March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அரியலூர் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஆண்டிமடம் தெற்கு மற்றும் திருமானூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகம், விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், விளாத்திக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், விளாத்திக்குளம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருநெல்வேலி மாநகர் மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், ஆத்தூர் மத்தியம், ரெட்டியார்சத்திரம் தெற்கு ஆகிய ஒன்றிய கழகங்களின் செயலாளர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு மற்றும் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர்கள் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : நாமக்கல் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நியமனம்.
March 5, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் – குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது ஊருக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கான துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டிவரும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 5, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர் சைதை திரு.S.வீரமணி அவர்களின் தந்தை மார்க்கெட் திரு. B.சேகர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கும், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் புதிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிக்கும் கடும் எதிர்ப்பு – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி நடைபெறும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் விளைநிலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காவுக்கு அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் பகுதியில் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வெப்பநிலை மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் கிராம சபை ஒப்புதல் என எந்தவித முறையான அனுமதியுமின்றி இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விளை நிலங்களோடு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருப்பது சர்வதிகாரப் போக்கின் உச்சபட்சமாகும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும், முறையான அனுமதி இன்றியும் அவசரகதியில் நடைபெறும் இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டமும், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் நடவடிக்கையும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பசுமைப் பரப்பு வெகுவாக குறையும் என்பதோடு உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்று வரும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தையும், ஆலங்கோட்டை கிராமத்தில் அடிக்கல் நாட்டியிருக்கும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுவதோடு, வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.