October 5, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாதி, சமய வேறுபாடுகளை கடந்து இறைவனை ஒளிவடிவாக வணங்கும் அருட்பெருஞ்சோதி வழிபாட்டை முன்னெடுத்த திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்த தினம் இன்று… கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு ஆன்மீக சொற்பொழிவாளராக, சித்த மருத்துவராக, மொழி ஆய்வாளராக, சமூக சீர்திருத்தவாதியாக, பொதுத் தொண்டாற்றிய வள்ளலார் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
October 4, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
October 4, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர்நிலைக்குழு தலைவரும், கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.O.R ராமச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.O.R ராமச்சந்திரன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
October 4, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேயர்களின் கொடூரத் தாக்குதலில் உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த போதிலும் தன் கையில் இருந்த தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்த கொடிகாத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று. தன் இளமைப் பருவத்தில் பாதியளவு கூட அனுபவிக்காமல் தாய்நாட்டின் விடுதலைக்கான வேள்வியில் தன் உயிரையே தியாகம் செய்த திருப்பூர் குமரன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அவர் பிறந்த இந்நாளில் நினைவில் வைத்து போற்றுவோம்.
October 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜார்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியின் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வரும் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த திரு.சுகுமாரன் அவர்கள், கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கண்ணிவெடி வெடித்துச் சிதறியதில் ஒரு காலை இழந்திருக்கும் வீரர் திரு.சுகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
October 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற தலைவருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் வளர்ச்சி, கல்விப் புரட்சி, தொழில் வளர்ச்சி, பாசனத் திட்டங்கள் என தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலத்திற்காக மட்டுமே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.
October 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதகுலத்தின் மிகப்பெரிய சக்தி அகிம்சை தான் என முழங்கி, சத்தியாகிரகம் எனும் அறவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று அன்பு, அகிம்சை, அமைதியை நாட்டு மக்களுக்கு போதித்ததோடு, தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து இந்திய சரித்திரத்தில் புகழ்மிக்க சகாப்தங்களை படைத்த மகாத்மா காந்தி அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நடிப்பை தன் உயிர்மூச்சாகக் கருதி வெள்ளித்திரையில் உச்சம் தொட்டவரும், மக்கள் அனைவராலும் நடிகர் திலகம் என போற்றப்பட்டவருமான செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. உணர்ச்சிமிகுந்த தன் நடிப்பால், மொழியால், நடையால், வசன உச்சரிப்பால் ஒட்டுமொத்த திரையுலகிற்கான சிம்மாசனத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சாதனைகளை போற்றிக் கொண்டாடுவோம்.
October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகின்ற 07.10.2024 அன்று தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
October 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.