கடும் கண்டனத்திற்குரியது.ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் மூலம் வாக்குறுதியை அளித்த திமுக அரசு, ஆட்சி நிறைவடையும் தருவாயிலும் அவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த பணிநிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொறியாளர் அணி இணைச்செயலாளராக திரு.D.சேது ராமலிங்க மணிகண்டன் (எ) சிங்கை சேது அவர்கள் நியமனம்.
கோவை கிழக்கு மாவட்டம், சுந்தராபுரம் பகுதிக் கழக செயலாளராக திரு.N.ரமேஷ் குமார் அவர்களும், குறிச்சி பகுதிக் கழக செயலாளராக திரு.A.சாகுல் ஹமீது அவர்களும் நியமனம்.
மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களைப் புகழ்வதாகக் கருதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்துவதா? – கர்ம வீரர் காமராஜர் அவர்களின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொதுவாழ்வில் தூய்மைக்கும், அரசியலில் நேர்மைக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி, எளிமையின் சின்னமாகவே வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, குளிர்சாதன வசதியின்றி தூங்க மாட்டார் என திமுக துணைப் பொதுச்செயலாளர் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதோடு, உயிர் பிரியும் நேரத்தில் மறைந்த திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்களின் கையைப் பற்றிக் கொண்டு நாட்டையும், ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனப் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கூறியதாகத் திரு.திருச்சி சிவா அவர்கள் பேசியிருப்பது வழக்கமாக திமுக அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளின் உச்சபட்சமாகும். யாருக்கும் தலை வணங்காமல், யாரையும் தலைவணங்க விடாமல் தன் இறுதி மூச்சு வரை தனித்தன்மையுடன் வாழ்ந்த மாபெரும் தலைவரை, மாற்றுக்கட்சியினரையும் மதிக்கும் பண்பாட்டைக் கற்றுத்தந்த தனிப்பெரும் ஆளுமையை, சிறுமைப்படுத்தும் திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தமிழக மக்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மக்களின் மத்தியில் வீரத்தையும், உறுதியையும் விதைத்து அவர்களின் உள்ளத்திலும் எண்ணத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் காமராஜர் அவர்கள் குறித்த அநாகரீகமான பேச்சுக்கு, வருத்தமோ மன்னிப்போ கேட்காமல், விவாதப்பொருளாக்காமல் கடந்து செல்ல வேண்டும் எனத் திரு. திருச்சி சிவா அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுகவினரின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழகத்தில் தன் கால்தடம் படியாத இடமே இருக்க முடியாது எனச் சொல்லும் அளவிற்குப் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, காடு, மேடு எனக் கிடைக்கும் இடங்களில் படுத்து உறங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பத்து வயது சிறுமி – புகார் வழங்கி ஐந்து நாட்கள் கடந்தும் குற்றவாளியைக் கைது செய்ய முடியாதது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாட்களே இல்லை என்ற நிலையில் குற்றச்சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொள்ளும் திமுக அரசால், தற்போது பட்டப்பகலில் மேலும் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் கொடுமை அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய திமுக அரசும், அதன் காவல்துறையும் முற்றிலும் செயலிழந்து இருப்பதன் விளைவே, குற்றம் அரங்கேறி ஐந்து நாட்களைக் கடந்தும், பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியைக் கண்டறிய முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கொடூர மனம் படைத்தவர்களும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில், நாள்தோறும் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் பதுங்கி பதுங்கி வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டம், கோவில்பட்டி நகர 7வது வார்டு கழக செயலாளர் திரு.V.பாலமுருகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் – நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கிழிந்த நிலையில் இருக்கும் மெத்தைகளால் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.மேலும், மருத்துவமனை வளாகத்தில் மலைபோல குவிந்திருக்கும் மருத்துவக் கழிவுகளால் நிலவும் சுகாதார சீர்கேட்டால், அம்மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் புதுவகை நோய்களுடன் திரும்பிச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவிலான பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழக்கூடிய கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையின் தற்போதைய அவல நிலை அங்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப்பணியாளர்கள், மருந்துகள் தட்டுப்பாட்டால் தனியார் மருந்தகங்களை நாடும் பொதுமக்கள், போதிய படுக்கைகள் இல்லாததால் தரையில் படுக்கும் நோயாளிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள், தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. எனவே, சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலம் தமிழகம் என்ற வெற்று விளம்பரத்தை இனியாவது ஓரங்கட்டி வைத்துவிட்டு, மருத்துவமனைகளின் அவல நிலையை உணர்ந்து அங்கு நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாட்டையும், அடிப்படை வசதிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினமான இன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும் SRM குழுமத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. ரவி பச்சமுத்து அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மற்றும் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் திரு.ரவி பச்சமுத்து அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண நலத்தோடும் கல்வி மற்றும் மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தாய்மொழியாம் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று.தமிழ் மொழிதான் தமிழர்களின் அடையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்து, தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி பேராசிரியராக, சமய சொற்பொழிவாளராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல்வேறு நிலைகளில் தமிழுக்காகவே வாழ்ந்த மறைமலை அடிகளாரையும், அவர் கொண்டிருந்த தமிழ்ப்பற்றையும் போற்றி வணங்கிடுவோம்.
எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.
திரைப்பட நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அருமை நண்பர் திரு.சரத்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.சரத்குமார் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது கலைப்பணி மற்றும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம் – புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்குக் கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிவிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும் கைதிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நாங்கள் கைதிகள் போல அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைக்காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சிறைத்துறை மீது எழுந்திருக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்.சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சரக்கு ரயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</strong> தீ விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதல்வன் திரு.லட்சுமணன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய பாரா கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடின பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் திரு.லட்சுமணன் அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.S.பாண்டி அவர்களின் மனைவி திருமதி.P.சசிவர்ணம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா! -சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். – எளிய தொண்டனாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாகத் திகழச்செய்த மாமனிதருமான தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா வருகின்ற 15.07.2025 செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மற்றும் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
அரசுப்பள்ளி மாணவர்களை மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து படிக்க வைப்பது தான் திராவிட மாடல் அரசின் பெருமையா? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது. அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப்பள்ளிகளில் நிலவும் அவல நிலையில் மாணவர்கள் ஒருபுறம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பள்ளிக்கல்வித்துறை விளம்பரம் செய்து கொண்டிருப்பது வெட்கக்கேடானது. எனவே, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு அரசுப்பள்ளிகளின் உண்மை நிலையை அறிந்து, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய பகுதிநேர ஆசிரியர் வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் மரணம் – குடும்பத் தலைவரை இழந்து நிர்கதியில் நிற்கும் ஆசிரியரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியது திமுக அரசின் கடமை. பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சாலை விபத்தில் மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர் திரு.பார்த்தசாரதி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ஆசிரியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ், ஊக்கத்தொகை, மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்தவித சலுகையுமின்றி பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாக அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் அதனை நிறைவேற்ற தொடர்ந்து மறுத்துவருவது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி, தையல், கணினி அறிவியல் என பல்வேறு பாடங்களை கற்பித்து மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உரிய நேரத்தில் நிறைவேற்றியிருந்தால், தொடர் போராட்டங்களையும், ஆசிரியர் ஒருவரின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம் என சக ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பணி நிரந்தரம் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்காத காரணத்தினால், தற்போது உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் மறைவுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும், பணப்பலன்களும் இன்றி அவரது குடும்பம் நிர்கதியில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் திரு பார்த்தசாரதி அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, பகுதிநேர ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை மனசாட்சியோடு அணுகி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும் – நான்காண்டு கால ஆட்சியில் எந்தவொரு நலத்திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு, தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல்.தமிழகத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட நியாயவிலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கவோ, ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது விளம்பரத்திற்காக உதவுமே தவிர மக்களுக்கு முழுமையான பயனை தராது. திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 236வது வாக்குறுதியான பல துறைகளின் கீழ் உள்ள நியாய விலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும், 239வது வாக்குறுதியான மானிய விலையில் மூன்று LED பல்புகள் விநியோகம் செய்யப்படும், 240 வது வாக்குறுதியான சர்க்கரையின் அளவு உயர்த்தப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் போன்றவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தற்போது வீடுவீடாக ரேசன் பொருட்கள் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் தலைப்பில் ஊர் ஊராக பெட்டி வைத்து பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்களின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில், தற்போது அடுத்த தேர்தலை மையமாக வைத்து ”உங்களுடன் ஸ்டாலின்” எனும் பெயரில் பெறப்படும் மனுக்களுக்கு மட்டும் எப்படி தீர்வு கிடைக்கும் ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இனியும் நாள்தோறும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதையும், அதற்கென பலகோடி ரூபாய் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதையும் நிறுத்திவிட்டு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்த்து போராடி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வீரரும், காட்டாலங்குளத்து மாமன்னருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்ததினம் இன்று. தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி வீரமரணமடைந்த மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் ரெங்கசாமி சேர்வை அவர்களின் மகன் செந்தில்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 60 சதவிகிதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.பாடப்புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர்கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, காலியாக இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மதுரை புறநகர் மாவட்டம், மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.பாண்டி கருப்பு அவர்களின் தந்தையாரும், மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றியக் கழக பொருளாளருமான திரு.P.மொட்டையன் சேர்வை அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கேட் கீப்பரின் கவனக்குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு : ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலைக்காக எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
திமுக அரசின் அலட்சியப்போக்கால் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்திருக்கும் மா விவசாயிகள் – பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்குவதோடு மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை திமுக அரசு நிர்ணயிக்க வேண்டும்.தமிழகத்தில் மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டில் நியாயமான விலை கிடைக்காததாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிவடைந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களாலும் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் திரும்பிய பின்னரும் மா பிரச்னைக்கு தீர்வு காணப்படாதது விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து அம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அறிவித்திருக்கும் நிலையில், திமுக அரசும், அதன் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் மா உற்பத்தியை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆயிரக்கணக்கான மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.பருவநிலை மாற்றம், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மா விவசாயத்தை பாதுகாக்கவோ, உரிய இழப்பீடு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கால் நடப்பாண்டில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக அறிவிப்பதோடு, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலைக்காக எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. வழக்கறிஞராக, அரசியல்வாதியாக, சமூக சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக பன்முகத்தன்மை கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மதுரை மேற்கு 3ம்பகுதி இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.R.T சங்கர் அவர்களின் தாயார் திருமதி.ராஜம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி வடக்கு மாவட்டம், செங்கோட்டை ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.லியாகத் அலி அவர்களின் மனைவி திருமதி.L.மசூது பேகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனரும் மூத்த தமிழறிஞருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழுணர்வை உலகம் முழுவதும் பரப்ப அரும்பாடுபட்ட செந்தமிழ்க் கவிமணி வா.மு.சேதுராமன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 08.07.2025, காலை 10 மணியளவில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள RV திருமண மஹாலில் நடைபெறுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பொறுப்பில் திரு K.R.சுப்ரமணியம், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் பொறுப்பில் திரு.G.மதியழகன், கழக விவசாயப் பிரிவு துணைச்செயலாளர் பொறுப்பில் திரு.S.K.சிவானந்தம், கழக வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பில், திரு.G.அன்வர்ஜான் நியமனம்.
தஞ்சாவூர் மாநகர் மாவட்டக் கழக பொருளாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வடக்கு ஒன்றியம் அணைக்குடம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.N.ராஜா அவர்களின் தந்தை திரு.க.நடராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஊழியர்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டில் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடல் – மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவையை கேள்விக்குறியாக்கிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களால் நடப்பாண்டில் மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகளின் முன்பருவக்கல்வியோடு அவர்களின் முழுமையான வளர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 28 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், பல அங்கன்வாடி மையங்களில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் உணவு தயாரிப்பது, கர்ப்பிணி பெண்களின் கையேடுகளை பராமரிப்பது என அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு குழந்தைகளின் முன்பருவக்கல்வியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் நிலவும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மற்றும் தரமான ஊட்டச்சத்து உணவு அங்கன்வாடி மையங்களில் முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி நகர 15வது வார்டு கழக செயலாளர் திரு.M.நஞ்சன்அவர்களின் தாயார் திருமதி.M.முனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்: ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
இந்திய தேசத்தின் தலைசிறந்த ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவரும், மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவருமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று. அளவு கடந்த அறிவையும், மன வலிமையையும் கொண்டு, ஈகை குணத்திற்கும் தலைமைப் பண்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் விரும்பிய ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் கிழக்கு மாவட்டம், நரிக்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.S.கருப்பையா அவர்களின் மனைவி திருமதி.அங்கம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியம், இனம்புதுவாடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.V.குப்புசாமி அவர்களின் மகள் K.ஜெயசித்ரா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.திருவண்ணாமலையில் விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, மணிப்புரம் என 12 கிராமங்களை உள்ளடக்கிய விளைநிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுத்தி காவல்துறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும். தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 43வது வாக்குறுதியாக, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படாது என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு உயிரை விட்டாலும் விடுவோம் எங்களின் விளைநிலத்தை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை ஏவியிருப்பது அவர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் ஆகும்.எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.A.கருணாநிதி அவர்களின் தாயார் திருமதி.அ.தங்கம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி தெற்கு மாவட்டம், குற்றாலம் பேரூர் 2வது வார்டு கழக செயலாளர் திரு.L.நாராயணத்தேவர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சேலம் அருகே செம்மண் கடத்தலை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சேலம் மாவட்டம் வில்லியம்பட்டி, வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24*7 செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சேலம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் சர்வசாதாரணமாக நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மணல் கடத்தல் கும்பல் தாக்கும் அளவிற்கான துணிச்சலை உருவாக்கியுள்ளது.சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும் தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற கேள்வியை எழுப்புகிறது. எனவே, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி போராடினால் மிரட்டுவதா? – விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி போராடிய பொதுமக்களை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி அரங்கேறும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதன் மூலம் பறிபோகும் அப்பாவி உயிர்களையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி போராடும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே, பொதுமக்களை பார்த்து ”ஒழுங்காக இருந்துக்கோ இல்லைனா வேறு மாதிரி ஆகிவிடும்” என மிரட்டும் தொனியில் பேசியிருப்பது தமிழகத்தில் சமூக விரோதிகள் மட்டுமல்ல காவல்துறையினரையும் பார்த்து பொதுமக்கள் அச்சப்படும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திடும் என நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றிடும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஒருவரே பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்கிட வேண்டும் எனவும், பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையினர் தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயல்பட தேவையான அறிவுரையை வழங்கிட வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிய கர்நாடக அரசு – டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடகத்தின் செயல்பாடுகளை கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்கிறதா திராவிட மாடல் திமுக அரசு?காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கிவிட்டதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.சிவக்குமார் அவர்கள் தெரிவித்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. எங்களின் அனுமதியின்றி எந்த கொம்பனாலும் காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என திமுக அரசு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான நிலம் கணக்கீட்டு பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு தொடங்கியிருக்கிறது.கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி எந்த ஒரு இடத்திலும் புதிய அணையை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்திய பின்னரும் சட்டவிரோதமாக மேகதாது அணையை கட்டியேத் திருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப்பெற முடியாத திமுக அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும்.கர்நாடக மாநில முதலமைச்சரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஓடோடிச் செல்லும் முதலமைச்சர், தமிழகத்திற்கு வருகை தரும் கர்நாடக மாநில துணைமுதலமைச்சரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதலமைச்சர், தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார்? என்ற கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக எதிர்கொண்டு முறியடிப்பதோடு, அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
திமுக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தமிழக தொழில்துறை கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு – தொழில் நிறுவனங்களையும் அதனை சார்ந்திருக்கும் தொழிலாளர்களையும் முடக்கும் மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் பெரிய கடைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 3.16 சதவிகிதத்திற்கு குறையாமல் உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு தொழில்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மின் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை, போர்க்கால அடிப்படையில் தடையற்ற மின்சாரம், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு என தேர்தலுக்கு முன்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வால் மட்டும் ஏராளமான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், நடப்பாண்டிலும் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது தொழில்துறையை முற்றிலும் முடக்கும் செயலாகும்.அண்டை மாநிலங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை வழங்கி தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், தமிழக அரசோ மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி தொழில்முனைவோரை தமிழகத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டிருப்பதாக தொழில்துறை கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுவதன் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மென்மேலும் உயர்ந்து சாமானிய பொதுமக்களை கூடுதல் சிரமத்திற்கு உள்ளாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொழில்துறையினரை நேரடியாகவும், பொதுமக்களை மறைமுகமாகவும் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
கழகவர்த்தக அணி இணைச்செயலாளராக திரு.SP. முத்து அவர்கள் நியமனம்.
