August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு திருச்சி தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மணப்பாறை ஒன்றியக் கழக செயலாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் புறநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றியம் மற்றும் நகர சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய லாந்தை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.G.இராமகிருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.R.பாக்கியராஜ் அவர்களின் தாயார் திருமதி.பெரியநாயகி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், ராமேஸ்வர நகர 5வது வார்டு கழக செயலாளர் திரு.S.சங்கர் அவர்களின் தாயார் திருமதி.S.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – திரு. ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது? சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. அதேபோல சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும். ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், உளுந்தூர்பேட்டை நகரக் கழக செயலாளர் நியமனம்
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர், அறந்தாங்கி வடக்கு மற்றும் திருவரங்குளம் கிழக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள், ஆலங்குடி பேரூர் கழக செயலாளர் நியமனம்.