March 23, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டம் : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பிரிவு செயலாளர் நியமனம்
March 23, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டம் : இளையான்குடி ஒன்றியம் பிரிப்பு
March 23, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மத்தியம் மாவட்டம் : சிவகாசி ஒன்றியம் பிரிப்பு
March 23, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மத்தியம் மாவட்டம் : மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
March 23, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மேற்கு மாவட்டம் : ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றியம், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம் மற்றும் இராஜபாளையம் மேற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
March 22, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் நேரிட்ட விபத்தில் 7 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயம் அடைந்தோர் விரைவில் குணம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். தொடர்ச்சியாக இது போன்ற விபத்துகள் நேரிடாமல் இருக்க இனியாவது இந்த அரசு ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமா?
March 22, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கட்டணம் ரூ.55 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் என்றும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். அதே போல காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
March 21, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அரசு மூன்றாவது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விளிம்பிற்குத் தள்ளும் வகையில்தான் இருக்கிறது.
March 21, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு இதயம் கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மொழியால் வேறுபட்டிருந்தபோதிலும் வணிகம், அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கியம் ஆகிய தொடர்புகளுடன் தென் இந்தியாவின் சகோதர, சகோதரிகளாக தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களும் நம்முடன் ஒன்றுபட்டிருக்கின்றனர். யுகாதி புத்தாண்டு கொண்டாடும் இந்த தருணத்தில் இப்போது போல எப்போதும் எல்லா வளமும் பெற்று அன்பும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்வில் என்றும் நீடித்து நிலைத்திருக்க விரும்புகின்றேன்.
March 20, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக பட்ஜெட் 2023-2024: விடியா அரசின் விளம்பர பட்ஜெட்!