October 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தெற்கு ஒன்றியம், கட்டிக்குளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.கணேசன் அவர்களின் தாயார் திருமதி.இருளாயி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 2, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு:தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் மற்றும் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவுதினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
October 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர், நேர்மைக்கும் எளிமைக்கும் தலைசிறந்த அடையாளமாகத் திகழ்ந்த மாமனிதர் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று. சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய கடுமையான உழைப்பாலும், நாட்டின் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றாலும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த கிங் மேக்கர் காமராஜர் அவரின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
October 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய தேசத்தின் விடுதலைக்காக மக்களை ஒன்று திரட்டி, அகிம்சை வழியில் சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் நடத்தி வெற்றிகண்ட தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று. உலக அரங்கில் இந்தியர்களை சுயமரியாதையோடு தலைநிமிரச் செய்த சீர்திருத்தச் செம்மல் மகாத்மா காந்தி அவர்கள் கண்ட ஜாதி, மத பேதமற்ற லட்சிய இந்தியாவை உருவாக்கும் பயணத்தைத் தொடர நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
October 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் முகப்பு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிக்கான சாரம் சரிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதே விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
October 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரையுலகமே வியக்கும் அளவிற்கு நடிப்பு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தனித்துவமிக்க உடல் மொழியாலும், உணர்ச்சிப்பூர்வ வசனத்தாலும் அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் திரையுலகை ஆண்டதோடு, காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை கலையுலகத்திற்கு விட்டுச் சென்ற கலைத்தாயின் தவப்புதல்வன் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களைப் போற்றி வணங்கிடுவோம்.
September 30, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியம், பரந்தூர் கிளைக் கழக செயலாளர் திரு.M.குப்பன் அவர்களின் தாயார் திருமதி.M.நவநீதம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவண்ணாமலை அருகே காவலர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் பெண் – ஒட்டுமொத்த காவல்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் புறவழிச்சாலைப் பகுதியில் இளம்பெண் ஒருவரை அவரது சகோதரியின் கண் முன்னரே காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இந்த குரூரச் சம்பவம் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்களால் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் அடியோடு இழக்கச் செய்திருக்கிறது. எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
September 30, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் திரு.T.N.பிரபு அவர்களின் தாயார் திருமதி.நா.அபூர்வம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.