கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எழுத்து வடிவம் தந்தவருமான பாரத ரத்னா டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று. கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, சட்டமேதையாக, சமூகநீதிப் போராளியாக, புரட்சியின் சின்னமாக இந்திய தேசியத்தைக் கட்டியெழுப்பி மகத்தான ஆளுமையாகத் திகழ்ந்த அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், சென்னை-மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில், “தீய சக்தியையும் துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்றவும், அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுத்திட” கழக நிர்வாகிகள் உறுதி ஏற்றனர்.
“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அடக்குமுறைகள் ஆயிரம் வழியில் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுப்பதோடு, தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மா அவர்களின் நினைவுநாளில் உறுதியேற்போம்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை நோக்கி இன்றே புறப்பட இருப்பதை நான் அறிவேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாறாக, அவரவர் வசிக்கும் பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, துரோக கூட்டத்தை அகற்றி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க உறுதியேற்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மக்கள் விரோத ஆட்சியாளர்களை வீழ்த்துவோம்… – துரோகத்தை அகற்றுவோம்… – புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சி அமைக்க உறுதியேற்போம்… – இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் முத்திரை பதிப்போம்…
”சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல” என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் (இரண்டாம் கட்டப் பட்டியல்)
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் : கலசப்பாக்கம் கிழக்கு மற்றும் கலசப்பாக்கம் மேற்கு ஆகிய ஒன்றிய கழகங்கள், “கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியம்”, “கலசப்பாக்கம் மேற்கு ஒன்றியம்” மற்றும் “கலசப்பாக்கம் வடக்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு
விழுப்புரம் தெற்கு மாவட்டம் : மரக்காணம் கிழக்கு மற்றும் மரக்காணம் மேற்கு ஆகிய ஒன்றியக் கழகங்கள், “மரக்காணம் கிழக்கு ஒன்றியம்”, “மரக்காணம் மத்திய ஒன்றியம்” மற்றும் “மரக்காணம் மேற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் : மாவட்டகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்
செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான உழைப்பு மற்றும் விடா முயற்சியின் மூலம் இந்தியாவின் 84 வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கும் வைஷாலி அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் அகற்றுவதோடு, பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்பதற்கு முதலமைச்சர் அவர்களின் தொகுதியான கொளத்தூரில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம் . சாலைகள் மற்றும் குடியிருப்புகளை சூழந்திருக்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதன் மூலம் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத்திற்குரியது – மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானத்தை திரும்ப பெறுவதோடு, ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கிய அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தரமான உணவு தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் நியமனம்
தலைமைக் கழக அறிவிப்பு : இதயதெய்வம் அம்மா அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள்: டிசம்பர் 5ம் தேதி கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அம்மா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சீக்கிய மதத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படும் குருநானக் ஜெயந்தி விழாவை கொண்டாடி மகிழும் சீக்கிய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையுடன் கடவுளை வேண்டுவது, நேர்மையாக வாழ்வது, பிறருக்கு உதவுவது என்ற மூன்று போதனைகளை முன்னிறுத்தி, மூட நம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவாளராக திகழ்ந்த குருநானக் பிறந்தநாளில் அவர் முன்வைத்த போதனைகளை பின்பற்ற உறுதியேற்போம்.
