June 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் திரு.AL.மகேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த குழந்தைகள், வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண நலத்துடன் விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
June 12, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்த தினம் – கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
June 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.S.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.சிவலிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசுப் பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பயணம் மேற்கொள்வதாக கூறி இழிவு படுத்துவதா? – தாய்மார்களை அவமதிப்பதையே வழக்கமாக வைத்திருக்கும் திமுகவுக்கு ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுக்காவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே மலைக்கிராமம் ஒன்றில் சமுதாயக் கூடத்தை திறக்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.மகாராஜன் அவர்கள், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தாய்மார்களை ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிர் மீதான அக்கட்சியினரின் எண்ணம் துளியளவும் குறையவில்லை என்பதையே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் அவர்களின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு மறைமுகமாக பல ஆயிரம் ரூபாயை வசூல் செய்வதையும், பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுகவினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்துவதையும், அவர்களை அவமானப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுகவிற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
June 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி படுகொலை – மேற்கு மண்டலத்தை கொலைக்களமாக மாற்றி வரும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளக்கோவில் சேனாதிபாளையம் அருகே ஆடு மேயக்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேற்கு மாவட்டங்களில் தோட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்கள் திட்டமிட்டு கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆடு மேய்க்கச் சென்ற வயதான தம்பதி கல்லால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை சீரமைக்கவோ, குற்றச்சம்பவங்களை குறைக்கவோ துளியளவும் கவனம் செலுத்தாத திமுக அரசால் தமிழகத்தில் வசிக்கும் முதியவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.எனவே, வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கை விரிவாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதோடு, இனியாவது விளம்பர மோகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கை சீரமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
June 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் பாகனேரியை திறம்பட ஆட்சி செய்த மன்னரும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போரில் முன்வரிசையில் நின்ற துணிச்சல்மிக்க மாவீரருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த தினம் இன்று. மாமன்னர்கள் மருது சகோதரர்களின் போர்ப்படை தளபதியாகவும், நாட்டு மக்களை காக்கும் அரணாகவும் திகழ்ந்து அனைவராலும் தென்பாண்டிச் சிங்கம் என போற்றப்பட்ட மன்னர் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
June 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தேனி தெற்கு மாவட்டம், உத்தமபாளையம் தெற்கு ஒன்றியம், கோகிலாபுரம் கிளைக் கழகச் செயலாளர் திரு.C.பாண்டியன் அவர்களின் மனைவி திருமதி.P.ஜெயா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 9, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நீக்கம் : புதுக்கோட்டை மத்திய மாவட்டம், புதுக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் திரு.A.செல்வக்குமார் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
June 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாமக்கல் அருகே தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அடித்துக் கொலை – காவல்துறையை செயலற்ற நிலையில் வைத்திருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த குளத்துப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து இல்லத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் என மேற்கு மாவட்டங்களில் தோட்டத்து இல்லங்களில் வசிக்கும் வயதான முதியவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வருவதும், அவரவர் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் திருட்டு போவதும் தொடர்கதையாகி வருவது காவல்துறையின் செயலற்ற திறனையும், அலட்சியப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.திருப்பூர் மற்றும் ஈரோடு கொலை வழக்கில் தொடர்புடையதாக கைதானவர்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை, கொள்ளைகளை தாங்களே அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நிலையில், ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் யார்?, விசாரணை அதிகாரி திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கே இன்னமும் விடை கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அதே பாணியில் நாமக்கல் அருகே அரங்கேறியிருக்கும் சம்பவம், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் தானா? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் கூட்டாளிகள் இச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.எனவே, மூதாட்டி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு இதுபோன்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.