October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: திருப்புல்லாணி ஒன்றிய பிரிப்பு: திருப்புல்லாணி கிழக்கு, திருப்புல்லாணி மத்தியம் மற்றும் திருப்புல்லாணி மேற்கு என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: மண்டபம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: நயினார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மேற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூர் கழக நிர்வாகிகள், மயிலாடுதுறை வடக்கு மற்றும் மயிலாடுதுறை தெற்கு ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மேற்கு மாவட்டம்: அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் மேற்கு மற்றும் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதிக் கழக நிர்வாகிகள் நியமனம்.
October 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு – மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை பல்கலைகழகங்களாக மாற்ற அனுமதிக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மாணவ சமுதாயத்தின் நலன் மற்றும் உயர்கல்வியை மேம்படுத்துவதாக கூறி, சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரும்பட்சத்தில் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்பதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயரும் என்ற விமர்சனமும் பரவலாக எழுந்துள்ளது. மேலும், அறநோக்கத்தோடு தொடங்கப்பட்ட கல்லூரிகள் வியாபாரத்தை நோக்கி நகரக்கூடும் என்பதோடு, தங்களின் பணிபாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர். எனவே, அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றிட வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
October 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலை முரசு நாளிதழின் அதிபருமான மறைந்த திரு ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படும் பத்திரிகைத் துறையின் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர்களின் உரிமைக்காகவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடுபட்ட திரு.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
October 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக பாஜக தலைவரும், பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான அன்புச் சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணியைத் தொடர்ந்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
October 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவரும், பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு நல்லாட்சி தந்த மாமன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவுதினம் இன்று. தூக்கு மேடையில் நின்ற போதும் என் தாய்மண்ணைக் காக்கவே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியதாகக் கம்பீரமாக முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.