November 14, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளையுடன் நிறைவடையும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்
November 14, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, கேள்விக்குறியாகும் நோயாளிகளின் பாதுகாப்பு, சிகிச்சை அளிப்பதில் அலட்சியப் போக்கு என பல்வேறு நோய்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கும் சுகாதாரத்துறையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
November 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குழந்தைகளே நாட்டின் எதிர்காலம் என பறைசாற்றி, அதற்கான செயல்திட்டங்களையும் வகுத்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகளிடம் அன்புசெலுத்தி அரவணைப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றையும் மேம்படுத்தி வருங்கால சமுதாயத்தின் சிற்பிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கான உறுதிமொழியை அனைவரும் இந்நாளில் ஏற்போம்.
November 13, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையின் காரணமாகவே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன். தலைநகர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
November 11, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
November 10, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது கண்டனத்திற்குரியது.
November 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நீக்கம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
November 9, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விகடன் நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் புகைப்பட கலைஞரும் மூத்த புகைப்பட பத்திரிகையாளருமான திரு.சு.குமரேசன் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரின் மறைவு புகைப்பட பத்திரிக்கை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனித்துவமிக்க புகைப்படக் கலைஞராக திகழ்ந்த திரு.சு.குமரேசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
November 9, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது! – வாகனங்களுக்கான வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
November 9, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அகதிகள் குறித்து ஆய்வு செய்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள மூத்த பத்திரிக்கையாளர் திரு.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுத்தேடல் மற்றும் விடாமுயற்சியின் மூலம் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் திரு.ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள் அடுத்துவரும் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதில் தொடர்ந்து முன்னோடியாக திகழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.