விழுப்புரம் தெற்கு மாவட்டம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
புதுச்சேரி மேற்கு மாநிலம்: காரைக்கால் மாவட்ட செயலாளர், மாநில இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் மற்றும் உசுடு தொகுதி கழக செயலாளர்கள் நியமனம்.
புதுச்சேரி மாநிலக் கழகம்: புதுச்சேரி கிழக்கு மற்றும் புதுச்சேரி மேற்கு ஆகிய இரு மாநிலக் கழகங்களின் தொகுதிகள் மறுசீரமைப்பு.
நாகப்பட்டினம் மாவட்டக் கழக செயலாளராக திரு. K.ஜெயவேல் அவர்கள் நியமனம்.
தூத்துக்குடி மாநகர் மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
சிவகங்கை மாவட்டம்: மானாமதுரை நகர கழகம் மானாமதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை மேற்கு என இரண்டு நகரக் கழகங்களாக பிரிப்பு.
சிவகங்கை மாவட்டம்: மானாமதுரை கிழக்கு, மானாமதுரை மேற்கு ஒன்றியக் கழகங்கள் மானாமதுரை கிழக்கு, மானாமதுரை மேற்கு, மானாமதுரை வடக்கு, மானாமதுரை தெற்கு என நான்கு ஒன்றியங்களாக பிரிப்பு
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறியாளர் அணி நிர்வாகிகள் நியமனம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக திரு.T.மதிவாணன் அவர்கள் நியமனம்.
கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 05.07.2025, சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில், ஈரோடு மாவட்டம், பவானி காடையாம்பட்டியில் அமைந்துள்ள கொங்கு மஹாலில் நடைபெறவுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் இரயில்வே திரு.S.பரமநாதன் அவர்களின் சகோதரர் திரு.சோ.தனுஷ்கோடி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 7 பேர் பலி – பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனிக்குழுவை ஏற்படுத்தி விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தனியார் தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுமே அடுத்தடுத்த விபத்துகளுக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் அதற்கான எந்தவித முயற்சியையும் முன்னெடுக்காததன் விளைவு தற்போது 7 அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராத வகையில் தனி கண்காணிப்புக்குழுவை உருவாக்கி பட்டாசு ஆலைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்வதோடு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
எல்லை தாண்டியதாகக் கூறி கடந்த இரு தினங்களில் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் தொடர் அராஜகத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு . ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை மன்னார் வடக்கு கடற்பரப்பு அருகே எல்லை தாண்டியதாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் படகையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன் தினம் இதே ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 7 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாவதும், மறுபுறம் கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு கைது சம்பவத்தின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற மனநிலைக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இனியும் இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடராத வகையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கும், அராஜகத்திற்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மேற்கு மாவட்டம், வத்திராயிருப்பு கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் திரு.ப.ஜெயக்குமார் அவர்களின் மனைவி திருமதி.ஜெ.முத்துலட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இந்திய குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணிக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நோயாளிகளின் நல்வாழ்வுக்காக நேரம், காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், மருத்துவமனைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நடப்பாண்டிலாவது நிறைவேற்றித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் மாநகர் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர் திரு.P.சுப்ரமணி அவர்களின் தந்தை திரு.பழனிச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ஏறக்குறைய ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் – விதிகளை மீறிய அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக்குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.நீதிமன்றம் மூலமாகவோ, மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமாகவோ குறைக்கப்படும் வரியை, தன்னிச்சையாக குறைத்திருப்பதோடு, வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் கடவுச் சொற்களும் (Password) முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அனைத்து வரிவிதிப்புகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெற்றிருக்கும் இந்த வரிக்குறைப்பு முறைகேடு திமுகவின் அடிப்படை குணமான விஞ்ஞான ஊழலை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகியுள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.P.ரமேஷ்குமார் அவர்களின் தந்தை திரு.பழனிசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் – திரைப்படங்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் தன் ஆட்சியில் தொடரும் காவல் மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ?ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு இல்லை என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, தீராத மன அழுத்தம் ஆகியவை காவலர்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை மீறுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என மேடையில் பேசுவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதாமல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு.A.கர்ணன் அவர்களின் தாயார் திருமதி.A..பத்மா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுசெயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.V.சண்முகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுசெயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு உணவு உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.நாடு முழுவதும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவிற்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தி வரும் நிலையில், நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. ஏற்கனவே, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து இன்னல்களை சமாளிக்க முடியாமல் தமிழக விவசாயிகள் தவித்து வரும் நிலையில், தற்போது நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உணவு உற்பத்தி எனும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நீர்வளத்துறையை வலியுறுத்துகிறேன்.
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு.மகாலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.மகாலிங்கம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தஞ்சை வடக்கு வீதியில் இயங்கிவரும் குடோனில் இருந்து 15 டன் போலி உரம் பறிமுதல் – விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை.தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வீதியில் இயங்கிவந்த குடோனில் இருந்து 15 டன் போலி உரம் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போலி உர விற்பனை விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்லில் தொடங்கி பூச்சிமருந்து, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வரை நிலவும் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்தியே தனியார் நிறுவனங்கள் போலி உரங்களை தயாரித்து விற்பனை செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, மழை,புயல், வெள்ளம்,வறட்சி, விளைச்சல் பாதிப்பு என பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலும், தூர்வாரப்படாத வாய்க்கால்கள், கடைமடை வரை வந்து சேராத தண்ணீர் போன்ற அரசு நிர்வாகத்தின் அலட்சியங்களுக்கு மத்தியிலும் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது அவ்விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்திலும் முறைகேடு கண்டறியப்பட்டிருப்பது விளைச்சலை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.எனவே, தஞ்சாவூரில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட அளவில் குழு அமைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் உரத்தின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
கோவை மத்திய மாவட்டம், சௌரிபாளையம் பகுதிக் கழக செயலாளர் திரு.V.சீனிவாசன் அவர்களின் தந்தை திரு.வேல்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் – பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் உடுமைலையை அடுத்துள்ள காரத்தொழுவில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் இரவு, பகலாக சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையையும், பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், அரசுப்பள்ளிகள் மதுபானக்கூடங்களாக மாறிவருவதோடு, அதனை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதன் உச்சபட்சத்தை அடையும் என்பதற்கு நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களே சாட்சியாக இருக்கும் நிலையில், தற்போது அரசுப்பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அளவிற்கு மெத்தனப்போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பெட்ரோல் ஊற்றி தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, பள்ளி வளாகத்தில் மது அருந்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் திரு.T.ஜெகன்பிரபு அவர்களின் தந்தை திரு.K.தமிழரசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்காசியில் மாதிரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – பெற்றோர்கள் புகாருக்கு பின்பும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை விநியோகித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதோடு, அவை தயாரிக்கும் முறையும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் தட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, என அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி வரும் அரசுப்பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது அப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்குவதோடு, அவர்கள் பயிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தென்காசி வடக்கு மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றியம், சுமைதீர்ந்தபுரம் கொட்டா குளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.மா.குமாரசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பதவி உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு கோரி நடைபெறும் வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – வருவாய்த்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.பதவி உயர்வு, பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.நில உடமையில் தொடங்கி சமூக பாதுகாப்பு, பல்வேறு விதமான சான்றிதழ் என நாள்தோறும் நாடக்கூடிய வருவாய்த்துறையின் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு வேண்டிய பல்வேறுவிதமான சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மணல் கொள்ளையில் தொடங்கி பல்வேறு வகைகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயல்களை தடுக்க முற்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான தொடர் கொலைவெறித்தாக்குதல் சம்பவங்களுக்கு தீர்வு காண முடியாத திமுக அரசால், தற்போது தங்களுக்கென பணி பாதுகாப்புச் சட்டம் கோரி அரசு ஊழியர்களே போராடும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.எனவே, தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என வருவாய்த்துறை கூட்டமைப்பினர் அறிவித்திருக்கும் நிலையில், பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுவதோடு, அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.பரம்பிகுளம் – ஆழியாறு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதியில் கடைமடையாக உள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததன் விளைவே, கால்நடைகளோடும், விவசாய உபகரணங்களோடும் விவசாயிகள் மறியலில் ஈடுபடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும், கடைமடை பாசனத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகளின் மீது காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் நலனை காக்கிறோம் எனும் பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்களை கையகப்படுத்துவதையும், தடுக்க முற்படும் விவசாயிகளின் மீது அடக்குமுறையை ஏவுவதையுமே வாடிக்கையாக கொண்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். எனவே, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தேவையான தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
திமுக ஆட்சியமைந்த பின்பு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் சரிவு – திமுக ஆட்சியின் சமூக நீதி நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திமுக ஆட்சியமைந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, அப்பள்ளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களை கூட நியமிக்கத் தவறியதே மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் என்ற புகார் எழுந்திருக்கிறது. தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஆதிதிராவிட பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 6, 240 பணியிடங்களில் 1, 177 பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆதிதிராவிட மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகளில் நவீன உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக திமுக அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து வேறுபள்ளிக்கு மாற வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தோற்றுவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தேனி தெற்கு மாவட்டம், சின்னமனூர் நகரக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.M.பாலமுருகன் அவர்களின் தாயார் திருமதி.M.பஞ்சவர்ணம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.நாகேஷ் (எ) முருகேசன் அவர்களின் தந்தை திரு.ஆழி.கு.மகாலிங்கம் காடவராயர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு. அமுல் கந்தசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு. அமுல் கந்தசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் வால்பாறை தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.விஜய் அவர்கள் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும், மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வடசென்னை மத்திய மாவட்டம், முன்னாள் மாவட்டக் கழக செயலாளர் திரு.A.R.பழனி அவர்களின் தாயார் திருமதி.R.கௌரிஅம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: சேலம் மத்திய மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள்- செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வரும் 24.06.2025 காலை 10 மணியளவில் சேலம் மாவட்டம், அரியானூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதித்யா மஹாலில் நடைபெறவுள்ளது.
கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வரும் 25.06.2025 காலை 10 மணியளவில், தருமபுரியில் அமைந்துள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர் திரு.A.ஏகாம்பரம் அவர்களின் தந்தை திரு.S.அரியமுத்து அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விழுந்து விபத்து – அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை – குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் 389வது வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த காவலர்களுக்கு இருபது ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அனைத்து காவலர்களுக்கும் வாரவிடுப்பு, மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்க்கும் அமைப்பு என அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, அறிவிக்காத வாக்குறுதியாக பதவி உயர்வை தடுத்திருப்பது காவலர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.ஏற்கனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு, காவலர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை அதிகரிப்பு, பெருகிவரும் குற்றச்சம்பவங்கள் ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் காவலர்களுக்கு திமுக அரசு பிறப்பித்திருக்கும் இந்த புதிய அரசாணை கூடுதல் மன உளைச்சலை அளித்திருப்பதோடு, அவர்களின் பணித்திறனை மேலும் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
கோவையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக இருவர் கைது – தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டத்தை கண்காணிக்கத் தவறிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபுக் கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) அமைப்பு உட்பட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக அக்கல்லூரியின் முதல்வர் உட்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் அடுத்தடுத்து கைது செய்யப்படுவதன் மூலம், அச்சம்பவத்தை சாதாரண விபத்து எனக்கூறி மூடி மறைக்க முயன்ற திமுக அரசின் உண்மையான முகம் அம்பலப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தின் போது நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்றும் நீங்காத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் அவரின் புதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றிருக்கும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தீவிரவாத அமைப்புகள் தலைதூக்குகிறதா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.ஏற்கனவே, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற நிலையில், காவல்துறையை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பதாக எண்ணத் தோன்றும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கும் அளவிற்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசு, தற்போது, தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க தவறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆட்சி நிறைவடையும் தருவாயிலாவது விழிப்புடன் செயல்பட்டு தீவிரவாத செயல்கள் வேரூன்றாத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் அலட்சியம் இனியும் தொடருமேயானால் 2001 ஆம் ஆண்டு மக்களே வெகுண்டெழுந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போலவே, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை மக்களே ஏற்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் – தரமற்ற கட்டடங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா?தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல, சென்னை திருவான்மியூர் பெரியார் நகர் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.நாமக்கல் அருகே மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசலுக்குள்ளான செய்தியில் தொடங்கி, அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களில் தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேம்பாலம் வரை தொடர்ந்து ஏற்படும் விபத்துகளும், விரிசல்களும் திமுகவின் திராவிட மாடல் அரசின் கட்டுமான லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.கட்டுமானப் பணிகளின் போது அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக எப்போது திறப்பு விழா நடத்தலாம் ? எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் ? என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதோடு, கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கட்டடங்களும், பாலங்களும் விபத்துக்குள்ளாவதும், அதனை சீரமைக்கிறோம் எனும் பெயரில் மேலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருவதன் மூலம் தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, அரசுப்பள்ளி வகுப்பறைகள் தொடங்கி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை நடைபெறும் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே திறப்பு விழா காண வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டம், கருங்குளம் ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் திரு.எண்ணாயிரத்தான் அவர்களின் தந்தை திரு.கருத்தபண்டாரம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அரசு கள்ளர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு – காலிப்பணியிடங்கள் நிரப்பும் வரை அப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன முறையை திமுக அரசு அமல்படுத்த வேண்டும்.தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரை தும்மக்குண்டு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் மட்டும் 9 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், போதுமான ஆசிரியர்களை நியமிக்க முன்வராத திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது.கள்ளர் பள்ளிகளில் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு மாறாக வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்த நிர்பந்திப்பது அவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்ட பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவை உண்டு 10க்கும் அதிகமான பேராசிரியர்கள் மயக்கமடைந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பயிற்சியை வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்த திமுக அரசு, அவர்களுக்கான உணவை கூட தரமான முறையில் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே மாணவ, மாணவியர்களுக்கான அடிப்படை வசதியின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் என அவல நிலையில் காட்சியளிக்கும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப்பள்ளிகள் மீதான மக்களின் நம்பிக்கையை படிப்படியாக இழக்கச் செய்திருக்கிறது.இதற்கிடையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது பேராசிரியர்களுக்கான உணவையும் தரமற்ற முறையில் விநியோகித்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் தொடர் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
ஒற்றைச் சிறகு ஓவியா எனும் நாவலுக்காக 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும், கூத்தொன்று கூடிற்று எனும் சிறுகதைக்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் திரு.லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறார் இலக்கிய படைப்புகளில் தனித்துவமிக்கவராக திகழும் திரு.விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் சிறுகதை எழுதுவதில் தனி பாணியை கடைபிடித்துவரும் திரு.லட்சுமிஹர் ஆகிய இருவரின் எழுத்துப் பயணமும் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: நீக்கம் : நாகப்பட்டினம் மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.RCM.மஞ்சுளா சந்திரமோகன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
திமுக அரசின் அலட்சியப் போக்கால் விவசாயத்தை விட்டு வெளியேறும் மா விவசாயிகள் – ஆந்திர மாநிலத்தை பின்பற்றி மானியத்துடன் கூடிய குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டு நியாயமான விலை கிடைக்காத விரக்தியில் காலம் காலமாக வளர்த்த மாமரங்களை வெட்டி அழிக்கும் சூழலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதி விவசாயிகளும் தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. அதே போல, தமிழக மாங்காய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதால் அதிருப்தியடைந்த மா விவசாயிகள் மாங்காய்களை சாலைகளில் கொட்டி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு பழச்சாறு தொழிற்சாலைகளை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகள் மா சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது அம்மாநிலத்தில் அதிகரித்திருக்கும் மாங்காய் உற்பத்தியை காரணம் காட்டி தமிழக மாம்பழங்களை வாங்க மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல், விளைச்சல் பாதிப்பு என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியிலும் மா விவசாயத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு நடப்பாண்டு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மீளவே முடியாத பேரிடியாக அமைந்திருக்கிறது.மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பதோடு கூடுதலாக 4 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கும் நிலையில், தொடர் போராட்டத்திற்கு பின்பும் கள்ள மவுனம் காக்கும் திமுக அரசால் மா மரங்களை வெட்டி அழிக்க வேண்டிய சூழலுக்கும், விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கும் மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே, ஆந்திர மாநில அரசைப் போலவே தமிழகத்திலும் மாம்பழங்களுக்கு மானியத்துடன் கூடிய உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மா சாகுபடி அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் மாம்பழ கூழ் தொழிற்சாலையை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பொதுவாழ்க்கையை புனிதமாக கருதி தன் வாழ்நாள் முழுவதும் எளிமைக்கும், நேர்மைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவருமான தியாகி கக்கன் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் நலனை மட்டுமே மையமாக வைத்து செயல்பட்ட அப்பழுக்கற்ற தியாகி கக்கன் அவர்களின் அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சென்னையை நோக்கி பாதயாத்திரை – அரசு மருத்துவமனைகளின் அவல நிலைக்கு திமுக அரசும் அதன் முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் திரு.விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வழங்கிய வாக்குறுதிகளை, முதலமைச்சரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்துவித போராட்டங்களுக்கும் துளியளவும் செவிசாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு வி.கே.முத்துசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.வி.கே முத்துசாமி அவர்களை இழந்துவாடும் அவரது புதல்வரும் உச்ச நீதிமன்ற நீதியரசருமான மாண்புமிகு திரு எம்.எம்.சுந்தரேஷ் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு – விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலத்தின் தேவனஹந்தி வரை நடைபெறும் IDPL (Irugur-Devangonthi Pipeline) எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கொச்சி –கோவை – கரூர் வழித்தடத்தில் பதிக்கப்பட்ட பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு இதுவரை வழங்கப்படாத நிலையில், மேலும் ஒரு ராட்சத குழாயை விளைநிலங்களில் பதிக்க பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலிய நிறுவனத்தின் ராட்சத குழாய்களை விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படாமல் சாலைகளின் ஓரமாக அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிராகரித்திருப்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கி.மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணியை தொடங்கியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அத்திட்டத்தை விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுத்துவதோடு , ஏற்கனவே விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களுக்கான உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
தஞ்சாவூர் அருகே முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – அடக்குமுறையையும், ஆணவப்போக்கையுமே கொள்கையாக கொண்டிருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், விவசாயிகளின் பெயரில் தனியார் ஆலை வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அது தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகளை முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திக்க மறுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளும், தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 34-வது வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்போது தஞ்சை வந்த முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட மனு கிடப்பில் போடப்பட்டிருப்பதுமே, தற்போது முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்புக்கொடி ஏந்தி போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய பெருமக்களின் நலன் காக்கவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வீரவசனம் பேசி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், வாழ்வாதார பிரச்னைக்காக போராடும் விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுத்து அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதன் மூலம் விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறை வெறும் கபட நாடகம் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, கருப்புக் கொடி காட்ட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆலை நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு வழங்கத் வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத்தந்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி:</u></strong><strong><u></u></strong>தென்சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தெற்கு பகுதி, 138 வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் திரு.D.அன்புமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.</font color="#ff0000">
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவருமான நெல்லை திரு.சு. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும் திகழ்ந்த நெல்லை திரு.சு. முத்து அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக அரசுப் பள்ளிகளில் நிலவும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் நியமனங்களில் திமுக அரசு காட்டும் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய பணி நியமன போட்டித் தேர்வை எதிர்கொண்டவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்ற நிலையில், காலிப்பணியிட அறிவிப்புக்கு ஏற்ப 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்திருப்பதோடு, அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை கூட நிரப்ப மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நியமன போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுவதோடு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக் கொலை – திமுக அரசின் அடையாளமாக மாறிவிட்ட கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரத்தை அடியோடு ஒழிப்பது எப்போது?பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான திரு.சக்கரவர்த்தி அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.சக்கரவர்த்தி அவர்கள் கடந்த 11 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது. அரசியல் கட்சியின் முக்கிய தலைவராகவும் பிரபல வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த திரு.சக்கரவர்த்தி அவர்கள் பல நாட்களாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சதித்திட்டம் தீட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.ராணிப்பேட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக திமுகவின் கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதில் தொடங்கி திரு.சக்கரவர்த்தி அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரையிலான செய்திகளை பார்க்கும் போது தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கள்ளத் துப்பாக்கிக் கலாச்சாரம் மேலோங்கியிருப்பதையே நம்மால் உணர முடிகிறது. எனவே, பாமக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு கள்ளத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பதையும் விரிவாக விசாரித்து வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் அப்பாக்களை போற்றிக் கொண்டாடும் தந்தையர் தினம் இன்று. குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதோடு, அளப்பரிய அன்பு மற்றும் கனிவான கண்டிப்போடு உணர்வுப்பூர்வமிக்க உறவாக திகழும் தந்தையர் ஒவ்வொருவரையும் இந்நாளில் போற்றிக் கொண்டாடிடுவோம்.
திருவாரூர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை – மீதமிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா திமுக அரசு?திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து தலைமைக் காவலர் மீது கொடூரத் தாக்குதல் – சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்திருக்கும் திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சத்திரப்பட்டி காவல்நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்து தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த உபகரணங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுமூகமான சூழலை உறுதி செய்வதிலும், சட்டம் ஒழுங்கை பேணிக்காணிப்பதிலும் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் திமுக அரசின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களில் தொடங்கி சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் மீது அடுத்தடுத்து அரங்கேறும் தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடியாததன் விளைவே தற்போது காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. குற்றச்சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் தமிழகத்தை அமைதிப்பூங்கா என புகழ்ந்ததற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக பொய் கூறியதற்கும், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். எனவே, காவல் நிலையத்திற்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கும் புதுப்புது கதைகளை தேடி நேரத்தை வீணடிக்காமல், அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
நாட்டுப்புற பாடலுக்காகவும் தனது நடிப்பாற்றலுக்காகவும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி.கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிப்பு – பொதுமக்களின் புகார் மீது விரிவான ஆய்வு நடத்துவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும். சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட தூசி மாதிரிகளில் யுரேனியம், காட்மியம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் அதிகளவு கலந்திருப்பதாக வெளியாகியிருக்கும் பகுப்பாய்வு குறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகளுக்குள் காணப்படும் மாசுக்கள் தொடர்பாக மாசுக்கட்டு வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொதுமக்களே மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.எண்ணூர் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து கடந்த பல வாரங்களாக வெளியேறிக் கொண்டிருக்கும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் இருமல், கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், கடந்த ஆண்டு இதே எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவை விட மிகவும் ஆபத்து மிக்கதாக கருதப்படும் இந்த உலோக நச்சுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
விடுவிப்பு: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.சுரேஷ்பாபு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
கோவையில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குக் கூட செவிசாயக்க மறுக்கும் திமுக அரசின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.ஒப்பந்த முறையை ரத்து செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5வது நாளாக போராட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாணை 62ன் படி சமவேலைக்கு சம ஊதியம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய ஊதிய ரசீது, மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்ற வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாத திமுக அரசால், தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தூய்மைப்பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தூய்மைப் பணியாளர்களுக்கு வாரவிடுப்பு, கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி, நிரந்தர ஊதியம், ஓய்வூதியம் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளிவீசிய திமுக, ஆட்சிக்கு வந்தபின்பு அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கோவையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் திரு.AL.மகேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண நலத்துடன் விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.S.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.சிவலிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறி இழிவு படுத்துவதா? – தாய்மார்களை அவமதிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன் அவர்கள், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்களின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி படுகொலை – மேற்கு மண்டலத்தை கொலைக்களமாக மாற்றி வரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் சேனாதிபாளையம் அருகே ஆடு மேயக்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேற்கு மாவட்டங்களில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவோ, குற்றச்சம்பவங்களை குறைக்கவோ துளியளவும் கவனம் செலுத்தாத திமுக அரசால் தமிழகத்தில் வசிக்கும் முதியவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சிவகங்கை மாவட்டம் பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னரும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரில் முன்வரிசையில் நின்ற துணிச்சல்மிக்க மாவீரருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த தினம் இன்று. மாமன்னர்கள் மருது சகோதரர்களின் போர்ப்படை தளபதியாகவும், நாட்டு மக்களை காக்கும் அரணாகவும் திகழ்ந்து அனைவராலும் தென்பாண்டிச் சிங்கம் என போற்றப்பட்ட மன்னர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: தேனி தெற்கு மாவட்டம், உத்தமபாளையம் தெற்கு ஒன்றியம், கோகிலாபுரம் கிளைக் கழகச் செயலாளர் திரு.C.பாண்டியன் அவர்களின் மனைவி திருமதி.P.ஜெயா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நீக்கம் : புதுக்கோட்டை மத்திய மாவட்டம், புதுக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் திரு.A.செல்வக்குமார் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
நாமக்கல் அருகே தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அடித்துக் கொலை – காவல்துறையை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த குளத்துப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் என மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து இல்லங்களில் வசிக்கும் வயதான முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதும், அவரவர் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் திருட்டு போவதும் தொடர்கதையாகி வருவது காவல்துறையின் செயலற்ற திறனையும், அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.திருப்பூர் மற்றும் ஈரோடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கைதானவர்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளை தாங்களே அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்?, விசாரணை அதிகாரி திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் நாமக்கல் அருகே அரங்கேறியிருக்கும் சம்பவம், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் தானா? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் இச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.எனவே, மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு இதுபோன்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல் தொல்லை – பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறதா தமிழகம்? சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசால், அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவி ஒருவரே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் அளவிற்கான அசாதாரண சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தின் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலாளியே, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது, அரசு சேவை இல்லத்தில் தங்கி பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கான தண்டனையை கடுமையாக்கி சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது திமுக அரசின் மீதும் அதன் காவல்துறை மீதும் குற்றவாளிகளுக்கு சிறிதளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, அரசு சேவை இல்லத்தில் மாணவியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்டக் கழக இணைச்செயலாளர் திருமதி.G.ஜெயா அவர்களின் தாயார் திருமதி.தேவகி சுப்பிரமணியம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க உள்ளூர் மக்களுக்கு கட்டணம் விதிப்பதா ? உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரான செயலை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த தரிசன வழியை மூடிவிட்டு கட்டணம் வசூலிக்கும் வழியில் செல்ல கோயில் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. காலம் காலமாக பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன பாதையை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதோடு, ரூ.200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என அறிவுறுத்தியிருப்பது உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரான செயலாகும். மேலும், பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதி மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்திருப்பதால் வரும் 17 ஆம் தேதி ஆலயப் பிரவேசம் போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு உள்ளூர் பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உலகளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்றி, அவர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் சிறப்பு தரிசன பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தைவான் நாட்டில் நடைபெற்றுவரும் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை செல்வி.வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த வாரம் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது தைவான் தடகளப் போட்டியில் தங்கம் வென்று ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை தேடி தந்திருக்கும் செல்வி.வித்யா ராம்ராஜ் அவர்களின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ரத்தினம்பிள்ளை அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அனைவராலும் போற்றப்பட்ட திரு.ரத்தினம்பிள்ளை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மத்திய ஒன்றியக்கழக துணைச்செயலாளர் முறையூர் திரு.T.மணியரசன் அவர்களின் மகன் திரு.ம.மலையரசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாள் விழா! வருகிற 10.06.2025 அன்று, காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்டம் நகரம்பட்டியில் அமைந்துள்ள வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் திரு.A.சாகுல்ஹமீது அவர்களின் சகோதரர் திரு.மோதி ஹனிபா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மொடக்குறிச்சி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டம் மற்றும் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
கோவை கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள், வட்டம் / வார்டு, ஊராட்சிக் கழக செயலாளர்கள், பகுதி, பேரூர் ஆகியவற்றின் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
தருமபுரி மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், அரூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள், அரூர், பாலக்கோடு, பொ.மல்லாபுரம் ஆகிய பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஒன்றியம் “மொரப்பூர் கிழக்கு” மற்றும் “மொரப்பூர் மேற்கு” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு, பாலக்கோடு வடக்கு ஒன்றியம் “பாலக்கோடு வடக்கு” மற்றும் “பாலக்கோடு மத்தியம்” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு, நல்லாம்பள்ளி வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் “நல்லாம்பள்ளி கிழக்கு ஒன்றியம்” என ஒன்றிணைப்பு மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு பகுதிக் கழக நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை தெற்கு ஆகிய ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு நிர்வாகிகள் நியமனம்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.R.ஜான்சன் ஜெயசீலன் ஜேக்கப் அவர்களின் தாயார் திருமதி V.காந்திமதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரி அவர்களின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
இஸ்லாமிய சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராகவும், தமிழர் சமுதாயத்தின் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்ந்து வரலாறு படைத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்- கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
<strong>போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் அச்சத்துடன் பணியாற்றுவதாக பெண் ஊழியர்கள் புகார் – புகாரை விசாரிக்க வேண்டிய விசாரணைக் குழுவே அப்புகாரை வெளியில் கசிய விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</strong> சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சக உயர் அதிகாரிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. <strong>போக்குவரத்துக் கழகத்தில் தனக்கு தொந்தரவு இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை விசாரிக்காமல் அவரை பணியிடமாற்றம் செய்திருப்பதோடு, அவருக்கான வருகைப்பதிவையும் பதிவு செய்யாமல் அலைக்கழித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</strong> அதே போல, <strong>பெண்கள் அளிக்கும் புகாரை ரகசியமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய விசாரணைக் குழுவே, அப்புகாரை பொதுவெளியில் வெளியிட்டிருப்பதாகவும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருவதாகவும் பெண் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</strong> பள்ளி, கல்லூரிகள் தொடங்கி அரசு அலுவலகங்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலேயே பெண் ஒருவர் பாதிக்கப்படும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. <strong>எனவே, போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் தொந்தரவு இருப்பதாக பெண்கள் அளித்திருக்கும் புகாரை விரிவாக விசாரணை செய்வதோடு, புகாரின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a>
தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு கிழக்கு ஒன்றியக்கழக துணைசெயலாளர் திரு.அண்ணா மோகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஒருசேர முன்னிறுத்தி தேசிய ஒருமைப்பாட்டையும், இந்திய துணைக்கண்டத்தின் இறையாண்மையையும் பாதுகாக்க பாடுபட்ட கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களின் பிறந்த தினம் இன்று. இஸ்லாமிய சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவராகவும், தமிழர் சமுதாயத்தின் தன்னிகரற்ற தலைவராகவும் வாழ்ந்து வரலாறு படைத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை போற்றி வணங்கிடுவோம்.
தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 07.06.2025, சனிக்கிழமை காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், ஆலத்தூரில் அமைந்துள்ள கணேஷ் மஹாலில் நடைபெறவுள்ளது. – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நெஞ்சுரத்தோடு எதையும் எதிர்கொள்ளும் திறன் படைத்த அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் பூரண உடல் நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், அத்தியூத்து கிளைக்கழக செயலாளர் திரு.செ.மாணிக்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நீக்கம்:கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கிழக்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.M.பழனிவேல்ராஜன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
<strong>ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் – உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விளம்பரம் செய்வதில் திமுக அரசு செலுத்தும் கவனத்தை பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டிருக்கும் நிதிச் சிக்கலை குறைப்பதில் செலுத்த வேண்டும்.</strong> மே மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள்ளாகவே கடந்த நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இன்று ஊதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. <strong>சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என மாநிலத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதிச்சிக்கலால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</strong> தென்னிந்திய பல்கலைக்கழகங்களின் தாயாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பல ஆண்டுகளாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதும், மாநில அரசு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதாலும் அங்கு உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித்திறனும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. <strong>நீண்ட போராட்டத்திற்கு பின்பு மே மாதத்திற்கான ஊதியம் வழங்குவதாக அரசு உறுதியளித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை தொடர் போராட்டம் நடத்திதான் பெற வேண்டுமா ? என சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் அலுவலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.</strong> எனவே, <strong>சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட நிதிச் சிக்கலில் தவிக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைப்படக்கூடிய நிதியை உடனடியாக விடுவித்து அப்பல்கலைக்கழகங்கள் எவ்வித சிக்கலுமின்றி தொடர்ந்து இயங்கிடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a>
திருச்சி தெற்கு மாவட்டம், ஏர்போர்ட் பகுதி 47-A வட்டக் கழக இணைச்செயலாளர் திரு.R.ஆகாஷ் அவர்களின் தாயார் திருமதி.R.மகேஸ்வரி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றிய மீனவரணி செயலாளர் மீனம்பட்டி திரு. நந்தீஸ்வரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.மு.முத்து இளம்பரிதி அவர்களின் தந்தை திரு.பெ.முத்துராமலிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திண்டுக்கல் மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.A.சுகுமார் அவர்களின் தந்தை திரு.அழகுமலைத்தேவர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தமாக 24 பதக்கங்களை குவித்து பதக்கப் பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்திருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 4*400 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை செல்வி சுபா வெங்கடேசன் அவர்கள், 4*100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற செல்வி. அபிநயா நடராஜன் அவர்கள், கால் வீக்கத்தையும் பொருட்படுத்தாமல் 400 மீட்டர் தடை தாண்டுதலில் பங்கேற்று வெண்கலம் வென்ற செல்வி. வித்யா ராமராஜ் அவர்கள் உட்பட, பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
<strong>அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை – சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.</strong> தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. <strong>பெண்களின் உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் உரிய மதிப்பளிக்காமல் அவர்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்த்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் குரூர மனம் படைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை நிச்சயம் என்பதை இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.</strong> குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த தண்டனை, தமிழகப் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருந்தாலும், ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் அன்றாடம் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு வகையில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய சிம்பொனி இசை வரை, தலைமுறைகள் பல கடந்து இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாக திகழ்பவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இசைஞானி ‘பத்ம விபூஷண்’ திரு. இளையராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் பெருமைப் படும் அளவிற்கு இசை உலகின் ராஜாதி ராஜாவாக வலம் வரும் திரு.இளையராஜா அவர்கள் பூரண உடல் நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் மேலும் பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். <a href="https://x.com/ilaiyaraaja">@ilaiyaraaja</a>
தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநரும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான மருத்துவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரி திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மாவீரர் வல்லநாடு பகதூர் வெள்ளையத்தேவர் அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தாய் நாட்டின் விடுதலைப் போரை தொடங்கிவைத்த பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் செறிந்த தளபதியும், உற்ற, உயிர்காத்த தோழனுமாகிய மாவீரர் வல்லநாடு பகதூர் வெள்ளையத்தேவர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அறிவு மற்றும் ஆற்றலில் தலைசிறந்த படைத் தளபதியாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்க்களத்தில் ஈடு இணையற்ற மாவீரராகவும் திகழ்ந்த பகதூர் வெள்ளையத் தேவர் அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழக அரசுப் பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில் 8,144 ஊழியர்கள் ஓய்வு – காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தற்காலிக ஊழியர்களையும், ஆலோசகர்களையும் வைத்தே அரசு நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக அரசு ? தமிழக அரசின் குரூப் ஏ, குரூப் பி, குரூப் டி உள்ளிட்ட பணியிடங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 144 அரசுப் பணியாளர்கள் இன்று ஒரே நாளில் ஓய்வுபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ஆண்டுதோறும் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதியில் 25 சதவிகிதத்தை கூட நிறைவேற்றவில்லை என்பதற்கு அரசுத்துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையே சாட்சியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கு ஏற்ப அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போதுமான எண்ணிக்கையில் அரசு ஊழியர்களை நியமிக்கத் தவறிய அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார் ? அரசுப்பணி கனவில் லட்சக்கணகான இளைஞர்கள் இரவு, பகலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், ஆலோசகர்களையும் மறைமுகமாக நியமித்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிப்பது தான் திராவிட மாடல் அரசின் சமூக நீதியா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து அரசுப்பள்ளிகள் நாளை மறுநாள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுப்பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் சென்றடைவதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுத்துறைகளில் இதுவரை நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களின் விவரங்களை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
<strong>சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கின் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த ஓரிரு தினங்களில் விசாரணை அதிகாரி மாற்றம் – குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்குகளில் அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறதா தமிழக காவல்துறை ?</strong> ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான தம்பதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர், மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைச் சம்பவங்களை செய்தாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட அதே கொலைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது யார் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. <strong>கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கண்டறிய முடியாத காவல்துறை, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தியதற்கும், சென்னிமலை மற்றும் ஒட்டன் குட்டையில் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் எனக்கூறி 11 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறப்படும் செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. </strong><strong>குற்றவாளிகளை நெருங்க முடியாத கொலை வழக்கில், தங்கள் மீதான அவப்பெயரை போக்க அப்பாவி மக்களை வற்புறுத்தி கொலை செய்ததாக வாக்குமூலத்தை பெற்று அவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியிருக்கிறதா ? இதுவரை எத்தனை கொலை வழக்குகளில் இது போன்ற அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் ? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் தற்போது எழுகிறது.</strong> மேலும், சென்னிமலை மற்றும் ஒட்டன்குட்டை கொலைச் சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறி 11 பேரை சிறையில் அடைத்த விசாரணை அதிகாரி திரு.கோகுலகிருஷ்ணன் அவர்கள், சிவகிரி கொலை வழக்கு குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்த அடுத்த ஓரிரு தினங்களில் மாற்றப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. <strong>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த திரு .ஆம்ஸ்ட்ராங் அவர்கள் முதல், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு ஜெயக்குமார் தன்சிங் வரையிலான முக்கிய பிரமுகர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என பெருமை பேசுவது வெட்கக் கேடானது.</strong> எனவே, <strong>வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றிவிட்டால் வழக்கு விசாரணை முடிந்து விடும் என தப்புக் கணக்கு போடாமல், சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் தானா ? என்பதை விரிவாக விசாரிப்பதோடு, காவல்துறை மீதான அழுத்தத்தை குறைக்க பொய்வழக்கில் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a>
மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களின் சகோதரி திருமதி.சரோஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சகோதரியை இழந்து வாடும் திரு.வைகோ அவர்களுக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து பேச்சுவார்த்தையை புறக்கணித்த 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் – போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிரான திமுக அரசின் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.<br>தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தி.மு.க கூட்டணி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ உட்பட 30க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் புறக்கணித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.<br>15 முதல் 20 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கோரிய தொழிற்சங்கத்தினருக்கு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கியதோடு, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 22 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணப்பலன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்காததே பேச்சுவார்த்தையை புறக்கணிக்க முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.<br>அதிலும், 01.09.2023 முதல் 6 சதவிகிதம் ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிலையில், மொத்தமாக வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையில் 12 மாத நிலுவைத் தொகையை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியிருப்பது ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.<br>பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படும் நஷ்டத்தை காரணம் காட்டி, பண்டிகை காலங்களிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br>எனவே, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிய ஊதிய உயர்வை வழங்குவதோடு, ஓய்வூதியதாரர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கும் பணப்பலன்களையும் உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டும் என போக்குவரத்துக் கழகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
நாமக்கல் அருகே திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்த உயர்மட்ட மேம்பாலம் – பாலத்தின் தரத்தை முழுமையாக பரிசோதிக்கும் முன்பு அவசரகதியில் திறக்க வேண்டிய அவசியம் என்ன? நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி மூலமாக இன்று திறந்து வைக்கப்பட்ட 3.4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட உயர்மட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்ற இந்த மேம்பாலப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பொதுமக்கள் மத்தியில் எழுந்த புகாருக்கு, திறக்கப்பட்ட முதல் நாளே ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மூன்றே மாதத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது மேம்பாலம் திறக்கப்பட்ட நாளிலேயே விரிசல் விழுந்திருப்பது தமிழக அரசு மேற்கொள்ளும் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மாநிலத்தில் சேதமடைந்த மேம்பாலங்களை சீரமைக்கவும், புதிய மேம்பாலங்களை கட்டவும் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? பாலத்தின் தரத்தை உறுதி செய்யாமல் அவசரகதியில் பாலம் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். எனவே, பாலத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சீரமைப்பதோடு, பாலத்தின் தரத்தை முழுமையாக ஆராயாமல் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
புகழ்பெற்ற திரைப்பட நடிகரும், எழுத்தாளரும், தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவருமான நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.திரைப்பட நடிகராக வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் ஜொலித்த திரு.ராஜேஷ் அவர்களை இழந்துவடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மாண்புமிகு மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் சகோதரர் திரு.எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சகோதரர் திரு.எல்.முருகன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் திரு.பிரவின் சித்ரவேல் அவர்களுக்கும், 20 கிலோ மீட்டர் நடையோட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் திரு.செர்வின் சபாஸ்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகளவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாப்பாபட்டி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.R. கர்ணன் அவர்களின் தாயார் திருமதி.R.ஜானகி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: கடலூர் மத்திய மாவட்டம், நெய்வேலி நகரக் கழக அவைத்தலைவர் திரு.K.ராமலிங்கம் அவர்களின் மகன் திரு.R.ராம் பாரதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி:தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், பூச்சந்தை பகுதி 32வது வட்டக் கழக மேலமைப்பு பிரதிநிதி திரு.V.பாலமுருகன் அவர்களின் தாயார் திருமதி.வ.சுசீலா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடரும் கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருக்கும் சூழலில் கோவை மற்றும் நீலகிரியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கையை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் கணித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே நொய்யல், பவானி, ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மேலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளை முறையாக பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கனமழையால் மக்கள் பாதிக்கப்படும் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு.S.பிச்சைக்கனி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தலைமை காஜி திரு.சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் அவர்களின் மறைவையொட்டி கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் திரு.C.லெட்சுமணன் அவர்களின் மனைவி திருமதி.L.சரஸ்வதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
நாகையில் பெய்த தொடர்மழையால் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவு பயிர்கள் சேதம் – உரிய இழப்பீடை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கிழ்வேளூர் ஆகிய பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள்ளு, உளுந்து உள்ளிட்ட தானிய சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாறு காணாத வறட்சி, பருவம் தவறி பெய்யும் தொடர்மழை என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான இயற்கை பேரிடர்களை சந்திக்கும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காலங்களில் கூட இழப்பீடு வழங்கி உதவ முன்வராத திமுக அரசு, ஆண்டுதோறும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதாலும், அதற்கென பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதால் என்ன பயன் ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய முறையில் கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தங்க நகைக்கடன் பெறுவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ரிசர்வ் வங்கி – ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவசரகால நேரத்தில் பேருதவியாக இருக்கும் நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும். தங்க நகைக்கடன் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க தங்க நகைக்கான கடன் அளவு 75 சதவிகிதமாக குறைப்பு, சொந்த நகை என்பதற்கான உரிய ஆதாரம், 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில்துறையினர் தங்களின் அவசரத் தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதும், பின்னர் படிப்படியாக பணம் கட்டி திருப்பிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வேளாண்குடி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் மூலம் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தங்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தங்க நகைக்கடன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இக்கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும் வலியுறுத்துகிறேன்.
தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய மன்னர்களில் முதன்மையானவராகவும் போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத மாவீரருமாக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழாவான இன்று, திருச்சி மாவட்டம் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 50க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு – வைரஸ் தொற்று பரவும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உருவெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 50க்கும் அதிகமானோருக்கு அத்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் குறைந்தது தான் என்றாலும் கடந்த காலங்களில், அவற்றால் இழந்த உயிரிழப்புகளையும், ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டுகளை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரை நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சுகாதாரத்துறையை வலியுறுத்தும் அதே நேரத்தில் பொதுமக்களும் கொரோனா தொற்று தடுப்பு தொடர்பாக அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக வரலாற்றில் பொற்கால ஆட்சியை வழங்கிய மன்னர்களில் முதன்மையானவராகவும் போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரருமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழா இன்று. சூரியகுல சத்திரிய வம்சத்தின் சூரியனாக, முத்தரையர் இனத்தின் முன்னோடியாக திகழ்ந்ததோடு, தாய்த் தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட தமிழ் பெருவேந்தர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார் – திமுக முன்னாள் நிர்வாகி மீதும் துணை போனவர்கள் மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொண்ட பிறகு திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது காவல்துறையில் வழங்கப்பட்ட புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஆளுநர் மாளிகை வரை சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தன்னை வழக்கறிஞராகவும், திமுகவில் செல்வாக்கு மிக்கவராகவும் காட்டிக் கொண்ட திமுக இளைஞரணியின் முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலின் மூலமாக ஏற்கனவே பல பெண்கள் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பது, தமிழகத்தில் மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறதோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.திமுகவைச் சேர்ந்த தெய்வச்செயல் செய்த மோசடிச் செயல்கள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார்கள் அனைத்தும் பொதுவெளியில் பகிரப்பட்டிருப்பது காவல்துறை மீதான பெண்களின் நம்பிக்கையை அடியோடு சீர்குலையச் செய்திருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக இளைஞரணியின் முன்னாள் நிர்வாகி மீது இதுவரை சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முன்வராதது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் திமுக நிர்வாகி தெய்வசெயலின் கட்சி பொறுப்பை பறித்ததோடு நிறுத்திவிடாமல், இத்தகைய கொடுஞ்செயலுக்கு துணை போன அனைவரையும் கைது செய்து முழுமையாக விசாரித்து குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா!கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நாளை 23.05.2025, காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்டம் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
சிவகங்கை அருகே கல்குவாரியில் மண் சரிந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு – குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் பாறைகளை உடைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், இதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பள்ளம் தோண்டப்பட்டதே விபத்திற்கான முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், அக்குவாரியில் முறையான ஆய்வை மேற்கொண்டு விதிமீறல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும் பத்ம விபூஷன் விருது பெற்ற அணு விஞ்ஞானியுமான திரு எம்.ஆர்.சீனிவாசன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தலைசிறந்த ஆராய்ச்சிகளின் மூலம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு எம்.ஆர். சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
<strong>மதுரை அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு – போதிய மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் அரசு மருத்துவமனைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்.மதுரை மாவட்டம் வளையங்குளத்தில் நேற்று பெய்த கனமழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வளையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அம்மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் காயமடைந்தவர்கள் அடுத்தடுத்த மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.வளையங்குளம் மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கே மூவரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கால் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் – உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல, விழுப்புரம், செங்கல்பட்டு, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் மழைநீரில் நனைந்து வீணாகியிருக்கும் செய்திகளும் மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் விவசாய நிலங்களிலும், நெல் கொள்முதல் நிலையங்களிலும் எவ்வித பயனுமின்றி சேதமடைந்து கிடப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்திருக்கிறது. எனவே, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களின் விவரங்களை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் ஊதியக்குழுக்களின் தவறான நிர்ணயத்தால் பணியில் இருந்து ஓய்வு பெற பத்தாண்டு காலம் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்ட தொடர் போரட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இடைநிலை ஆசிரியர்களின் ஒவ்வொரு போராட்டத்தின் போதும், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதும், பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைப்பதும் என எந்தவித தீர்வையும் காணாமல் தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருவது ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் திமுக அரசு இழைக்கும் அநீதி ஆகும். எனவே, ஆண்டு ஊதிய உயர்வில் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஆண்டுக்கணக்காக போராடி வரும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் முடிவா? – ஆட்சிக்காலம் முடிவடையும் முன்பே மக்களை ஆண்டியாக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறதா திமுக அரசு ?தமிழகத்தில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வீட்டு மின் நுகர்வோர், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பின் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய சாமானிய மக்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் கடுமையாக பாதிப்படைந்து வரும் நிலையில், தற்போது மேலும் 3.16 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலமாக மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் நிலையில், மேலும் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என கூறுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஏற்கனவே, ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாய் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுந்திருப்பதோடு, தற்போது தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகளும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை சந்தேகத்திற்கு உள்ளாக்குகின்றன.எனவே, தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த கழக செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று முதுகுளத்தூரில் நடைபெற்றது. -தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்கு (வடக்கு) ஒன்றியம், உசிலம்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.காட்டாளி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் திரு.S.M.மரிஜெயக்குமார் அவர்களின் சகோதரர் S.மரியூஜின் ராஜ்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: விருதுநகர் மத்திய மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் திரு.R.சக்கரபாணி அவர்களின் தாயார் திருமதி.R.செல்லம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
மதுரை உசிலம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள் தோல்வி – தாய்மொழி தமிழை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 9 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது தாய்மொழியாம் தமிழ் பாடத்திலேயே 9 மாணவர்கள் தோல்வியடையும் சூழலை உருவாக்கியுள்ளது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும், அரசாணைகளை தமிழ் மொழியிலேயே வெளியிட வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்ட முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசுப்பள்ளிகளில் தமிழ் பாடத்தை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்கத் தவறியது ஏன்? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. எனவே, தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்த 9 மாணவர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கி துணைத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதோடு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் கழக இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.T A. விக்னேஷ் அவர்களின் தந்தை திரு.T.அனந்தராமன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: நாமக்கல் வடக்கு மாவட்டம், வெண்ணந்தூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.V.S.கண்ணன் (எ) சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சி.தனலட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தாம்பரம் கிழக்கு பகுதி 62வது வட்டக் கழக செயலாளர் திரு.S.வனத்தையன் அவர்களின் தாயார் திருமதி.S.ஞானம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி: </u></strong><strong><u></u></strong>சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூர் கழக செயலாளர் திரு.A.சேவுகன்அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.</font color="#ff0000">
தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ, மாணவியர்கள் நடைபெற்று முடிந்த தேர்வு முடிவையே இறுதியாக கருதாமல் அடுத்தடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று தங்களின் எதிர்கால இலக்குகளை அடைய வாழ்த்தி மகிழ்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 18.05.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடைபெறவுள்ளது.
திமுக அரசின் நான்கு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை கண்டித்து கழகத்தின் சார்பில் வருகின்ற 24.05.2025 அன்று திருச்சி மாவட்டம், தொட்டியம், வாணப்பட்டரை மைதானத்தில் மாபெரும் கண்டனப்பொதுக்கூட்டம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டனப் பேருரை ஆற்றுகிறார்கள்.
இரங்கல் செய்தி: வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.G. சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.G.சாரதா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. நாம் அனைவராலும் போற்றி வணங்கப்பட வேண்டிய பெண்களிடம் ஈவு இரக்கமின்றி மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்ட மிருகக் குணம் படைத்தவர்களுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பேராசிரியர் பற்றாக்குறையால் அங்கீகாரத்தை இழக்கும் அபாயத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகள் – தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை கேள்விக்குறியாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பேராசிரியர்கள் பற்றாக்குறை, குறைவான வருகைப்பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிய விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய கால அவகாசத்திற்குள் 24 மருத்துவக் கல்லூரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை வழங்க தவறியிருப்பதால் அக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பிருப்பதோடு அக்கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வும் மாணவர் சேர்க்கையும் நடத்துவதில் சிக்கல் நிலவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் மற்றும் மருத்துவமனை கட்டமைப்பு தொடர்பாக ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கண்டறியப்படும் குறைபாடுகள் தமிழக சுகாதாரத்துறையின் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கத் தவறியதே மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தேசிய மருத்துவ ஆணையம் கோரிய விளக்கத்திற்கு உரிய பதில் உடனடியாக அளிப்பதோடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூர் மாணவர் அணி செயலாளர் திரு.M.அன்பரசன் அவர்களின் தாயர் திருமதி.M.அரசமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தெற்கு ஒன்றியம், காட்டுநெடுங்குளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.ரகுநாதசேதுபதி அவர்களின் தந்தை திரு.C.சந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை – கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது. ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்களாக, மக்களை பாதுகாப்பதில் அளப்பரிய அன்பு கொண்டவர்களாக, சேவை மனப்பான்மை மிக்க அன்னையர்களின் மறுபிறவியாக மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அடுத்த நிலையில் பணியாற்றிவரும் செவிலியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை போற்றிக் கொண்டாடும் உலக செவிலியர் தினம் இன்று. செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி மகிழும் இந்நேரத்தில், தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம், மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான கலந்தாய்வு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட அவர்களின் நீண்டகால கோரிக்கைகளையும் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வாழ்வியல் தத்துவத்தில் முதலிடம் வகிப்பதோடு, அதீத அன்புக்கும், அளவற்ற பாசத்திற்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் சிறந்த அடையாளமாக திகழும் அன்னையர்களை போற்றிக் கொண்டாடும் அன்னையர்களின் தினம் இன்று.. தமிழக மக்களின் மகிழ்ச்சியே தனது லட்சியம் எனக்கூறி நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை தாயுள்ளத்தோடு செயல்படுத்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் ஏற்படுத்திய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்நேரத்தில் நினைவுகூற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். அன்பில் இணையற்றவர்களாக, பண்பில் நிகரற்றவர்களாக, பாசத்தில் ஈடற்றவர்களாக எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வாழும் தெய்வங்களாக வலம் வரும் அன்னையர்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மத்தியம் ஒன்றியம், எம்.சூரக்குடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.தமிழரசன் அவர்களின் மகன் திரு.த.சத்தியகீர்த்தி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.இரங்கல் செய்தி.
கழக உடன்பிறப்புகளின் உற்ற தோழராக, என் அன்பிற்கும், பாசத்திற்கும் உரியவராக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் படைத்தளபதியாக செயல்பட்ட அன்பு சகோதரர் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று.. எத்தனையோ சோதனைகள் சூழ்ந்த போதிலும், எண்ணிலடங்கா தடைகள் குறுக்கிட்ட போதிலும் விசுவாசத்தின் அடையாளமாக தன் இறுதி மூச்சு வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டிருந்த அன்பு சகோதரர் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்கள் ஆற்றிய பணிகள் ஒவ்வொரு நாளும் அவரை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.
இரங்கல் செய்தி: திண்டுக்கல் மாவட்டக் கழக துணைச்செயலாளர் திருமதி.R.தமிழரசி அவர்களின் கணவர் திரு.K.ராமசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதலில், அங்கு மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர் திரு.முரளி நாயக் அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.முரளி நாயக் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக ராணுவத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக நிற்போம்.
விருதுநகர் மத்திய மாவட்டம்: ஒன்றியக் கழகம் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், நகரக் கழக நிர்வாகிகள் மற்றும் நகர வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கறம்பக்குடி மேற்கு மற்றும் கறம்பக்குடி தெற்கு ஆகிய ஒன்றியக் கழகங்களின் நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டம்: புதிதாக பிரிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டம்: • புதிதாக பிரிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
திருவள்ளூர் கிழக்குமாவட்டம்: மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய ஊராட்சிகள் மறுசீரமைப்பு. மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.N.P.முருகன் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.J.வாசு நியமனம்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்:மாவட்டக் கழக அவைத்தலைவர், பொருளாளர், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் மற்றும் எல்லாபுரம் மேற்கு ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், அம்மாப்பேட்டை பேரூராட்சி மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சி கழகங்களின் நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூராட்சி சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்:மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர், சங்கராபுரம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
சென்னை திருவேற்காடு மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – பொதுமக்களுக்கும் நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இம்முடிவை திமுக அரசு கைவிட வேண்டும். சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானமாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் உடற்பயிற்சி மற்றும் யோகாப் பயிற்சி செய்யக்கூடிய இடமாகவும் இருக்கும் இந்த மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள், ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயிலும் அரசுப்பள்ளி மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரி என சுற்றுவட்டாரத்தில் மக்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
ஈரோட்டில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 17 வயது சிறுமி – பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களை கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஈரோடு மாவட்டத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஆட்சியமைத்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முதலமைச்சரும் திமுகவினரும் நேற்று கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் ஈரோட்டில் சிறுமி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் இக்கொடூரச் சம்பவம் பெண்களுக்கு எதிரான திமுகவின் நான்காண்டு கால அவல ஆட்சியை பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை தடுக்கவோ, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தவோ கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஈரோட்டில் சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, திமுக ஆட்சியின் எஞ்சிய ஓராண்டிலாவது பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு.சத்ய நாராயண பிரசாத் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளில் திறம்பட வாதாடியதோடு, நீதிபதியாக பொறுப்பேற்று நீதித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நீதிபதி திரு.சத்ய நாராயண பிரசாத் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், வழக்கறிஞர்கள் மற்றும் சக நீதிபதிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர், கல்லல் மேற்கு, திருப்பத்தூர் தெற்கு, சிங்கம்புணரி வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள்,ஊராட்சிக் கழக செயலாளர்கள்,சிங்கம்புணரி பேரூர் வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் – தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். OPERATION SINDOOR எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் துல்லியமான தாக்குதலின் மூலம் பயங்கரவாத அமைப்புகளின் உட்கட்டமைப்பை சிதைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மிகுந்த பாராட்டுதலுக்குரியது. இந்த நேரத்தில், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதி கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தேசத்தின் மக்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம். ஜெய்ஹிந்த்
திமுக அரசின் நான்கு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி; போராட்டக் களமாக மாறிய தமிழகமே சாட்சி! ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசுக்கு, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்கள் சரித்திரமிக்க சாதனையை படைப்பார்கள் என்பது மாத்திரம் உறுதி.
<strong>டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.</strong> தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மறுக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு நெல் உற்பத்தியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. <strong>ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதலுக்கான நிதியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவிக்கும் நிலையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கான நிதியை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அதிகாரப்போக்கு டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong> மேலும், 2016-17 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து நெல் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரெனெ ஏப்ரல் மாதத்திற்கான நெல் கொள்முதலை தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, <strong>டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதோடு, இனிவரும் காலங்களிலும் எந்தவித பாரபட்சமுமின்றி தொடர்ந்து நெல்கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிபக் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். </strong><a href="https://x.com/CMOTamilnadu">@CMOTamilnadu</a>
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத்தொகுதி வாரியான கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர், கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைத் தலைவர்,கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் நியமனம்.
சிவகங்கை மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், S.புதூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், சிங்கம்புணரி தெற்கு, கல்லல் வடக்கு, திருப்பத்தூர் கிழக்கு, திருப்பத்தூர் மேற்கு ஆகிய ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், திருப்பத்தூர் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும், கமுதி ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியம் மறுசீரமைக்கப்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், அபிராமம் மற்றும் முதுகுளத்தூர் பேரூர் கழக கழக செயலாளர்கள் நியமனம்.
