November 15, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விளையாட்டுத்துறையில் வழங்கப்படும், நாட்டின் மிக உயர்ந்த விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுபெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுபெறும் சதுரங்க விளையாட்டு வீரர் செல்வன்.பிரக்ஞானந்தா அவர்களுக்கும், இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை செல்வி.இளவேனில் வாலறிவன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பெருமை தேடித்தரும் இவர்கள் மூவரும் தத்தமது துறைகளில் புதிய சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறேன்.
March 20, 2019 In தேர்தல் அறிக்கைகள் | Election Reports 0 2019 – நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்- சிறப்பம்சம்
November 14, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நம்பிக்கை நட்சத்திரங்களாம் குழந்தைச் செல்வங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்…” என்ற மொழிக்கேற்ப குழந்தைகளை எல்லா நாளும் கொண்டாடி மகிழ்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளும் சமவாய்ப்புகளோடு வளர்வதற்கும், அதன்வழியாக நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கும் உழைத்திட குழந்தைகள் நாளில் உறுதியேற்றிடுவோம்.
March 19, 2019 In தேர்தல் அறிக்கைகள் | Election Reports 0 2019 – நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்
November 11, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம்.
November 11, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள்.
November 10, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை(Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இருமாநில எல்லை பகுதியில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டு சர்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளா, இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 1ஆம்தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தி.மு.க அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ? ஸ்டாலின் அரசு விழித்துக்கொள்ளுமா? இல்லை தமது கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப்போகிறார்களா?
November 9, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகளில் கழகத்தினர் முழுமையாக ஈடுபடவேண்டும்: கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்!
November 8, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : பேராவூரணி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் நியமனம்.
November 8, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா? சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். புரட்சித்தலைவரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா? தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள், இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.