September 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “தேவர் தந்த தேவர் ” என போற்றப்படுபவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தலைமையில் பணியாற்றி தேசியத்தையும் தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் கரத்தை வலுப்படுத்தியவரும், கல்வி தந்தையுமான திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழகத்தின் தென்பகுதி மக்களுக்காக கல்வியை பெற்றுதந்ததோடு, நீதிக்காகவும், நேர்மைக்காகவும் போராடி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையான கச்சத்தீவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்கள் எழுப்பிய குரல் இன்று வரை ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. தற்காலிக சட்டப்பேரவை தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ச்சியாக ஆறுமுறை சட்டப்பேரவை உறுப்பினர் என திறம்பட மக்கள் பணியாற்றிய திரு.பி.கே.மூக்கையா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
September 5, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி கழகத்தின் சார்பாக மரியாதையை செலுத்தப்பட்டது.
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் சீமைக் கருவேல மரங்களை தனிக்குழு அமைத்து முற்றிலுமாக அகற்றி விவசாயம் செழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.R.சுந்தரராஜ் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்.
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தன் இறுதி மூச்சு வரை சுதந்திரத்திற்காக போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் சொத்து, இளமை, வாழ்நாள் என அனைத்தையும் துறந்து ஈடு இணையற்ற தியாகங்களை செய்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்று தந்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றை எந்நாளும் போற்றி மகிழ்வோம்.
September 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
September 4, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திரு. இமானுவேல் சேகரனாரின் 66 வது நினைவு நாள் : செப்டம்பர் 11 ஆம் தேதி, பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார் !
September 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியின் அமமுக செயலாளர் திரு.பன்னீர்செல்வத்தின் தாயார் ரத்தினம்மாள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த மேலும் மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
September 4, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.