December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வடசென்னை மேற்கு மாவட்டம்: மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், பகுதி சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மேற்கு மாவட்டம்: திருமுட்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருப்பூர் மாநகர் மாவட்டம்: மாவட்ட மாணவர் அணி செயலாளர், பெரியார் காலனி பகுதி கழக செயலாளர் நியமனம்.
December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கோவை வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், மேட்டுப்பாளையம் நகரக் கழக செயலாளர், கவுண்டம்பாளையம் கிழக்கு, மேற்கு பகுதி மற்றும் சரவணம்பட்டி பகுதிக் கழக செயலாளர்கள் நியமனம்.
December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: ஒரத்தநாடு பேரூர் கழக செயலாளர் நியமனம்.
December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை மத்திய மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள், புதுக்கோட்டை தெற்கு நகர வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
December 15, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்: அறந்தாங்கி ஒன்றியம் மறுசீரமைப்பு.
December 15, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வடசென்னை கடற்பகுதிகளில் படர்ந்திருக்கும் ஆபத்தான எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மீனவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பங்கிங்காம் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும் மழைநீரில் CPCL நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் கடல்வளம் மட்டுமல்லாது பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எர்ணாவூர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்களால் சுவாசிக்கவே சிரமமாக இருப்பதாகவும், அதனை அகற்ற இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வடசென்னை பொதுமக்களையும், கடல்வளத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி உள்ளூர் மீனவர்களை ஈடுபடுத்தியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலின் மேற்பரப்பு பகுதிகளில் படர்ந்திருக்கும் எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டாலும் அதனுடைய தாக்கம் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும் எனவும், அதுவரை மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். எனவே, எண்ணெய் படலங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி கூடுதல் எண்ணெய் மிதவைகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் 17ஆம் தேதிக்குள்ளாக எண்ணெய் படலங்களை அகற்றும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
December 15, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு முழுவதும் 140 பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா மடிக்கணிகள் திருடு போனதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதுவரை 140 பள்ளிகளில் விலையில்லா மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்களை பதிவு செய்துள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்கள், பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி சார்ந்த தேடல்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு அம்மா அவர்கள் தொடங்கிய இந்த பொன்னான திட்டத்தை ஆட்சிக்கு வந்தபின் சரிவர செயல்படுத்தாத திமுக அரசின் அலட்சியப் போக்கால், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மடிக்கணிகள் திருடுபோனதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமான விலையில்லா மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களில் முறையாக செயல்படுத்துவதோடு, மடிக்கணினிகள் வைத்திருக்கும் அறையை சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
December 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நேற்று எனது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கிய என் உயிரினும் மேலான கழக நிர்வாகிகளுக்கும் உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும், பிற மாவட்டங்களில் முதியோர் மற்றும் ஆதவற்ற குழந்தைகளுக்கான இல்லங்களில் நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில் அன்னதானத்தையும் கழகத்தினர் வழங்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது. என்னுடைய பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு செய்திருக்கும் இந்த உதவி எந்நாளும் தொடர வேண்டும் என்பதை இந்நேரத்தில் கழகத்தினருக்கு அன்பு வேண்டுகோளாய் வைக்கின்றேன்.