October 27, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 26, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள்: கழகத்தினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுகோள்!
October 25, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் கவனம் செலுத்த தவறிய திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
October 25, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: ‘பொன்னியின் செல்வன்’ ராஜ ராஜ சோழனின் 1038வது சதயவிழா! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 25, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையை நடைமுறைப் படுத்திய மாமன்னரும், சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழனின் 1038 வது சதயவிழா இன்று. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் உலகப் புகழ் பெற்றதாக திகழும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியதோடு, சிறந்த நிர்வாகம், நீர் மேலாண்மை, விவசாயம், கட்டடக்கலை, பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த மாமன்னன் ராஜராஜ சோழனின் வீரத்தையும், ஆளுமையையும் எந்நாளும் போற்றி வணங்குவோம்.
October 24, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் நியமனம்
October 24, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திண்டுக்கல் கிழக்கு-மேற்கு-தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் கழக மாவட்டங்கள், “திண்டுக்கல் கிழக்கு” மற்றும் “திண்டுக்கல் மேற்கு” என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைப்பு மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்
October 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சுதந்திர இந்தியாவை உருவாக்க ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சியை ஒன்றிணைத்து, முதல் போர்ப் பிரகடனம் அறிவித்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த, மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாளேந்தி போரிட்டதோடு மத நல்லிணக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.
October 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் – வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் அறிவிப்பு!
October 23, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் F51 கிளப் எறிதல் மற்றும் ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் மூன்று பதக்கங்களையும் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ்குமார் தங்கமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். அதே போல F51 கிளப் எறிதலில் பிரணவ் சூர்மா தங்கமும், தராம்பீர் வெள்ளியும், அமித்குமார் சரோஹா வெண்கலமும் வென்றுள்ளனர். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியால் சாதனை படைத்திருக்கும் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் பதக்கங்களை குவித்து தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.