December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : எஸ்.புதூர் ஒன்றியம் பிரிப்பு.
December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : திருப்பத்தூர் வடக்கு & திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் பிரிப்பு.
December 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், தலைமைக் கழக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
December 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள்: சென்னை, மெரினாவிலுள்ள புரட்சித்தலைவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
December 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
December 23, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் நலன் கருதி பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழக அரசு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
December 23, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? ஏற்கனவே காப்புக்காடுகளின்(Reserved Forest) எல்லையிலிருந்தே குவாரி நடத்தலாம் என உத்தரவிட்ட அடுத்த சில நாட்களிலேயே தொல்லியல் நினைவுச் சின்னங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி நடத்தக்கூடாது என்ற விதிமுறையை தற்போது தளர்த்தியிருக்கிறார்கள். கடும் கண்டனத்திற்குரிய இந்த அரசாணையை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்த துறையின் அமைச்சருக்கு பயந்து இப்படி அரசாணைகளை அடுத்தடுத்து பிறப்பிக்க முதலமைச்சர் ஒப்புதல் அளிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? திரு.ஸ்டாலின் விளக்கம் கொடுப்பாரா?
December 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பொறுப்பிலிருக்கும் திரு.T.பன்னீர்செல்வம் மற்றும் தஞ்சாவூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைத்தலைவர் திரு.வீமராஜன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
December 22, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த நூல்களைப் படைத்துவரும் அவரது பணி சிறக்கட்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல நூல்களை அவர் படைக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
December 21, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?