July 19, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
July 19, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மேலப்பாளையம் பகுதி பிரிப்பு
July 19, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
July 19, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
July 19, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தென்காசி தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்
July 18, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய்க்கு பெயரிட பாக்கியம் பெற்ற தனையன் நம் அரசியல் பேராசான் பேரறிஞர் அண்ணா நம் மாநிலத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயரிட்ட நாள் இன்று. இத்திருநாளில் பேரறிஞரின் புகழும் தமிழின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும். #தமிழ்நாடு_நாள்
July 18, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திரு.உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அண்டை மாநில முதல்வர் என்ற வகையில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நட்பு கொண்டிருந்தவர் உம்மன் சாண்டி அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரைச் சந்தித்து விரைவில் நலம் பெற வேண்டும் என்று விரும்பியவர். காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி அவர்களின் மறைவு கேரள மாநில மக்களுக்கு மட்டுமின்றி, தென்மாநில மக்களுக்கும் பேரிழப்பாகும். உம்மன் சாண்டி அவர்களை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
July 15, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மொழியை உயிர் மூச்சாக கொண்டிருந்த மறைமலை அடிகளார் அவர்களின் பிறந்த தினம் இன்று. தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கி வழிநடத்திய முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்த மறைமலை அடிகளார் அவர்கள் கல்வியாளராகவும், பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர். தமிழ் மொழி பற்றுடன் திகழ்ந்த மறைமலை அடிகளார், பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிய நடையில் உரை எழுதியவர். தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தமிழர்களுக்கு ஆங்கில புலமையும் அவசியம் என்பதை வலியுறுத்தியவர். மறைமலை அடிகளாரின் வழியை பின்பற்றி மொழி ஆற்றலுடன் திகழ்வதுடன், அன்பு, அறத்தை கடைபிடித்து வாழவும் இந்நாளில் உறுதி ஏற்போம்.
July 15, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை நிகழ்த்தியதோடு மட்டுமல்லாமல் ஏழைப்பங்காளராக, சாமானிய மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழா இன்று. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
July 14, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும்,தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி திரு.வீர முத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ தரைப்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் இலக்கு வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா மேற்கொண்டுள்ள சந்திரயான் 3 திட்டத்தின் விண்வெளிப்பயணம் அதன் இலக்கை அடைவதுடன் நிலவு குறித்த சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியில் இந்தியா முதன்மை பெறவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும்.