January 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த தலைசிறந்த தேசியவாதியுமான வங்கத்துச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் படை திரட்டி போராடிய வீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
January 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்திருக்கும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். செய்திகளில் நடுநிலைத் தன்மை, மக்கள் பிரச்னையில் கூடுதல் கவனம் என தமிழ்ச் செய்தி ஊடகங்களில் தனித்துவமிக்கதாக திகழும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சியின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
January 23, 2026 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.S.V.S.P.மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
January 22, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிக் கழக இணைச்செயலாளர் திரு.D.மோகன்ராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
January 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 I sincerely thank the Hon’ble Union Home Minister, Shri Amit Shah Ji, for welcoming and congratulating the Amma Makkal Munnettra Kazagam on joining the NDA. On behalf of the NDA, I assure that we will work together with full dedication to defeat the corrupt DMK and remove it from power.
January 21, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். தொகுதிப்பங்கீடு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றது என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்வதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
January 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்று இணைந்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வாழ்த்தி வரவேற்ற மத்திய அமைச்சரும், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளருமான மாண்புமிகு திரு.பியூஸ் கோயல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
January 21, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!
January 20, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு:தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு ஜனவரி 25-ல் வீர வணக்கம் செலுத்திடுவோம்.
January 20, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மக்களுக்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டிய ஆளுநர் உரை திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது – நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையின் மரபுகளை மாற்றக்கோரும் ஆளுநர் அவர்களின் செயல்பாடு ஏற்புடையதல்ல.