திமுகவின் சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அவசர அமைச்சர், அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திமுகவினர் அம்மா அவர்களை வீழ்த்த பல்வேறு உத்திகளை எடுத்து செயல்பட்டபோதிலும், அம்மா அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கள் மன்றத்தின் முன் தீயசக்திகளால் அவரை வெல்லமுடியவில்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும். இன்று அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தின் உச்சத்தில் இவரை போன்றோர் பேசிவருகின்றனர். ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன. நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததும், சட்டத்துக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும் உயிர் பலி ஏற்படுவதற்கு காரணம் என அந்தந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், சிறிய நீர் நிலைகளில் அந்தந்த கிராமங்களில் குழுக்களை உருவாக்கி முறையாக கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தருமபுரி அருகே தந்தையே மகனை ஆணவ படுகொலை செய்ததாகவும், மருமகளை கொடூரமாக தாக்கியதாகவும் வெளியாகி உள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்குள் இரண்டு ஆணவ படுகொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிசட்டம் இயற்றப்படும் என எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது கூறியதை முதல்வரான பின்னர் மறந்து விட்டாரோ என்று கருதத் தோன்றுகிறது. தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.