July 22, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் கூடுதலாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்க வழிவகுக்கும் – போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் உட்பட தமிழகம் முழுவதும் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான தமிழக அரசின் புதிய வரைவுத்திட்ட அறிக்கையும், அது தொடர்பான இன்று நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டமும் அரசுப் போக்குவரத்துத்துறையை தனியார்மயமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. தமிழகத்தில் லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கூடுதல் மினி பேருந்துகளை இயக்கும் அனுமதியை தனியாரிடம் வழங்குவது மேலும் மோசமான விளைவையே ஏற்படுத்தும் என போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஏற்கனவே அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் இருக்கும் இடங்கள் உட்பட 25 கிலோ மீட்டர் தூரம் வரை தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது, சென்னை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ (Auto), ஷேர் ஆட்டோ (Share Auto), மேக்சி கேப் (Maxi Cab ) போன்ற வாகனங்களை இயக்கி வரும் தொழிலாளார்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்துத்துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலமாகவே ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மின் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு – திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கடும் கண்டத்திற்குரியது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட அக்கட்சியினர் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்கள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் மருத்துவர் திரு.அன்புமணி ராமதாஸ் உட்பட அக்கட்சியினர் பலர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
July 20, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி விருதுநகர் மேற்கு மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு. A. பாண்டி அவர்களின் தாயார் திருமதி.சந்தன கரும்பாயம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
July 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட சமையல் கூடங்களாக மாறியிருக்கும் அம்மா உணவகங்கள் – பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடித் திட்டமான அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
July 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், திருபுவனம் பேரூர் கழக 6வது வார்டு கழக செயலாளர் திரு.R.K.பெரியசாமி அவர்களின் தாயார் திருமதி.பாண்டியம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
July 19, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; வருகின்ற ஜூலை 24ஆம் தேதி தேனியில் நடைபெறுகிறது.
July 17, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கர்நாடக தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் – தமிழக தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுவது எப்போது ? கர்நாடக முதலமைச்சர் திரு.சித்தராமையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவிகிதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 75 சதவிகிதமும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் 100 சதவிகிதம் கன்னடர்களுக்கே ஒதுக்குவது தொடர்பான சட்ட மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ”தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளை கடந்தும் நிறைவேற்றப்படாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் அமைக்கப்படும் பன்னாட்டு மற்றும் வெளிமாநிலத் தொழிற்சாலைகள் மட்டுமின்றி உள்ளூர் தொழிற்சாலைகளிலும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இது போன்ற சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில் அதிகளவில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு இருந்தும், அதனை செயல்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப்பெரிய துரோகமாகும். எனவே, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழகத் தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக சட்டம் இயற்ற முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 17, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி சிவகங்கை மாவட்டம், கல்லல் தெற்கு ஒன்றியம், வேப்பங்குளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.P.கருப்பையா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
July 16, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்; சென்னையில் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேருரையாற்றுகிறார்கள்!
July 16, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.சி.முருகப்பெருமாள் அவர்களின் தாயார் திருமதி.சி.உண்ணாமலை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.