இரங்கல் செய்தி: கோவை மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.Y.அப்துல் ரகுமான் அவர்களின் தந்தை திரு.யாஹூப் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத அம்மா திருமண மண்டபங்கள் – இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட அம்மா திருமண மண்டபம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை மூடி வைத்திருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கிய திமுக அரசு தற்போது அம்மா திருமண மண்டபங்களை திறக்காமல் காலம் தாழ்த்துவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அம்மா திருமண மண்டபங்களை திறந்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.R.மதியழகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்தியம் மாவட்ட இளைஞர் பாசறை துணைத் தலைவர் திரு.சே.தங்கம் அவர்களின் தந்தை திரு.K.சேது அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை மேற்கு மாவட்டம் தென்கரை பேரூர் கழக செயலாளர் திரு.K.முத்துசாமி அவர்களின் தந்தை திரு.V.குப்புசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.D.ஜெனோவியர் அவர்களின் தாயார் திருமதி.லூர்துமேரிஅவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரக் கழக செயலாளர் திரு.T.அறிவழகன் அவர்களின் தாயார் திருமதி.பசுபதி அவர்களின் மறைவையொட்டி இரங்கல் செய்தி.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சகாயம் அவர்கள் புகார் – தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை திமுக அரசும் அதன் முதல்வரும் புரிந்து கொள்வது எப்போது ? ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட காவல் பாதுகாப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி விலக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு VAO திரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள் கொலையில் தொடங்கி புதுக்கோட்டையில் ஜகபர் அலி அவர்கள், திருநெல்வேலியில் ஜாஹிர் உசேன் அவர்கள் என தன்னலம் கருதாது இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படும் நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது தமிழகத்தில் எத்தகைய அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. மாவட்ட ஆட்சியராக, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளராக, சட்ட ஆணையராக திறம்பட பணியாற்றியதோடு பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பை தன்னிச்சையாக விலக்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்களுக்கு விலக்கப்பட்ட காவல் பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, விளம்பர மோகத்தை சிறிதுகாலம் ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
ஈரோடு அருகே தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் அடித்துக் கொலை – தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்.ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்த அடையாளம் தெரியாத கும்பல், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு பல்லடம் அருகே மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி அடுத்தடுத்து திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு குற்றச்சம்பவங்களின்றி அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் முழங்கிய அடுத்த இரு தினங்களில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் கொலை தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பழிவாங்கல், ஆதாயக் கொலை, முன்விரோதம் என அடுக்கடுக்கான காரணங்களை கண்டறிந்து சமாளிக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களுக்கு என்ன காரணம் சொல்ல காத்திருக்கிறார் ?எனவே, காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்டக்கழக செயலாளர் திரு.V.காசிமாயன் அவர்களின் சகோதரியும் கரட்டுப்பட்டி கிளைக்கழக மேலமைப்பு பிரதிநிதியுமான திருமதி.வேண்டாமணி அவர்களின் கணவரும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைசெயலாளருமான திரு.தமிழன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. மக்கள் அனைவரின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கு அடிப்படையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நேரத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளி விவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது இளைய பீடாதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் நல்லாசியோடு இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் புகழ்பெற்ற காஞ்சி மடத்தின் சமூக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான பணிகளை மேலும் பல்லாண்டுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உடல் உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தும் இந்நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்றி, சில முதலாளிகளின் கோரப்பிடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த உழைக்கும் வர்க்கம், ஒன்றுகூடி ஆர்ப்பரித்து போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த இந்த மே தினத் திருநாள் ”உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. “உழைப்பிற்கு என்றும் உயர்வு” என்ற வாக்கை மனதில் நிலை நிறுத்தி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை மேற்கு ஒன்றிய துருசுப்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.R.சரவணன் அவர்களின் தந்தை திரு.ராமதாஸ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கரூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.V.O.P.ஜெயசேரன் அவர்களின் சகோதரி திருமதி.K.ஜெயமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தமிழின் மேன்மையை இகழ்ந்தவனை தாயே தடுத்தாலும் விடமாட்டேன் என முழங்கியவரும், தனித்துவமிக்க தன் படைப்புகளின் மூலம் தமிழ் உணர்வை வெளிப்படுத்தியவருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ் ஆசிரியராக, கவிஞராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக பல்வேறு பரிமாணங்களில் தமிழுக்கும், தமிழினத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் விரும்பிய சமத்துவமிக்க சமுதாயம் அமைக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு – பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ?சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் மொத்த பட்டாசுகளில் சரி பாதிக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிவகாசியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கும் நிலையிலும், பட்டாசு ஆலை தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை திமுக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தாததே அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, <strong>மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ திரு.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் உட்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் சகோதரி திருமதி. கோகுல இந்திரா அவர்களின் கணவர் வழக்கறிஞர் திரு.சந்திரசேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. சந்திரசேகர் அவர்களை இழந்துவாடும் திருமதி. கோகுல இந்திரா உட்பட குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை தடுத்து நிறுத்திய பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களையே சாரும் – வரலாற்றை மாற்றித் திரிக்க முயற்சிக்கும் முதலமைச்சரின் அறிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்று தனியார் மயத்தை புகுத்த முயற்சித்த நேரத்தில் திமுக எடுத்த நடவடிக்கையால் அது தடுத்து நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் அறிக்கையின் மூலம் உலக மகா பொய்யை மக்கள் மத்தியில் பரப்ப முயற்சி செய்திருக்கிறார். இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எரிசக்தித் துறையில் அளப்பரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே என்பதை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களும் நன்கு அறிவர். தமிழக மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்திட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை 2013 ஆம் ஆண்டு தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்த போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்து கள்ள மவுனம் காத்த திமுக, தற்போது அதனை தடுத்து நிறுத்தியது நாங்கள் தான் என தம்பட்டம் அடிப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். 2013 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மட்டுமல்ல, அதற்கு முன்பாக 2003, 2006 காலகட்டங்களிலும் என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயன்ற போதெல்லாம் தன்னுடைய துணிச்சலான நடவடிக்கைகளால் அவற்றை தடுத்து நிறுத்தியதோடு, என்.எல்.சி யின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மூலம் வாங்கிய பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, தான் செய்த துரோகங்களை மறைக்க வரலாற்றை மாற்றித் திரிக்க பார்க்கும் திமுகவிற்கு இன்று நடைபெறும் என்.எல்.சி சங்க அங்கீகார தேர்தலில் அந்நிறுவன தொழிலாளர்கள் மட்டுமல்லாது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த கழக செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.
இரங்கல் செய்தி: செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், குரோம்பேட்டை மேற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.காஞ்சி D.வசந்தகுமார் அவர்களின் தாயார் திருமதி.D.அன்னம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.K.பொன்னாச்சி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டங்கள்! இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெறவுள்ள மே தின பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம்:மயிலாடுதுறை சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நியமனம்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்: கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், சிங்கம்புணரி ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், சிங்கம்புணரி ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
கரூர் கிழக்கு மாவட்டம்: குளித்தலை ஒன்றியக் கழகம் குளித்தலை கிழக்கு, மேற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியக் கழகம் கிருஷ்ணராயபுரம் வடக்கு, தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு.
கரூர் கிழக்கு மாவட்டம்:மாவட்ட கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.
ஜம்மு – காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளும் இதே நேரத்தில், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
2024 ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 23 வது இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடமும் பிடித்து தேர்வாகியிருக்கும் திரு.சிவச்சந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியின் பலனாக சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மையானவராக தேர்வாகியிருக்கும் திரு.சிவச்சந்திரன் அவர்களின் பல்வேறு நிலையிலான அரசுப்பணி பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
நியாய விலைக்கடை பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – நியாய விலைக்கடை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம், தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டிய அரசு நிர்வாகம், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சர்வாதிகார போக்கில் எச்சரிக்கை விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br>தமிழகம் முழுவதும் நடைபெறும் நியாய விலைக்கடை பணியாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அன்றாட, அத்தியாவசிய மிக்க உணவுப் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதோடு, இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்திடுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 24.04.2025, அன்று மயிலாடுதுறை மாவட்டதில் அமைந்துள்ள ரெத்னா திருமண மஹாலில் நடைபெறவுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்துவரும் ஓவியம், இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் தருவாயிலும் அவர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறை போராட்டத்தை முன்னெடுக்கும் போதும், பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளிக்கும் திமுக அரசு, தற்போது வரை அந்த கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி ஏமாற்றுவது பகுதிநேர ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். போனஸ், வருங்கால வைப்பு நிதி, குடும்ப நல நிதி, மருத்துவக் காப்பீடு என தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தவித சலுகைகளோ, பணப்பலன்களோ கிடைக்காத காரணத்தினால் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்தை வழங்குவதற்கான அறிவிப்பை தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சொந்த ஊர்களிலேயே தடுத்து நிறுத்தம் – மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான கொள்கை, ஸ்மார்ட் கார்டு, மூன்று சக்கர மோட்டார் வாகனம், வீட்டுவசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு என தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத திமுக அரசு, தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.அதிலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் 50 சதவிகிதம் பணி மற்றும் 4 மணி நேரம் என்று இருந்த வேலையை, 8 மணி நேரம் வேலை மற்றும் நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என மாற்றி உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளுக்கும் திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று பெரியகுளத்தில் நடைபெற்றது.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற வரிகளின் மூலம் தமிழுக்கு பெருமை சேர்த்தவரும், தன் தலைசிறந்த படைப்புகளின் மூலம் மக்களிடையே ஒற்றுமையை விதைத்தவருமான பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது பற்று கொண்டிருந்து தன் எழுச்சி மிகுந்த எழுத்துக்களாலும், ஆற்றல் மிகுந்த படைப்புகளாலும் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களையும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளையும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தன் வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் அர்ப்பணித்த போப் பிரான்சிஸ் அவர்களை இழந்து வாடும் கத்தோலிக்க திருச்சபையினருக்கும், கிறிஸ்துவப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தி குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததாக புகார் – பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுகாதாரமான குடிநீரைக் கூட வழங்க முடியாத திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை கடும் கண்டனத்திற்குரியது.திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்திருப்பதாகவும், 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. உறையூர் பகுதியில் நாள்தோறும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் பல நாட்களாக கழிவுநீர் கலந்து வருவதாக வார்டு கவுன்சிலர் தொடங்கி மாநகராட்சி உயர் அதிகாரிகள் வரை பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மூன்று பேர் உயிரிழந்ததற்கு பின்னர் உறையூர் பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை அவசர அவசரமாக பரிசோதனைக்குட்படுத்தும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம், கழிவுநீர் கலந்த குடிநீர் தொடர்பாக தாங்கள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மூவர் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் எனவும் உறையூர் பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவையான குடிநீரைக் கூட சுகாதாரமான முறையில் வழங்க முடியாத திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், நிர்வாகத் திறனற்ற திமுக அரசும் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறது ?எனவே, மூன்று பேர் உயிரிழப்புக்கான காரணத்தை உடனடியாக கண்டறிவதோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அன்பு மற்றும் கருணையின் அடையாளமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாளை கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூலி உயர்வு கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தமிழக அரசு உடனடியாக தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக வேண்டும்.கூலி உயர்வு வழங்கக் கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கடந்த சில தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய பின்னரும், மீண்டும் அதே போராட்டத்தில் பங்கேற்றிருப்பது, கூலி உயர்வு விசைத்தறியாளர்களுக்கு எத்தகையை அவசியமானது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.கூலி உயர்வு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்த மற்றும் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருப்பதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறியாளர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, இப்பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற தமிழக அமைச்சர்களின் வாக்குறுதி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் போல கிணற்றில் போட்ட கல்லாகவே இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்ளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு அவர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி: </u></strong><strong><u></u></strong> தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.PTR.(எ) ராஜேந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி: </u></strong><strong><u></u></strong>திருச்சி தெற்கு மாவட்டம், வையம்பட்டி வடக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு.வே.சின்னப்பன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
தினத்தந்தி நாளிதழின் அதிபரும், பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவருமான பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு தினம் இன்று. பத்திரிகை, கல்வி, தொழில், ஆன்மீகம், விளையாட்டு என தான் தேர்ந்தெடுத்த அனைத்து துறைகளிலும் சாதனையாளராக விளங்கிய ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகளை இந்நாளில் நினைவில் வைத்து போற்றுவோம்
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.அ.அஜீஸ் கண்ணன் அவர்களின் தந்தை திரு.S.அருணாச்சலம் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இரங்கல் செய்தி: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.K.வினோத்குமார் அவர்களின் தந்தை திரு.D.கிருஷ்ணன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை – விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா? முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? – திமுகவின் குடும்ப ஆட்சிக்கு அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி. தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை -2025 மீது பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத திமுக அரசு, முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கிய பின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகளும், உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில் முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குடும்பத்தினருக்காக மட்டுமே அமைச்சரவையை கூட்டி விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கும் முதலமைச்சருக்கும் திமுக ஆட்சிக்கும் அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி:</u></strong><strong><u></u></strong>சேலம் மத்தியம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றிய பெருமாம்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.புலி (எ) P.செல்வராஜி அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
விடுவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.G.T.யுவராஜ் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
இரங்கல் செய்தி:தென்காசி வடக்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு.T.துரைராஜ் அவர்களின் தாயார் திருமதி.வேலுத்தாய் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு சிறிதும் அடிபணியாமல், தன் இறுதி மூச்சு வரை துணிச்சலுடன் போரிட்டு, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாக திகழ்ந்த வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி:</u></strong><strong><u></u></strong> திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூர் 11வது வார்டு கழக செயலாளர் திரு.P.ஜெயபால் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு சிறிதும் அடிபணியாமல், தன் இறுதி மூச்சு வரை துணிச்சலுடன் போரிட்டு, இந்திய விடுதலைப் போரின் விடிவெள்ளியாக திகழ்ந்த மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த தினம் இன்று. கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்தின் சிகரமாக திகழ்ந்து, தனித்துவமிக்க போர் வியூகங்களின் மூலம் ஆங்கிலேயப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், துணிச்சலையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி: </u></strong><strong><u></u></strong>தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்மேற்கு ஒன்றியம், புலிக்கல்ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.விஜயகுமார் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 22.04.2025, செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு: தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 21.04.2025 அன்று பெரியகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ.M.P.சிவம் மஹாலில் நடைபெறவுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராக திகழ்ந்தவருமான விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் சரணடைய விருப்பமின்றி தாய் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலைப்படை வீரராக மாறி வீரமரணமடைந்த சுந்தரலிங்கனார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.P.சுரேஷ்பாபு அவர்களின் தந்தை திரு.B.பத்ரப்பா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இரங்கல் செய்தி: கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.ராமன் அவர்களின் தாயார் திருமதி.K.மருதம்பாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
திருநெல்வேலி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர் – பள்ளி மாணவர்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் வன்முறையை அகற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் இயங்கிவரும் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள்ளாக நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மோதல் சம்பவத்தை தடுக்க முயன்ற பள்ளி ஆசிரியர் மீதும் நடைபெற்றிக்கும் தாக்குதல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் இரு மாணவர்களிடையே பென்சில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு என காவல்துறையினர் கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. நாங்குநேரி அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் வீடுபுகுந்து சக மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடங்கி அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற மோதல் சம்பவங்களும், வன்முறை நிகழ்வுகளும் பள்ளி மாணவர்கள் மத்தியில் வன்முறை எந்தளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டிய பள்ளிகளில், இத்தகையை சம்பவங்கள் தொடராத வகையில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
சமுதாயத்தின் அடித்தளத்தில் உதித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியாக விளங்கியவரும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவருமான சட்டமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சுதந்திர போராட்ட வீரராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, சுயமரியாதை சுடரொளியாக, ஆற்றல் மிக்க எழுத்தாளராக, சட்ட மாமேதையாக மக்களுக்காகவே வாழ்ந்த டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
புத்தாண்டு திருநாளாம் விஷு திருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தங்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிப் பராமரித்து இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடும் மலையாள மக்கள் அனைவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும். மலரும் இப்புத்தாண்டு மலையாள மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இன்பமும், இனிமையும் செழிக்கின்ற ஆண்டாக அமையட்டும் என பிரார்த்தித்து மீண்டும் ஒருமுறை எனது விஷு திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அத் திட்டத்திற்கான கட்டுமானப் பணியை முழுவீச்சில் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொது உயிரி மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைமிக்க வாயு, மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக ஒருமனதாக தேர்வாகியிருக்கும் சகோதரர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக மக்களின் நலன் மற்றும் மாநில உரிமைகளில் எவ்வித சமரசமுமின்றி செயல்படுவதோடு, மக்கள் நலன் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இரங்கல் செய்தி: விழுப்புரம் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் திரு.P.கோவிந்தராஜ் அவர்களின் தாயார் திருமதி.P.சாவித்திரி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திண்டுக்கல் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் வட்டம், வார்டு, ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் திண்டுக்கல் ஒன்றியம் என ஒன்றிணைக்கப்படுகிறது.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பவானி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
கோவை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
கோவை மேற்கு மாவட்டம் – காந்திநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக் கழகங்கள் காந்திநகர் பகுதி என ஒன்றிணைக்கப்படுகிறது.
