November 4, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.
November 3, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர் இராஜராஜ சோழன் அவர்களின் 1037வது சதய விழா : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பெருவுடையார் கோவில் அருகில் அமைந்துள்ள இராஜராஜ சோழரின் திருவுருவச்சிலைக்கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
November 1, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில், அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும். சென்னை தவிர தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட கனமழை பெய்துவரும் இடங்களில் மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் உதவி பணிகளை விரைந்து செயல்படுத்திட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை தமிழக அரசு தாமதமின்றி அமைத்திட வேண்டும். நீர்நிலைகளையும் வடிகால்களையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
October 30, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நினைவாலயத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
October 30, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தென்னாட்டு போஸ் என அழைக்கப்படுபவரும் இந்திய விடுதலைக்கு போராடியவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் தலைமையில் பசும்பொன்னில் அன்னாரது நினைவாலயத்தில் மரியாதையை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சியில் கழக நிர்வாகிகள் தேவர் திருமகனாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
October 28, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த திரு.சச்சின் சிவா (எ) C.சிவக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இளம் வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டாலும் தனது கடின உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கும் சிவா, இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். கிரிக்கெட்டில் புதிய சாதனைகளைப் புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் பெருமை தேடித்தர வேண்டுகிறேன்.
October 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தேவர் திருமகனார் குரு பூஜை விழா : வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள் !
October 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுசகோதரர்கள் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 26, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு காலத்தில் உலகைக் கட்டி ஆண்ட நாடு, தற்போது நெருக்கடியைச் சந்திக்கும் நேரத்தில் அதன் பிரதமராகி இருக்கும் திரு.ரிஷி சாதனைகள் புரிந்து நம் அனைவருக்கும் பெருமை தேடித்தரட்டும்.
October 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.