September 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனத் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை உலகமெங்கும் பறை சாற்றிய கவிஞரும், தன் எழுத்துக்களின் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வைத் தூண்டிய சுதந்திரப் போராட்ட வீரருமான மகாகவி பாரதியார் அவர்களின் நினைவுதினம் இன்று. கவிஞராக, மொழிப் பற்றாளராக, தேச பக்தராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல்வேறு பரிமாணங்களிலும் தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை ஆகியவற்றை முன்னிறுத்தி காலத்தால் அழியாத புரட்சி கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து வணங்கிடுவோம்.
September 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமூக தீண்டாமையை அடியோடு அகற்றப் பாடுபட்டவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவருமான திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவுதினம் இன்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தனி இயக்கத்தைத் தொடங்கி, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்திட்ட திரு இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
September 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு :கடலூர் மேற்கு மாவட்டம் : கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகரக் கழக செயலாளர் திரு.B.K.மணிவண்ணன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
September 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.E.முத்துக்குமார் அவர்களின் தந்தை திரு.R.எத்திராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி. R.K. தரணி அவர்களின் தாயார் திருமதி.R.காசி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 9, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஆளுநராகவும் திறம்பட பணியாற்றிய மாண்புமிகு திரு.சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்திய திருநாட்டின் வளர்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றிட வேண்டும் என இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
September 9, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி தெற்கு மாவட்டம், வையம்பட்டி வடக்கு ஒன்றியம், தவளைவீரன்பட்டி ஊராட்சிக் கழக செயலாளர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 9, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு:கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக்கூட்டங்களில் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
September 8, 2025 In ticker‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பீகாரில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய கோப்பை வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்களின் சாதனைப் பயணம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரிலும் நீடிக்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முன்னாள் அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் அவர்களின் தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.