February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு மற்றும் சூலூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், சூலூர் ஒன்றியம் என ஒன்றிணைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : கம்பம் நகரக் கழக நிர்வாகிகள், கம்பம் நகர வார்டு கழக செயலாளர்கள், கம்பம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டம் : “கம்பம் கிழக்கு” மற்றும் “கம்பம் மேற்கு” ஆகிய இரண்டு நகரங்கள், “கம்பம் நகரம்” என ஒன்றிணைப்பு.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய டாஸ்மாக் பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலமாக மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அதன் மூலமாக கோடி கோடியாக வருமானம் ஈட்டும் திமுக அரசு, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்ற மறுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது அதன் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பது ஏன்? என போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கம் தான் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் பணியாளர்களை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அசுர குலத்தை அழித்து தேவர்களை பாதுகாத்த தமிழ்க் கடவுள் முருகனை போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்த புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அசுர குலத்தை அழித்து தேவர்களை பாதுகாத்த தமிழ்க் கடவுள் முருகனை போற்றிக் கொண்டாடும் இந்நாளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, ஒளி மற்றும் செழிப்போடு ஆன்மீக அற்புதங்களும் நிறைந்த இந்த புண்ணியத் திருநாளில் முருகப்பெருமானின் தெய்வீக அருள் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், அளவில்லா மகிழ்ச்சியையும் வழங்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே அதனை ஆக்கிரமிப்பதா? – மூடப்பட்ட இரவீஸ்வரர் திருக்கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.500 ஆண்டுகள் பழமையான சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிமிரத்து வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றியிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையே இரவீஸ்வரர் கோயில் திருக்குளத்தை மூடி வாடகை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி அதன் மூதல் வசூலில் இறங்கியிருப்பதாக வரும் செய்திகள் கடும் கண்டனத்திற்குரியது. சோழர் காலத்தில் கட்டப்பட்டு பல்வேறு அதிசயங்களையும், புராணப் பின்னணியையும் கொண்டிருக்கும் இரவீஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளம், நிலத்தடி நீரை பெருக்குவதோடு, குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியதால் அக்குளம் மூடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். எனவே, வேண்டுவோருக்கு வேண்டியதை தந்து அருள் புரிந்து வடசென்னைக்கே பெருமை சேர்க்கும் வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயில் திருக்குளத்தை மீட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
February 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரையை ஆட்சி செய்த மன்னர்களில் தன்னாட்சி பெற்ற தலைசிறந்த மன்னரும், மன வலிமையாலும், படை பலத்தாலும் போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத வீரராகவும் வலம் வந்த மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. மதுரையில் கோயில் நிர்வாகங்களை சீர்திருத்தி திருப்பணிகளை மேற்கொண்டதோடு, கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் உலகப்புகழ்பெற்ற அரண்மனையை கட்டிய மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் கலைப்பணிகளையும், ஆளுமைத் திறனையும் போற்றி வணங்கிடுவோம்.
February 10, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் அவர்கள் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
February 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 குரூப் 2 ஏ தேர்வில் முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்வி இடம்பெற்றிருப்பதாக புகார் – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா? அல்லது திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா ? தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய குருப் 2 ஏ தேர்வில் தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழை பாடும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசுப்பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், முதலமைச்சரின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக தேர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டிருக்கும் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. முதலமைச்சரின் புகழை பாடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு அரசுத்துறைகளில் பணியாற்றவா ? அல்லது அரசுப்பணிகளில் இருந்து கொண்டு திமுகவுக்கு கட்சிப் பணியாற்றவா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் கலாச்சாரம், நவீன வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் விடுதலைப் போராட்டங்கள், நுண்ணறிவுத்திறன் போன்ற பாடத்திட்டங்களோடு, முதலமைச்சரின் புகழ் பாடவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா ? என அரசுப்பணிக்கான தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் அந்தந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் அடங்கிய கேள்விகள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்வதோடு, அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.