July 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜனநாயக முறையில் போராட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பறிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராடிவரும் ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, பள்ளிக்கல்வித்துறையின் அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட முயன்ற ஆசிரியர்களை ஒடுக்க முயற்சிப்பது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்றாண்டுகளை கடந்த பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதோடு போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை குற்றவாளிகளை போல கைது செய்வது எந்த வகையில் நியாயம்? என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, கைது செய்யப்பட்டுள்ள தொடக்கக் கல்வி ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீராங்கனை மனு பாக்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்திருக்கும் மனு பாக்கர் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் வெற்றி வாகைசூடி விளையாட்டு உலகில் உச்சம் தொட எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
July 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டின் தென்கோடியான ராமேஸ்வரத்தில் பிறந்து தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகமே வியக்கும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை புரிந்த இந்தியாவின் ஏவுகணை நாயகரும் குடியரசு முன்னாள் தலைவருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. இளம் தலைமுறையினருக்கு ஊக்கமூட்டும் உந்து சக்தியாக, புகழ்பெற்ற அறிவியல் அறிஞராக, நாட்டுமக்களின் அன்பிற்குரிய குடியரசுத் தலைவராக என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக திகழ்ந்த பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவரது நினைவுநாளான இந்நாளில் உறுதியேற்போம்.
July 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் செல்வி.சௌந்தர்யா அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. செல்வி.சௌந்தர்யா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும், நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி பணியாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
July 26, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் திரு.S.முத்துராஜ் அவர்களின் தாயார் திருமதி.S.சண்முகத்தாய் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
July 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் அப்பட்டமான மனித உரிமை மீறல் – தடைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்புகளை, எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி தொழிலாளர்கள் சுத்தம் செய்வது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் நவீன விஞ்ஞான உலகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும் மனிதக் கழிவுகளையும், பாதாள சாக்கடைகளையும் மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது. இந்திய அளவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மரணத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வரும் அவல நிலையிலும், அதனை தடுக்கவோ, மாற்றுவழிகளை கண்டறியவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும், அதனை அமல்படுத்த அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதையும் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அவலச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. எனவே, இனியாவது மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்துவதோடு, அப்பாவி தொழிலாளர்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 25, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டக் கழகங்களின் நிர்வாக வசதிகளுக்காக “கன்னியாகுமரி கிழக்கு”, “கன்னியாகுமரி மத்தியம்” மற்றும் “கன்னியாகுமரி மேற்கு” என மூன்று மாவட்டக் கழகங்களாக மறுசீரமைக்கப்படுகிறது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.N.ராகவன் அவர்களும், கன்னியாகுமரி மத்திய மாவட்ட கழக செயலாளராக திரு.M.ஸ்டீபன் அவர்களும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.A.ஸ்டெல்லஸ் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
July 25, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருநெல்வேலி புறநகர் என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மூன்று மாவட்ட கழகங்கள் மறுசீரமைக்கப்படுகிறது. தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.R.ராமசந்திரமூர்த்தி (எ) வினோத் அவர்களும், தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.N.அருணகிரிசாமி அவர்களும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளராக திரு.M.ஆசிர் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
July 25, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நாமக்கல் வடக்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் “இராசிபுரம்” நகர கழகத்தின் நிர்வாக வசதிக்காக “இராசிபுரம் கிழக்கு”, மற்றும் “இராசிபுரம் மேற்கு” என இரண்டு நகரக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. இராசிபுரம் கிழக்கு நகர கழக செயலாளராக திரு.R.D.தர்மராஜா அவர்களும், இராசிபுரம் மேற்கு நகர கழக செயலாளராக திரு.M.பூபதி அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
July 25, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.S.சுகுமாரன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.