May 10, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : மண்ணச்சநல்லூர் கிழக்கு, மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள், மண்ணச்சநல்லூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்
May 10, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டம் : மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை, மாணவர் அணி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்கள் நியமனம்
May 10, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அன்பு சகோதரன் மேலூர் திரு.ஆர்.சாமி அவர்களுக்கு நினைவஞ்சலி!
May 8, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் அதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகளில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது. மாணவச்செல்வங்கள் அனைவரது எதிர்காலமும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
May 7, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில்தோல்வி அடைந்த திமுக அரசு!
May 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், கோடை விடுமுறைக்கு மக்கள் வெளியூர்களுக்கு பயணிக்க முடியாமல் திண்டாடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான ஓட்டுநர்கள் பணிஓய்வு பெற்றதாலும், பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் தயாராக இருந்தாலும் உரிய முறையில் அவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படாததால் பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரம் போக்குவரத்துறையின் நிர்வாக குளறுபடியால் போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டமடைந்திருப்பதாகக் கூறி பேருந்து சேவையை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் தொழிற்சங்கமே குற்றஞ்சாட்டி இருப்பதும், தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் பேருந்து சேவை குறைக்கப்பட்டிருப்பது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதுடன், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பேருந்துகளை இயக்க பாரபட்சமின்றி பணி வாய்ப்புகளை வழங்கி பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
May 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
May 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பழனிசாமி ஆட்சியில் கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வரும் செய்திகளை விசாரித்து, ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாக பழுதாக இருந்த சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய பின் அந்த நிதியைக்கொண்டு வேறு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. உப்புத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று எதுகை மோனையில் வீடியோ வெளியிடும் முதல்வர், தனது ஆட்சியின் கீழ் பணி செய்யும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த முறைகேட்டை மூடி மறைத்து ஊழலுக்குத் துணை போயுள்ளனர் என்பதை அறிவாரா? கடந்த ஆட்சியில் ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த விடியா அரசு, கடந்த கால ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு மற்றொரு முறைகேடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்!
May 2, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைத்தலைவர், கழக மகளிர் அணி இணைச்செயலாளர் நியமனம்
May 2, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வடசென்னை மத்திய மாவட்டம் : மாவட்ட கழக இணைச்செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், பகுதி வட்ட கழக நிர்வாகிகள், பகுதி சார்பு அணி செயலாளர்கள் நியமனம்