August 31, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
August 30, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசின் செயல் நீதிக்கு புறம்பானது, கடும் கண்டனத்திற்குரியது.
August 30, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாட்டை உணர்த்தும் ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் இந்நாளில், அனைத்து பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
August 28, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் பிரிவில் வென்று இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்ததோடு உலக அளவிலும் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கிறார். விரைவில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கும் நீரஜ் சோப்ரா அங்கும் தங்கம் வென்று வரலாறு படைக்கவும் இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கவும் மனமார வாழ்த்துகிறேன்.
August 28, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் அடையாளமாக திகழும் அறுவடைத் திருநாளான பொன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
August 27, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இது போன்ற விருதுகள் மேலும் உத்வேகத்தை அளிக்கும். ஆசிரியர் பணியில் மேலும் சிறப்பாகச் செயல்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்!
August 26, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உத்திரப்பிரதேசத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள மதுரை வந்திருந்த பயணிகளின் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ரயிலில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில் விதிமுறைகளை மீறி சிலிண்டர் எடுத்துச் சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இனி வரும் காலங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
August 25, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: மாமன்னர் பூலித்தேவன் ஜெயந்தி விழா – செப்டம்பர் 1ஆம் தேதி நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்
August 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவு தினம் இன்று. முதலமைச்சராக இருந்த காலத்தில் தேவதாசி ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவு சட்டம், ஜமீன் இனாம்தாரி ஒழிப்பு சட்டம், பூரண மதுவிலக்கு உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். பல தொண்டு அமைப்புகளை நிறுவி தனது இறுதிக்காலம் வரை சமூக சேவகராகவும் எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் வாழ்ந்து மறைந்த ஓமந்தூராரின் நினைவு நாளில் அவரது சமூக பங்களிப்பை போற்றி வணங்கிடுவோம்.
August 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 69வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள கடைசி விவசாயி திரைப்பட குழுவினருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் “இரவின் நிழல்” படத்தின் மூலம் சிறந்த பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல், “கருவறை” ஆவணப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ள ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வாகியுள்ள “சிற்பங்களின் சிற்பங்கள்” படக் குழுவினர் உட்பட தேசிய விருதுகளை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.