May 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாதுகாப்பில்லாத கொள்முதல் நிலையங்களால் தொடர் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் – செஞ்சி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 12 ஆயிரம் நெல்மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இயற்கை பேரிடர்கள், பொய்த்துப் போன பருவமழை, பயிர்க்காப்பீடு பெறுவதில் சிக்கல், தண்ணீர் பற்றாக்குறை, மும்முனை மின்சாரத்திற்கு தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்கத் தவறிய உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விற்பனைக்காக கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதும், எந்தவித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நீண்ட நாட்கள் தேக்கி வைப்பதுமே நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, செஞ்சி நெல்கொள்முதல் நிலையத்தில் மழையால் நனைந்த நெல்மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவரும் நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், தாமதமாகும் பட்சத்தில் கொட்டகை அமைத்து மழையில் பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், உசிலம்பட்டி நகரக் கழக அவைத்தலைவர் திரு.P.V.K.ராஜேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.P.V.K.கச்சம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொய்வழக்குகள் பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது பொதுமக்கள் புகார் – அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பொய்வழக்குகளை பதிவு செய்யும் தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் திரு.இசக்கிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களின் புகார்களை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, எவ்வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதும், அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, தடியடி நடத்தியிருப்பதும் உட்சபட்ச அராஜகம். எனவே, பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது எழுந்துள்ள புகார்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்கள் மீது பதியப்பட்ட பொய்வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: சேலம் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.P.சங்கர் அவர்கள்
May 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.K.நல்லுப்பிள்ளை மற்றும் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம், குசவன்குண்டு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.மேயர்முத்து ஆகியோரின் தாயார் திருமதி.K.சரஸ்வதிஅவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 7, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அரசின் முன்னேற்றமில்லா மோசமான மூன்றாண்டு கால ஆட்சி – ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தூத்துக்குடி புறநகர் மாவட்டம், ஆறுமுகநேரிபேரூர், 7வது வார்டு கழக செயலாளர் திரு.S.பூல்ராஜ் அவர்கள்உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி செயலாளர் திரு.R.கோகுல் ராஜ் அவர்களின் சகோதரி Dr.R.ஜான்சிராணி அவர்கள்உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள் – மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் அடிக்கடி நிகழும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் முறையான மும்முனை மின்சாரமின்றி கருகும் நெற்பயிர்கள், சீரான மின்விநியோகமின்றி தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம் என திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாள்தோறும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. கோடைகாலத்தில் பொதுமக்கள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையிலான மின்நுகர்வுகளின் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தெரிந்திருந்தும், அதற்கு தீர்வு காணும் வகையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் திமுக அரசு எடுக்கவில்லை என்பதை அடிக்கடி அரங்கேறும் மின்வெட்டுகளே அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தபின்பு மின் கட்டணத்தை உயர்த்துவதில் குறிக்கோளாய் இருந்து அதனை செயல்படுத்திய திமுக அரசு, பொதுமக்களை பாதிக்கும் மின்வெட்டைப் போக்கவோ, மின்சார உற்பத்தியை அதிகரிக்கவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரின் அன்றாட, அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்வதோடு, மின்சாரத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகளை களைந்து, மாநிலத்தில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி கடலூர் கிழக்கு மாவட்டம், புதுப்பாளையம் பகுதிக் கழக நிர்வாகி திரு.சத்தியமூர்த்தி அவர்கள் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.