September 15, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, கும்பகோணம் சுவாமி மலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
September 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்? ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
September 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
September 13, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
September 13, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை போக்குவரத்து தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் மாநகர போக்குவரத்துக் கழகம்(சென்னை) – வடக்கு மண்டல நிர்வாகிகள் நியமனம்
September 13, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருப்பத்தூர் மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்
September 13, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகிகள், அரிமளம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், திருமயம் தெற்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
September 13, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
September 13, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டம் : கண்ணங்குடி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்
September 13, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 99 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம்.