June 2, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநருமான மதிப்பிற்குரிய சகோதரி திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @DrTamilisai4BJP
June 2, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இசை உலகின் ஈடு இணையற்ற மாமேதையாகவும், கோடிக்கணக்கான மக்களின் மனங்களை தன் உணர்வுப்பூர்வமான இசையால் ஆட்கொண்டிருப்பவருமான இசைஞானி திரு. இளையராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று. கிராமிய இசையில் தொடங்கி மேற்கத்திய இசை வரை தன்னுடைய தனித்திறமையால் கோலோச்சி, காலம் கடந்தும் நிற்கும் காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தனது இசையால் மக்களை மகிழ்விக்க வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
June 1, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் மதுபானக் கூடத்தில் நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள, இளைஞர்களிடையே ஊடுருவியிருக்கும் போதைப் பொருட்களின் புழக்கத்தை ஒழிப்பதற்கு, அவர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பினால் மட்டுமே உரிய தீர்வை அடைய முடியும் என்ற அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்களின் கருத்து முழுமை பெற வேண்டுமென்றால், தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும். தமிழக முதலமைச்சராக திரு. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற நாளில் கையெழுத்திடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையையே இதுவரை தொடங்கி வைக்க முடியாத தவெக அரசால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. எனவே, இளம்பெண் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் மதுபானக்கூடங்களை மூடுவதோடு, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
June 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: விருதுநகர் மத்திய மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.கோபால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.