கோவை மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு.
கோவை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், பகுதிக் கழக சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர், வாணியம்பாடி நகர கழக செயலாளர் ஆகியோர் நியமனம்
தேனி தெற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நியமனம்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா ? என்பதை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பஸ் என விமர்சித்ததோடு, பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆணவத்துடன் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் செயல்களை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டும் காணாமல் இருந்ததே, தற்போது மேடை ஏறி பெண்கள் குறித்து இத்தகைய அருவருக்கத்தக்க அளவிற்கு பேசும் துணிச்சலை உருவாக்கியுள்ளது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்கள் எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடித்துக்கொண்டு இன்று இல்லம் திரும்ப உள்ளார்.
டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள்-சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் 14.04.2025(திங்கட்கிழமை) அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இரங்கல் செய்தி: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கரம்பக்குடி வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.N.செல்லதுரை அவர்களின் தாயார் திருமதி.N.ராஜம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இரங்கல் செய்தி:தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன் கோவில் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.கோ.பசும்பொன் மகேஸ்வரன் அவர்களின் தந்தையும், தென்காசி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளருமான திரு.V.கோட்டைச்சாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கை திசைதிருப்ப முயன்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது – மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுதலுக்குரியது. அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் படியே மாநிலத்தின் ஆளுநர் நடக்க வேண்டும் என்பதோடு, குடியரசுத்தலைவருக்கு இருப்பதை போன்று மசோதாக்களை கிடப்பில் வைப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் நேற்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை திசைதிருப்பும் வகையிலும், வழக்கில் சிக்கியுள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு மிக மிக அவசியமானது. நேற்று ஒரே நாளில் இருவேறு வழக்குகளில் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பின்பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணவேந்தர் பதவியிடங்களை உடனடியாக நிரப்பும் அதே நேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை தப்பிக்க முயலாமல் விசாரணையை நேர்மையாகவும், நியாயமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. குமரி அனந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றிய திரு குமரி அனந்தனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு வடக்கு ஒன்றியம், விளாங்குடி கிளைக் கழக செயலாளர் திரு.மணிகண்டன் அவர்களின் தாயார் திருமதி.ஜெயலட்சுமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நான்காண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வாலும், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தாலும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி:பெரம்பலூர் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு.N.சிவானந்தம் அவர்களின் தந்தை திரு.நடன சிகாமணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் மூலம் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர் சரிவு – மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நடப்பாண்டில் 38 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 2021 – 22 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 68 சதவிகிதமாக இருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து, நடப்பாண்டில் 38 சதவிகிதமாக சரிந்திருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளின் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. Apple, TCS, Wipro, Infosys உள்ளிட்ட 210 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வளாக நேர்காணலில் குறைந்த அளவிலான மாணவர்கள் மட்டுமே தேர்வாகியிருப்பது அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளை விரும்பி தேர்ந்தெடுக்கும் மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது. நாட்டின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் பயின்றால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் வரும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால கனவை நீர்த்துப் போகும் அளவிற்கு நடப்பாண்டில் நடைபெற்ற வளாக நேர்காணல் அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதோடு, அந்த நேர்காணலில் தேர்வாகக் கூடிய அளவிற்கு மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும் மேம்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் திரு.எம்.ஏ.பேபி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவப் பருவத்திலிருந்தே சிறந்த பொதுவுடமைவாதியாக திகழ்ந்து வரும் திரு.எம். ஏ.பேபி அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியோடு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பணியாற்ற மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
மண்ணின் ஆரோக்கியம் மற்றும் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி வேளாண்மைத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவரும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவருமான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று. இயற்கை விவசாயத்தை வெறும் தொழிலாகக் கருதாமல், வாழ்வியல் நடைமுறையாக பின்பற்றியதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை ஆழமாக வேரூன்றச் செய்த மாமனிதர் நம்மாழ்வார் அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஒருசேர முன்னிறுத்தி தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய இறையாண்மையை பாதுகாக்க பாடுபட்டவரும், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களின் பேரன்பை பெற்றவருமான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் நினைவு தினம் இன்று. மொழியாலும், மதத்தாலும் வேறுபட்டாலும் இந்திய துணைக் கண்டத்தில் வசிக்கும் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வை அனைவரின் மத்தியிலும் ஊட்டி வளர்த்த பெரியவர் காயிதே மில்லத் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – மாநில உரிமை பறிபோவதை இனியும் வேடிக்கை பார்ப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என மாண்புமிகு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டில் அவர்களை கர்நாடக மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற மறுத்து தமிழகத்திற்கான நீரை உரிய நேரத்தில் வழங்க மறுத்துவரும் கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கை, காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி எந்த இடத்திலும் அணை கட்ட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருப்பதோடு, காவிரி நீரை மட்டுமே நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாத நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்திற்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.டி.கே.சிவக்குமார் அவர்களை அழைத்து உபசரிப்பு வழங்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது மாநில உரிமையை விட திமுக அரசுக்கு கூட்டணி தான் முக்கியம் என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு நிரந்தர தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மட்டுமல்லாது, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மூலம் அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தவருமான தேவர் தந்த தேவர் திரு.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த தினமான இன்று மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக பணியாற்றியவருமான தேவர் தந்த தேவர் திரு.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்த திரு.மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய எண்ணற்ற அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
இரங்கல் செய்தி: ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.K.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி க.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு.C.ராமு அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சுதந்திர போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றத்திற்கும் எழுச்சிக்கும் உரிமைக் குரல் எழுப்பிய மாபெரும் தலைவருமான திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு தினம் இன்று. சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து சாதி, மத, பேதமின்றி ஐயா திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்கள் ஆற்றிய மக்கள் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றவாளி என அறிவிக்கும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாயாக்காள் உட்பட 16 தியாகிகளின் நினைவுதினம் இன்று ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து சமத்துவமிக்க போராட்டத்தை முன்னெடுத்து வீரமரணமடைந்த பெருங்காமநல்லூர் தியாகிகளின் வீரத்தையும், துணிச்சலையும் இந்நாளில் நினைவில் வைத்து போற்றிடுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத்தொகுதியை சேர்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது.
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது – மீனவர்களை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும் திமுக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒட்டுமொத்த மீனவர்களையும் ஏமாற்றும் செயலாகும்.ஆம் ஆண்டு கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், அதன் பின் மத்திய ஆட்சி அதிகாரத்தில் சுமார் 16 ஆண்டுகள் அங்கம் வகித்தும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான துரும்பைப் கூட கிள்ளிப்போடவில்லை என்பதை தமிழக மீனவர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழி என்ற வரிகளுக்கு ஏற்ப கச்சத்தீவு தாரைவார்க்கும் போது திரு.கருணாநிதி அவர்கள் எவ்வாறு மவுனம் சாதித்தாரோ, அதைப் போலவே தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக எதையுமே செய்யாமல் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி அரசியலுக்காக தானே தவிர, தங்களின் மீதான உண்மையான அக்கறை அல்ல என்பதை தமிழக மீனவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.எனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தமிழக மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீதமிருக்கும் ஓராண்டில் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், கச்சத்தீவை மீட்கவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றிய மேலாயூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.மலைராஜ் அவர்களின் தாயார் திருமதி.ராக்காயி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
சென்னையில் வழக்கறிஞர், தூத்துக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் என தொடரும் படுகொலைகள் – முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது எப்போது?தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மர்மமான முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், தமிழகத்திற்குள் நுழைந்து வழிப்பறியில் ஈடுபடும் வெளிமாநிலக் கும்பல், ஜாமினில் வெளிவரும் ரவுடிகள் படுகொலை என ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் சிறிதும் வாய்கூசாமல் கொலைச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதாகவும், அவற்றை எதிர்க்கட்சியினர் ஊதிப் பெரிதாக்கி காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. எனவே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறியாமை எனும் மாய உலகத்திலிருந்து விழித்தெழுந்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் அதீத கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி: </u></strong><strong><u></u></strong>கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை நகர 15வது வார்டு கழக செயலாளர் திரு.J.பாலு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
வடசென்னை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்
திருப்பூர் மாநகர் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், பகுதி வட்டக் கழக செயலாளர்கள், திருப்பூர் வடக்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், சுவாமிமலை மற்றும் திருப்பனந்தாள் ஆகிய பேரூர் கழக நிர்வாகிகய், பேரூர் வார்டு கழக நிர்வாகிகள், பேரூர் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வானகரம், பரனூர், செங்கல்பட்டு, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே அளவிற்கு அதிகமாகவும், காலாவதியான நிலையிலும், செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அதற்கு மாறாக தொடர்ந்து சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். தமிழகத்தில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தோடு, கூடுதலாக ரூ.5 முதல் ரூ.75 வரை வசூலிக்கும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்கள் மென்மேலும் சிரமத்திற்குள்ளாகும் சூழல் உருவாக கூடும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வணிகர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, காலாவதியான நிலையில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.
தலைமைக்கழக அறிவிப்பு: கல்வி வள்ளல் ஐயா திரு.மூக்கையாத் தேவர் அவர்களின் பிறந்த நாள் – 04.04.2025, காலை 08.30 மணியளவில் மதுரை மாவட்டம், அரசரடி பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.
தலைமைக்கழக அறிவிப்பு: பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு தினம் – 03.04.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் அமைந்திருக்கும் தியாகிகள் நினைடவித்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள்.
தலைமைக்கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 02.04.2025, புதன்கிழமை மாலை 4 மணியளவில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அமைந்துள்ள சந்தியாஸ் மஹாலில் நடைபெறவுள்ளது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று பரமக்குடியில் நடைபெற்றது.
ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
யுகாதி புத்தாண்டு திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மலரும் இப்புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரின் வாழ்வில் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் ஆண்டாகவும், அனைவரிடத்திலும் ஒற்றுமை மற்றும் நட்புணர்வு மென்மேலும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு மீண்டும் ஒருமுறை எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.
உசிலம்பட்டியில் மதுபானக்கடை அருகே காவலர் கல்லால் அடித்துக் கொலை – தமிழகத்தை கொலைக் களமாக மாற்றிவரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் திரு.முத்துக்குமார் அவர்கள் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக பொதுவெளியில் நடமாட முடியும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாள் தவறாமல் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு எதாவது ஒரு காரணத்தையும் கட்டுக்கதைகளையும் அடுக்கி அதன் பின்னால் மறைந்து கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த படுகொலைக்கு என்ன கதை சொல்லப் போகிறார்? எனவே, ஒவ்வொரு கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கும் காரணம் தேடி நேரத்தை வீணடிக்காமல், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் அடிப்படையாக அமைந்திருக்கும் இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எந்தவித அச்சமும், பதற்றமுமின்றி நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி பெற மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு.L.முனியாண்டி அவர்களின் மனைவி திருமதி M.செல்வி முனியாண்டி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
கூலி உயர்வு கோரி ஒரு வார காலத்திற்கும் மேலாக நீடிக்கும் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் – தமிழக அரசு தலையிட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கூலி உயர்வு கோரியும், மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து ஒருவார காலத்திற்கும் மேலாக நீடித்து வரும் வேலைநிறுத்த போராட்டத்தால் பலநூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் அத்தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை நடைபெற்ற பத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்திருக்கும் நிலையில், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேறு வழியின்றி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக கூலிக்கு நெசவு தொழில் செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளித்துறையினர் அடங்கிய பேச்சுவார்த்தையை உடனடியாக ஏற்பாடு செய்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்றவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சகோதரர் திரு.கருப்பசாமி பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திரைப்பட இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் புதல்வரும், திரைப்பட நடிகருமான திரு.மனோஜ் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. திரு.மனோஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் திரு.ஷிஹான் ஹிசைனி அவர்கள் சிகிச்சைப் பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தில் வில்வித்தை சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை சாதனையாளர்களாக மாற்றிய திரு.ஷிஹான் ஹுசைனி அவர்களின் உறவினர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் செயின்பறிப்பு சம்பவங்கள் – தலைநகர் சென்னையில் திட்டமிட்டு நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கத் தவறிய காவல்துறையும், திமுக அரசும் வெட்கித் தலைகுணிய வேண்டும். சென்னையில் இன்று ஒரே நாளில் வேளச்சேரி, திருவான்மியூர், பள்ளிக்கரணை, சைதாப்பேட்டை உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் தாம்பரம் அருகே 8 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற செயின்பறிப்பு சம்பவங்களை காவல்துறை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மீண்டும் அதே செயின்பறிப்பு சம்பங்கள் தொடர்ந்து அரங்கேற முக்கிய காரணமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பட்டப்பகலில் நடைபெறும் இதுபோன்ற செயின்பறிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த காவல்துறையின் செயலற்ற நிர்வாகத்திறனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு பெண்கள் வீட்டை விட்டே வெளியே வர முடியாத அளவிற்கு அசாதாரண சூழலையும் உருவாக்கியுள்ளது. எனவே, செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 30.03.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பரமக்குடியில் நடைபெறவுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த செயல்வீரர்கள்-செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் 29.03.2025, சனிக்கிழமை காலை 10 மணியளவில் அவனியாபுரத்தில் நடைபெறவுள்ளது.