பாசனத்திற்கு தண்ணீர் தர மறுப்பது விவசாயிகளுக்கு தமிழக அரசு இழைக்கும் அநீதி – மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று வைகை அணையில் இருந்து உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும்
தேனி வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக செயலாளர் நியமனம்
இருள் நீங்கி ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் மக்கள் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பரவ அனைவருக்கும் எனது கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மங்களகரமான இந்நாளில் ஏற்றப்படும் தீபத்தில் பிறக்கும் ஒளி, மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் தரக்கூடியதாக அமையட்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பரந்தூர் பசுமை விமானநிலையம் அமைக்கும் பணிக்காக விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு பிறப்பித்திருத்திருக்கும் உத்தரவு கடும் கண்டனத்திற்குரியது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தால் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்களைச் உள்ளடக்கிய பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் முக்கியமான நீர் நிலைகள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளுக்கு மாறாக, நிலம் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பல்வேறு விதமான போராட்டங்கள் மூலமாக தங்களின் எதிர்ப்பை அறவழியில் பதிவு செய்துவரும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை கையாள்வதும், பொதுமக்கள் ஒன்று கூடி கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்த தீர்மானத்தை புறக்கணிப்பதும் அரசின் மக்கள் விரோதப் போக்கையே வெளிக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை கூட வெளியாகாத நிலையில், அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்துவது ஏன் ? என அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழக அரசு தனது விடாப்பிடி தனத்தை கைவிட்டு, விளைநிலங்கள், ஏரி, குளங்கள், குடியிருப்புகளை அழித்து விமான நிலையம் தேவையில்லை என்ற முழக்கத்தை முன்னிறுத்தி ஓராண்டுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னையை காது கொடுத்து கேட்பதோடு, விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் புலிக்கொரடு கிராமம் ராஜிவ்காந்தி நகரில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் நூற்றுக்கும் அதிகமான கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன். காப்புக்காடு வன எல்லையோரத்தில் வசித்து வரும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தாம்பரம் நகராட்சி நகர் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. பட்டா வழங்கப்பட வேண்டிய நிலப்பரப்பிற்கு ஈடாக வேதநாராயணபுரம் கிராமம் தேவர்மலைப் பகுதியில் இருமடங்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும் பட்டா வழங்குவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ராஜிவ்காந்தி நகரில் வசிக்கும் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவர் அணி இணைச்செயலாளர் நியமனம்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், சோழவரம் கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் : சோழவரம் வடக்கு ஒன்றியம் பிரிப்பு
கடலூர் வடக்கு மாவட்டம் : மாவட்ட துணைச்செயலாளர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு, மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர், நல்லூர் கிழக்கு, நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
நாகப்பட்டினம் மாவட்டம் : மாவட்ட பொறியாளர் அணி செயலாளர், திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் : திருவரங்குளம் ஒன்றியம் மறுசீரமைப்பு
விருதுநகர் மேற்கு மாவட்டம் : மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர், இராஜபாளையம் நகரக் கழக செயலாளர் நியமனம்
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநருமான பாத்திமா பீவி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்த பாத்தீமா பீவி அவர்கள் அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனுக்கான கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியதையும் இந்த நேரத்தில் நினைவுகூறுகின்றேன். நீதித்துறையின் உயர்மட்ட பதவிகளில் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொடர்ந்து போராடி, சமத்துவமிக்க நீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த பாத்திமா பீவி அவர்கள் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
பொதுமக்கள் அதிகளவு விரும்பி பருகும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை திடீரென நிறுத்த முடிவு செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. பொதுமக்கள் விரும்பும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் திமுக அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
மதுரை புறநகர் வடக்கு மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் மறுசீரமைப்பு – மாவட்ட செயலாளர்கள் நியமனம்.
சுதேசி இயக்கத்தை தொடங்கி இந்திய மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை அதிகரிக்கச் செய்ததோடு ஆங்கிலேய அரசை தீரமுடன் எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடிய ”கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. வழக்கறிஞர், எழுத்தாளர், தொழிற்சங்கத் தலைவர், அரசியல்வாதி, சுதந்திர போராட்ட வீரர் என பல கோணங்களில் நாட்டிற்காக உழைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தையும், கடின உழைப்பையும் என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. செய்யாறு நகரில் ஏற்கனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. நெல், கரும்பு, கேழ்வரகு, மற்றும் காய்கறிகள் என பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், எவ்வித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அம்மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் நிலவுரிமையை மீட்க கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
உலகமெங்கும் எந்த சூழலிலும் பாகுபாடின்றி செய்திகளையும், புகைப்படங்களையும் சேகரித்து நாட்டுமக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் எனது தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, புயல், வெள்ளம், வெயில், போர் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பற்ற சூழலிலும் மக்களுக்காக களத்தில் நிற்பவர்களை கொண்டாடும் நாளாக மட்டுமல்லாமல் பத்திரிகை சுதந்திரத்தையும், சமூகத்தின் மீதான பத்திரிகைகளின் பொறுப்புக்களையும் உணர்த்தக் கூடிய நாளாகவும் இந்நாள் அமையட்டும். #NationalPressDay
சுதந்திர போராட்ட வீரரும், இடது சாரி இயக்கத்தின் அடையாளமுமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பறைசாற்றி, அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகளிடம் அன்புசெலுத்தி அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றையும் மேம்படுத்தி வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அனைவரும் இந்நாளில் ஏற்போம்.
தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் புகைப்பட கலைஞரும் மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான திரு.சு.குமரேசன் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் மறைவு புகைப்பட பத்திரிக்கை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனித்துவமிக்க புகைப்படக் கலைஞராக திகழ்ந்த திரு.சு.குமரேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது! – வாகனங்களுக்கான வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் திரு.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுத்தேடல் மற்றும் விடாமுயற்சியின் மூலம் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் திரு.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் அடுத்துவரும் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதில் தொடர்ந்து முன்னோடியாக திகழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவாலய பொறுப்பாளர் திருமதி. காந்தி மீனாள் அவர்களின் சகோதரர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. திரு.சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொள்வது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. சுரங்கம், அணுமின் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கி வரும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முல்லைப் பெரியாறின் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி மற்றும் நீர் கசியும் அளவை பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பருவகால மாறுபாடுகளின் போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் நிலவரம் மற்றும் உறுதித்தன்மையை மத்திய கண்காணிப்புக்குழு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்து வந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்குவதோடு, ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் அன்பு நண்பருமான திரு.சீமான் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தான் கொண்ட கொள்கையில் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து பயணிக்கும் திரு.சீமான் அவர்கள் நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்று தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். மின் கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முற்றிலும் முடங்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளான நிலைக்கட்டண உயர்வு மற்றும் உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்து தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியிருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி ஆகிய 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை ரூ.675 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மாநிலத்தின் இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு சமமாகும். ஏற்கனவே வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை மேலும், பாலைவனமாக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அபாயகரமான இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கும் அந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதோடு, காவிரி படுகை ராமநாதபுரம் மாவட்டம் வரை நீள்கிறது என்பதை உணர்ந்து, அம்மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டு வந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக செயலாளர் நியமனம்
கோவை மாநகர், கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டம் : சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
திருச்சி மாநகர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள் நியமனம்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர், பகுதி கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மானூர் வடக்கு மற்றும் மானூர் தெற்கு ஒன்றியம், “மானூர் வடக்கு ஒன்றியம்”, “மானூர் மத்திய ஒன்றியம்” மற்றும் “மானூர் தெற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு.
சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்துகிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கௌரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பிரச்னைக்குரிய அரசாணை எண் 149ஐ ரத்து செய்வதற்கான வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதே அரசாணையின் படி 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திமுக தேர்தல் அறிக்கை எண் 177ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்தி, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தெய்வத்திருமகனார் பசும்பொன் திரு.உ.முத்து ராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா! – கழகத்தின் சார்பில் மதுரை-கோரிப்பாளையம், இராமநாதபுரம்-பசும்பொன் மற்றும் சென்னை-நந்தனத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
தெய்வத்திருமகனார் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அன்னாரது நினைவு ஆலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. விஜயநகர மாவட்டம், கண்டகப்பள்ளி ரயில் நிலைய பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது அவ்வழித்தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவில் தற்போது நடைபெற்றுள்ள இந்த விபத்தினால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் மிகுந்த அச்சம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசும், ரயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டு, இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மாபெரும் தியாகி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் குருபூஜை விழா இன்று. சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக முழக்கம், விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்கள் என தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்ற சமூக சீர்திருத்தவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வழியில் எந்நாளும் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் கண்டனத்திற்குரியது. இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், தற்போது மேலும் 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. ஆகவே, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையை உணர்ந்து, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மீனவர்கள் எந்த விதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்கக் கோரி 13 ஆண்டுகளாக போராடி வரும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவப் பணியில் சேர்ந்த 14 ஆண்டுகளில் மத்திய அரசு மருத்துவர்களைவிட மாநில அரசு மருத்துவர்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக அரசு மருத்துவர்களுக்கான போராட்டக் குழுவினர் கூறுகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரான பின் பலமுறை மனு அளித்தும் தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை என அரசு மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் பொது சுகாதாரத்துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசுக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளான மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் மற்றும் துளசி முருகேசன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் துளசி முருகேசன் அவர்களும், ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் தர்மராஜ் சோலைராஜ் அவர்களும் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை குவித்திருக்கும் இந்திய அணி வீரர்கள், எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள்: கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுகோள்!
அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த தவறிய திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: ‘பொன்னியின் செல்வன்’ ராஜ ராஜ சோழனின் 1038வது சதயவிழா! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா இன்று. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
வடசென்னை மத்திய மாவட்டம் : பெரம்பூர் பகுதி கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சலங்கப்பாளையம் பேரூர் கழக செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் : மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை நிர்வாகிகள் நியமனம்
புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மற்றும் இதயதெய்வம் அம்மா பேரவை பொருளாளர் நியமனம்
விருதுநகர் மேற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்
கடலூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் நியமனம்
திண்டுக்கல் கிழக்கு-மேற்கு-தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் கழக மாவட்டங்கள், “திண்டுக்கல் கிழக்கு” மற்றும் “திண்டுக்கல் மேற்கு” என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைப்பு மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
சுதந்திர இந்தியாவை உருவாக்க ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சியை ஒன்றிணைத்து, முதல் போர்ப் பிரகடனம் அறிவித்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த, மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாளேந்தி போரிட்டதோடு மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் – வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அறிவிப்பு!
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் F51 கிளப் எறிதல் மற்றும் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல F51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்பின் உன்னதத்தை உணர்த்தும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமியைப் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கம்; திமுகவின் மற்றுமொரு நாடகத்தை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை!
விவசாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிர்வாகம் சார்பாக 10 இடங்களில் அமைக்கவிருக்கும் எண்ணெய் கிணறுகளைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் புதியதாக 10 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயற்சிப்பது இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியாகும். கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டல சட்ட மசோதாவில் தொழிற்சாலைகளை காரணம் காட்டி அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் விடுபட்ட காரணத்தினால் அப்பகுதிகளில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, எண்ணெய் கிணறுகள் அமைக்கும் முயற்சிகளை நிரந்தரமாக தடுக்கும் வகையில் அரியலூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கடலூர் மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளர் நியமனம்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல திட்டத்தின் மாதிரி சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அனுப்பப்பட்ட ககன்யான் மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் பயணித்து வங்கக் கடலில் இறங்கியுள்ளது. ககன்யான் திட்டம் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்ப உள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதற்கட்ட சோதனையைப் போலவே அடுத்தடுத்த சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையைப் படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் நியமனம்.
வடசென்னை மத்திய மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
திருப்பத்தூர் மாவட்டம் : ஆம்பூர் நிர்வாகிகள், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், திருப்பத்தூர் வடக்கு ஒன்றிய பிற அணி செயலாளர்கள், ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள், நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள், நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய பிற அணி செயலாளர்கள் நியமனம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஆரணிநகர கழக செயலாளர், பெரணமல்லூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், சேத்துப்பட்டு பேரூராட்சி செயலாளர், ஒன்றிய கழக நிர்வாகிகள் நியமனம்
நாமக்கல் வடக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : பெரியார் நகர பகுதி கழக செயலாளர் நியமனம்
சிவகங்கை மாவட்டம் : கல்லல் வடக்கு மற்றும் கல்லல் தெற்கு ஒன்றிய கழகங்கள், “கல்லல் வடக்கு ஒன்றியம்”, “கல்லல் மேற்கு ஒன்றியம்” மற்றும் “கல்லல் தெற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியங்களாகப் பிரிப்பு
விருதுநகர் மத்திய மாவட்டம் : ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு-ஊராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
கத்தார் மாஸ்டர் செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனும், முதல்நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து, கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார். 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் முதலிடம் வகிக்கும் கார்த்திகேயன் முரளி எஞ்சிய சுற்றுகளிலும் வெற்றிபெற்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா! – அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!
கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.
தலைமைக் கழக அறிவிப்பு : மாமன்னர்கள் மருது சகோதரர்களின் குரு பூஜை விழா – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் பங்கேற்கிறார்கள்.
எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் காலம் நெருங்கிவிட்டது; எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவோம்! – அக்டோபர் 21ஆம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் சங்கமிப்போம்!
