February 22, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சாதிவாரி கணக்கெடுப்புக்கு சாதகமாக இருக்கிறோம் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன்?- இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பாணையை உடனடியாக வெளியிட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என சபாநாயகர் அவர்களும் இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 50 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்திருக்கும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினால் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என சபாநாயகர் அவர்கள் கூறியிருப்பது வேடிக்கையானது. பீகார் மாநிலத்தை பின்பற்றி, கர்நாடகா, ஒடிஷா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே தன்னிச்சையாக நடத்தலாம் என்பதற்கும் அதற்கு சட்டரீதியான எவ்வித தடைகளும் இல்லை என்பதற்கும் பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் போது தமிழகம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்? சமூக ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையின் முதல் படியான இட ஒதுக்கீட்டின் அளவு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, மத்திய அரசை காரணம் காட்டி இனியும் காலம் தாழ்த்தாமல், சமூகத்தில் பின் தங்கிய மக்களையும், அவர்களின் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
February 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர் நியமனம்
February 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருப்பத்தூர் மாவட்டம் :சட்டமன்றத்தொகுதி கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்
February 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருப்பத்தூர் மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஜோலார்பேட்டை மேற்கு, ஜோலார்பேட்டை மத்தியம் மற்றும் அணைக்கட்டு மேற்கு-ஒன்றியக் கழக நிர்வாகிகள், -ஊராட்சிக் கழக செயலாளர்கள், -ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
February 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், மாவட்ட மாணவியர் அணி மற்றும் இலக்கிய அணி செயலாளர் நியமனம்
February 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் : மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை துணைத்தலைவர், கறம்பக்குடி பேரூர் கழக துணைச் செயலாளர், கறம்பக்குடி பேரூர் 5வது மற்றும் 6வது வார்டு கழக செயலாளர்கள், பேரூர் சார்பு அணி செயலாளகள் நியமனம்
February 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்: ஆவுடையார்கோயில் வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
February 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமவேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் தமிழக காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் 311 வது வாக்குறுதியாக குறிப்பிடப்பட்டுள்ள சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது ஊதிய முரண்பாடை களைய குழு அமைக்கப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நம்பி ஆசிரியர்கள் களைந்து சென்றனர். அரசு அமைத்த குழுவுக்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னரும் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக்கூறி கடந்த மூன்று நாட்களாக நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை சர்வாதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. பொய்யான வாக்குறுதிகளின் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்பதற்கு பொதுமக்கள் தொடங்கி, விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து மற்றும் மின்வாரிய ஊழியர்கள் என நாள்தோறும் நடைபெறும் போராட்டங்களே சாட்சி. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிப்பதோடு, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
February 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய்மொழிகள் தினம் இன்று. தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
February 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த செல்வி.காவியா பக்கிரிசாமி அவர்கள், துருக்கி நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து போட்டிக்கான இந்திய மகளிர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்ததன் மூலம் இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் செல்வி. காவியா பக்கிரிசாமி அவர்களின் வெற்றிப் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.