March 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.J.லெனில் பாபு ஜோஸ் அவர்களின் தாயார் திருமதி.A.ஜெய சரோஜாபாய் அவர்கள் இயற்கைஎய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூர் கழக செயலாளர் திரு.S.காளிமுத்தன் அவர்களின் தாயார் திருமதி.பேச்சிமுத்து அவர்கள் இயற்கைஎய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர் திரு.S.குணசீலன் அவர்களின் தாயார் திருமதி.S.தமிழரசி அவர்கள் இயற்கைஎய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:தஞ்சை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி இணைச்செயலாளர் திரு.M.S.நிர்மல் அவர்களின் தந்தை திரு.M.செல்வம் அவர்கள் இயற்கைஎய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” எனும் அருள்மொழியை வழங்கி சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த தினம் இன்று. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து போராடிய மகான் அய்யா வைகுண்டர் அவர்கள் அவரித்த இந்நாளில் அவர் விரும்பிய சாதி, பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
March 2, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் – பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். வீதிக்கு வீதி திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதோடு, தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதன் விளைவாக நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
March 1, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது – தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மதுரையில் நடத்திய சோதனையில் 30கிலோ எடையிலான போதைப் பொருள் ஒரே நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் எனும் திமுக முன்னாள் நிர்வாகி உட்பட பலர் தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரை ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் செய்தி தமிழகம் முழுவதையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசின் அலட்சியப்போக்கால், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மதுரையில் போதைப் பொருள் கடத்திய நபரை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தி பின்னணியில் செயல்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் உரிய தண்டனை பெற்றுத் தருவதோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இனியாவது போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
February 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி ஆலை தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் நடைபெற்ற விதிமீறல்களுக்கும், பழனிசாமி ஆட்சிக் காலத்தின் போது ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பறிபோன 13 உயிர்களுக்கும் நீதி வழங்கும் வகையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது முழுமையாக நடவடிக்கையை தமிழக அரசு விரைவில் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
February 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி படிப்போடு தங்களின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அச்சமோ, பதற்றமோ இல்லாமல் மன உறுதியுடன் மாணவர்கள் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். மிகுந்த தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வருங்காலத்தில் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை தேடித்தரும் சாதனையாளர்களாக உருவெடுக்க மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனையை செய்தி சேகரிக்கச் சென்ற பாலிமர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் திரு.செந்தில் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், திமுகவினரால் கண்மூடித்தனமாக தாக்குதலுக்குள்ளான ஒளிப்பதிவாளர் திரு.செந்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் திரு.செந்தில் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் எந்தவித அச்சுறுத்தலுக்குள்ளாகமலும் அவரவர் பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.