தலைமைக் கழக செய்தி வெளியீடு: ‘கொடிகாத்த குமரன்’ திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள்! – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்குமுறை ஆவின் பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு, பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களால் தாக்கப்பட்டு உயிர் போகும் நிலையிலும் தன் கடைசி நொடி வரை இந்திய தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள் இன்று. அடக்குமுறைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் முன்னோடியாக திகழும் வரலாற்று நாயகர் திருப்பூர் குமரன் அவர்களின் தியாகத்தை என்றென்றும் நினைவில் கொள்வோம்.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்தியாவின் தங்கமங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் அவர்கள் சமன் செய்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் வித்யா ராமராஜ், அடுத்தடுத்து உலகளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட்டில் உச்சம் தொட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்கிட வேண்டும்!
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ள நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 6 முறை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததோடு 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெறுவதோடு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள்! – கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க முன்வந்திருக்கும் போக்குவரத்துத் துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த முறை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பணிமனைக்குள் மட்டுமே பணி வழங்கப்படும் என கூறிய போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணையில் பேருந்துகளை இயக்குவதற்கான பணி என குறிப்பிடப்பட்டிருப்பது போக்குவரத்துத்துறையை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கை என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், அவர்களின் கனவை சிதைத்துவிட்டு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை அவசரம் அவசரமாக நியமிப்பது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, தற்போது போக்குவரத்து கழகங்கள் முழுவதையும் தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பது ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே காட்டுகிறது. எனவே, தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை திரும்பப் பெறுவதோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனும் நோக்கில் இலவச கட்டாயக் கல்வி போன்ற புரட்சிகரமான பல திட்டங்களை கொண்டுவந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் இன்று. எளிமையான குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பாலும், தன்னலமற்ற நாட்டுப்பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.
அகிம்சை வழியில் மக்களை வழிநடத்தி சுதந்திரம் எனும் உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் சென்ற தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று. அன்பு, அகிம்சை, உண்மை, கருணை, நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை தன் வாழ்க்கையின் மூலமாகவே வெளிப்படுத்திய அண்ணல் காந்தியடிகளின் வழியில் பயணிக்க அவர் பிறந்த இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிய போட்டிகளைப் போலவே அடுத்த ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைக்கவும், தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வரும் மூன்று வகையான ஆசிரியர் அமைப்புகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. திமுக தேர்தல் வாக்குறுதியான 177 -ன்படி மறுநியமனப் போட்டித் தேர்வு இல்லாமல் தங்களை பணியமர்த்த வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், வாக்குறுதி 181-ன் படி, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்களும், வாக்குறுதி 311ல் கூறியிருப்பது போல சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு இதுவரை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீண்டும் நடைபெற்று வரும் போராட்டம் மூலமாகவே தெரியவருகிறது. ஆசிரியர்களின் போராட்டம் ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர்போராட்டத்தில ஈடுபட்டுள்ள ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த எட்டு பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசியில் இருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் தென்காசி திரும்பும் போது குன்னூர் அருகே எதிர்பாராத விபத்தில் பேருந்து சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதோடு, விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், ஸ்குவாஸ் போட்டியின் மகளிர் அணி பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருக்கும் ஜோஷ்னா சின்னப்பா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய அளவிலான போட்டிகள் மட்டுமல்லாது உலக அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க இவ்விருவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த திரு.அலெக்சாண்டர் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு திரு.அலெக்சாண்டர் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவரும், உணவு உற்பத்தியில் இந்தியா இன்று அடைந்திருக்கும் தன்னிறைவுக்கு முக்கிய பங்காற்றியருமான வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த வேளாண் அறிவியல் உலகுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரிய விளைநிலத்தில் தனது நவீன கனவுகளை விதைத்து, உணவு உற்பத்தியில் இந்தியாவை ஒரு புதிய சகாப்தம் படைக்க செய்ததோடு, உணவிற்காக உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருந்த இந்தியாவை, தனது பசுமைப் புரட்சியின் மூலம் மாற்றிக் காட்டிய மகத்தான மனிதர் என அனைவராலும் போற்றக்கூடியவர் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள். வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் நியமனம்.
