September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று… எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், தமிழறிஞர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதிமூச்சு வரை போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை போற்றி வணங்கிடுவோம்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் இந்த திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மிலாது நபி வாழ்த்துகள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபியாக கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் உயர்குணம், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்று வாழ வேண்டும் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி உலகெங்கிலும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்
September 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கல்வித் தந்தை திரு.P.K.மூக்கயா தேவர் அவர்களின் நினைவு தினம்: உசிலம்பட்டியில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!
September 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினமான இன்று, நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றும் வகையில் தமிழக மக்கள் மத்தியில் சுதந்திர வேள்வியை விதைத்த மாவீரர் பூலித்தேவர் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
August 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் கோலோச்சிய ஆளுமைமிக்கத்தலைவரும்,பொதுவாழ்க்கையில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவு தினம் இன்று. ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் நலனுக்காகவும், பொதுச்சேவைக்காகவும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் மக்களுக்கும், நாட்டிற்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்து நிற்கும்.
August 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் – சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு,நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கால தாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.