உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹாத்ராஸில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இலங்கையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வந்த முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதிலும், ஆரோக்கியத்தை பேணிக்காப்பதிலும் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொடிய நோய்த்தொற்று காலத்திலும் தன்னலம் கருதாமல் ஓய்வின்றி உழைத்து மனித உயிர்களை காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் தியாகத்தையும், சேவை மனப்பான்மையையும் போற்றி வணங்கிடும் இந்நாளில், தகுதிக்கேற்ற ஊதியம் கோரி நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.