செங்கல்பட்டு மத்தியம் மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
ராணிப்பேட்டை மாவட்டம் : அரக்கோணம் நகரக் கழக செயலாளர் நியமனம்
திருப்பத்தூர் மாவட்டம் : நாட்றாம்பள்ளி கிழக்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
கிருஷ்ணகிரி மத்தியம் மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, விவசாயப் பிரிவு, வர்த்தக அணி, சூற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்கள், வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
சேலம் மேற்கு மாவட்டம் : நங்கவள்ளி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
சேலம் மத்தியம் மாவட்டம் : அஸ்தம்பட்டி வடக்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டம் : பெருந்துறை வடக்கு மற்றும் பெருந்துறை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், சென்னிமலை வடக்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
திருவாரூர் மாவட்டம் : மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர், கொரடாச்சேரி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
சிவகங்கை மாவட்டம் : மாவட்ட மாணவியர் அணி செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர், இணைச்செயலாளர் நியமனம்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு : தமிழர் தந்தை திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த திருநாளை மிலாது நபியாக கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வசக்தியும் படைத்த இறைவன் தனக்கு துணையாக நிற்கும் போது எந்த சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தவர் நபிகளார் அவர்கள். வீரம், தியாகம், ஒழுக்கம், தூய்மையான அரசியல், யாருக்கும் அஞ்சாமை உள்ளிட்ட எண்ணற்ற சிறப்புகளுக்கு சொந்தக்காரராகவும் நபிகள் நாயகம் திகழ்ந்தார். உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சமுதாயத்தில் சமாதானமும் சகோதரத்துவமும் தவழவேண்டும் என்ற அண்ணல் நபிகளின் போதனைகளை ஏற்று அவரது வழியில் அயராது உழைத்திட உறுதியேற்போம். உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மிலாது நபி வாழ்த்துக்களை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று. எளிய சொற்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கென தனி பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியல் முன்னோடியாக திகழ்ந்ததோடு சட்டப்பேரவை தலைவராகவும் அமைச்சராகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உண்ணாவிரதம் மற்றும் செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கழகத்தின் சார்பில் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் கருகிய தனது பயிர்களை கண்டு மனமுடைந்த விவசாயி திரு.எம்.கே.ராஜ்குமார் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நீரை நம்பி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒருவரான திரு.ராஜ்குமாரின் பயிர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் முற்றிலும் கருகி வீணான நிலையில், சோகம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாய நிலத்திலேயே உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன் விவசாய நிலத்தில் கருகிய பயிர்களை தானே அழிக்க வேண்டிய சூழல் உருவானதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை பெற்றுத்தந்து விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதோடு, கத்தி முனையில் மிரட்டி அவர்களின் மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடமைகளை பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என இருபுறமும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதோடு, மீனவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களின் உடமைகளையும் மீட்டுத்தருமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதில் அதிக கவனம் செலுத்தியிருப்பது விவசாயிகள் மீதான அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அதிகாரம் மற்றும் அடக்குமுறையின் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் நிறைவேறாது என எச்சரிப்பதோடு, இனியாவது விவசாயிகள் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழில் அமைப்புகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே, கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பெரும் சரிவை சந்திந்த நிலையில், வணிக நிறுவனங்களுக்கு அண்மையில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வோடு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலைக்கட்டண உயர்வும் அவர்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதை தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் போராட்டம் மூலமாகவே உணர முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கபட்டு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெறுவதோடு தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும் கல்வி, தொழில்,விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனையாளராகவும் திகழ்ந்த பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று. சுதந்திர இந்தியாவில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பெண்களின் வளர்ச்சியை பொறுத்தே அமையும் என்று கூறியதோடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி சாதனை படைத்து நாட்டின் முன்னோடியாக திகழ்ந்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை இந்த நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். அதே நேரத்தில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருக்கும் மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகளை உடனடியாக தொடங்குவதோடு, இட ஒதுக்கீடு மசோதாவின் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதுமான அளவு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், நாட்டின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரங்களில் பெண்களுக்கான பங்களிப்பை அதிகப்படுத்தும் 33 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றுவதோடு, அதனை விரைவில் அமலுக்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரு. விஜயகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. வழக்கமான பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் திரு. விஜயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை என தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
சென்னை மடிப்பாக்கத்தில் குறுகிய சாலையில் முந்திச் செல்ல வழிவிடவில்லை எனக்கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு மாவட்டச் செயலாளர் திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது. மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வரும் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்த போது திரு.அழகிரி மற்றும் அவரது குடும்பத்திரை வழிமறித்து அடையாளம் தெரியாத சில நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய புகார் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடே காரணம் என சொல்லப்படுகிறது. ஆகவே, எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணியாமல் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்.
பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
பகுத்தறிவு பகலவன், சமூக தீமைகளுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி போராடிய தீர்க்கதரசி தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாளான இன்று, சென்னை-அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !
தலைமைக் கழக செய்தி வெளியீடு: திரு.எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு : பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், பல்வேறு கழக மாவட்டங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலை/திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மானூர் வடக்கு, மானூர் மத்தியம், மானூர் தெற்கு ஆகிய ஒன்றிய கழகங்கள், கழக அமைப்பு ரீதியாக “மானூர் வடக்கு ஒன்றியம்” மற்றும் “மானூர் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் மறுசீரமைப்பு.
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, கும்பகோணம் சுவாமி மலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்? ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்து தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் மாநகர போக்குவரத்துக் கழகம்(சென்னை) – வடக்கு மண்டல நிர்வாகிகள் நியமனம்
திருப்பத்தூர் மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகிகள், அரிமளம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், திருமயம் தெற்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
சிவகங்கை மாவட்டம் : கண்ணங்குடி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
99 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம்.
தந்தை பெரியார் அவர்களின் 145வது பிறந்தநாள் விழா: சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை (COMPANY TAX) உயர்த்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கான நிறும வரியை மூன்று மடங்கு உயர்த்த உத்தேசித்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் மீது ஏற்கனவே சொத்துவரி, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு உள்ளிட்ட தாங்க முடியாத சுமைகளை ஏற்றியுள்ள நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நிறுமவரியை மூன்று மடங்கு வரை உயர்த்த முடிவு செய்திருப்பது ஒட்டுமொத்தமாக தொழில் நிறுவனங்களையே முடக்குவதற்கு சமமாகும். எனவே சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட நிறும வரி உயர்வுக்கான அறிவிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துவதோடு, இது போன்ற மக்கள் நேரடியாக பாதிக்கக்கூடிய விசயங்களில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
வடசென்னை மத்திய மாவட்டம் : ஆர்.கே நகர் மேற்கு பகுதிக் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
மத்திய சென்னை மத்திய மாவட்டம்: துறைமுகம் மேற்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
திருநெல்வேலி மாவட்டம் மறுசீரமைப்பு!
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு.இம்மானுவேல் சேகரனாரின் 66ஆவது நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாவட்டங்கள் வாரியாக செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் 15 அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி பேருரையாற்றவுள்ளார்.
01.09.2023 நிர்வாகிகள் நியமனம் – செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் கிழக்கு, புதுக்கோட்டை மத்தியம், புதுக்கோட்டை தெற்கு , மதுரை புறநகர் தெற்கு, விருதுநகர் கிழக்கு, விருதநகர் மத்தியம், தென்காசி வடக்கு, திருநெல்வேலி புறநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம்.
சந்திராயன்-3 விண்கலம் தொடர்பான செய்தி சேகரிக்க திருவனந்தபுரம் சென்று நெல்லைக்கு திரும்பும் வழியில் நாங்குநேரியில் ஏற்பட்ட சாலை விபத்தில் புதிய தலைமுறை நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்த செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் நாகராஜன் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வள்ளிநாயகம், நாராயணன் ஆகியோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி LVM ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இரவு பகல் பாராமல், அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திரயான்- 3 விண்கலத்தின் திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் பணியாற்றியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. உலக நாடுகள் பல முயற்சி செய்தும் நெருங்க முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அந்நியர்கள்களிடம் அடிமையாய் இருந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் என வீரப்போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் முதன்மை படைத்தளபதி மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று. தன் நாட்டின் விடுதலைக்காக தனது கடைசி மூச்சுவரை களத்தில் நின்று ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த மாவீரர் ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் – கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
தலைமைக் கழக செய்தி வெளியீடு: பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மக்களிடையே அன்றாட செய்திகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திய மாலைமுரசு அதிபர் மறைந்த பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள் இன்று. தமிழர் தந்தை என போற்றப்படும் ஆதித்தனார் அவர்களின் வழியில் தமிழ் இன உணர்வு கொண்டவராகத் திகழ்ந்து, தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் மாலைமுரசு நாளிதழ் மூலம் தமது இதழியலை முன்னெடுத்தவர் பா.ராமசந்திர ஆதித்தனார் அவர்கள். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளில் அவரது தமிழ் இனப்பற்று, மொழிப்பற்று, ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராக திரு.டிடிவி தினகரன், கழக தலைவராக திரு.C.கோபால், கழக துணைத்தலைவராக திரு.S.அன்பழகன் ஆகியோர் தேர்வு!
கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் (06.08.2023)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மருத்துவர் அணி இணைச்செயலாளர் நியமனம்
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மன்னர் தீரன் சின்னமலை நினைவு நாள்: ஆகஸ்ட் 3 ஆம் தேதி சென்னையில் உள்ள தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச்செயலாளர் நியமனம்
பெரம்பலூர் மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள், பெரம்பலூர் நகரக் கழக செயலாளர் , குரும்பலூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்
திருவாரூர் மாவட்டம் : நீடாமங்கலம் வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்
வடசென்னை மத்தியம் மாவட்டம் : மாவட்டக் கழக இணைச்செயலாளர், துணைச்செயலாளர் நியமனம்
தென்சென்னை தெற்கு மாவட்டம் : வேளச்சேரி கிழக்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
சேலம் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நியமனம்
சேலம் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், சங்ககிரி கிழக்கு மற்றும் நங்கவள்ளி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், தாரமங்கலம் நகர கழக செயலாளர், அரசிராமணி சங்ககிரி பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
சேலம் மத்தியம் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பனமரத்துப்பட்டி கிழக்கு மற்றும் பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : சிவகிரி மற்றும் கொல்லன்கோவில் பேரூர் கழக செயலாளர் நியமனம்
திருப்பூர் மாநகர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் நியமனம்
திருப்பூர் புறநகர் மாவட்டம் : காங்கேயம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், தளி பேரூர் கழக செயலாளர் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் : வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி, இன்று முதல் “கழக மாணவர் அணி” மற்றும் “கழக மாணவியர் அணி” என இரு சார்பு அணிகளாக உருவாக்கப்படுகிறது!
தலைமைக் கழக செய்தி வெளியீடு : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாள் ; கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு: ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்; கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இருவேறு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதலின் போது கடந்த மே மாதம் 4ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியின தலைவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புனிதமான முஹர்ரம் மாதத்தில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையுடன் திகழ வேண்டும் என்று வலியுறுத்திய நபிகள் நாயகம் அவர்களின் வழியில் அன்பு, அறத்தை பின்பற்ற இந்நாளில் உறுதி ஏற்போம்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி தலைவர், கழக இளைஞர் பாசறை தலைவர் மற்றும் பொருளாளர் நியமனம்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் : திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் நியமனம்
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் : மாவட்ட கழக இணைச்செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நியமனம்
செங்கல்பட்டு மத்தியம் மாவட்டம் : மாவட்ட மாணவர் அணி செயலாளர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், வாலாஜாபாத் பேரூர் கழக செயலாளர் நியமனம்
காஞ்சிபுரம் மாவட்டம் : மாவட்ட கழக இணைச்செயலாளர், காஞ்சிபுரம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் : மாவட்ட கழக துணைச்செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நியமனம்
புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் : மாவட்ட வர்த்தக அணி செயலாளர், அரிமளம் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் நியமனம்
சிவகங்கை மாவட்டம் : மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
விருதுநகர் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றம் ஊராட்சி-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மேலப்பாளையம் பகுதி பிரிப்பு
தேர்தல் அறிக்கைகள்
March 20, 2021
2021 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் – சிறப்பு அம்சங்கள்
February 2, 2021
2021 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
March 26, 2019
2019 – தமிழ்நாடு சட்டமன்ற 21 தொகுதி இடைத்தேர்தல்
March 20, 2019
2019 – நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்- சிறப்பம்சம்
March 19, 2019
2019 – நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2022 AMMK. All Rights Reserved.