திரு.சவுக்கு சங்கர் அவர்களின் இல்லத்தில் அரங்கேறியிருக்கும் திட்டமிட்ட வன்முறை அநாகரீகத்தின் உச்சம் – புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.
இரங்கல் செய்தி:புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.M. வடிவேலன் அவர்களின் தாயார் திருமதி.சாரதாம்பாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை – வாக்குறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்ற மறுப்பது சீர்மரபினருக்கு திமுக அரசு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். தென்மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் சமூகத்தினர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெற ஒன்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சீர்மரபு வகுப்பினர் (DNC) மற்றும் சீர்மரபு பழங்குடியினர் (DNT) என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி (DNT) என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை இதுவரை பிறப்பிக்காமல் இருப்பதால் சீர்மரபினர் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, சீர்மரபினர்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, 2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன்பாக அவசரகதியில் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்ட முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த சீர்மரபினர் சமூகத்திற்கும் இழைக்கும் நம்பிக்கை துரோகம் ஆகும். தேர்தலுக்கு முன்பாக எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதும், மறந்து விடுவதும் திமுகவினரின் அடிப்படை குணம் என்பது, சீர்மரபினர் ஒற்றைச் சான்றிதழ் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. எனவே, இனியும் சீர்மரபினர் சமூகத்தினரை ஏமாற்றாமல், சீர்மரபு பழங்குடியினர் என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிடுவதோடு, சீர்மரபினர் சமூகத்தினருக்கு சட்டப்பூர்வமான உரிமைகளும் சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பதற்றம் – அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக மாற்றிய திராவிட மாடல் அரசுக்கு கடும் கண்டனம். திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக் கொலை, ஈரோட்டில் ரவுடி வழிமறித்து படுகொலை, காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தவர் ஓட ஓட விரட்டிக் கொலை, கும்பகோணத்தில் ஜாமீனில் வந்த ரவுடி கொலை என ஊடகங்களில் தினம்தோறும் வெளியாகிவரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. குடியிருப்புகள், பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் தமிழகத்தின் பட்டிதொட்டிகள் வரை அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்கள் திமுக ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டிய ரவுடிகள், துளியளவும் கட்டுப்பாடின்றி அவரவர் விருப்பம் போல எந்தவித அச்ச உணர்வுமின்றி செயல்படுவதே கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டி தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க முயற்சிக்கும் கேரளம், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடகம் என தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் அண்டை மாநில ஆட்சியாளர்களை அருகில் அமரவைத்துக்கொண்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொகுதி சீரமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவது தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், அரசு நிர்வாகத்தின் மீதான ஊழல் புகார்களை திசைத்திருப்புவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகம் என்பதை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிவர். எனவே, நாளொரு நாடகம் பொழுதொரு நடிப்பு, என தன்னைத்தானே பெருமை பேசும் விளம்பர மோகத்தை விட்டொழித்து, திமுக ஆட்சியின் அடையாளமாகவே மாறிவிட்ட கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை வழங்கிடுமாறு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் தெற்கு ஒன்றிய மாணவரணி இணைச்செயலாளர் திரு.K.மணிமாறன் அவர்களின் தந்தை திரு.S.கதிரவன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இரங்கல் செய்தி:தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.R.பூமிநாதன் அவர்களின் தந்தை திரு.ராஜாங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
பூமியில் உள்ள அனைத்து வகையிலான உயிரினங்களும் வாழ்வதற்கு மிகவும் அவசியமான தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நீர்வளங்களை மேம்படுத்தவும் உலக தண்ணீர் தினமான இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகிற 25.03.2025 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொள்ள வேண்டுமாறு தமிழக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
பழனி முருகன் கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு – இந்து சமய அறநிலையத்துறை இயங்குகிறதா ? உறங்குகிறதா ? திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலைத் தொடர்ந்து பழனி முருகன் கோயிலிலும் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் முக்கியமான திருக்கோயில்களில், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்திருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போதும் அதனை தடுப்பதற்கான வழிகளை ஆராயாமல், தட்டிக் கழிப்பதிலும், புதுப்புது காரணங்களை புனைவதிலுமே முழு கவனம் செலுத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கே இதுவரையிலான மூன்று உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருக்கோயில்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை பின்பற்றி ஆன்மீக சிந்தனை, தொழுகை, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில் இஸ்லாமியப் பெருமக்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் வழியில் செயல்படும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்அவர்கள் தலைமையில் வரும் 26.03.2025, புதன் கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமைக் கழக நிர்வாகிகள், தமிழகம் முழுவதும் உள்ள கழக சிறுபான்மையினர் நலப்பிரிவின் நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு/வட்ட, கிளைக் கழகம் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை வரவேற்று மகிழ்கிறோம். எட்டு நாட்களில் முடிவடைய வேண்டிய விண்வெளிப் பயணம் ஒன்பது மாதங்கள் நீடித்தாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டு அத்தகைய நிலையிலும் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இருவரின் வியக்கத்தக்க பணிகள் பாராட்டுக்குரியது. அதிலும், குறிப்பாக விண்வெளியில் நீண்டகாலம் தங்கிய முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விடா முயற்சியும், மன உறுதியும் விண்வெளி ஆராய்ச்சியில் சாதிக்க நினைக்கும் இளம் விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பாடமாகவும் உந்து சக்தியாகவும் விளங்கும்.
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் படுகொலை – அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? நெல்லையில் அதிகாலை தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின் பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த திரு.ஜாஹீர் உசேன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற படுகொலைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக சமூக நலன் சார்ந்து இயங்கி வருவோர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. சாதாரண பொதுமக்கள் தொடங்கி, அரசு ஊழியர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பது மட்டுமே திமுக அரசின் நான்காண்டு கால சாதனை என தமிழக மக்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் திரு.ஜாஹீர் உசேன் படுகொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தகுந்த தண்டனை பெற்றுத் தருவதோடு, இனியாவது அதளபாதாளத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு – ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய கே.ஈச்சம்பாடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.R.காளியப்பன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதா ? – சமூக நீதிக்கு எதிரான திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க அரசு, ஏற்கனவே அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர்களையே மீண்டும் அரசுத்துறைகளில் நியமிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆண்டுதோறும் பத்துலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு மாறாக அரசுத்துறைகளில் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, அரசுப்பணி கனவில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களை நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு தமிழக மக்களே விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள். டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து சென்னையில் போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உட்பட அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுபான விற்பனை மற்றும் விநியோகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், அத்தகையை பெரும் ஊழலுக்கு எதிராக போராட முயன்ற பாஜக வின் தலைவர்களை கைது செய்வதும், வீட்டுச் சிறையில் அடைத்து வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் காவல்துறை, அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக போராடும் தலைவர்களை கைது செய்திருப்பது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உட்பட அக்கட்சியினர் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும் என தமிழக அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்
இரங்கல் செய்தி: தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் ஏரல் திரு.S.ரமேஷ் அவர்களின் தந்தை திரு.ப.சேர்மபாண்டியன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலி – பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தர தவறிய இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப்போக்கே பக்தரின் உயிரிழப்புக்கு காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளுமின்றி பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்த போது, திருப்பதி கோயிலை சுட்டிக்காட்டி அலட்சியமாக பதில் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பக்தர் உயிரிழப்புக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்? எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முறையான திட்டமிடலோடு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், இன்று புதுக்கோட்டை மத்திய மாவட்டம், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், ஆதனக்கோட்டையில் கழக கொடியினை ஏற்றி வைத்து புதிய ஒன்றிய கழக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், இன்று புதுக்கோட்டை மத்திய மாவட்டம், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், பெருங்களூர் ஊராட்சி கழக செயலாளர் திரு.செந்தில்குமார் – நாகராணி தம்பதியரின் குழந்தை செல்வங்களின் காதணி விழாவில் கலந்து கொண்டு குழந்தை செல்வங்களை வாழ்த்தினார்கள்.
ரயில்வே தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? – தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ரயில்வே வாரியத்தின் மூலம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உதவி ஓட்டுநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 6,315 பேரில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களில் அமைக்கப்படும் இது போன்ற தேர்வு மையங்களால், தொலைதூர பயணம் மேற்கொள்வது மட்டுமின்றி, உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்தை அடைவதும் மிகுந்த சிரமம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், ரயில்வே துறையையும் வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி: கரூர் கிழக்கு மாவட்டம், தோகைமலை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.V.மணிவேல் அவர்களின் தாயார் திருமதி.V.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி.
திமுக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை: விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எந்த வகையிலும் உதவாத வெற்று அறிக்கை!
வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் எட்டாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்! சத்திய சோதனைகளைத் தாண்டி புதிய சரித்திரம் படைப்போம்; தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை அமைத்திடுவோம்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற தலைப்பில் “எவருக்கும் எதுவுமில்லை” என்பதை உறுதிபடுத்தும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கை!
இரங்கல் செய்தி:கழக இளைஞர் பாசறை துணைச்செயலாளர் திரு.G.அசோக்குமார் அவர்களின் தந்தையார் திரு.கெவரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.U.சொக்கநாதன் அவர்களின் மனைவி திருமதி.சொ.வைஜெயந்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் நாளாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் கொண்டாடப்படும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் பண்டிகையாக அமையட்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி ஆகிய சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
திருப்பூர் அருகே தோட்ட இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியர் படுகொலை – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை, கொள்ளைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் மற்றொரு படுகொலைச் சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திருப்பூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தனியாக வசித்துவரும் முதியவர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், அவர்களின் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த முதியவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய வேண்டிய காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழக மக்களை திசை திருப்புவதிலும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதிலும், கவனம் செலுத்தி வருவதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருப்பூர் வயதான தம்பதியர் கொலைவழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இரங்கல் செய்தி:திருப்பூர் புறநகர் மாவட்டம், சின்னக்காம்பளையம் பேரூர் கழக செயலாளர் திரு.R.கந்தசாமி அவர்களின் தந்தை திரு.ராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல் – உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்க முடியாத திமுக அரசு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடானது. இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு மூடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தேசத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதில் முன்னணி வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது, அந்தந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பேசுவது வெட்கக் கேடானது. முதலைமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போதும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கும் திமுக அரசு, தமிழகத்தில் முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தொழில் முடக்கத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதோடு, பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை சிறு குறு நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திருவோணம் ஒன்றியக் கழகத்தின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக “திருவோணம் வடக்கு ஒன்றியம்” மற்றும் “திருவோணம் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கழக அமைப்பு ரீதியாக கீழ்கண்டவாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி மறுசீரமைக்கப்படுகிறது.
கோவை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
விழுப்புரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வானூர், கண்டமங்கலம், வல்லம், மயிலம் ஆகிய ஒன்றியக் கழகங்கள் பிரிப்பு.
விழுப்புரம் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்
திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் “மாதவரம் வடக்கு” மற்றும் “மாதவரம் தெற்கு” ஆகிய பகுதி கழகங்கள், “மாதவரம் வடக்கு”, “மாதவரம் மத்தியம்” மற்றும் “மாதவரம் தெற்கு” என மறுசீரமைப்பு
தென்சென்னை மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், தியாகராயநகர் வடக்கு, தெற்கு, மயிலாப்பூர் கிழக்கு, மேற்கு, விருகம்பாக்கம் வடக்கு, தெற்கு, சைதாப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிக் கழகங்களின் நிர்வாகிகள் நியமனம்.
புதுக்கோட்டை மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக “கறம்பக்குடி தெற்கு ஒன்றியம்” மற்றும் கறம்பக்குடி மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு.
புதுக்கோட்டை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில், திரு.கோ.பாலசுப்பிரமணியன் நியமனம்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பொற்றாமரை பகுதிக் கழக செயலாளராக திரு.சி.இளங்கோவன் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராக திரு.V.G.சண்முகம் நியமனம்
கழகபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் திரு.P.சீனிக்குமார், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பொருளாளர் பொறுப்பில் திரு.S.ராஜேஷ் குமரன், கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பில் திரு.A.S.ராமச்சந்திரன், கழக இளைஞர் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் திரு.R.B.விஜயகுமார் நியமனம்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் – திமுக ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் காவல்துறையால், பட்டப்பகலிலேயே பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதற்கு அடிப்படையாக திகழும் போதைப் பொருட்கள் விற்பனையும், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தலைதூக்கும் என்பதையே இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய காவல்துறை, முற்றிலுமாக செயலிழந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறியிருப்பதே, இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து, தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
“எனது ஆண்கள்” என்ற நூலின் மூலம் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.விமலா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் பற்றாளராக, கல்லூரி பேராசிரியராக, சிறந்த மொழி பெயர்ப்பாளராக என பன்முகத் திறமையின் மூலம் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பேராசிரியர் ப.விமலா அவர்களின் கல்வி, எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு பணி மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் புதிய உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டி தென்மாவட்டங்களில் வறண்டு கிடந்த விவசாய நிலங்களை தன் தொலைநோக்கு சிந்தனையின் மூலம் வளம்பெறச் செய்த மாமனிதர் ஜான் பென்னிகுவிக் அவர்களின் நினைவுதினம் இன்று. சோதனைகள் பல சூழ்ந்த நிலையிலும், முல்லைப் பெரியாறு அணையை கட்டி முடிப்பதில் இறுதிவரை உறுதியாக இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஜான் பென்னிகுவிக் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி:</u></strong><strong><u></u></strong>மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கீழக்குயில்குடி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.N.பாண்டி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி:</u></strong><strong><u></u></strong> கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.D.செந்தில்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
<strong><u><font color="#ff000">இரங்கல் செய்தி:</u></strong><strong><u></u></strong> மதுரை புறநகர் மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றிய கண்ணனூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.A.கொடிவீரணன் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.</font color="#ff0000">
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப பெண்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தில் மகளிர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்வரும் சோதனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை உறுதியோடு எதிர்கொண்டு பிறப்பளிக்கும் அன்னையாக, தோழியாக, தங்கையாக, மனைவியாக, மகளாக என வாழ்க்கையின் அனைத்துவித பரிமாணங்களிலும் இன்றியமையாத அர்ப்பணிப்பை வழங்கிவரும் மகளிர் ஒவ்வொருவரின் மகத்துவமிக்க பங்களிப்பை நாம் அனைவரும் போற்றி வணங்கிடுவோம். தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகளிர் காவல்நிலையங்கள் என இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும் எண்ணற்ற மகளிர் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் நன்றி உணர்வோடு இந்நாளில் நினைவு கூர்வோம். சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்நாளில், அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை தன்வசப்படுத்தி வெற்றியுடன் கூடிய புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.