September 27, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று. எளிய சொற்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கென தனி பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியல் முன்னோடியாக திகழ்ந்ததோடு சட்டப்பேரவை தலைவராகவும் அமைச்சராகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.
September 26, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உண்ணாவிரதம் மற்றும் செவிலியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கழகத்தின் சார்பில் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
September 26, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் கருகிய தனது பயிர்களை கண்டு மனமுடைந்த விவசாயி திரு.எம்.கே.ராஜ்குமார் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நீரை நம்பி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளில் ஒருவரான திரு.ராஜ்குமாரின் பயிர் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் முற்றிலும் கருகி வீணான நிலையில், சோகம் தாங்காமல் நெஞ்சுவலி ஏற்பட்டு விவசாய நிலத்திலேயே உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தன் விவசாய நிலத்தில் கருகிய பயிர்களை தானே அழிக்க வேண்டிய சூழல் உருவானதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சட்ட ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்கான நீரை பெற்றுத்தந்து விவசாயிகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
September 26, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பதோடு, கத்தி முனையில் மிரட்டி அவர்களின் மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடமைகளை பறித்துச் சென்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் மூன்றாவது முறையாக அரங்கேறியுள்ளது. ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என இருபுறமும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதோடு, மீனவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களின் உடமைகளையும் மீட்டுத்தருமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.
September 25, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 காவிரி நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திரு. பி.ஆர்.பாண்டியன் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதில் அதிக கவனம் செலுத்தியிருப்பது விவசாயிகள் மீதான அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. அதிகாரம் மற்றும் அடக்குமுறையின் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் எண்ணம் எக்காலத்திலும் நிறைவேறாது என எச்சரிப்பதோடு, இனியாவது விவசாயிகள் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
September 25, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – திருநெல்வேலி மாநகர் மாவட்டம்
September 25, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தொழில் அமைப்புகள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே, கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பெரும் சரிவை சந்திந்த நிலையில், வணிக நிறுவனங்களுக்கு அண்மையில் உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வோடு தற்போது அமலுக்கு வந்துள்ள நிலைக்கட்டண உயர்வும் அவர்களை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதை தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் போராட்டம் மூலமாகவே உணர முடிகிறது. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தொழில் நிறுவனங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கபட்டு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெறுவதோடு தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
September 24, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராகவும் கல்வி, தொழில்,விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனையாளராகவும் திகழ்ந்த பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று. சுதந்திர இந்தியாவில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகளை என்றென்றும் நினைவில் வைத்து போற்றுவோம்.
September 21, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையை வழங்கிடுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். அரசு நடத்திய எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பல ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படாத காரணத்தினால் சென்னை கொளத்தூரில் உள்ள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் சூழலுக்கு கேங்மேன் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்யப்படுவோம் என திமுக அளித்த வாக்குறுதியை நம்பி காத்திருந்ததோடு, முதலமைச்சரின் அலுவலகம், மின்சார வாரியம் என கேங்மேன் பணிக்கு தொடர்புடைய பல இடங்களில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடங்கியிருக்கும் கேங்மேன் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உடனடியாக பணி நியமன ஆணையை வழங்குமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.