June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகம் – திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை மத்தியம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.S.K.புருஷோத்தமன், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.P.வெங்கடேசன் நியமனம்.
June 24, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.V.மணிகண்டன் அவர்களின் தந்தை திரு.R.வேலுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மொழியின் அழகையும், இனிமையையும் தன் கவிதைகள் மூலமாக உலகறியச் செய்தவரும், தமிழ் திரையிசை உலகிற்கு அழியாப் பொக்கிஷங்களை வழங்கிய கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. காதல், தத்துவம், ஆன்மீகம், மனிதநேயம் என வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் தனது பாடல் மற்றும் கவிதைகளின் மூலமாக மக்களின் உள்ளங்களை தலைமுறை கடந்தும் ஆட்கொண்டிருக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தமிழ் மற்றும் இலக்கியப் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
June 24, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்கவிழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பிறந்தநாளுக்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் மூலம் கடந்த 22 ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படாத காரணத்தினால், அப்பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே பல்வேறு விதமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் பிறந்தநாள் எனும் பெயரில் கூடுதல் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? தமிழகம் முழுவதும் காலாவதியான நிலையில் எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் என்ற ஆபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளை சீரமைப்பது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளையும் சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்கிடுவதோடு, போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
June 23, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் 40 நாள் ஆட்சி, மூன்றாம் ரோம் மன்னர் கலிகுலாவை (Caligula) நினைவுபடுத்துகிறது! சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது!
June 22, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்டம், கரூர் வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.M.பாஸ்கரன் அவர்களின் தந்தை திரு.M.முத்துசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 22, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் திருமதி. A. செந்தமிழ் செல்வி அவர்களின் சகோதரர் திரு.A. சதீஷ்குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 20, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது. சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும். எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
June 20, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதேசமயம், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
June 20, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்களின் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.