March 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் ஹோலிப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளத்தை உண்டாக்கும் பண்டிகையாக அமையட்டும்.
March 25, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 Form C7 – Information regarding individuals with pending Criminal Cases, who have been selected as our candidates along with the reasons of such selections has also to why other individuals without criminal antecedents could not be selected has candidates.
March 24, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அறிவிப்பு. தேனி (33) நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக கழக பொதுச்செயலாளர், திரு.டிடிவி தினகரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி (24) நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான திரு.P.செந்தில்நாதன் அவர்கள்
March 23, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் (NDA) செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறுகிறது.கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்.
March 23, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.
March 23, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு இணைச்செயலாளர் திரு.K.சாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி.S.சிவகாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 22, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும் உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் பிரதமராக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவதோடு, தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும்.
March 20, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்_2024 – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் 24.03.2024 அன்று தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
March 18, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம் – போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஆவடி அருகே மாநகர அரசுப் பேருந்து ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் கடலூர், திருப்பூர், நாமக்கல், திண்டிவனம் என தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் போதை மாத்திரைகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள், அதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக காவல்துறையின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக சிதைக்கும் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளின் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பான புகார்களில் திமுக அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள்.
March 14, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்! தீய சக்திகளையும் துரோகக் கூட்டத்தையும் வீழ்த்தி, நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி முத்திரையைப் பதிப்போம்!