August 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.K.பூபதி அவர்களின் தந்தை திரு.கருப்பசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
August 20, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்டம், சூலூர் நகரக் கழக செயலாளர் திரு.S.T.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.S.P.தியாகராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காசி மடத்தின் 21 அதிபரான கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சைவத்தையும் தமிழையும் தனது இரு கண்களாகப் போற்றி பழமையும், பெருமைமிக்க காசி மடத்தின் 21வது அதிபராக ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் சமூக மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்திருக்கும்.
August 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் கிளர்த்தெழுந்த முதல் சுதந்திரப் போரின் தளபதி, ஆங்கிலேயப் படைகளை தனியொருவராகச் சென்று வீழ்த்திய மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்த மாமன்னர் பூலித்தேவரின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராகவும் திகழ்ந்த ஒண்டிவீரனின் வீரத்தையும் துணிச்சலையும் எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
August 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கக்கோரிப்போராடிய போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.15வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் தற்போது வரை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் வேறு வழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 152வது தேர்தல் வாக்குறுதியான போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஓட்டுநர், நடத்துநர் ஆட்சேர்ப்பு தொடங்கி அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு வரை போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, வாழ்நாளின் பெரும்பகுதியை போக்குவரத்துத்துறையில் பணியாற்றியே கழித்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை எந்தவித நிபந்தனையுமின்றிவிடுவிப்பதோடு, அவர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
August 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகரக் கழக செயலாளர் திரு.N.R.அரிராஜன் அவர்களின் தாயார் திருமதி.N.இராஜேஸ்வரி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
August 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சேலம் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.K.சண்முகம் அவர்களின் தாயார் திருமதி.க.தங்கவள்ளி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 18, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் திரு.A.ஞானசேகர் அவர்களின் மாமியார் திருமதி.S.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.