September 11, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மத்திய சென்னை மத்திய மாவட்டம்: துறைமுகம் மேற்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
September 11, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 6 ஆம் தேதி காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மதுரவாயல் பகுதிகளில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படாத காரணத்தினால் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதே டெங்கு போன்ற நோய்கள் உருவாக காரணம் எனவும், மேலும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் சென்னை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இது போன்ற சென்னை மாநகராட்சியின் அலட்சிய போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மதுரவாயல் உள்பட சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முறையான ஆய்வு மேற்கொண்டு டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திகிறேன்.
September 11, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாவட்டம் மறுசீரமைப்பு!
September 11, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவரும், தீண்டாமையை ஒழிக்க முனைப்போடு பாடுபட்டவருமான திரு.இம்மானுவேல் சேகரனாரின் 66ஆவது நினைவு நாளான இன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
September 8, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 7, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாவட்டங்கள் வாரியாக செப்டம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. செப்டம்பர் 15 அன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சி பேருரையாற்றவுள்ளார்.
September 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “தேவர் தந்த தேவர் ” என போற்றப்படுபவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தலைமையில் பணியாற்றி தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கரத்தை வலுப்படுத்தியவரும், கல்வி தந்தையுமான திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழகத்தின் தென்பகுதி மக்களுக்காக கல்வியை பெற்றுதந்ததோடு, நீதிக்காகவும், நேர்மைக்காகவும் போராடி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையான கச்சத்தீவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்கள் எழுப்பிய குரல் இன்று வரை ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. தற்காலிக சட்டப்பேரவை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ச்சியாக ஆறுமுறை சட்டப்பேரவை உறுப்பினர் என திறம்பட மக்கள் பணியாற்றிய திரு.பி.கே.மூக்கையா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
September 5, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பாக மரியாதையை செலுத்தப்பட்டது.
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை தனிக்குழு அமைத்து முற்றிலுமாக அகற்றி விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.R.சுந்தரராஜ் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்.