September 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பதிவுத்துறை அலுவலகங்களில் வாய்மொழி உத்தரவின் படி வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பதாகப் புகார் – பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே பதிவு செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பதிவுத்துறை அலுவலகங்களில் தமிழக அரசு நிர்ணயித்த நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவிகிதம் வரை உயர்த்தியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலங்களுக்கான சர்வே எண் மற்றும் தெருவாரியாக வழிகாட்டி மதிப்புகளை பதிவுத்துறை நிர்ணயித்து அதற்கான விவரங்களும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதற்கு மாறாக 30 சதவிகிதம் வரை வழிகாட்டி மதிப்பை வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் நிலம் மற்றும் வீட்டு மனை வாங்குவோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரப்படி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவிடமிருந்தோ, தமிழக அரசின் பத்திரப் பதிவுத்துறையிடமிருந்தோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, வாய்மொழி உத்தரவு எனும் பெயரில் நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் வழிகாட்டி மதிப்பு உயர்வை உடனடியாக நிறுத்தி வைப்பதோடு, ஏற்கனவே பதிவுத்துறை இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 25, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவரும், அன்பிற்குரிய நண்பருமான திரு ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு ஏ.சி. சண்முகம் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் மக்கள் பணி மற்றும் கல்விப் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
September 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறையின் முதன்மைச் செயலாளர் திருமதி பீலா வெங்கடேசன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. கொரோனோ பரவல் காலத்தில் சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராகத் திறம்பட பணியாற்றிய திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக அதிகாரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
September 24, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இலக்கிய அணி செயலாளர் நியமனம்.
September 24, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
September 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரம்பரியமிக்க தினத்தந்தி நாளிதழின் அதிபரும் பாமர மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை உண்டாக்கிய பெருமைக்குரியவருமான பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. பத்திரிகையாளராக, தொழிலதிபராக, கல்வியாளராக, விளையாட்டு வீரராக என தான் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து துறைகளிலும் பெரும் சாதனையாளராக விளங்கிய டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் ஆற்றிய பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
September 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட நெல் கொள்முதல் – விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்வதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களாக எவ்வித முன்னறிவிப்பின்றியும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க போதிய இட வசதியில்லாத காரணத்தினாலும், அரசிடம் இருந்து நிதி கிடைப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மழையில் நனைந்து நெற்பயிர்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனடியாக சீர்செய்து, விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
September 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடு முழுவதும் அமலுக்கு வந்த ஜி எஸ் டி வரிக்குறைப்பு ஆவின் நிர்வாகத்தில் மட்டும் இன்னும் அமலுக்கு வராதது ஏன் ? – ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரிக்குறைப்பை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.நெய், வெண்ணெய், பன்னீர் போன்ற பால் பொருட்களுக்கான ஜி எஸ் டி வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் பொருட்கள் முந்தையவரிவிதிப்பின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் நெய் கிலோ ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் வரையிலும், வெண்ணெய் சுமார் 40 ரூபாய் வரையிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் பால் சார்ந்த பொருட்கள் விலைகுறைப்பின்றி விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.ஜி எஸ் டி வரிக்குறைப்பின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்கள், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தில் காலதாமதமாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது எனவே,ஜி எஸ் டி வரிக்குப்பை தமிழகத்தில் அமல்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பொதுமக்களுக்கு எந்தவித கால தாமதமுமின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
September 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் ஜி எஸ் டி வரிக்குறைப்பு இன்று முதல் அமல் – மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீர்திருத்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமைந்திருக்கும் மத்திய அரசின் ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. உயிர்காக்கும் மருந்துகள், தனி நபர் மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கு முழுமையான வரி விலக்கு, சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்களுக்கு வரிக்குறைப்பு நான்கு அடுக்குகளாக இருந்த வரிவிதிப்பு நடைமுறை இரண்டு அடுக்குகளாக மாற்றம் உள்ளிட்ட ஜி எஸ் டி வரிவிதிப்பில் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் மிகுந்த பாராட்டுதலுக்குரியது. பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் தீபாவளிப் பரிசாக ஜி எஸ் டி வரி குறைப்பில் புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
September 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் அடித்துக் கொலை – குற்றவாளிகள் அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் மேற்கு ஒன்றிய கழக முன்னாள் இணைச்செயலாளர் மறைந்த திரு.இராம.சேகரன் அவர்களின் புதல்வர் திரு ராம்பிரகாஷ் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றிருக்கும் இந்த படுகொலைச் சம்பவம் அப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரு ராம்பிரகாஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்திற்குக் காரணமான அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி உறவினர்களும் பொதுமக்களும் பல்வேறுகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தகுந்த தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலமே உள்ள நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.