October 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்துவந்த திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்கள், சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, அதன் தொடர்ச்சியாக மரணத்தை தழுவியிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை மாநகரில் மிகுந்த தொய்வோடு நடந்துவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், பணிகள் முடியும்வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படியும் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தும் தமிழக அரசு காட்டிய அலட்சியத்தால் இன்று முத்துக்கிருஷ்ணனை இழந்திருக்கிறோம். இனிமேலும் உயிர்ப்பலிகள் ஏற்படாத அளவுக்கு இனியாவது தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அத்துடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். மறைந்த செய்தியாளர் திரு. முத்துக்கிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி போதாது. அவரது வயது, குடும்ப சூழல் இவற்றை கருத்தில்கொண்டு, ஒரு தனி நேர்வாக இச்சம்பவத்தைக் கருதி, குறைந்தது ஐம்பது லட்சம் ரூபாயை அந்தக் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
October 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மறத்தமிழ் வீரத்திற்கும் மறக்க முடியாத தியாகத்திற்கும் அடையாளமாகத் திகழும் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை நாளில் அவர்களை வணங்குகிறேன். தாய்நாட்டையும் தமிழ் மக்களையும் உளமாற நேசித்து மருதுபாண்டியர் காட்டிய வழியில் பயணிப்போம்!
October 23, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
October 20, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது.
October 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குரு பூஜை விழா : கழக பொதுச்செயலாளர் அவர்கள் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் பங்கேற்கிறார்கள்!
October 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்ப் பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையான ‘மாலை முரசு’ அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று! பத்திரிகை நடத்துவது என்பது வெறும் தொழில் மட்டுமல்ல என்ற உணர்வோடு, தமிழர் நலனில் மிகுந்த அக்கறையோடு ஆற்றிய பணிகளைப் போற்றிடுவோம்!
October 15, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மக்களின் குடியரசுத்தலைவராகத்” திகழ்ந்த, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 11, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் தீபாவளி போனஸ் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
October 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
October 4, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள கொடி காத்த குமரன் அவர்களின் மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.